பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,
பிபிசி தமிழ் நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம். இலங்கை, யுக்ரேனில் உள்ள பிபிசி செய்தியாளர்கள் மூலம் சமீபத்திய தகவல்கள் மற்றும் தமிழ்நாடு, இந்தியா, உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். தொகுத்து வழங்குவது எம்.மணிகண்டன், ஷோபனா.
நேற்றைய முக்கிய நிகழ்வுகள்
-
பொருளாதார நெருக்கடி நீடிப்பதால், நார்வே, இராக்கில் உள்ள தூதரகங்கள் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள துணைத் தூதரகத்தை ஏப்ரல் 30ஆம் தேதி முதல் மூடுவதாக இலங்கை வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
-
இலங்கை, கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சூழலில், இலங்கை மத்திய வங்கியின் புதிய தலைவரை நியமிக்க உள்ளது.
-
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் நடைபெற்றுவரும் போராட்டத்திற்கு மத்தியில், இலங்கை நாடாளுமன்றத்தில், தற்போது நடைபெற்று வரும் பிரச்னை சம்பந்தமாக விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
-
இலங்கையின் நிதித்துறை செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, தனது ராஜிநாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கொடுத்துள்ளார்.
-
இலங்கையில் பொருளாதார நெருக்கடியை அடுத்து, அரசியல் குழப்பங்களும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தலைநகர் கொழும்புவில் கிறிஸ்தவ பாதிரியார்கள் போராட்டம் நடத்தினர்.
-
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், தற்போது அரசியல் நெருக்கடியும் தீவிரமடைந்திருக்கிறது. அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
-
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், நிதி அமைச்சராக பதவியேற்ற அலி சப்ரி, 24 மணி நேரத்தில் பதவி விலகியுள்ளார்.
-
யுக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் பேசியுள்ளார்.
-
இலங்கை ஜனாதிபதி செயலக வளாகத்தை நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை இளைஞர், இளம் பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.