மேரியோபோல் அரங்க தாக்குதல்: சுமார் 300 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் – யுக்ரேன்
மேரியோபோல் அரங்கத்தில் நடைபெற்ற தாக்குதலில் சுமார் 300 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என, யுக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
நந்தினி வெள்ளைச்சாமி
யுக்ரேன் எல்லைக்குச் செல்லும் ஜோ பைடன்
பட மூலாதாரம், Reuters
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று யுக்ரேன் -போலாந்து எல்லைக்கு செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது ஐரோப்பிய பயணத்தின் இறுதிக்கட்டமாக இங்கு செல்லவிருக்கிறார்.
யுக்ரேன் எல்லையில் இருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள போலாந்து நகரமான ரெஸ்ஸோவில் தரையிறங்கி பயணத்தை தொடர்வார்.
இந்த பயணத்தின்போது, நேட்டோ படையின் அங்கமான `விமானப் படைப்பிரிவு 82` ஐ சேர்ந்தவர்களை ஜோ பைடன் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், யுக்ரேன் நிலைமை குறித்தும் தகவல்களைக் கேட்டறிந்துகொள்ள உள்ளார்.
இதைத் தொடர்ந்து, போலாந்து அதிபரை நன்றி சொல்லும் விதமாக பைடன் சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
பட மூலாதாரம், GETTY IMAGES
தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அந்த மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில்,
“தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு
சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று தமிழகம் மற்றும்
புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்
கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்
இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு
மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச
வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுக்ரேனிய அதிபரின் வார்த்தை ஜால உத்தி மேற்கு நாடுகளை எந்த அளவுக்கு ஈர்க்கிறது?
கட்டுரை தகவல்
எழுதியவர், பால் ஆடம்ஸ்
பதவி, தூதரகச் செய்தியாளர்
பட மூலாதாரம், GETTY IMAGES
யுக்ரேனிய போர்க்களத்தில் அந்நாட்டு ராணுவம் விடாமுயற்சியுடன் ரஷ்ய ஆக்கிரமிப்பு படையெடுப்பை எதிர்கொண்டு வரும் நிலையில், வொலோடிமிர் ஸெலென்ஸ்கி மேற்கு நாடுகளை நோக்கி 'ஒரு தகவல் போரை' நடத்தியிருக்கிறார்.
கடந்த இரண்டு வாரங்களில் 10 நாடுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டங்களில் அவர் சிறப்புரையாற்றி, பேசிய எல்லா இடங்களிலும் உறுப்பினர்கள் எழுந்து நின்று கைத்தட்டி பாராட்டும் அளவுக்கு மரியாதையைப் பெற்றார்.
முற்றுகையிடப்பட்ட தலைநகர் கீயவில் இருந்து நேரலை காணொளி காட்சி வாயிலாக பச்சை நிற சட்டையில் தோன்றிய ஸெலென்ஸ்கி, தமது நிலையை தெளவுபடுத்திய பிறகு வணக்கம் செலுத்தி உரையை நிறைவு செய்தார். அதேவேளை அவரது உரையை கேட்ட உறுப்பினர்கள் கைதட்டல் ஒலிக்க, எதிரேயே ஸெலென்ஸ்கியின் உருவம் மறைகிறது. கீயவிலும் உலக அரங்கிலும் தனது இருப்பை உறுதிப்படுத்தும் விஷயங்களைக் கவனிக்க வேண்டிய அவசரத்தில் அவர் இருக்கிறார்.
இந்த நேரலை பக்கத்தில்
இப்போதுதான் இணைகிறீர்களா? யுக்ரேன் – ரஷ்யா போரில் இன்று இதுவரை என்ன நடந்திருக்கிறது
என்பதை இங்கே வழங்குகிறோம்.
இன்று போலாந்து – யுக்ரேன் எல்லையில் உள்ள யுக்ரேன் அகதிகளை
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திக்க உள்ளார். யுக்ரேன் – ரஷ்யா போரிலிருந்து தப்பித்து
20 லட்சத்திற்கும் மேற்பட்ட யுக்ரேன் மக்கள் போலாந்துக்கு அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.
ரஷ்யாவின் போர் அச்சுறுத்தலுக்கு ஐரோப்பிய நாடுகள் தாமதமாக
எதிர்வினையாற்றியதாக தெரிவித்துள்ள யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, ரஷ்யாவுக்கு எதிராக உடனடி தடைகளை விதித்திருந்தால், போரை
தடுத்திருக்கலாம் என அவர் தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான யுக்ரேன் கோரிக்கைக்கு
ஒப்புதல் தெரிவிப்பதற்கு “தாமதம் செய்ய வேண்டாம்” எனவும் ஸெலென்ஸ்கி வலியுறுத்தினார்.
பிரஸ்ஸல்ஸில் நேற்று நடைபெற்ற நேட்டோ அவசரகால உச்சி மாநாடு
நடைபெற்ற நிலையில், ஸெலென்ஸ்கி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ரஷ்யா யுக்ரேனில் வேதியியல் ஆயுதங்களை பயன்படுத்தினால் நேட்டோ
“எதிர்வினையாற்றும்” என தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், எவ்வாறு அதற்கு எதிர்வினையாற்றும் என்பது குறித்து தெரிவிக்கவில்லை.
ஸ்லொவாக்கியா, பல்கேரியா மற்றும் ரொமானியா ஆகிய யுக்ரேன்
எல்லையில் உள்ள அண்டை நாடுகளுக்கு 40,000 துருப்புக்களை அனுப்ப
உள்ளதாக நேட்டோ உறுதிப்படுத்தியது.
இந்த போரில் யுக்ரேன் “வெற்றி பெறும்” என பிபிசியிடம் தெரிவித்த
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஆனால், அமைதியை நிலைநாட்டுவதில்
ரஷ்ய அதிபர் புதின் ஆர்வம் காட்டவில்லை என தெரிவித்தார்.
ரஷ்யப்படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள துறைமுக நகரமான பெர்டியான்ஸ்கில்
ரஷ்யாவின் போர்க்கப்பல் ஒன்று யுக்ரேன் படைகளால் நேற்று அழிக்கப்பட்டதாக, யுக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்: நாடாளுமன்றம் மார்ச் 28வரை ஒத்திவைப்பு
பட மூலாதாரம், NIA
படக்குறிப்பு, அசாத் கெய்சர்
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆளும் இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் முன்மொழிந்துள்ள தீர்மானம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அந்நாட்டு நாடாளுமன்ற மக்களவை திங்கள்கிழமை மாலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டின் நாடாளுமன்றம் இன்று காலை 11.30 மணியளவில் கூடியபோது, நடப்பு மக்களவையின் உறுப்பினர் ஒருவர் இறந்ததற்காக அவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவை அலுவல்களை வரும் திங்கட்கிழமை மாலை 4 மணிவரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அசாத் கெய்சர் தெரிவித்தார்.
பிபிசியின் ஷெஹ்சாத் மாலிக் கூற்றுப்படி, வெள்ளிக்கிழமை காலையில் தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தில் 159 எதிர்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும் அவர்களில் சிலர் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் சபாநாயகரின் அறிவிப்பு வெளிவந்தவுடன் குரல் எழுப்பினர்.
எதிர்க்கட்சித் தலைவர் ஒழுங்கு பிரச்னை குறித்து பேச முற்பட்ட போதிலும், அதை சபாநாயகர் நிராகரித்தார்.
வணக்கம் நேயர்களே!
நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழ் நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம். இதுவரை பரணி தரன் மற்றும் பிரசாந்த் முத்துராமன் வழங்கிய நேரலை செய்திகளை இனி நான் வழங்கவிருக்கிறேன்.
யுக்ரேனில் உள்ள பிபிசி செய்தியாளர்கள் மூலம் சமீபத்திய தகவல்கள் மற்றும் தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.
பாகிஸ்தான்: இம்ரான் கானின் அரசுக்கு எதிராக இன்று அறிமுகமாகிறது நம்பிக்கையில்லா தீர்மானம்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இம்ரான் கான், பாகிஸ்தான் பிரதமர்
பாகிஸ்தானில் அதன் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் அந்நாட்டு மக்களவையான தேசிய அவையில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
நாடாளுமன்றத்தின் இன்றைய நிகழ்ச்சி நிரலின்படி, எதிர்கட்சி உறுப்பினர்கள் பிரதமருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை முன்மொழிய உள்ளனர்.
இந்த தீர்மானத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளும் கட்சி தரப்பும் தீர்மானத்தை நிறைவேற்ற எதிர்கட்சிகளும் முயற்சித்து வருகின்றன.
தேசிய அவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்ற 172 அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குகள் தேவைப்படும்.
ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி பலம் என்ன?
தேசிய அவையின் இணையதள தகவலின்படி, ஆளும் கட்சியான பிடிஐக்கு கூட்டணி 178 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.
இந்த உறுப்பினர்களில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) உறுப்பினர்கள் 155 பேர், MQM கட்சியின் ஏழு உறுப்பினர்கள், BAP இன் ஐந்து உறுப்பினர்கள், PML-Q இன் ஐந்து உறுப்பினர்கள், GDA கட்சியின் மூன்று உறுப்பினர்கள் மற்றும் அவாமி முஸ்லீம் லீக்கின் ஒரு உறுப்பினர் அடங்குவர்.
எதிர்கட்சிகளின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 162. இவர்களில் மிகப்பெரிய எதிர்கட்சியான பிஎம்எல் நவாஸ் கட்சிக்கு 84 உறுப்பினர்கள், பாகிஸ்தான் மக்கள் கட்சி்ககு 57 உறுப்பினர்கள், முத்தஹிதா மஜிலிஸ் இ அமால் கட்சிக்கு 15 உறுப்பினர்கள், பிஎன்பி கட்சிக்கு 4 உறுப்பினர்கள், அவாமி தேசிய கட்சிக்கு ஒரு உறுப்பினர் என்ற வகையில் பலம் உள்ளது. இது தவிர இரண்டு சுயேச்சை உறுப்பினர்களும் எதிர்கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கின்றனர்.
என்ன பிரச்னை?
பாகிஸ்தானில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வெளியுறவு கொள்கையை இம்ரான் கான் தவறாக நிர்வகிப்பதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
பாகிஸ்தானில் இதுவரை எந்தவொரு கட்சியும் தமது பதவிக் காலத்தை நிறைவு செய்யவில்லை.
அன்றாட வாழ்க்கையை நடத்தவே 16 தறி ஓட்டும் கோவை விசைத்தறி தொழிலாளர்கள்
யோகி ஆதித்யநாத்: அஜய் மோகன் 'முதல்வர் மகாராஜா' ஆனது எப்படி?
பட மூலாதாரம், Getty Images
உத்தர பிரதேச மாநில முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்கும் யோகி ஆதித்யநாத்தின் அரசியல், மக்கள் கவனத்தை அந்த மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலும் ஈர்த்திருக்கிறது. யார் இவர்? எங்கிருந்து தொடங்கினார்? எப்படி வளர்ந்தார் என்பதுகுறித்து விரிவாகப் படிக்க,
அடங்காத காளையை அடக்கிய மாணவி? யார் இவர்?
காணொளிக் குறிப்பு, தனியாளாக காளையை அடக்கிய மாணவி: வைரலான வீடியோ
மகாராஷ்டிராவின் புனேவின் ஜுன்னர் தாலுகாவிலுள்ள தலேவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் திக்ஷா. இவர் அடங்காத காளையை அடக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.
இவர் எப்படி காளையை அடக்கினார்? இந்த காணொளியைப் பாருங்கள்.
யோகி ஆதித்யநாத் 2.0 பதவியேற்பு விழா குறிப்புகள் - 300 வார்த்தைகளில்
பட மூலாதாரம், Twitter@Yogi Adityanath Office
உத்தர பிரதேச மாநில முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் இன்று மாலை 4 மணியளவில் பதவியேற்க உள்ளார். இதில், பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.
தோற்ற அமைச்சர்கள் அரசு பங்களாக்களை மார்ச் 26ஆம் தேதியே காலி செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். வரவேற்புக்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக திட்டமிடப்பட்டுள்ளன. இன்னும் தெளிவாக இதுகுறித்து விரிவாகப் படிக்க
யுக்ரேன் தொடர்பான தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்காதது ஏன்? தூதர் விளக்கம்
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை (UNGA) அமர்வில் வியாழக்கிழமை 'யுக்ரேன் மீதான தாக்குதலின் மனிதாபிமான விளைவுகள்' என்ற தலைப்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.
எனினும், இந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.
யுக்ரேன் நெருக்கடி தொடர்பான சிறப்பு அவசர அமர்வில், இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 140 வாக்குகளும், தீர்மானத்தை எதிர்த்து ஐந்து வாக்குகளும் செலுத்தப்பட்டன.
அதே நேரத்தில், 38 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி தனது தரப்பை நிலைப்பாட்டை முன்வைத்தார்.
இது குறித்து அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் இரண்டு பக்க குறிப்புகளை இணைத்து விளக்கம் அளித்திருந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
"இந்தியா வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. ஏனென்றால் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதிலும், உடனடி மனிதாபிமான உதவிகளை வழங்குவதிலும் நாங்கள் கவனம் செலுத்த விரும்புகிறோம். இந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியம் இந்த வரைவு தீர்மானத்தில் சரியாக குறிப்பிடப்படவில்லை," என்று அவர் கூறியிருந்தார்.
யுக்ரேனில் தற்போது நிலவி வரும் சூழ்நிலை குறித்து இந்தியா மிகவும் கவலையடைந்துள்ளதாகவும், அது மேலும் மோசமாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுக்ரேனுக்கு இந்தியா அளித்த உதவியை குறிப்பிட்டுள்ள அவர், அந்நாட்டில் இருந்து 22.50 ஆயிரம் குடிமக்களை இந்தியா எப்படி வெளியேற்றியது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
வணக்கம் நேயர்களே!
பிபிசி தமிழ் நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம் நேற்றைய நேரலை பக்கத்தைபார்க்க இங்கே சொடுக்கவும்
யுக்ரேனில் உள்ள பிபிசி செய்தியாளர்கள் மூலம் சமீபத்திய தகவல்கள் மற்றும் தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குவது பரணி தரன் மற்றும் பிரசாந்த் முத்துராமன்.
இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் சுருக்கம் இங்கே..
“நேட்டோ இதுவரை இவ்வளவு ஒற்றுமையாக இருந்ததில்லை. இது ரஷ்ய அதிபர் புதினின் எதிர்பார்ப்புக்கு எதிரானது,” என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை (UNGA) அமர்வில் வியாழக்கிழமை 'யுக்ரேன் மீதான தாக்குதலின் மனிதாபிமான விளைவுகள்' என்ற தலைப்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. எனினும், இந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.
“புதின் ஒன்றும் அமைதியை விரும்பக்கூடிய நபர் அல்ல” என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இந்தப்போரை இன்னும் கடுமையாக்கவே புதின் முடிவு செய்திருப்பதாக நான் நினைக்கிறேன் என்றும் பேசியுள்ளார்.
யுக்ரேன்-ரஷ்யா போரில் பெலாரூஸ் எடுத்த நிலைப்பாட்டிற்காக, ஆஸ்திரேலியா பெலாரூஸ் அதிபர் மற்றும் அவர் குடும்பத்தின் மீது தடை விதித்துள்ளது.
வடகொரியா தடை செய்யப்பட்ட கண்டம்விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை, 2017ம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக சோதனை செய்ததாக, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.
உத்தர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் இன்று மாலை 4 மணியளவில் பதவியேற்க உள்ளார்.