சுதந்திரத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் இடையில் உள்ள சுவரை தகர்த்திடுங்கள்: ஸெலென்ஸ்கி

ஜெர்மன் நாடாளுமன்றத்தில் தனது உரையில், யுக்ரேனில் ரஷ்ய போரை நிறுத்த உதவ வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. வரதட்சணை இல்லை; 124 ரூபாய்ல கல்யாணத்த முடித்துவிடலாம் - யார் இவர்கள்?

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  2. இலங்கை பொருளாதார நெருக்கடி: உச்சத்துக்கு சென்ற அத்தியாவசிய பொருட்களின் விலை - மக்கள் பரிதவிப்பு

    இலங்கை

    பட மூலாதாரம், GETTY IMAGES

    இலங்கையில் 2021ம் ஆண்டு மார்ச் மாத விலைப்பட்டியலுடன் ஒப்பிடுகையில், 115 ரூபாவாக காணப்பட்ட ஒரு கிலோகிராம் சம்பா அரிசியின் விலை தற்போது 190 முதல் 210 ரூபா வரை அதிகரித்துள்ளது.

    கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 93 ரூபாவாக காணப்பட்ட சிவப்பு அரிசியின் விலை, தற்போது 175 முதல் 200 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

    அத்துடன், 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 91 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மா, இன்று 170 ரூபா முதல் 220 ரூபா வரை சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

  3. ரஷ்யப் படைக்கு ரத்தத்தின் சுவை பிடித்துவிட்டது - மிக்கோலைவ் நகர மேயர்

    மேரியோபோலில் பொதுமக்கள் தஞ்சம் புகுந்திருந்த அரங்கில் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தியதற்கு யுக்ரேனின் தெற்கு நகரமான மிக்கோலைவ் நகர மேயர் ஒலெக்சாண்டர் சென்கேவிஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது மிகவும் வருத்தத்திற்குரியது என அவர் தெரிவித்தார்.

    ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்திய அந்த திரையரங்கில் முன்னதாக சுமார் 1,000 முதல் 1,200 பேர் தஞ்சம் புகுந்திருந்ததாக மேரியோபோல் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்து இன்னும் தெரியவரவில்லை.

    ஒலெக்சாண்டர் சென்கேவிஷ் பிபிசியிடம் பேசுகையில், “இந்த தாக்குதலை ரஷ்ய நாசிசம் என நான் கூறுவேன், ஏனெனில் அவர்கள் மக்களை கொன்றுள்ளனர். யுக்ரேனை ‘நாசிக்கள் அல்லாத’ அல்லது ‘ஆயுதங்கள் அல்லாத’தாக மாற்ற முயற்சிப்பதாக ரஷ்யா கூறுவது முற்றிலும் பொய். ஏனெனில் ரஷ்யப்படைகள் தற்போது பொதுமக்களை கொன்றுள்ளனர்” என தெரிவித்தார்.

    “அவர்களுக்கு (ரஷ்யப்படை) ரத்தத்தின் சுவை பிடித்துவிட்டது என நான் நினைக்கிறேன்” என்றார்.

    “நாசிக்கள் அல்லாத” யுக்ரேனாக மாற்றும் “சிறப்பு ராணுவ நடவடிக்கை” என, இந்த போரை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் நியாயப்படுத்தியுள்ளார். ஆனால், புதினின் இந்த கூற்று பலராலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

  4. மேரியோபோலில் பொதுமக்கள் தஞ்சம் புகுந்த அரங்கத்தில் குண்டுவீசி தாக்குதல்: புகைப்படங்கள்

    யுக்ரேன்

    பட மூலாதாரம், Getty Images

    ரஷ்யப் படைகள் முற்றுகையிட்ட மேரியோபோல் நகரத்தில், ஷெல் தாக்குதலில் இருந்து தப்பிக்க மக்கள் தஞ்சம் புகுந்திருந்த அரங்கத்தில் ரஷ்ய படைகள் வேண்டுமென்றே குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாக, யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

    அங்கு வரும் ரஷ்ய ஜெட் விமானங்களை எச்சரிக்கும் வகையில், திரையரங்கில் குழந்தைகள் இருப்பதை குறிப்பதற்காக, அரங்குக்கு வெளியே “குழந்தைகள்” என பெரிதாக எழுதப்பட்டிருந்தது.

    அந்த அரங்கில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.

    தங்கள் படைகள் பொதுமக்களை தாக்கவில்லை எனவும், இந்த தாக்குதலை தாங்கள் தொடுக்கவில்லை எனவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

    யுக்ரேன்

    பட மூலாதாரம், Reuters

    யுக்ரேன்

    பட மூலாதாரம், Reuters

  5. வணக்கம் நேயர்களே!

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழ் நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். இதுவரை ஜோ மகேஸ்வரன் மற்றும் சாய்ராம் ஜெயராமன் வழங்கிய நேரலை செய்திகளை இனி நான் வழங்கவிருக்கிறேன்.

    யுக்ரேனில் உள்ள பிபிசி செய்தியாளர்கள் மூலம் சமீபத்திய தகவல்கள் மற்றும் தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

  6. இலங்கையில் உச்சத்துக்கு சென்ற அத்தியாவசிய பொருட்களின் விலை

    இலங்கை பொருளாதார நெருக்கடியின் உச்சத்திற்கு சென்றுள்ள நிலையில், நாட்டிலுள்ள அடிமட்ட மக்கள் முதல் செல்வந்தர்கள் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    2021ம் ஆண்டு மார்ச் மாத விலைப்பட்டியலுடன் ஒப்பிடுகையில், 115 ரூபாவாக காணப்பட்ட ஒரு கிலோகிராம் சம்பா அரிசியின் விலை தற்போது 190 முதல் 210 ரூபா வரை அதிகரித்துள்ளது.

  7. யுக்ரேன் தரப்பு தாக்குதலில் மேலும் ஒரு ரஷ்ய ராணுவ தளபதி பலி

    யுக்ரேன் தரப்பின் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் மேஜர் ஜெனரல் ஓலெக் மித்யேவ்

    பட மூலாதாரம், TELEGRAM/@PRAVDA_GERASHCHENKO

    படக்குறிப்பு, யுக்ரேன் தரப்பின் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் மேஜர் ஜெனரல் ஓலெக் மித்யேவ்

    ரஷ்ய ராணுவத்தின் தளபதி ஒருவர் தங்களது நாட்டின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    யுக்ரேன் தரப்பு நடத்திய தாக்குதலில் இறக்கும் நான்காவது ரஷ்ய ராணுவ தளபதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    எனினும், இறந்ததாக கூறும் ராணுவத் தளபதியின் பெயரை ஸெலென்ஸ்கி தெரிவிக்கவில்லை. ஆனால் யுக்ரேனின் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் ஒருவர், மேஜர் ஜெனரல் ஓலெக் மித்யேவ் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

  8. ரஷ்ய அதிபரை "போர்க் குற்றவாளி" என்று அழைத்த பைடன்

    ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல் முறையாக "போர்க் குற்றவாளி" என்று குறிப்பிட்டுள்ளது இருநாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் பதற்றத்துக்கு உள்ளாக்கும் என்று கருதப்படுகிறது.

    வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும்போது பைடன் இவ்வாறு குறிப்பிட்டார்.

    ரஷ்ய அதிபரை "போர்க் குற்றவாளி" என்று அழைத்த பைடன் - பின்னணி என்ன?

    பட மூலாதாரம், Reuters

  9. ஜப்பான் நில நடுக்கத்தில் இருவர் உயிரிழப்பு - 90 பேர் காயம்

    ஜப்பானின் வட கிழக்கு பகுதியில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 2 பேர் உயிரிழந்துள்ளனர். 90 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் சுமார் 20 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    7.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பல இடங்களில் மக்களால் நிற்கவே முடியாத நிலை இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஃபுகுஷிமா உள்ளிட்ட மாநிலங்களில் பின்னதிர்வுகள் வரலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் ஒரு மீட்டர் உயரத்துக்கு சுனாமி வரக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஜப்பான் நில நடுக்கத்தில் இருவர் உயிரிழப்பு
  10. ஆசிய பணக்காரர் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம்

    முகேஷ் அம்பானி

    பட மூலாதாரம், Getty Images

    இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ஆசியாவின் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளதாக ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

    இவரின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட 24 சதவீதம் உயர்ந்து, 103 பில்லியன் டாலர்களாக உள்ளதாக ஹுருன் என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதானி குழும தலைவர் கௌதம் அதானி 81 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு இவரது சொத்து மதிப்பு வாரத்திற்கு 6,000 கோடி ரூபாய் என உயர்ந்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

  11. வணக்கம் நேயர்களே! பிபிசி தமிழ் நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்

    பிபிசி தமிழ் நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம். யுக்ரேனில் உள்ள பிபிசி செய்தியாளர்கள் மூலம் சமீபத்திய தகவல்கள் மற்றும் தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குவது ஜோ மகேஸ்வரன் மற்றும் சாய்ராம் ஜெயராமன்.

    உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றி எங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள். நேற்றைய நேரலை பக்கத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

    நேற்றைய நேரலை பக்கத்தின் சில முக்கிய செய்திகள்

    • அமெரிக்க நாடாளுமன்றத்தில் யுக்ரேன் அதிபர் ஆற்றிய உரையில், யுக்ரேன் வான் பரப்பை ‘நோ ஃப்ளை சோன்’ஆக (வான் பரப்பில் விமானம் பறக்கத் தடை) அறிவிப்பது குறித்து ஸெலென்ஸ்கி மீண்டும் வலியுறுத்தினார். ரஷ்யாவுக்கு எதிராக பல தடைகளை விதிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
    • யுக்ரேனுக்கு கூடுதலாக 800 மில்லியன் டாலர்கள் (612 மில்லியன் பவுண்ட்) மதிப்புக்கு பாதுகாப்பு உதவிகளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • புதன்கிழமை காலை அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ரஷ்யப் படைகள் ஷெல் தாக்குதல் நடத்தியதாக, கீயவ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே கீயவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
    • யுக்ரேனின் வடக்கு நகரமான செரீனிஹிவ்வில் ரொட்டித்துண்டுகளுக்காக வரிசையில் காத்திருந்த 10 பேரை ரஷ்யப் படைக்ள் இன்று சுட்டுக் கொன்றதாக, யுக்ரேனில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
    • யுக்ரேனின் தெற்கு நகரமான மேரியோபோல் துணை மேயர் கூறுகையில், ரஷ்யப் படைகள் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் உட்பட சுமார் 400 பேரை “பணயக் கைதிகளாக” பிடித்து வைத்துள்ளதாக தெரிவித்தார்.
    • ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தை நடைமுறைக்கு ஏற்றதாக இருந்தது என, யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.
    • யுக்ரேன் தரப்பை சேர்ந்த மிக்கைலோ பொடாலியாக் கூறுகையில், பேச்சுவார்த்தையில் “அடிப்படையில் முரண்பாடுகள்” உள்ளன எனவும், ஆனால், “சமாதானத்துக்கான வாய்ப்பு” உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.