சூயஸ் திட்டம் தொடரும் - கோவை மாநகராட்சி அறிவிப்பு

சூயஸ் திட்டம் தொடரும் என, கோவை மாநகராட்சி பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு என்ன காரணம்? - நிர்மலா சீதாராமன் விளக்கம்

    நிர்மலா சீதாராமன்

    பட மூலாதாரம், GETTY IMAGES

    "ரஷ்யா யுக்ரேன் போர் நீண்ட நாட்களாக நடந்தாலும், இப்போதுதான் இந்தியாவில் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்த்தப்படுவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

    இது முற்றிலும் உண்மையல்ல. கச்சா எண்ணெய் விநியோகத்தில் தடங்கல், போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை 2 வாரங்களாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது. அதனால், கடந்த 8 நாட்களாக இங்கு விலை உயர்வு காணப்படுகிறது. சர்வதேச விலைக்கு ஏற்ப நாங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

    பெட்ரோலிய பொருட்களை குறைந்த விலையில் விற்பதற்காக 10 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் கோடி மதிப்புள்ள எண்ணெய் பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டன. அப்படி கொடுத்த பத்திரங்களுக்கு பொதுமக்கள் இப்போதும் பணம் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்"

    மாநிலங்களவையில் நிதி மசோதா மீதான விவாதத்துக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தபோது, பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு அளித்த விளக்கம் உட்பட, இன்று நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகளை படிக்க இங்கே சொடுக்குங்கள்:

  2. ராணுவ நடவடிக்கையை குறைப்பதாக ரஷ்யா அறிவிப்பு - மற்ற நாடுகள் என்ன சொல்கிறது?

    வொலோடிமிர் ஸெலென்ஸ்கி

    பட மூலாதாரம், EPA

    "சொல்லும் அனைத்தையும் நம்புபவர்கள் அல்ல யுக்ரேனியர்கள்" என, யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, நேற்று யுக்ரேன் - ரஷ்யா இரு நாட்டு பிரதிநிதிகளுக்கிடையே நேரடி பேச்சுவார்த்தை துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், யுக்ரேன் தலைநகர் கீயவ் மற்றும் செரீனிஹிவ் நகரங்களை சுற்றியுள்ள பகுதிகளில் "ராணுவ நடவடிக்கையை" முற்றிலும் குறைத்துக்கொள்வதாக, பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட ரஷ்யாவின் துணை பாதுகாப்பு அமைச்சர் அலெக்ஸாண்டர் ஃபோமின் தெரிவித்தார்.

    இந்நிலையில், ரஷ்யாவின் அறிவிப்பு குறித்து சந்தேகித்துள்ள யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, "சொல்லும் அனைத்தையும் நம்புபவர்கள் அல்ல யுக்ரேனியர்கள்" என தெரிவித்துள்ளார்.

    பேச்சுவார்த்தையின் ஆரம்பகட்ட அறிகுறிகள் "நேர்மறையானவை" என தெரிவித்துள்ள ஸெலென்ஸ்கி ஆனால், அவை ரஷ்ய ஷெல் தாக்குதல்களை "அமைதியாக்கிவிடாது" எனவும் தெரிவித்துள்ளார்.

    ரஷ்யாவின் அறிவிப்புக்கு மற்ற நாடுகளும் எச்சரிக்கையுடன் வினையாற்றியுள்ளன.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில், "இதுதொடர்பாக நான் எதனையும் படிக்கவில்லை. அவர்களின் (ரஷ்யாவின்) நடவடிக்கைகள் என்னவென்று பார்க்க வேண்டும்," என தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கென் கூறுகையில் ரஷ்யா சொல்வதற்கும் அதன் செயல்களுக்கும் இடையில் வித்தியாசம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    ரஷ்யாவுக்கு எதிரான தற்காப்புகளை விலக்கிக்கொள்ள வேண்டாம் என, மேற்கு நாடுகளை பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இதுதொடர்பாக, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அலுவலகம் கூறுகையில், "யுக்ரேனுக்கு எதிரான அபாயங்கள் முடியும் வரை ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை தளர்த்திக்கொள்ளக் கூடாது என,மேற்கு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன" என தெரிவித்துள்ளது.

  3. "பாகிஸ்தானுக்கு வாழ்த்துகள்" - பாகிஸ்தான் மக்கள் கட்சி சொல்வது என்ன?

    பாகிஸ்தானில் ஆளும் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை முக்கிய கூட்டணி கட்சியான முத்தாஹிதா குவாமி இயக்கம் (MQM) விலக்கிக்கொண்டுள்ளது. இதனால், எதிர்க்கட்சிகளின் பலம் 177 ஆக உயர்ந்துள்ளது. இம்ரான் கான் அரசின் பலம் 164 ஆக குறைந்துள்ளது. இதனால், நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்னரே இம்ரான் கான் அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, பிபிபி (பாகிஸ்தான் மக்கள் கட்சி) கட்சியின் பிலாவால் பூட்டோ சர்தாரி தனது ட்விட்டர் பக்கத்தில், "எதிர்க்கட்சியும், எம்கியூஎம் கட்சியும் சேர்ந்து ஒரு ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது. எம்கியூஎம் கட்சியின் ராம்டா கமிட்டி மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மத்திய குழு இதற்கான உடன்படிக்கையை எட்டியுள்ளது. இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் ஊடகத்தில் பகிரப்படும். பாகிஸ்தானுக்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டிருந்தார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  4. பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்குப் பின்னடைவு - ஆதரவை விலக்கிக்கொண்ட கூட்டணி கட்சி

    இம்ரான் கான்

    பட மூலாதாரம், GETTY IMAGES

    பாகிஸ்தானில் ஆளும் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை கூட்டணிக் கட்சி விலக்கிக்கொண்டது என ஏஎன்ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

    பாகிஸ்தானில் பணவீக்கம் உயர்ந்து, பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்தின. இந்நிலையில், இம்ரான் கானை பதவியில் இருந்து நீக்க எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வருவதாக அறிவித்தன.

    இந்த நடவடிக்கையின் முன்னணியில் பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் (PDM) என்ற கூட்டணி உள்ளது. ஒரு சில வாரங்களுக்கு முன்பு லாகூரில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு, PDM இன் தலைவர் மௌலானா ஃபஸ்ல்-உர்-ரஹ்மான், "இந்த முறைகேடான ஆட்சியாளருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர PDM-ல் உள்ள எல்லா கட்சிகளும் ஒப்புக்கொண்டுள்ளன" என்று அறிவித்தார்.

    இந்நிலையில், மார்ச் 28 அன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில், முக்கிய கூட்டணி கட்சியான முத்தாஹிதா குவாமி இயக்கம் (MQM) ஆளும் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளது. இதனால், எதிர்க்கட்சிகளின் பலம் 177 ஆக உயர்ந்துள்ளது. இம்ரான் கான் அரசின் பலம் 164 ஆக குறைந்துள்ளது. இதனால், நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்னரே இம்ரான் கான் அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    பாகிஸ்தானின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு தனிப்பெரும்பான்மை மட்டுமே தேவை. நாடாளுமன்றத்தில் 342 உறுப்பினர்கள் உள்ளனர், அதாவது 172 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தால், இம்ரான் கான் பதவி விலக வேண்டும்.

    இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஏப்ரல் மாதம் 3-ம் தேதி நாடாளுமன்ற கீழவையில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நாளை (மார்ச் 31) தொடங்கும்.

  5. கீயவ் மற்றும் செரீனிஹிவில் ராணுவ நடவடிக்கையை குறைப்பதாக தெரிவித்த ரஷ்யா

    woman

    பட மூலாதாரம், Getty Images

    யுக்ரேன்தலை நகர்கீயவ் மற்றும் செரீனிஹிவ் நகரங்களுக்கு வெளியே ரஷ்யப் படைகளின் ராணுவ நடவடிக்கையை "முற்றிலும்குறைப்போம்" என, ரஷ்யாவின் துணை பாதுகாப்பு அமைச்சர் அலெக்ஸாண்டர் ஃபோமின் தெரிவித்துள்ளார்.

    அமைதி பேச்சுவார்த்தையில் நம்பிக்கை ஏற்படுத்துவதற்கே இந்த முயற்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    யுக்ரேனில் ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய நாள் முதல் ஏற்பட்டுள்ள ஒரு சொல்லத்தகுந்த முன்னேற்றம் ரஷ்யாவின் இந்த அறிவிப்பு.

    ஆனால் ரஷ்யா எந்த அளவிற்கு தனது ராணுவ நடவடிக்கையை குறைக்கும் என குறிப்பிடவில்லை.

    அதேபோல யுக்ரேன் அதிபர் செலன்ஸ்கி ரஷ்யாவின் வார்த்தைகளை நம்புவதற்கான காரணங்கள் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

    அதேபோல களத்தில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.

    ரஷ்யாவின் பேச்சைக் காட்டிலும் செயலைதான் நம்ப வேண்டும் என பிரிட்டனும் தெரிவித்துள்ளது.

  6. இன்றைய நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம். இன்றைய உலகம், இந்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் உங்களுக்கு வழங்குகிறோம்.நேற்றைய நேரலை பக்கத்திலிருந்து சில முக்கிய நிகழ்வுகள் இதோ.

    • யுக்ரேன் தலைநகர் கீயவ் மற்றும் செரீனிஹிவ் நகரங்களுக்கு வெளியே ரஷ்யப்படைகளின் ராணுவ நடவடிக்கையை "முற்றிலும் குறைப்போம்" என, ரஷ்யாவின் துணை பாதுகாப்பு அமைச்சர் அலெக்ஸாண்டர் ஃபோமின் தெரிவித்துள்ளார்.
    • இஸ்தான்புல்லில் நடைபெற்ற இருநாட்டு பிரதிநிதிகளிடையேயான பேச்சுவார்த்தையில் ரஷ்யா சார்பாக அலெக்ஸாண்டர் ஃபோமின் இடம்பெற்றிருந்தார்.
    • அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக நடுநிலையை ஏற்றுக்கொள்வதாக, யுக்ரேன் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
    • யுக்ரேன் - ரஷ்யா இருநாடுகள் இன்று எடுத்த முடிவுகள், போர் தொடங்கியதற்கு பின்னான "மிகவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்" என துருக்கி தெரிவித்துள்ளது.
    • ஆனால், ரஷ்யா சொல்வதற்கும் அதன் செயல்களுக்கும் இடையே வித்தியாசம் இருப்பதாக, அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.
    • ரஷ்ய பெரும் பணக்காரரான ரோமன் ஆப்ராமோவிச் இருநாட்டு பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டார்.
    • அப்ரமோவிச்சிற்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலில் உண்மையில்லை என, ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
    • தமிழ்நாடு அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன் மற்றும் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோரின் துறைகள் மாற்றப்பட்டுள்ளன.