'ரொட்டித் துண்டுக்காக வரிசையில் காத்திருந்த 10 பேரை சுட்டுக்கொன்ற ரஷ்யப் படை'

விட்டுக்கொடுப்பது ஒரு நொடி கூட சிந்திக்கவில்லை என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி பேசியுள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. “ரஷ்ய படையினரின் மீது தாக்குதல் நடத்தினோம்”: யுக்ரேன் ராணுவம்

    யுக்ரேன் நெருக்கடி

    பட மூலாதாரம், Reuters

    படக்குறிப்பு, கோப்புப்படம்

    "ரஷ்ய ஆக்கிரமிப்புப் படையினரின் மீது பேரழிவு தரும் தாக்குதலைச் செலுத்த முடிந்தது" என, யுக்ரேன் ஆயுதப் படை தெரிவித்துள்ளது.

    மூன்று ரஷ்யா போர் விமானங்கள், ஒரு ஹெலிகாப்டர், மூன்று ஆளில்லா ட்ரோன் வாகனங்களை அழித்ததாகவும், இரண்டு ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாகவும் யுக்ரேன் ராணுவப்படை தெரிவித்துள்ளது. பிபிசி இதனை சுயாதீனமாக சரிபார்க்க இயலவில்லை.

    “அதிக மக்கள்தொகை கொண்ட யுக்ரேன் நகரங்களில்” ரஷ்யா இந்த வாரம் குண்டு வீசி தாக்குதலை நிகழ்த்திய நிலையில், அப்படைகள் டொனியட்ஸ்க் , லூஹான்ஸ்க் மற்றும் மிக்கோலைவ் ஆகிய பகுதிகளில் முன்னேறுவதில் தோல்வியடைந்துவிட்டதாக யுக்ரேன் ராணுவம் தெரிவித்துள்ளது.

    “ சில பகுதிகளில் எதிரி ராணுவம் இழப்புகளை சந்தித்து பின்வாங்குகிறது” என யுக்ரேன் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தாங்கள் கைப்பற்றிய பகுதிகளிலும் தங்களை வலுப்படுத்துவதிலும் இன்னல்களை சந்தித்துவருவதாகவும், மேலும், ராணுவ பயிற்சி வீரர்களை அழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது எனவும், யுக்ரேன் ராணுவம் நேற்றிரவு வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளது.

    மேலும், தங்கள் படையினரின் இழப்புகளை ஈடுகட்ட ரஷ்யா வெளிநாட்டு வீரர்களை நாடியுள்ளதாகவும் யுக்ரேன் தெரிவித்துள்ளது.

    "இந்த இழப்புகளின் விளைவாக, நீடித்த யுக்ரேன் எதிர்ப்பை எதிர்கொண்டு தாக்குதல் நடவடிக்கைகளை நடத்துவதற்கு ரஷ்யா போராடிக்கொண்டிருக்கிறது"என, பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் அதன் சமீபத்திய உளவுத்துறை குறிப்பில் தெரிவித்துள்ளது.

  2. மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணி வெற்றி

    மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்

    பட மூலாதாரம், Getty Images

    மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - இங்கிலாந்துக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

    நியூசிலாந்தின் பே ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 15வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து - இந்திய அணிகள் விளையாடின. இதில், இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

    இங்கிலாந்து அணி 6 விகெட்டுகளை இழந்து, 136 ரன்கள் எடுத்தது. இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 134 ரன்களில் ஆட்டம் இழந்தது.

  3. வணக்கம் நேயர்களே!

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழ் நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். இதுவரை விஷ்ணுப்ரியா ராஜசேகர் மற்றும் ஜோ.மகேஸ்வரன் வழங்கிய நேரலை செய்திகளை இனி நான் வழங்கவிருக்கிறேன்.

    யுக்ரேனில் உள்ள பிபிசி செய்தியாளர்கள் மூலம் சமீபத்திய தகவல்கள் மற்றும் தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம் .

  4. நீட் தேர்வில் இருந்து நாடு விடுதலை பெறும் - மு.க.ஸ்டாலின்

    மு.க.ஸ்டாலின் பேச்சு

    நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப கோரி தமிழ்நாடு ஆளுநரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று சந்தித்தார்.

    அதேநேரத்தில், நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட 7 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத தமிழ்நாடு ஆளுநரை மாற்ற வேண்டும் என்று மக்களவையில் திமுக உறுப்பினர்கள் குழு தலைவர் டி.ஆர். பாலு வலியுறுத்தினார்.

    இந்நிலையில், தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தம்பி மகன் திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் இன்று பேசுகையில்,

    ''நீட் தேர்வை ரத்து செய்யும் முயற்சியில் முதல் கட்ட வெற்றிச் செய்தி கிடைத்துள்ளது.

    ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தேர்வுக்கு எதிராக 2வது முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார்.

    எனவே, நீட் தேர்வில் இருந்து விரைவில் இந்த நாடு விடுதலை பெறும்.'' என்று தெரிவித்தார்.

  5. திருநெல்வேலியில் நீராவி முருகன் என்பவர் சுட்டுக் கொலை

    நீராவி முருகன்
    படக்குறிப்பு, முருகன்

    திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் இருந்து களக்காடு செல்லும் வழியில் நீராவி முருகன் என்பவரை திண்டுக்கல் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ய முயற்சித்தனர்.

    அப்போது ஏற்பட்ட மோதலில் முருகன் சுட்டுக் கொல்லப்பட்டார். முருகன் மீது நகைப்பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவித்தனர்.

  6. இந்தியாவில் 12-14 வயதினருக்கான கொரோனா தடுப்பூசி - இன்று தொடங்கியது

    கொரோனா தடுப்பூசி

    பட மூலாதாரம், ANI

    இந்தியாவில் 12- 14 வயதினருக்கான கொரோனா தடுப்பூசி, 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கியது.

    இது முக்கிய நாள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முயற்சிகளில் இன்று ஒரு முக்கியமான நாள். தற்போது முதல், 12-14 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

    இந்தியாவின் தடுப்பூசி மைத்ரி திட்டத்தில் பல நாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்பியுள்ளோம். இந்தியாவின் தடுப்பூசி முயற்சிகள் கோவிட்-19க்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்தியதில் மகிழ்ச்சியடைகிறேன்.

    தற்போது, இந்தியாவில் உற்பத்தி செய்யும் (மேட் இன் இந்தியா) தடுப்பூசிகள் உள்ளன. உரிய பரிசோதனைக்க்கு பின்னர் மற்ற தடுப்பூசிகளுக்கும் அனுமதி வழங்கியுள்ளோம். இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராட தயார் நிலையில் இருக்கிறோம். அதே நேரத்தில், கொரோனா தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.'' என்று தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  7. பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து சித்து ராஜிநாமா

    பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து நவ்ஜோத் சிங் சித்து விலகுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  8. சென்னையில் செஸ் ஒலிம்பியாட் 2022 - முதலமைச்சர் பெருமிதம்

    சென்னையில் செஸ் ஒலிம்பியாட் 2022

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, செஸ் ஒலிம்பியாட் 2022

    அகில இந்திய செஸ் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை இந்தியா நடத்துகிறது. இந்த போட்டிகள் தமிழ்நாட்டில் சென்னையில் நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் ஜுலை 26 முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

    இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவின் செஸ் தலைநகரம் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டிற்கே பெருமையான தருணம். உலகம் முழுவதும் உள்ள செஸ் ராஜா, ராணிகளையும் சென்னை அன்புடன் வரவேற்கிறது.'' என்று தெரிவித்துள்ளார்.

    ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. தற்போதைய ரஷ்யா - யுக்ரேன் போர் சூழலால் போட்டி நடைபெறும் இடம் மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் நடைபெற உள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  9. பன்றிகளின் உடல் உறுப்புகள், மனித உறுப்பு மாற்று சிகிச்சையின் எதிர்காலமாக இருக்குமா?

    pig

    பட மூலாதாரம், Getty images

    உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, முன்பு இருந்ததைவிட இப்போது முன்னேறியுள்ளது. மரபணு மாற்றப்பட்ட பன்றிகளிடம் இருந்து எடுக்கப்பட்ட முதல் உறுப்புகள், மனிதர்களுக்கு வைக்கப்பட்டன. அதோடு, பன்றி இதயத்தைப் பெற்றவரால் இரண்டு மாதங்கள் உயிர் வாழ முடிந்தது.

    உடல் உறுப்புகளுக்கு இருக்கும் உலகளாவிய பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு, உறுப்புகளுக்காக பன்றிகளைப் பயன்படுத்துவதில் நாம் எவ்வளவு நெருங்கி வந்துள்ளோம்?

    அறுவை சிகிச்சை அரங்கில் அமைதி நிலவுகிறது. அறையில் பதற்றம் உருவாகிறது.

    அறுவை சிகிச்சை நிபுணர்கள் பன்றியின் சிறுநீரகத்தை மனித உடலுடன் இணைத்துள்ளனர். சிறுநீரகத்தை இறுகப் பற்றியிருக்கும் கருவிகள் விடுவிக்கப்பட்டு, மனித ரத்தம் அதற்குள் பாய்கிறது.

    மாற்று அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவர் ஜேமி லாக், "நீங்கள் குண்டூசி விழும் ஓசையைக் கூட கேட்டிருக்கலாம்," என்கிறார்.

  10. அச்சத்துக்கு மத்தியில் பிரதமர்களின் ரயில் பயணம்

    அச்சத்துக்கு மத்தியில் பிரதமர்களின் ரயில் பயணம்

    பட மூலாதாரம், MATEUSZ MORAWIECKI/TWITTER

    அச்சத்துக்கு மத்தியில் பிரதமர்களின் ரயில் பயணம்

    பட மூலாதாரம், TWITTER/@MORAWIECKIM

    அச்சத்துக்கு மத்தியில் பிரதமர்களின் ரயில் பயணம்

    பட மூலாதாரம், AFP

    செவ்வாயன்று,யுக்ரேனுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக போலாந்திலிருந்து யுக்ரேன் தலைநகர் கீயஃபிற்கு போலாந்து,ஸ்லோவேனியா மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளின் பிரதமர்கள் ரயிலில் பயணம் மேற்கொண்டு அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கியை சந்தித்துள்ளனர்.

    கீயஃபில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் மூன்று நாட்டு தலைவர்களும் யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கியை சந்தித்துள்ளனர்.

    இந்த பயணம் ஆபத்தானதாக இருக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்த பிறகும் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

    சென் குடியரசின் பிரதமர், 'யுக்ரேன் மக்கள் தங்களின் விடுதலைக்காக போராடுகின்றனர்' எனதெரிவித்தார்.

    அதேபோல பிரதமர்களின் வருகை யுக்ரேனுக்கு வழங்கப்படும் வலுவான ஒரு ஆதரவு என்று ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    இந்த சந்திப்பு நடந்து கொண்டிருந்தபோதே தலைநகர் கீயஃபில் வெடிச்சத்தங்களை கேட்க முடிந்தது.

  11. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழ் நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம். யுக்ரேனில் உள்ள பிபிசி செய்தியாளர்கள் மூலம் சமீபத்திய தகவல்கள் மற்றும் தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம் .

    நேற்றைய பக்கத்திலிருந்து சில முக்கிய செய்திகள்:

    • யுக்ரேன் அதிபர் இரவு தொலைக்காட்சி உரையில் பேசியபோது, “ரஷ்யப் படைவீரர்கள் உயிர் வாழ விரும்புகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். மேலும், சரணடைபவர்கள், கண்ணியமாக நடத்தப்படுவீர்கள்,” என்று கூறியுள்ளார்.
    • அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி இல்லத்தில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திய சோதனையில் 11.153 கிலோ தங்கம், 118.506 கிலோ வெள்ளி, கணக்கில் வராத ரொக்கம் 84 லட்சம் மற்றும் 34 லட்சம் மதிப்பிலான கிரிப்டோகரன்சி முதலீடுகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று லஞ்ச ஒழிப்பத் துறை தெரிவித்துள்ளது.
    • ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் போருக்கு எதிர்ப்பு தெரிவித்த செய்தியாளருக்கு 30,000 ரூபிள் அபராதம் விதிக்கப்பட்டது.
    • ரஷ்யாவுக்குள் நுழைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்த மாநிலங்களின் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் ராஜினாமா செய்ய வேண்டுமென சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.
    • கிழக்கு யுக்ரேன் நகரமான டினிப்ரோவில் உள்ள விமான நிலையம், ரஷ்ய ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • யுக்ரேன் தலைநகர் கீயவ் மீது நடந்த குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி முதல் வியாழன் காலை 7 மணி வரை, ஊரடங்கு விதிக்கப்பட உள்ளது.
    • ரஷ்யாவின் மிக முக்கியமான தொலைக்காட்சி சேனல் ஒன்றின் செய்தி தொகுப்பாளர் ஒருவர் ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.