You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

ரஷ்ய எண்ணெய்க்கு தடை விதித்த அமெரிக்கா, படிப்படியாக குறைக்க முடிவு செய்த பிரிட்டன்

ரஷ்ய நாட்டில் இருந்து பெட்ரோலியம், எரிவாயு, நிலக்கரி ஆகியவற்றை அமெரிக்காவில் இறக்குமதி செய்ய முழுமையாகத் தடை விதித்தார் அந்நாட்டு அதிபர் ஜோ பைடன்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

வணக்கம் நேயர்களே!

நாங்கள் விஷ்ணுப்ரியா ராஜசேகர் மற்றும் லட்சுமி காந்த் பாரதி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம். யுக்ரேன் மீது ரஷ்யா நடத்திவரும் படையெடுப்பு குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.

உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றி எங்கள்டிவிட்டர் கணக்கின் மூலம்தகவல் அளியுங்கள்.நேற்றைய நேரலை பக்கத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

நேற்றைய நேரலை பக்கத்தின் சில முக்கியச் செய்திகள்:

  • யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யாவின் நட்பு நாடான கஜகஸ்தானில் மக்கள் போராட்டம் நடத்தினர்.
  • யுக்ரேன் மீது ரஷ்யப் படையெடுப்பு நடந்து வரும் சூழலில், யுக்ரேனியர்கள் தங்ளை உற்சாகப்படுத்திக்கொள்ளும் வகையில் பாட்டுப் பாடி, இசை மீட்டி வருகிறார்கள்.
  • கீயவ், கார்கிவ், சுமி, மேரியோபோல் நகரங்களில் இன்று (மார்ச் 7) காலை 7 மணி முதல் பொதுமக்கள் வெளியேற வசதியாக இந்த போர் நிறுத்தம் கடைபிடிக்கப்படும் என்று ரஷ்ய அரசு ஊடகம் தகவல் தெரிவித்தது.
  • ரஷ்யாவில் நேற்று, யுக்ரேன் மீதான படையெடுப்புக்கு எதிராக பிரசங்கம் செய்த பாதிரியார் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் ஆர்வலர்கள் குழுக்கள் தெரிவிக்கின்றன.
  • இந்திய பிரதமர் நரேந்திர மோதி, யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசினார். 35 நிமிடங்கள் நடந்த உரையாடலின்போது, இந்திய குடிமக்கள் யுக்ரேனில் இருந்து வெளியேறுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் செய்த உதவிகளுக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.
  • யுக்ரேனில் இருந்து வெளியேறும் மக்கள், பெலாரூஸ் அல்லது ரஷ்யாவிற்கு அகதியாக செல்லும் வகையில் திறக்கப்படும் பாதை தொடர்பான ரஷ்ய முன்மொழிவு “முற்றிலும் நியாயமற்றது” என்று யுக்ரேன் கூறியது.
  • கீயவில் ஒரு ரகசிய இடத்திலுள்ள நிலத்தடி தங்குமிடத்தில் இருந்து, யுக்ரேனின் இளம் அமைச்சர் மிக்கைலோ ஃபெடோரோவ் ரஷ்யா மீது ஒரு டிஜிட்டல் போரை நடத்தி வருகிறார்.
  • யுக்ரேனின் தகவல் தொடர்பு வசதிகளை ரஷ்யா வேண்டுமென்றே குறிவைப்பதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. கடந்த வாரம் கீயவில் இதேபோன்ற தாக்குதல் நடந்ததைத் தொடர்ந்து, ஞாயிற்றுக் கிழமை கார்ஹிவில் உள்ள தொலைக்காட்சி கோபுரத்தின் மீது தாக்குதல் நடந்ததாகச் செய்திகள் வந்தன.
  • யுக்ரேன் படையெடுப்பை நிறுத்தக் கோரி சர்வதேச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் கலந்து கொள்ள ரஷ்யா மறுத்து விட்டது.
  • ஸெலென்ஸ்கி தனது இன்றைய உரையின்போது, தொடர்ச்சியான படையெடுப்பு, “யுக்ரேனுக்கு எதிரான தன் திட்டங்களை ரஷ்யா கைவிடவில்லை,” என்பதைக் காட்டுகிறது என்று கூறினார். மேலும், “அதனால், புதிதாக ரஷ்யா மீது விதிப்பதற்கான தடைகளின் தொகுப்பு தேவை,” என்றார்.
  • யுக்ரேனுக்கான பிரிட்டிஷ் தூதர், “தீவிரமான பாதுகாப்பு நிலைமை” காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.