You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

மேற்குவங்க பீர்பம் வன்முறை: மமதா பானர்ஜிக்கு பாஜக நெருக்கடி

மேற்குவங்க மாநிலம் பீர்பம் மாவட்டத்தில் எட்டு பேர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் துரதிருஷ்டவசமானது என, அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

வணக்கம் நேயர்களே!

பிபிசி தமிழ் நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம் நேற்றைய நேரலை பக்கத்தை பார்க்க இங்கே சொடுக்கவும்

யுக்ரேனில் உள்ள பிபிசி செய்தியாளர்கள் மூலம் சமீபத்திய தகவல்கள் மற்றும் தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குவது அ.தா. பாலசுப்ரமணியன் மற்றும் ஆ. லட்சுமி காந்த் பாரதி.

உங்கள் பகுதியின் செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின்மூலம் தகவல் அளியுங்கள்

இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் சுருக்கம் இங்கே.

  • யுக்ரேன் – ரஷ்யா போரை நிறுத்த தலையிட்டு சமாதானம் செய்ய வேண்டும் என, போப் பிரான்சிஸிடம் நேற்று யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தொலைபேசி வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.
  • யுக்ரேன் ரஷ்யா போர் தொடங்கியதிலிருந்து 15,000க்கும் அதிகமான ரஷ்யப் படையினர் கொல்லப்பட்டுள்ளதாக, யுக்ரேன் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையை பிபிசியால் சரிபார்க்க இயலவில்லை.
  • இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், அத்தியவாசிய பொருட்களின் தட்டுப்பாடு அதிகரித்துள்ள காரணத்தால், ஆறு இலங்கை தமிழர்கள் நேற்று தமிழகத்துக்கு அகதிகளாக வந்துள்ளனர்.
  • இந்தியாவில் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளநிலை படிப்புகளுக்கு, பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு மூலமே வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசி அறிவிப்பை வெளியிட்டதை அடுத்து, ஏப்ரல் முதல் வாரத்தில் சேர்க்கைக்கான நடைமுறை தொடங்கும்.