நன்றி நேயர்களே!
இன்றைய நேரலை பக்கம் இத்துடன் நிறைவடைகிறது. இதுவரை நடந்த நிகழ்வுகளின் முக்கிய துளிகள் இதோ...
- யுக்ரேன் தலைநகர் கீயவ் மற்றும் செரீனிஹிவ் நகரங்களுக்கு வெளியே ரஷ்யப்படைகளின் ராணுவ நடவடிக்கையை "முற்றிலும் குறைப்போம்" என, ரஷ்யாவின் துணை பாதுகாப்பு அமைச்சர் அலெக்ஸாண்டர் ஃபோமின் தெரிவித்துள்ளார்.
- இஸ்தான்புல்லில் நடைபெற்ற இருநாட்டு பிரதிநிதிகளிடையேயான பேச்சுவார்த்தையில் ரஷ்யா சார்பாக அலெக்ஸாண்டர் ஃபோமின் இடம்பெற்றிருந்தார்.
- அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக நடுநிலையை ஏற்றுக்கொள்வதாக, யுக்ரேன் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
- யுக்ரேன் - ரஷ்யா இருநாடுகள் இன்று எடுத்த முடிவுகள், போர் தொடங்கியதற்கு பின்னான "மிகவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்" என துருக்கி தெரிவித்துள்ளது.
- ஆனால், ரஷ்யா சொல்வதற்கும் அதன் செயல்களுக்கும் இடையே வித்தியாசம் இருப்பதாக, அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.
- ரஷ்ய பெரும் பணக்காரரான ரோமன் ஆப்ராமோவிச் இருநாட்டு பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டார்.
- அப்ரமோவிச்சிற்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலில் உண்மையில்லை என, ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
- தமிழ்நாடு அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன் மற்றும் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோரின் துறைகள் மாற்றப்பட்டுள்ளன.
- அண்ணாமலை முதிர்ச்சியற்ற அரசியல்வாதி என்பதை திரும்பத் திரும்ப நிரூபித்து வருகிறார் என, திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.


















