சுமி வான்வழி தாக்குதலில் 9 பேர் உயிரிழப்பு
யுக்ரேனின் சுமியில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்.
மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் கூற்றை மேற்கோள்காட்டி, ஏஎஃப்பி செய்தி முகமை இதனை தெரிவித்துள்ளது.
சுமியில் நடைபெற்றுவரும் தொடர்ச்சியான வான்வழி தாக்குதல்களில், சில வீடுகள் அழிக்கப்பட்டன. ஒரு கட்டிடத்தில் தீப்பிடித்தது.
இந்த தாக்குதலில் இரு குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். பெண் ஒருவர் இதில் காயமடைந்தார்.
சுமார் 700 இந்திய மாணவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வரும் பகுதி சுமி. செரீனிஹிவ் பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்கில் பற்றிய நெருப்பு, செவ்வாய்க்கிழமை காலை அணைக்கப்பட்டது.
கிழக்கு யுக்ரேனில் உள்ள கார்கீவில் ரஷ்ய தாக்குதலில், 9 தளங்களைக் கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தில் தீப்பிடித்தது. அந்த தீயை அணைக்க 4 மணிநேரத்திற்கும் மேலானது. இதில், 4 பேர் உயிரிழந்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது.