“கிரைமியாவை ரஷ்ய பகுதியாக யுக்ரேன் ஏற்க வேண்டும்” – ரஷ்யா நிபந்தனை

யுக்ரேன் ரஷ்ய நிபந்தனைகளை நிறைவேற்றினால், “எந்த நேரத்திலும்” ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த முடியும் என்று ரஷ்யா கூறியுள்ளது. மேலும், நேட்டோ போன்ற எந்தவொரு கூட்டமைப்பிலும் இணைவதற்கான கோரிக்கைகளை நிராகரிக்க வேண்டும் என்று பெஸ்கோவ் கூறியுள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

க. சுபகுணம்

  1. யுக்ரேன் படையெடுப்பு குறித்த சர்வதேச விசாரணையில் பங்கெடுக்க மறுத்த ரஷ்யா

    யுக்ரேன் படையெடுப்பை நிறுத்தக் கோரி சர்வதேச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் கலந்து கொள்ள ரஷ்யா மறுத்து விட்டது.

    ஹேக் பகுதியிலுள்ள ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் ஷுல்கின், அவருடைய அரசாங்கம் இதில் பங்கேற்க விரும்பவில்லை என்று கூறினார்.

    ஐ.நா-வின் சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, ரஷ்ய கூட்டமைப்பு விசாரணையில் பங்கெடுக்காததற்கு வருந்துவதாகக் கூறினார்.

    யுக்ரேன் பிரதிநிதி ஆன்டன் கோரினெவிச், “ரஷ்ய இருக்கைகள் காலியாக உள்ளன. அவர்கள் இங்கே இல்லை. போர்க்களத்தில் இருக்கிறார்கள்,” என்று நீதிமன்றத்தில் கூறினார்.

    இல்லாத இனப்படுகொலையின் கூற்றுகளைப் பயன்படுத்தி, படையெடுப்பை நியாயப்படுத்த முயல்வதாக அவர் குற்றம் சாட்டியவர், “புதின் பொய் சொல்கிறார். யுக்ரேன் குடிமக்கள் இறந்துகொண்டிருக்கின்றனர்,” என்றார்.

    யுக்ரேன், சர்வதேச நீதிமன்றத்தில் அவசரமாகத் தலையிட்டு, ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

  2. நெல்லையில் தமிழ்நாடு முதல்வர் கார் மீது தேநீர் கப்பை வீசிய டீ மாஸ்டர்

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாகனம் மீது தேநீர் கப்பை வீச முயன்ற டீ மாஸ்டரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

    நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தமிழக முதல்வரின் கார் மீது அருகிலிருந்த டீக்கடை மாஸ்டர் பாஸ்கர் சில்வர் டீ கப்பை வீசியுள்ளார். அது அருகிலிருந்த பாதுகாப்பு வாகனம் மீது பட்டது. இதையடுத்து டீ மாஸ்டர்பாஸ்கரை பிடித்த போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவர் எந்தக் கட்சியையும் சாராதவர் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. என்ன காரணத்திற்காக இதைச் செய்தார் என்பது குறித்த விவரங்கள் எதுவும் இன்னும் வெளிவரவில்லை.

    தமிழ்நாடு முதல்வர் கார் மீது தேநீர் கப்பை வீசிய டீ மாஸ்டர்
  3. “எண்ணெய் மற்றும் எரிவாயுவிற்காக யுக்ரேனின் ரத்தத்தைக் கொடுக்க முடியாது” – லிதுவேனியா

    “எண்ணெய் மற்றும் எரிவாயுவிற்காக, யுக்ரேனின் ரத்தத்தைக் கொடுக்க முடியாது” – லிதுவேனியா

    பட மூலாதாரம், Reuters

    ரஷ்ய எரிசக்தி விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று லிதுவேனியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் கேப்ரியேலியஸ் லேண்ட்ஸ்பெர்ஜிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

    “நாம் இறக்குமதி செய்யும் எரிசக்தி ஆதாரங்களில் கிடைக்கும் பணம் ரஷ்ய ராணுவ நடவடிக்கைக்குச் செலவாகிறது” என்று அமெரிக்க செயலர் ஆன்டனி ப்ளிங்கன் உடனான சந்திப்பின்போது லேண்ட்ஸ்பெர்ஜிஸ் கூறியுள்ளார்.

    மேலும், “எண்ணெய் மற்றும் எரிவாயுவிற்காக, யுக்ரேனின் ரத்தத்தைக் கொடுக்க முடியாது” என்று அவர் குறிப்பிட்டார்.

    இத்தாலிய பிரதமர் மரியோ ட்ராகி பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வோன் டெர் லேயனைச் சந்தித்து இத்தாலி ரஷ்ய எரிவாயுவைச் சாந்திருப்பது குறித்தும் தற்போதைய எரிசக்தி விநியோகத்தை பல்வகைப்படுத்த என்ன செய்யலாம் என்பது குறித்து விவாதிக்கிறார்.

    எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவிற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால், ஐரோப்பிய நாடுகளில் இத்தாலியும் ஜெர்மனியும் பெரியளவுக்குப் பாதிக்கப்படும்.

  4. “ரஷ்யா யுக்ரேனின் தகவல் தொடர்பைக் குறி வைக்கிறது”

    யுக்ரேனின் தகவல் தொடர்பு வசதிகளை ரஷ்யா வேண்டுமென்றே குறிவைப்பதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

    சமீபத்தில் அவர்கள் வெளியிட்ட பாதுகாப்பு உளவுத்துறை குறித்த அறிக்கையில், “யுக்ரேனிய குடிமக்கள் நம்பகமான செய்தி மற்றும் தகவலை அணுகுவதைத் தடுப்பதற்காக யுக்ரேனின் தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை ரஷ்யா குறி வைத்திருக்கலாம்,” என்று கூறியது.

    கடந்த வாரம் கீயவில் இதேபோன்ற தாக்குதல் நடந்ததைத் தொடர்ந்து, ஞாயிற்றுக் கிழமை கார்ஹிவில் உள்ள தொலைக்காட்சி கோபுரத்தின் மீது தாக்குதல் நடந்ததாகச் செய்திகள் வந்தன.

    “யுக்ரேனின் உள்கட்டமைப்பு மீதான ரஷ்ய தாக்குதல்களின் விளைவாக, இணைய சேவை சீர்குலைக்கப்படலாம்,” என்றும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

    “கடந்த வாரத்தில் மேரியோபோல், சுமி, கீயவ் மற்றும் கார்ஹிவ் ஆகிய இடங்களில் இணைய தடைகள் பதிவாகியுள்ளன.”

    “ரஷ்யா யுக்ரேனின் தகவல் தொடர்பைக் குறி வைக்கிறது”

    பட மூலாதாரம், Reuters

  5. வந்துகொண்டிருக்கும் செய்தி, ரஷ்யா-யுக்ரேன் பேச்சுவார்த்தை துருக்கியில் தொடங்கவுள்ளது

    யுக்ரேன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை இன்னும் சில மணி நேரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    யுக்ரேனிய அதிகாரிகளின் கூற்றுப்படி, கீயவ் நேரப்படி மாலை 4 மணிக்குத் தொடங்கும் என்று இப்போது தெரியவந்துள்ளது.

    ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் லாவ்ரோஃப், யுக்ரேனிய வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரி குலேபாவை துருக்கியிலுள்ள அன்டல்யாவில் சந்திப்பார்.

    பல்வேறு நகரங்களின் குடியிருப்புப் பகுதிகளில் ராக்கெட் தாக்குதல் தொடர்வதாகவும் கீயவ் முழுவீச்சிலான தாக்குதலை எதிர்கொள்ளலாம் என்றும் யுக்ரேன் கூறுகிறது.

  6. நேட்டோவுக்கு வரும் அச்சுறுத்தலை எதிர்க்க அமெரிக்கா தயாராக உள்ளது

    லித்துவேனியாவில் அதிகாரபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி ப்ளிங்கன், “லித்துவேனிய ஜனநாயகத்தின் மதிப்பைக் குறைக்கும் செயல்கள், சைபர் தாக்குதல்கள் மற்றும் தவறான தகவல்களை விதைப்பது ஆகியவற்றில் ரஷ்யா ஈடுபடுகிறது.

    ரஷ்ய படையெடுப்பின் 12-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவும் அதன் நட்பு நாடும் “யுக்ரேனுடன் நிற்பதற்கான தங்கள் தீர்மானத்தில் ஒன்றுபட்டுள்ளன” என்றும் அவர் கூறுகிறார்.

    அமெரிக்காவும் நட்பு நாடுகளும் எந்தவோர் அச்சுறுத்தலையும் சந்திக்கத் தயாராக இருப்பதாகக் கூறினார். மேலும், 7,000 அமெரிக்கப் படைகளை ஐரோப்பாவிற்கு அனுப்புவது மற்ற படைகளை, “நேட்டோவின் கிழக்குப் பகுதியை வலுப்படுத்தவது” உட்பட அமெரிக்கா “தங்கள் பகிரப்பட்ட பாதுகாப்பை” வலுப்படுத்துவதாகத் தெரிவித்தார்.

    “ஒருவர் மீதான தாக்குதல் என்பது அனைவரின் மீதுமான தாக்குதல்,” என்றவர், நேட்டோவின் சட்டப்பிரிவு 5-க்கான அமெரிக்காவின் “புனிதமான” உறுதிப்பாட்டை ப்ளிங்கன் மீண்டும் வலியுறுத்தினார். மேலும், “நேட்டோ பிரதேசத்தின் ஒவ்வோர் அங்குலத்தையும் நாங்கள் பாதுகாப்போம்” என்றார்.

  7. ரஷ்யாவுக்கு எதிராக டிஜிட்டல் போரை தொடங்கிய யுக்ரேனிய இளம் அமைச்சர்

    கீயவில் ஒரு ரகசிய இடத்திலுள்ள நிலத்தடி தங்குமிடத்தில் இருந்து, யுக்ரேனின் இளம் அமைச்சர் மிக்கைலோ ஃபெடோரோவ் ரஷ்யா மீது ஒரு டிஜிட்டல் போரை நடத்தி வருகிறார்.

    மிக்கைலோ ஃபெடோரோவ் தன்னுடைய விருப்ப ஆயுதமான சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, ரஷ்யாவுடனான உறவுகளைத் துண்டிக்குமாறு பெரிய வணிகங்களின் தலைமை நிர்வாகிகளை வலியுறுத்துகிறார். ரஷ்யாவுக்கு எதிராக சைபர் தாக்குதலை தொடங்குமாறு “ஐடி ஆர்மி ஆஃப் யுக்ரேனை” ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கையையும் அவர் எடுத்துள்ளார்.

    ரஷ்யாவுக்கு எதிராக டிஜிட்டல் போரைத் தொடங்கியிருக்கும் யுக்ரேனின் இளம் அமைச்சர்

    பட மூலாதாரம், Twitter

    ரஷ்யாவை புறக்கணிக்குமாறு பன்னாட்டு நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.

    ஆப்பிள், கூகுள், மெட்டா, ட்விட்டர், யூட்யூப், மைக்ரோசாஃப்ட், சோனி, ஆர்க்கிள் போன்ற எந்தவொரு தொழில்நுட்ப நிறுவனத்தையும் யுக்ரேன் அரசின் அதிகாரபூர்வ கடிதம் தவறவிடவில்லை.

    ஃபெடோரோவ் தனது கடிதங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுகிறார். அதன்மூலம், அதையும் அதற்கான பதில்களையும் உலகம் பார்க்க முடியும்.

  8. “நிர்ணயிக்கப்பட்ட வெளியேற்றப் பாதை துண்டிக்கப்பட்டிருந்தது” – செஞ்சிலுவை சங்கம்

    சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் செயல்பாட்டு இயக்குநரான டொமினிக் ஷ்டில்ஹார்ட் பிபிசி ரேடியோ 4-இன் டுடே நிகழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

    மனிதாபிமான ரீதியிலான வழித்தடங்கள் விஷயத்தில் என்ன பிரச்னை என்று அவரிடம் கேட்டதற்கு, அவர்கள் இரண்டு தரப்புடனும் சில நாட்களாகப் பேசிக் கொண்டிருப்பதாகவும் இருப்பினும் போர் நிறுத்த ஒப்பந்தம் உறுதி செய்யப்படுவது தொடர்ந்து பிரச்னைக்குரியதாகவே இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

    “இரண்டு தரப்பையும் உறுதியானதோர் உடன்படிக்கைக்குக் கொண்டு வருவதே சவாலாக இருந்ததாக” ஷ்டில்ஹார்ட் கூறுகிறார்.

    “நிர்ணயிக்கப்பட்ட வெளியேற்றப் பாதை துண்டிக்கப்பட்டிருந்தது” – செஞ்சிலுவை சங்கம்

    பட மூலாதாரம், Reuters

    இதுவரை ஒப்பந்தங்கள், கொள்கையளவில் மட்டுமே இருந்தன. பாதைகளை யார் பயன்படுத்தலாம் என்பது போன்ற துல்லியமான விவரங்களோடு அவை இல்லாததால், உடனடியாக உடைந்துவிட்டன.

    செஞ்சிலுவை சங்கத்தைச் சேர்ந்த சில ஊழியர்கள் மேரியோபோலில் இருந்து ஞாயிற்றுக் கிழமை வெளியேற நிர்ணயிக்கப்பட்ட பாதை வழியே வெளியேற முயன்றனர். ஆனால், “அவர்களுக்குச் சுட்டிக்காட்டப்பட்ட சாலை துண்டிக்கப்பட்டிருந்தது,” என்று ஷ்டில்ஹார்ட் கூறினார்.

    “இதனால் இரண்டு தரப்பும் துல்லியமான விவரங்கள் அடங்கிய ஒப்பந்தத்தை உருவாக்குவது மிகவும் முக்கியமானது. அப்போதுதான் களத்தில் அதை எளிதில் செயல்படுத்த முடியும்,” என்கிறார்.

  9. மக்கள் வெளியேறுவதற்காக ரஷ்யா முன்மொழிந்த பாதைகளின் விவரங்கள்

    ரஷ்யா அறிவித்த சில புதிய சண்டை நிறுத்தம் மற்றும் மக்கள் வெளியேற்ற பாதைகள் ரஷ்யா, பெலாரூஸ் நோக்கிச் செல்வதாக முன்னர் செய்தி அளித்திருந்தோம்.

    குறிப்பிட்ட நான்கு நகரங்களில், மேரியோபோல், சுமி ஆகிய நகரங்களில் மட்டுமே யுக்ரேனின் பிறகு பகுதிகளுக்குச் செல்லு வெளியேற்றப் பாதைகளைக் கொண்டுள்ளன.

    யுக்ரேனில் மனிதாபிமான செயல்பாடுகளுக்கான ஒருங்கிணைப்பு தலைமையகம் என்ற பெயரில் சமீபத்தில் நிறுவப்பட்ட அமைப்பை மேற்கோள் காட்டிய ரஷ்ய செய்தி நிறுவனமான ரியா, மக்கள் வெளியேற்றப் பாதைகளுக்கான முழு பாதைகளின் வரைவபடத்தையும் வெளியிட்டது.

    மக்கள் வெளியேறுவதற்காக ரஷ்யா முன்மொழிந்த வழித்தடங்களின் விவரங்கள்

    அதன் விவரங்கள்:

    மேரியோபோல்: பாதை 1: நாவுஅஸோவ்ஸ்க், டேக்கன்ராக், ரோஸ்டோ-ஆன் டான் (ரஷ்யா). பிறகு அங்கிருந்து விமான, சாலை அல்லது ரயில் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்திற்கு அல்லது தற்காலிக தங்குமிடத்திற்குச் செல்லலாம்.

    பாதை 2: போர்டிவ்ஸ்கே, மங்குஷ், ரெஸ்புப்ளிகா, ரோஷிவ்கா, பில்மாக், போலொஹி, ஓரெகீவ், ஸாப்போரிஷியா (யுக்ரென்)

    கார்ஹிவ்: நெகோதேயேவ்கா, பெல்கொராட் (ரஷ்யா). பின்னர் அங்கிருந்து விமான, சாலை அல்லது ரயில்

    சுமி: பாதை 1: ஷுட்ஜா, பெலொராட், பின்னர் ஏதேனும் போக்குவரத்து மூலம்

    பாதை 2: சுமி, கோலுபிவ்கா, ரோம்னி, லோக்விட்யா, லுப்னி, பொல்டாவா (யுக்ரேன்)

    கீயவ்: ஹோஸ்டோமெல், ராகிவ்கா, சோஸ்னொவ்கா, ஈவன்கீழ், ஒர்ரானே, செர்னோபில், ஆக்டன், கோமெல் (பெலாரஸ்), பின்னர் விமானம் மூலம் ரஷ்யாவிற்கு

    மேலும், ரஷ்ய ராணுவம் “ட்ரோன்களின் பயன்பாடு உட்பட வெளியேற்றத்தின் தடையற்ற புறநிலை கட்டுப்பாட்டை” மேற்கொள்ளும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

    யுக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கியின் செய்தித் தொடர்பாளர் இந்தத் திட்டத்தை “முற்றிலும் நியாயமற்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.

  10. “யுக்ரேனில் இருந்து வந்த மாணவர்கள் இந்தியாவில் படிக்க வாய்ப்பளிக்க வேண்டும்” – ஸ்டாலின்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    “ரஷ்யா யுக்ரேன் போரால் பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவர்கள் இந்தியாவிலேயே படிப்பைத் தொடர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அந்தக் கடிதத்தில், யுக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நடக்கும் போரில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களை மீட்டு அழைத்து வருவதற்கான அரசின் முயற்சிகளை அங்கீகரிக்கும் அதேவேளையில், அவர்கள் எதிர்கொள்ளும் நிச்சயமற்ற தன்மையைத் தீர்க்க வேண்டிய அவசியம் குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.

    யுக்ரேனில் படிப்பு தடைபட்ட நிலையில் இருக்கும் மாணவர்கள், இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தங்களது படிப்பைத் தொடர உடனடியாகத் தீர்வு காணுமாறு முதல்வர் ஸ்டாலின் பிரதமரிடம் கேட்டுக் கொண்டதோடு, இதுதொடர்பாக இந்திய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழக அரசு இடைவிடாத ஆதரவை அளிக்கும் என்றும் கூறியுள்ளார்.

  11. ரஷ்ய அதிபருடன் தொலைபேசியில் பிரதமர் மோதி உரையாடல்

    ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதி தொலைபேசியில் பேசியதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. 50 நிமிடங்களுக்கு நீடித்த அந்த உரையாடலின்போது, யுக்ரேனில் வளர்ந்து வரும் சூழல் குறித்துப் பேசியுள்ளனர் நரேந்திர மோதி. ரஷ்யா மற்றும் யுக்ரேனுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் நிலை குறித்து பிரதமர் மோதிக்கு புதின் சுருக்கமாக விவரித்ததாக ஏ.என்.ஐ செய்தி தெரிவிக்கிறது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  12. ரஷ்யாவுக்குள் எங்கள் குடிமக்களை அகதியாக வரவேற்கும் பாதையை அமைப்பது நியாயமற்ற செயல்: யுக்ரேன்

    யுக்ரேனில் இருந்து வெளியேறும் மக்கள், பெலாரூஸ் அல்லது ரஷ்யாவிற்கு அகதியாக செல்லும் வகையில் திறக்கப்படும் பாதை தொடர்பான ரஷ்ய முன்மொழிவு “முற்றிலும் நியாயமற்றது” என்று யுக்ரேன் கூறியுள்ளது.

    “இது முற்றிலும் நியாயமற்றது. மக்கள் படும் துன்பம், விரும்பிய சூழலை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது,” யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கியின் செய்தித் தொடர்பாளரை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

  13. யுக்ரேனில் இருந்து வரும் மக்கள் ரஷ்யாவுக்குள் நுழையும் 'வெளியேற்ற பாதை'

    பொதுமக்களை வெளியேற்றத்திற்காக புதிதாக மனிதாபிமான அடிப்படையிலான பாதைகளைத் திறப்பதாக ரஷ்யா கூறியுள்ளது.

    இந்நிலையில், ரஷ்யாவின் ஆர்.ஐ.ஏ நோவோஸ்தி செய்தி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அத்தகைய வெளியேற்றப் பாதைகள் குறித்த விவரங்களில், பொதுமக்கள் வெளியேறுவதற்கான சில பாதைகள் ரஷ்யாவிற்கும் பெலாரூஸுக்கும் செல்வதைக் காட்டுகிறது.

    X பதிவை கடந்து செல்ல, 1
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 1

    கீயவில் இருந்து தொடங்கும் ஒரு பாதை ரஷ்ய நட்பு நாடான பெலாரூஸுக்குச் செல்கிறது. மேலும், கார்ஹிவில் இருந்து வரும் மக்களுக்கான பாதை ரஷ்யாவிற்குச் செல்லும் ஒரு பாதையை மட்டுமே கொண்டிருக்கும்.

    மேரியோபோல் மற்றும் சுமி நகரங்களில் இருந்து நடைபாதைகள் மற்ற யுக்ரேனிய நகரங்களுக்கும் ரஷ்யாவிற்கும் செல்வதாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல, 2
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 2

  14. யுக்ரேனுக்கு மனிதாபிமான உதவியை வழங்கும் சீனா

    சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம் யுக்ரேனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் என்று வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.

    ரஷ்யாவுடனான சீனாவின் நட்பு மிகவும் திடமானது என்றும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் மிகவும் பரந்துபட்டவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

    மேலும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ரஷ்யாவை கண்டிக்குமாறு சீனாவை வலியுறுத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு சீன வெளியுறவுத் துறை அமைச்சரின் கருத்துகள் வந்துள்ளன.

    யுக்ரேனுக்கு மனிதாபிமான உதவியை வழங்கும் சீனா

    பட மூலாதாரம், EPA

    “வரலாற்றின் இந்த கட்டத்தில், வெறுமனே பேசுவதையும் தாண்டி செயலில் காட்டவேண்டியது சீனாவின் பொறுப்பு. ரஷ்யா மீது சீனாவைவிட எந்த நாடும் பெரியளவு தாக்கத்தை ஏற்படுத்தாது,” என்று அவர் கூறினார்.

    இப்போது வரை, சீன அரசு யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பைக் கண்டிக்கவில்லை. முதலில் அதைப் படையெடுப்பு என்று அழைப்பதையே தவிர்த்தது.

    ஆனால், இந்த வார தொடக்கத்தில் சண்டை நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்வதில் சீனா பங்கு வகிக்கத் தயாராக இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் கூறினார்.

  15. “ரஷ்யா வழியாக பாதை அமைக்குமாறு கேட்கவில்லை” – பிரெஞ்சு அதிபர் மக்ரோங்

    ரஷ்யா - பெலாரூஸ் இடையிலான மக்கள் வெளியேற்றப் பாதைகள் குறித்து மேலும் சில தகவல்கள்.

    அந்தப் பாதைகள் ரஷ்யா வழியாக செல்ல வேண்டும் என்று கோரவில்லை என பிரெஞ்சு அதிபர் எமானுவேல் மக்ரோங் கூறியுள்ளார் என்று பிரெஞ்சு செய்தி நிறுவனமான பி.எஃப்.எம். டிவி தெரிவித்துள்ளது.

    “அதிபர் மக்ரோங் மற்றும்அதிபர் புதினுக்கு இடையில் நடந்த உரையாடலில், பொதுமக்கள் வெளியேற அனுமதிக்கவும் உதவிக்கான போக்குவரத்துகளை உள்ளே அனுமதிக்கவும் வலியுறுத்தினார். ஆனால், ரஷ்யாவிற்குள் செல்லும் வகையிலான வெளியேற்றப் பாதைகளை வகுக்குமாறு கோரவில்லை” என்று பிரெஞ்சு அதிபர் மாளிகை பி.எஅப்.எம் டிவியிடம் கூறியுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  16. மிகோலாயிவ் குடியிருப்பில் நடத்தப்பட்ட ஷெல் குண்டு தாக்குதல்

    மிகோலாயிவ் குடியிருப்புப் பகுதியில் இன்று காலை எடுக்கப்பட்ட இந்தப் படம், அங்கு நடத்தப்பட்ட ஷெல் குண்டு தாக்குதல் சேத விளைவைக காட்டுகிறது.

    மிகோலாயிவ் குடியிருப்பில் நடத்தப்பட்ட ஷெல் குண்டு தாக்குதல்

    பட மூலாதாரம், MFA of Ukraine/Twitter

  17. ரஷ்ய தொலைக்காட்சி நிலையங்கள் ஹேக் செய்யப்பட்டனவா?

    யுக்ரேனில் நடக்கும் போரின் காட்சிகளைக் காட்ட ரஷ்ய அரசு தொலைக்காட்சி ஒளிபரப்புகளை ஹேக் செய்ததாக, அனானிமஸ் என்ற ஹேக்கிங் குழு கூறியுள்ளது.

    அவர்களுடைய ஒரு ட்விட்டர் பதிவில், ரஷ்ய ஸ்ட்ரீமிங் சேவைகளான விங்க், ஐவி மற்றும் ரஷ்யா 24, சேனல் ஒன் மற்றும் மாஸ்கோ 24 உள்ளிட்ட தொலைக்காட்சி சேனல்கள் ஆகியவற்றை ஹேக் செய்ததாக அனானிமஸ் ஹேக்கிங் குழு கூறியுள்ளது.

    இதை பிபிசியால் சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை.

    “அனானிமஸ் குழு இதுவரை கண்டிராத மிகப்பெரிய நடவடிக்கையில்” ஈடுபட்டுள்ளதாக ஒரு தனி பதிவில் கூறியுள்ளது. மேலும் சில அரசுகள் அதை அச்சுறுத்தலாகக் கருதி, இந்த முயற்சியை இழிவுபடுத்தும் பொய்யான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று கவலை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  18. யுக்ரேனில் இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள்

    இப்போது தான் எங்களுடன் இணைகிறீர்கள் என்றால், கடந்த சில மணிநேரங்களில் யுக்ரேனில் நடந்தவை குறித்து இங்கே சுருக்கமாகப் பார்க்கலாம்.

    • திங்கள் கிழமையன்று, தலைநகர் கீயவ் உட்பட பல யுக்ரேனிய நகரங்களில் புதிய மனிதாபிமான வழித்தடத்தைத் திறப்பதாக ரஷ்யா கூறியுள்ளது. ஏற்கெனவே மேரியோபோலில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகும் நடத்தப்பட்ட ஷெல் குண்டு தாக்குதலுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.
    • ஞாயிற்றுக் கிழமை இர்பினில் நடந்த ரஷ்ய தாக்குதலின்போது ஒரு குடும்பம் கொல்லப்பட்டதை அடுத்து, யுக்ரேனின் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி, பொதுமக்களைக் கொன்றதாக ரஷ்யா மீது குற்றம் சாட்டியுள்ளார்.
    • யுக்ரேனிய பாதுகாப்பு அதிகாரிகள் தங்கள் படைகள் கிழக்கு நகரமான சூஹூயிவை மீண்டும் கைப்பற்றியதாகக் கூறுகின்றனர்.
    • தெற்கு துறைமுக நகரமான மிகோலாயிவ் மீது மீண்டும் ரஷ்ய ஷெல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
    • ரஷ்யாவின் படையெடுப்பிற்கு நடுவே அரசாங்கம் தொடர்ந்து இயங்குவதற்காக யுக்ரேனுக்கு 100 மில்லியன் டாலர்களைக் கூடுதலாக வழங்குவதாக அமெரிக்கா கூறியுள்ளது.
    • 2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு எண்ணெய் விலைகள் மிகவும் உயர்ந்துள்ளன.
  19. யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கியுடன் பேசிய பிரதமர் நரேந்திர மோதி

    இந்திய பிரதமர் நரேந்திர மோதி, யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசினார். 35 நிமிடங்கள் நடந்த உரையாடலின்போது, இந்திய குடிமக்கள் யுக்ரேனில் இருந்து வெளியேறுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் செய்த உதவிகளுக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.

    மேலும், சுமி நகரத்திலிருந்து இந்திய மக்களை வெளியேற்றுவதற்காக நடந்து கொண்டிருக்கும் முயற்சிகளுக்கும் தொடர்ந்து ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டார் என்று ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. இவற்றோடு, யுக்ரேனில் வளர்ந்து வரும் சூழல் குறித்தும் இரு நாட்டுத் தலைவர்களும் உரையாடினர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  20. ரஷ்யாவுடன் பரிவர்த்தனையைக் குறைப்பதாக தென்கொரியா அறிவிப்பு

    ரஷ்யாவின் மத்திய வங்கியுடனான பரிவர்த்தனைகளைக் குறைப்பதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

    யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மேற்கு நாடுகளின் முயற்சிகளில் தென் கொரியாவும் இணைவதை இந்த நகர்வு காட்டுகிறது.

    இதற்கு முன்னர், ரஷ்யாவின் மத்திய வங்கி, நிதியமைச்சகம் உடனான பரிவர்த்தனைகளுக்கு அமெரிக்கா தடை வித்திருந்தது.

    ஐரோப்பிய ஒன்றியமும் இதேபோன்ற நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.