ரஷ்ய அதிபருக்கு எதிரான நடவடிக்கை மேலும் தீவிரமாகும் - பிரிட்டன் வெளியுறவுச் செயலர்
புதிய அமைச்சரவையில் நிதியமைச்சர் பொறுப்பு அலி சாப்ரியிடமும் கல்வித்துறை தினேஷ் குணவர்த்தனவிடமும், வெளியுறவுத்துறை ஜீ.எல் பீரிஸிடமும் நெடுஞ்சாலைத்துறை ஜோன்ஸ்டன் ஃபெர்னாண்டோவிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
ஆ. லட்சுமி காந்த் பாரதி
இலங்கையில் வீதியில் இறங்கிய மக்கள்; ஜனாதிபதியை பதவி விலக கோரி வலுக்கும் போராட்டம்
YouTube பதிவை கடந்து செல்லGoogle YouTube பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
நன்றி நேயர்களே!
இன்றைய நேரலை பக்கம் இத்துடன் நிறைவடைகிறது. இதுவரை நடந்த நிகழ்வுகளின் முக்கிய துளிகள் இதோ.
- ஆந்திராவில் குண்டூர் மாவட்டம் தாடேபள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் , முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வீடியோ கான்பரன்சிங் மூலம் 13 புதிய மாவட்டங்களை இன்று தொடங்கி வைத்தார்.
- யுக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தமது தாய்நாடு மீதான ரஷ்ய படையெடுப்பை "முழு நாட்டையும் சித்ரவதைக்கு உள்ளாக்கும் செயல்" என்று அழைத்துள்ளார்.
- ஈலோன் மஸ்க், ட்விட்டரின் 9.2% பங்குகளை வாங்கியுள்ளதாக ஒரு அமெரிக்கப் பத்திரங்கள் ஆணையம் தெரிவிக்கிறது. இதன் மூலம் ட்விட்டர் பங்குகளின் மதிப்பு சுமார் 25% உயர்ந்ததுள்ளது.
- ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும், அமைதிப் பேச்சுவார்த்தையில் யுக்ரேனுக்கு ஆதரவளிக்கும் விதமாகவும், பிரிட்டன் வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ் இன்று போலந்திற்குச் செல்லவுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
- யுக்ரேன் மீதான ரஷ்ய போர் தொடங்கியதில் இருந்து சுமார் 24,81,000 பேர் யுக்ரேனில் இருந்து போலந்துக்கு தப்பிச் சென்றுள்ளதாக போலந்து எல்லைக் காவல்படை தெரிவித்துள்ளது.
- ஹாங்காங் பிராந்தியத்தின் தலைமை நிர்வாகி பதவியை கேரி லாம், இரண்டாவது முறையாக வகிக்கப் போவதில்லை என்று கேரி லாம் தெரிவித்துள்ளார்.
மேலதிகச் செய்திகளுக்குமுகப்புப் பக்கம்செல்லவும். பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.
எரிந்துபோன பீரங்கிகளின் மிச்சமும் பிணங்களும் - யுக்ரேன் நகர வீதிகளில் அழிவின் சாட்சிகள்
இலங்கையில் ஊரடங்கையும் மீறி போராட்டம்: எதிர்க்கட்சிகள் சொல்வது என்ன?
YouTube பதிவை கடந்து செல்லGoogle YouTube பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
நீட் விலக்கு: தமிழ்நாடு ஆளுநர் ரவி 3 முக்கிய முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராதது ஏன்?

படக்குறிப்பு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட முக்கியமான 3 மசோதாக்களுக்கு மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் இருப்பதற்கான காரணங்கள் பற்றிய பிரத்யேக தகவல்கள் கிடைத்துள்ளன
முழுமையாக படிக்க இங்கே சொடுக்கவும்
இந்தியாவின் புதிய வெளியுறவுத்துறை செயலாளராக வினய் மோகன் குவாத்ரா நியமனம்
இந்திய அரசு புதிய வெளியுறவுத்துறை செயலாளராக வினய் மோகன் குவாத்ராவை நியமித்துள்ளது. தற்போதைய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா ஓய்வு பெற்ற பிறகு குவாத்ரா பதவியேற்பார்.
தற்போது வினய் மோகன் குவாத்ரா நேபாளத்திற்கான இந்திய தூதராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
மாணவிக்கு பாலியல் தொல்லை, உதவி பேராசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவிப்பேராசிரியர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரியார் பல்கலைக்கழகத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் முதுகலை இரண்டாம் ஆண்டு, விடுதியில் தங்கி படித்து வருகிறார். இவருக்கு உதவிப்பேராசிரியர் பிரேம்குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், இதை வெளியே சொல்லக்கூடாது என அந்த மாணவிக்கு மிரட்டல் விடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி மாநகர போலீஸ் ஆணையரிடம் புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து ஆணையரின் உத்தரவின் பேரில், சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுப்புலட்சுமி விசாரணை மேற்கொண்ட நிலையில், உதவிப் பேராசிரியர் தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இது தொடர்பாக சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுப்புலட்சுமியிடம் பேசியபோது, "புதுக்கோட்டை மாணவி கொடுத்த புகாரின் பேரில் நாங்கள் பிரேம்குமாரை தேடி வருகிறோம். அவர் மீது பெண்களுக்கு பாலியல் தொல்லை தருவது உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து உள்ளோம். விரைவில் அவரை கண்டுபிடித்து, மேற்கொண்டு விசாரணை செய்வோம்", என்று தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதனிடம் கேட்டபோது, "பல்கலைக்கழக சிண்டிகேட் அஜெண்டா ஒன்றை மீட்டிங் நடப்பதற்கு முன்பே அவர் வெளியிட்டு விட்டார் என்ற காரணத்திற்காக அவர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில்தான் அவர் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் விசாரணைக்கு பிறகு தான் துறை ரீதியான நடவடிக்கைப் பற்றி கூற முடியும்", என்று கூறினார்.
இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்டுள்ள உதவிப்பேராசிரியர் பிரேம்குமாருக்கு ஆதரவாக, பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது புகார் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க, பெரியார் பல்கலைக்கழக மாணவ மாணவியர் சிலர் வந்திருந்தனர்.
அவர்கள் கூறுகையில், "பிரேம்குமார் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிராக செயல்படுகிறார் என்பதால் ஏற்கனவே அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார் . இந்நிலையில், இன்று திங்கள்கிழமை கல்லூரியில் அவர் மீண்டும் சேர உள்ள நிலையில் அவருக்கு எதிராக ஒரு குழுவினர் இந்த வேலையை செய்து இருக்கின்றனர்.
எங்களை பொறுத்தவரை அவர் நேர்மையான உதவிப்பேராசிரியர். தாழ்த்தப்பட்டவர்கள் என அந்தப் பெண் கூறியிருந்தாலும் கூட, தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் இங்கு பலர் உள்ளோம். எங்களிடம் அவர் அதுபோல ஜாதி பிரிவினை பார்த்து நடந்துகொண்டதில்லை. அதேபோல எந்தவித தவறான முறையிலும் அவர் நடந்து கொள்ளவில்லை என குறிப்பிட்டனர்.
இந்திய பிரதமரிடம் உதவி கேட்ட இலங்கை எதிர்க்கட்சித் தலைவர்
இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியிடம் உதவி கோரியுள்ளார்.
இது தொடர்பாக ஏ.என்.ஜ செய்தி முகமையிடம் அவர் பேசிய போது இந்திய பிரதமர் நரேந்திர மோதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.
"முடிந்தவரை உதவ முயற்சிக்கவும். இது எங்கள் தாய்நாடு. எங்கள் தாய் நாட்டை காப்பாற்ற வேண்டும்", என்று அவர் தெரிவித்தார்.
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
கிணற்றில் தவறி விழுந்த யானை 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்பு

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நீதிபுரம் பகுதியில் நேற்று நள்ளிரவு புகுந்த ஒற்றை யானை ஒன்று, அப்பகுதியில் உள்ள மயில்சாமி என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் தவறி விழுந்துள்ளது.
அப்போது பலத்த சத்தம் ஏற்பட்டதையடுத்து, இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து இன்று காலை அப்பகுதிக்கு வனச்சரகர் அறிவழகன் தலைமையில் வந்த வனத்துறையினர், அப்பகுதியை சோதனை செய்ததில் கிணற்றின் அருகில் யானையின் கால்தடம் இருந்தது தெரியவந்தது.
இதனால், அவ்வழியே வந்த யானை ஏதேனும் தவறி கிணற்றில் விழுந்திருக்கலாம் என சந்தேகித்த வனத்துறை அதிகாரிகள், தீயணைப்புத் துறையினரின் உதவியோடு கிணற்றிலிருந்து தண்ணீரை வெளியேற்றினர்.
அப்போது 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று கிணற்றில் சடலமாக இருந்தது தெரியவந்ததையடுத்து ராட்சத கிரேன் மூலம் யானையின் சடலம் மீட்கப்பட்டது.
நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாதது ஏன்?

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பிபிசி தமிழுக்கு பிரத்யேக பேட்டி இன்றிரவு 7.30 மணிக்குbbc.com/tamilஇணையதளத்தில்.
இலங்கை பொருளாதார நெருக்கடி: ஜனாதிபதியை பதவி விலக கோரி வலுக்கும் போராட்டம்
ட்விட்டரின் 9.2% பங்குகளை வாங்கிய ஈலோன் ஈலோன் மஸ்க்
ஈலோன் மஸ்க், ட்விட்டரின் 9.2% பங்குகளை வாங்கியுள்ளதாக ஒரு அமெரிக்கப் பத்திரங்கள் ஆணையம் தெரிவிக்கிறது. இதன் மூலம் ட்விட்டர் பங்குகளின் மதிப்பு சுமார் 25% உயர்ந்ததுள்ளது.
டெஸ்லா நிறுவனர் மார்ச் 14 அன்று 7,34,86,938 ட்விட்டர் பங்குகளை வாங்கினார் என்று பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை ட்விட்டர் பங்கின் இறுதி விலையின் அடிப்படையில், ஈலோன் மஸ்க் வாங்கிய பங்கின் மதிப்பு 289 கோடி டாலர்கள்.
ஈலோன் மஸ்க் 8 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட, ஒரு ட்விட்டர் பயனராக உள்ளார், இருப்பினும் அவர் ஒரு புதிய சமூக ஊடக தளத்தை உருவாக்குவதற்கான எண்ணத்தில் இருப்பதாக சமீபத்தில் கூறினார்.
கடந்த மாத இறுதியில் எலான் மஸ்க் தனது கணக்கை பின்தொடர்பவர்களிடம், சமூக ஊடகத் தளம் பேச்சு சுதந்திரத்தை ஊக்குவிப்பதாக நினைக்கிறீர்களா? என்று கேட்டார்.
"செயல்படும் ஜனநாயகத்திற்கு பேச்சு சுதந்திரம் இன்றியமையாதது. இந்த கொள்கையை ட்விட்டர் கடுமையாக பின்பற்றுகிறது என்று நீங்கள் நம்புகிறீர்களா?" என்று வினவியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
விளாதிமிர் புதினுக்கு எதிராக மேலும் நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுக்கும் பிரிட்டன் வெளியுறவுச் செயலர்

பட மூலாதாரம், EPA/ANDY RAIN
ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும், அமைதிப் பேச்சுவார்த்தையில் யுக்ரேனுக்கு ஆதரவளிக்கும் விதமாகவும், பிரிட்டன் வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ் இன்று போலந்திற்குச் செல்லவுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
"விளாதிமிர் புதின் இன்னும் ராஜீய உறவு முக்கியமானது போல் நடந்து கொள்ளவில்லை " என்று அவர் கூறியுள்ளார்.
"பேச்சுவார்த்தைகளில் யுக்ரேனின் பக்கத்தை வலுப்படுத்த பிரிட்டன் மற்றும் எங்கள் நட்பு நாடுகளின் கடினமான அணுகுமுறை மிகவும் முக்கியமானது."
வெளியுறவு செயலர் வார்சாவில் தனது உக்ரேனிய மற்றும் போலந்து சகாக்களான டிமிட்ரோ குலேபா மற்றும் ஸ்பிக்னிவ் ராவை சந்திக்க உள்ளார்.
ட்ரஸ், ரஷ்யாவிற்கு எதிராக நட்பு நாடுகளிடமிருந்து கூடுதல் நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுக்க உள்ளது, மேலும் யுக்ரேனில் பாலியல் வன்முறையில் இருந்து தப்பியவர்களுக்காக பணிபுரியும் நிறுவனங்களுக்கு 1 கோடி பவுண்டு வரை நிதி ஆதரவை கொடுப்பதாக அறிவித்துள்ளார்.
"ரஷ்யா மீதான அழுத்தத்தை அதிகரிக்க நாங்கள் இன்னும் அதிகமாகச் செய்வோம், மேலும் பலவற்றைச் செய்ய மற்றவர்களுக்கும் அழுத்தம் கொடுப்போம் " என்று அவர் கூறியுள்ளார்.
இந்த வார இறுதியில் G7 மற்றும் நேட்டோ பேச்சுக்களுக்காக பிரஸ்ஸல்ஸுக்குச் செல்வதற்கு முன், வெளியுறவுச் செயலர் யுக்ரேனிய அகதிகளுக்கு ஆதரவளிக்கும் உதவி அமைப்புகளையும் பார்வையிட உள்ளார்.
கிராமப்புற மாணவர்களுக்கு நீட், ஜெ.இ.இ.இ பயிற்சி - வழிகாட்டும் திருச்சி என்.ஐ.டி இக்னைட் குழு
இலங்கை சாலைகளில் உள்ள பிச்சைக்காரர்களின் தற்போதைய நிலை என்ன?
YouTube பதிவை கடந்து செல்லGoogle YouTube பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சுமார் 25 லட்சம் மக்கள் யுக்ரேனில் இருந்து போலந்துக்கு தப்பிச் சென்றதாக தகவல்

பட மூலாதாரம், Getty Images
யுக்ரேன் மீதான ரஷ்ய போர் தொடங்கியதில் இருந்து சுமார் 24,81,000 பேர் யுக்ரேனில் இருந்து போலந்துக்கு தப்பிச் சென்றுள்ளதாக போலந்து எல்லைக் காவல்படை தெரிவித்துள்ளது.
இருப்பினும், சமீபத்திய வாரங்களில் எல்லையைக் கடக்கும் மக்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சுமார் 22,300 பேர் கடந்துள்ளனர், இது சனிக்கிழமை அன்று கடந்த மக்களின் எண்ணிக்கையை விட 6% குறைந்தது, என போலந்து எல்லைக் காவல்படை ட்விட்டரில் தெரிவித்திருந்தது, மேலும் இது மார்ச் 6 இல் இருந்த 1,42,300 என்ற எண்ணிக்கையை விட மிகவும் குறைந்தது.
போர் தொடங்குவதற்கு முன்பு போலந்திற்கு செல்ல எல்லையைக் கடப்பவர்களின் தினசரி சராசரி எண்ணிக்கை 16,800 ஆக இருந்த நிலையில், தற்போது யுக்ரேனுக்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
போர் தொடங்கியதில் இருந்து, போலந்து வழியாக 4,57,000 பேர் யுக்ரேனுக்குள் நுழைந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும், போலந்தில் இருந்து யுக்ரேனுக்குள் 15,000 பேர் சென்றுள்ளனர், இது சனிக்கிழமை 21,000 ஆக இருந்தது.
யுக்ரேனில் இருந்து தப்பியோடியவர்களில் சிலர் ஏற்கனவே போலந்தை விட்டு வெளியேறிவிட்டனர்.
இது தொடர்பாக வார்சா பல்கலைக்கழக இடம்பெயர்வு ஆராய்ச்சி பேராசிரியர் மாசிஜ் டசிக்கின்படி, சுமார் 13 முதல் 14 லட்சம் அகதிகள் போலந்தில் உள்ளனர் என தெரிவித்திருக்கிறார்.
ஐபிஎல் 2022: சிஎஸ்கே ஹாட்ரிக் தோல்வி, கோட்டை விட்ட தருணங்கள் - ஹைலைட்ஸ்

பட மூலாதாரம், CSK IPL
ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு இது ஒரு மோசமான நாளாக இருக்கக்கூடும். சொதப்பலான பேட்டிங்கால் நடப்பு தொடரில் ஹாட்ரிக் தோல்வியை பதிவு செய்திருக்கிறது சி.எஸ்.கே. மொயின் அலி, ஜடேஜா, பிராவோ என 3 நட்சத்திர வீரர்களை டக் அவுட் செய்து பந்துவீச்சில் மிரட்டியிருக்கிறது பஞ்சாப் கிங்ஸ் முழுமையாக படிக்க இங்கே சொடுக்கவும்
இலங்கையில் நடந்த அடுத்தடுத்த திடீர் திருப்பங்கள்
YouTube பதிவை கடந்து செல்லGoogle YouTube பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
இலங்கையில் அமைச்சரவை மாற்றம், ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுக்குமா? தெளிவூட்டுகின்றார் அரசியல் ஆய்வாளரும், முன்னாள் எம்.பியுமான மயில்வாகனம் திலகராஜ்.