இந்திய ரயில்வே அமைச்சரின் கடிதத்துக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பதில்

புதிய அமைச்சரவையில் நிதியமைச்சர் பொறுப்பு அலி சாப்ரியிடமும் கல்வித்துறை தினேஷ் குணவர்த்தனவிடமும், வெளியுறவுத்துறை ஜீ.எல் பீரிஸிடமும் நெடுஞ்சாலைத்துறை ஜோன்ஸ்டன் ஃபெர்னாண்டோவிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆ. லட்சுமி காந்த் பாரதி

இலங்கையில் நான்கு அமைச்சர்களை நியமித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ. அதன்படி நிதியமைச்சர் பொறுப்பு அலி சாப்ரியிடமும் கல்வித்துறை தினேஷ் குணவர்த்தனவிடமும், வெளியுறவுத்துறை ஜீ.எல் பீரிஸிடமும் நெடுஞ்சாலைத்துறை ஜோன்ஸ்டன் ஃபெர்னாண்டோவிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இலங்கை தற்போது எதிர்கொண்டு வரும் மோசமான நெருக்கடி நிலைக்கு தீர்வு காணும் விதமாக உத்தேசிக்கப்பட்டுள்ள அனைத்து கட்சி அமைச்சரவையில் சேரும்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார். இது தொடர்பான தகவலை அவரது ஊடக அலுவலகம் திங்கட்கிழமை காலையில் வெளியிட்டது.

தமிழகத்தின் வறட்சிக்கு காரணமான சீமைக் கருவேல மரங்களை அழிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் பல விவசாயிகள் இந்த சீமைக் கருவேல மரங்களை வெட்டி, அதை மூட்டம் போட்டு கரியாக்கி விற்பனை செய்து நல்ல லாபம் ஈட்டி வருகின்றனர். ஒரு பக்கம் சீமைக் கருவேல மரங்களால் விவசாயம் பாதிக்கப்பட்டாலும், மறு பக்கம் விவசாயிகளுக்கு பலன் தரும் மரமாக உள்ளது.
நான் ஆ.லட்சுமி காந்த் பாரதி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். இதுவரை பரணிதரன் வழங்கிக்கொண்டிருந்த நேரலை செய்திகளை இனி நான் வழங்கவிருக்கிறேன்.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள், விளையாட்டு, சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்துறை செய்திகள் ஆகியவற்றை இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.
இந்தியாவில் பெட்ரோலிய பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து மாநிலங்களவையில் எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநிலங்களவை பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு

பட மூலாதாரம், O Panneerselvam/Twitter
இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் சேர நுழைவுத் தேர்வு என்கிற அறிவிப்பு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வினை ரத்து செய்ய இயலாமல் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தெர்வு நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. இது, மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்களிடையே பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலை தொடர்ந்தால் கிராமப்புற, ஏழை, எளிய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே, நுழைவுத் தேர்வுக்கு பெயரளவில் எதிர்ப்புத் தெரிவிக்காமல், இதனை திரும்பப் பெறத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை திமுக அரசு உடனடியாக எடுக்க வேண்டும்.''என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும், ''நீட் தேர்வில் தும்பை விட்டு வாலைப் பிடித்ததன் காரணமாக ஏழை, எளிய கிராமப்புற மாணவ, மாணவியர் தற்போது அவதிப்பட்டு வருகின்றனர்.'' என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு

பட மூலாதாரம், Reuters
ஹாங்காங் பிராந்தியத்தின் தலைமை நிர்வாகி பதவியை கேரி லாம், இரண்டாவது முறையாக வகிக்கப் போவதில்லை என்று கேரி லாம் தெரிவித்துள்ளார்.
சீன சட்டங்கள் பலவற்றின் அமலாக்க நடைமுறையின்போது பிராந்திய தலைமை நிர்வாகியாக,மக்களின் கொந்தளிப்பான காலகட்டங்களை ஓராண்டுக்கும் மேலாக கேரி லாம் எதிர்கொண்டார்.
64 வயதாகும் கேரி லாம், 2017இல் பிராந்திய தலைமை நிர்வாகி பொறுப்புக்கு சீன மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டார்.
"எனது கருத்தில் குடும்பம் எனது முதல் முன்னுரிமை என்று நான் அனைவருக்கும் முன்பே கூறியுள்ளேன். நான் வீட்டிற்குச் செல்ல வேண்டிய நேரம் இது என்று அவர்கள் நினைக்கிறார்கள்," என்று அவர் செய்தியாளர்களிடம் திங்கட்கிழமை கூறினார்.
ஹாங்காங்கின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜான் லீ, கேரி லாமுக்கு மாற்றாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தனது பதவியை ராஜிநாமா செய்துளளதாகக் கூறியுள்ளார்.
இலங்கை அமைச்சர்கள் பதவிகலைத் தொடர்ந்து தாமும் தமது பதவியில் இருந்து விலகுவதாகவும் அதற்கான கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு

பட மூலாதாரம், CSK IPL
ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. சொதப்பலான பேட்டிங்கால் நடப்பு தொடரில் ஹாட்ரிக் தோல்வியை பதிவு செய்திருக்கிறது.
சி.எஸ்.கே. மொயின் அலி, ஜடேஜா, பிராவோ என 3 நட்சத்திர வீரர்களை டக் அவுட் செய்து பந்துவீச்சில் மிரட்டியிருக்கிறது பஞ்சாப் கிங்ஸ். இப்போட்டி குறித்த விரிவான செய்திக்கு இங்கே சொடுக்கவும்
இலங்கை தற்போது எதிர்கொண்டு வரும் மோசமான நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், அனைத்து கட்சிகளின் பிரதிநித்துவம் இருக்கும் வகையிலான அமைச்சரவையில் சேரும்படி அனைத்து கட்சிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார் என்று அவரது ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இலங்கையில் முன் எப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஏதுவாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவையில் உள்ள 26 அமைச்சர்கள் தங்களுடைய பதவியில் இருந்து விலகியுள்ளனர்.
ஆனால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரரும் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார்கள்.
இந்தக் கட்டுரையில் Instagram வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Instagram குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
Instagram பதிவின் முடிவு, 1
யுக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தமது தாய்நாடு மீதான ரஷ்ய படையெடுப்பை "முழு நாட்டையும் சித்ரவதைக்கு உள்ளாக்கும் செயல்" என்று அழைத்துள்ளார்.
இது தொடர்பாக மொழிபெயர்ப்பாளர் மூலம் சிபிஎஸ் செய்தியிடம் ஞாயிற்றுக்கிழமை பேசிய ஸெலென்ஸ்கி, யுக்ரேனியர்கள் ரஷ்யாவிடம் அடிபணிய விரும்பவில்லை. அதன் விளைவாக அவர்கள் அழித்தொழிக்கப்பட்டு வருவதாக கூறினார்.
ரஷ்யாவின் நடவடிக்கைகள் இனப்படுகொலையா என்று நேரடியாகக் கேட்டதற்கு, "உண்மையில், இது இனப்படுகொலைதான். முழு தேசத்தையும் மக்களையும் அழிக்கும் செயல். நாங்கள் யுக்ரேனியர்கள். எங்களிடம் 100க்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் உள்ளன. எனவே இது அனைத்து தேசிய இனங்களை அழிக்கும் செயல்" என்று பதிலளித்தார் ஸெலென்ஸ்கி.
இந்தக் கட்டுரையில் Instagram வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Instagram குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
Instagram பதிவின் முடிவு, 2
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை இரவு யுக்ரேனியர்களுக்காக அவர் ஆற்றிய காணொளி உரையின்போது, "நமது நிலத்துக்கு தீங்கிழைக்கும் கொடூரமான நேரம் வந்துவிட்டது" என்று கூறினார்,
"நமது நாட்டில் ஆக்கிரமிப்பாளர்கள் நிகழ்த்தும் ஒவ்வொரு குற்றமும் விசாரிக்கப்படும். அந்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அனைவரும் சிறப்பு மரணதண்டனை புத்தகத்தில் பதிவு செய்யப்படுவார்கள். தப்பி ஓடினாலும் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்," என்று ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் மேலும் 13 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஆந்திராவில் குண்டூர் மாவட்டம் தாடேபள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் , முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வீடியோ கான்பரன்சிங் மூலம் 13 புதிய மாவட்டங்களை இன்று தொடங்கி வைத்தார்.
ஏற்கெனவே 13 மாவட்டங்கள் இருந்த நிலையில், ஆந்திரா மாநிலத்தில் தற்போது மொத்தம் 26 மாவட்டங்களாகியுள்ளன.

பட மூலாதாரம், ANI
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
ஆக்கிரமிக்கப்பட்ட எனர்ஹோடர் பகுதியில் ரஷ்ய படையினர் மீதான தாக்குதல் தொடர்பான கூடுதல் தகவலுக்காக நாங்கள் காத்திருக்கும். இதே வேளையில், மேரியூபோல் நகர் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவான தகவலை வழங்குகிறோம்.
அங்கே ரஷ்ய தாக்குதலால் அழிந்துபோன நகரை அடைய செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் முயன்று வருகிறார்கள். ஆனால் இங்குள்ள தெற்கு துறைமுகத்தை ரஷ்யா மிகவும் முக்கியமானதாக கருதுகிறது? அது ஏன்?
மேரியூபோல் நகரில் உள்ள துறைமுகம் யுக்ரேனில் உள்ள மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றாகும். அதன் கட்டுப்பாடு ரஷ்யாவுக்குச் சென்றால் அது கிரைமியாவுககும் லுஹான்ஸ்க் மற்றும் யொனியெஸ்ட்ஸ் பகுதிகளுக்கும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் வைத்திருக்கும் பகுதிகளுக்கும் இடையே ஒரு தரை வழியை உருவாக்கப் பயன்படலாம்.
கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் வழியாக கிரைமியாவை ரஷ்யாவுடன் இணைப்பதன் மூலம் பொருட்களையும் மக்களையும் கிரைமியாவிற்கு கொண்டு செல்ல வாய்ப்பு எளிதாகும். 2014ஆம் ஆண்டில் கிரைமியாவை இணைத்தது முதலே, ரஷ்யா இந்த பாதை சாத்தியமாக வேண்டும் என்று விரும்பி வருகிறது.

பட மூலாதாரம், ㅤ
இலங்கையில் மக்களின் அன்றாட பணிகளை பாதிக்கும் வகையில் அமல்படுததப்பட்ட ஊரடங்கு சட்டத்துக்கு எதிராகவும் மோசமான நெருக்கடிக்கு நிலைக்கும் பொறுப்பேற்று ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலக வேண்டும் என்று கோரி எதிர்கட்சிகள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டன.
அப்போது அரசுக்கு எதிரான தங்களுடைய கருத்துக்களை போராட்டத்தில் பங்கேற்ற சில தலைவர்கள் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டனர்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
யுக்ரேனில் போர் தொடங்கியதில் அதன் பாதிப்பை இதுவரை 3,455 பொதுமக்கள் அனுபவித்துள்ளதாக மனித உரிமைகளுக்கான ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.
இதில் 1,400 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் 2,000 க்கும் மேற்பட்ட காயம் அடைந்தவர்கள் அடங்குவர். இந்த எண்ணிக்கை கொஞ்சம் பழையதுதான் என்றாலும் உண்மையான புள்ளிவிவரங்கள் கணிசமாக அதிகமாக இருக்கலாம் என்கிறது என்று மனித உரிமைகளுக்கான ஐ.நா அமைப்பு.
இந்தியா நாடாளுமன்ற மக்களவையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக பிரச்னை எழுப்ப மாநிலத்தில் ஆளும் திமுக முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக மக்களவையில் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு மக்களவை செயலகத்தில் அளித்துள்ள நோட்டீஸில், ஆளுநர் ரவி தமது பொறுப்புகளையும் கடமையையும் ஆரசியலமைப்பின் 200ஆவது பிரிவின் படி ஆற்றாமல் ஜனநாயக முறைகளை முடக்கி வருவதாக கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமலும் மிக முக்கிய மூன்று மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்காமலும் ஆளுநர் ரவி காலம் தாழ்த்தி வருவதாக டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், T.R. BAALU
ஆளுநர் தொடர்பாக பிரச்னை எழுப்புவது மாநில விவகாரம் என்பதால், அது குறித்து விவாதிக்க மக்களவை சபாநாயகரின் அனுமதியை முறைப்படி பெற வேண்டும். அந்த வகையில், டி.ஆர். பாலு அளித்துள்ள நோட்டீஸை சபாநாயகர் ஏற்றால் மட்டுே அவரால் இந்த விவகாரத்தை அவையில் பதிவு செய்ய முடியும்.
மக்களவை விதிகளின்படி பூஜ்ஜிய நேரத்தில் ஒருமுறை பதிவு செய்யப்பட்ட ஒரு பிரச்னையை மீண்டும் அதே கூட்டத்தொடர் அமர்வில் அவசர தேவை எழுந்தால் ஒழிய அவையில் பேச அனுமதிக்கப்படாது.
இந்த நிலையில், மக்களவையில் தமிழ்நாடு ஆளுநர் பற்றி பிரச்னை எழுப்ப திமுக அளித்துள்ள நோட்டீஸ் மீது சபாநாயகர் அனுமதி கொடுக்காவிட்டாலும், ஆளுநரின் செயல்பாடு குறித்து அவையின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திமுக உறுப்பினர்கள் குரல் கொடுப்பார்கள் என்று டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் தற்காலிக பிரதமர் தேர்வாகும்வரை பதவியில் இம்ரான் கான் தொடருவார் என்று அந்நாட்டு அதிபர் ஆரிஃப் அல்வி அறிவித்துள்ளார்.
இது தொடர்பான தகவலை தமது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,
பிபிசி தமிழ் நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். யுக்ரேனில் உள்ள பிபிசி செய்தியாளர்கள் மூலம் சமீபத்திய தகவல்கள் மற்றும் தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம் .
உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றி எங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.
நேற்று மற்றும் இன்றைய செய்திகள் சிலவற்றின் முக்கிய தகவல்கள் இதோ.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக மக்களவையில் பிரச்னை எழுப்ப திமுக சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
·இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அனைத்து கேபினட் அமைச்சர்களும் தங்களது ராஜிநாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சமர்ப்பித்துள்ளனர்.
·இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை திங்கள்கிழமை லிட்டருக்கு 40 காசுகள் அதிகரித்துள்ளன. கடந்த இரண்டு வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.8.40 ஆக அதிகரித்துள்ளது.
·1990களில் தீவிரவாதம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறிய காஷ்மீரி பண்டிட்டுகள், மீண்டும் தங்களுடைய பூர்விகத்துக்கு திரும்ப முடியும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
·ரஷ்ய படைகள் யுக்ரேனிய தலைநகர் கீயவ் அருகே உள்ள பகுதிகளில் இருந்து பின்வாங்கும் வேளையில், அவர்களால் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் ஆதாரங்கள் படிப்படியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.
·யுக்ரேனில் நடந்த ரஷ்ய ஆக்கிரமிப்பு படையெப்பின்போது நடந்த தாக்குதல்களை "பயங்கரமான போர்க் குற்றம்" என்று அழைத்து ஜெர்மனி கண்டித்துள்ளது. பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங் போர்க் குற்ற காட்சிகள் "தாங்க முடியாதவை" என்று அழைத்துள்ளார்.