நன்றி நேயர்களே!
பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்தில் இதுவரை இணைந்திருந்ததற்கு நன்றி.
இத்துடன் இன்றைய நேரலைப் பக்கம் நிறைவடைகிறது. யுக்ரேனில் உள்ள பிபிசி செய்தியாளர்கள் மூலம் சமீபத்திய தகவல்கள் மற்றும் தமிழ்நாடு, இந்தியா, உலகம் முழுவதுமான செய்திகளுடன் நாளை காலை மீண்டும் நேரலைப் பக்கம் தொடங்கும்.
இன்றைய நேரலைப் பக்கத்தின் முக்கியமான செய்திகளை கீழே காணலாம்.
- அமெரிக்க நாடாளுமன்றத்தில் யுக்ரேன் அதிபர் ஆற்றிய உரையில், யுக்ரேன் வான் பரப்பை ‘நோ ஃப்ளை சோன்’ஆக (வான் பரப்பில் விமானம் பறக்கத் தடை) அறிவிப்பது குறித்து ஸெலென்ஸ்கி மீண்டும் வலியுறுத்தினார். ரஷ்யாவுக்கு எதிராக பல தடைகளை விதிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
- யுக்ரேனுக்கு கூடுதலாக 800 மில்லியன் டாலர்கள் (612 மில்லியன் பவுண்ட்) மதிப்புக்கு பாதுகாப்பு உதவிகளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- புதன்கிழமை காலை அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ரஷ்யப் படைகள் ஷெல் தாக்குதல் நடத்தியதாக, கீயவ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே கீயவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
- யுக்ரேனின் வடக்கு நகரமான செரீனிஹிவ்வில் ரொட்டித்துண்டுகளுக்காக வரிசையில் காத்திருந்த 10 பேரை ரஷ்யப் படைக்ள் இன்று சுட்டுக் கொன்றதாக, யுக்ரேனில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
- யுக்ரேனின் தெற்கு நகரமான மேரியோபோல் துணை மேயர் கூறுகையில், ரஷ்யப் படைகள் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் உட்பட சுமார் 400 பேரை “பணயக் கைதிகளாக” பிடித்து வைத்துள்ளதாக தெரிவித்தார்.
- ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தை நடைமுறைக்கு ஏற்றதாக இருந்தது என, யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.
- யுக்ரேன் தரப்பை சேர்ந்த மிக்கைலோ பொடாலியாக் கூறுகையில், பேச்சுவார்த்தையில் “அடிப்படையில் முரண்பாடுகள்” உள்ளன எனவும், ஆனால், “சமாதானத்துக்கான வாய்ப்பு” உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.















