You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

புதிய கொரோனா திரிபு XE: மும்பையில் உறுதி செய்யப்பட்டதா? - மாறுபட்ட தகவல்

புதிய கொரோனா திரிபு XE, மும்பையில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அதுகுறித்து மாறுபட்ட தகவல் வெளியாகியுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. ஹரியானாவில் தடைகளைத் தாண்டி கனவுகளைத் துரத்தும் குழந்தை திருமண மணப்பெண்கள்

    யுனிசெஃப் அளித்துள்ள தகவலின்படி, உலகில் குழந்தை திருமணம் செய்துவைக்கப்பட்ட பெண்கள் அதிகளவில் உள்ள நாடாக இந்தியா திகழ்கிறது, அதாவது, உலகளவில் இந்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கை இந்தியா கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 லட்சம் பெண்கள், 18 வயதுக்குக் குறைவாகவே திருமணம் செய்வதாக, யுனிசெஃப் கணக்கிட்டுள்ளது.

    இந்தியாவில் பெண்களின் திருமண வயதை 21ஆக உயர்த்தும் மசோதா ஒன்றை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கடந்தாண்டு தாக்கல் செய்தது, ஆனால், இன்னும் அது சட்டமாகவில்லை.

  2. மகாராஷ்டிராவில் பிரமாண்ட கிணறு - காணொளி

    மகாராஷ்டிரா மாநிலத்தின் பீட் மாவட்டத்தில் உள்ள பாடல்ஷிங்கி கிராமத்தில் மாருதி பஜ்குடே என்ற விவசாயி ஏக்கர் பரப்பில் மிக பிரமாண்ட கிணற்றை உருவாக்கியுள்ளார்.

  3. ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகள் விதிக்கும் மேற்கத்திய நாடுகள்

    மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை அறிவிக்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. புச்சாவில் நடந்த படுகொலைகள் குறித்து ரஷ்யா மீது குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்த கூடுதல் பொருளாதார தடைகள் விதிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புச்சாவில் நடந்த படுகொலைகளுக்கு "சந்தேகத்திற்கு இடமின்றி" கண்டனம் தெரிவிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு ஆதரவு அளிப்பதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.

  4. இலங்கையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?

    இலங்கையில் செவ்வாய்க்கிழமை நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் ஆளும் கூட்டணியை விட்டு வெளியேறி சுயேச்சையாகச் செயல்படப் போவதாக அறிவித்தனர்.

    இதனிடையே அவசரச் சட்டத்தைத் திரும்பப் பெறுவதாக அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்திருக்கிறது.

    இலங்கையில் என்னெவெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது? இங்கே படிக்கலாம்

  5. இலங்கையில் அவசரச் சட்டம் வாபஸ்

    ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் அமல்படுத்தப்பட்ட அவகரகால சட்டத்தை, ஜனாதிபதியே வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார்.ஜனாதிபதியினால் நேற்றைய தினம் (05) வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் ஊடாக, அவசர கால சட்டம் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.இலங்கையில் உடன் அமலுக்குவரும் வகையில் கடந்த முதலாம் தேதி முதல் அவகர கால சட்டத்தை பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வெளியிட்டிருந்தார்.நுகேகொடை - மிரிஹான பகுதியிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் வீட்டிற்கு முன்பாக கடந்த 31ம் தேதி ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து, முதலாம் தேதி ஜனாதிபதியினால் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.அவகர கால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டதை அடுத்து, 2ம் தேதி மாலை 6 மணி முதல் 4ம் திகதி அதிகாலை 6 மணி முழு ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது.எனினும், ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அவசரகால சட்ட வர்த்தமானிக்கு எதிராக எதிர்கட்சிகள் மாத்திரமன்றி, பொதுமக்களும் போராட்டங்களை நடத்தியிருந்தனர்.இவ்வாறான சூழ்நிலையில், ஜனாதிபதியினால் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் மீள வாபஸ் பெறப்பட்டுள்ளது.ஜனாதிபதியினால் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், இந்த அவசரகால சட்டம் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

  6. நேரலைக்கு வரவேற்கிறோம்

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,

    பிபிசி தமிழ் நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம். இலங்கை, யுக்ரேனில் உள்ள பிபிசி செய்தியாளர்கள் மூலம் சமீபத்திய தகவல்கள் மற்றும் தமிழ்நாடு, இந்தியா, உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். தொகுத்து வழங்குவது எம்.மணிகண்டன், ஷோபனா.

    உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின்மூலம் தகவல் அளியுங்கள்.

    நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காண இங்கே கிளிக் செய்யவும்

    நேற்றைய முக்கிய நிகழ்வுகள்

    • பொருளாதார நெருக்கடி நீடிப்பதால், நார்வே, இராக்கில் உள்ள தூதரகங்கள்‌ மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள துணைத் தூதரகத்தை ஏப்ரல் 30ஆம் தேதி முதல் மூடுவதாக இலங்கை வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
    • இலங்கை, கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சூழலில், இலங்கை மத்திய வங்கியின் புதிய தலைவரை நியமிக்க உள்ளது.
    • இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் நடைபெற்றுவரும் போராட்டத்திற்கு மத்தியில், இலங்கை நாடாளுமன்றத்தில், தற்போது நடைபெற்று வரும் பிரச்னை சம்பந்தமாக விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
    • இலங்கையின் நிதித்துறை செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, தனது ராஜிநாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கொடுத்துள்ளார்.
    • இலங்கையில் பொருளாதார நெருக்கடியை அடுத்து, அரசியல் குழப்பங்களும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தலைநகர் கொழும்புவில் கிறிஸ்தவ பாதிரியார்கள் போராட்டம் நடத்தினர்.
    • கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், தற்போது அரசியல் நெருக்கடியும் தீவிரமடைந்திருக்கிறது. அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
    • இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், நிதி அமைச்சராக பதவியேற்ற அலி சப்ரி, 24 மணி நேரத்தில் பதவி விலகியுள்ளார்.
    • யுக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் பேசியுள்ளார்.
    • இலங்கை ஜனாதிபதி செயலக வளாகத்தை நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை இளைஞர், இளம் பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    மேலதிகச் செய்திகளுக்குமுகப்புப் பக்கம்செல்லவும்.

    பிபிசிதமிழின் பேஃஸ்புக், ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.