வணக்கம் நேயர்களே!
மார்ச் 7ஆம் தேதி நேரலை பக்கம் நிறைவடைகிறது. இதுவரை நடந்த நிகழ்வுகளின் முக்கிய துளிகள் இதோ...
இன்று காலையில் இருந்து இன்றைய நேரலை பக்கத்தில் பதிவான முக்கியச் செய்திகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.
- யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யாவின் நட்பு நாடான கஜகஸ்தானில் மக்கள் போராட்டம் நடத்தினர்.
- யுக்ரேன் மீது ரஷ்யப் படையெடுப்பு நடந்து வரும் சூழலில், யுக்ரேனியர்கள் தங்ளை உற்சாகப்படுத்திக்கொள்ளும் வகையில் பாட்டுப் பாடி, இசை மீட்டி வருகிறார்கள்.
- கீயவ், கார்கிவ், சுமி, மேரியோபோல் நகரங்களில் இன்று (மார்ச் 7) காலை 7 மணி முதல் பொதுமக்கள் வெளியேற வசதியாக இந்த போர் நிறுத்தம் கடைபிடிக்கப்படும் என்று ரஷ்ய அரசு ஊடகம் தகவல் தெரிவித்தது.
- ரஷ்யாவில் நேற்று, யுக்ரேன் மீதான படையெடுப்புக்கு எதிராக பிரசங்கம் செய்த பாதிரியார் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் ஆர்வலர்கள் குழுக்கள் தெரிவிக்கின்றன.
- இந்திய பிரதமர் நரேந்திர மோதி, யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசினார். 35 நிமிடங்கள் நடந்த உரையாடலின்போது, இந்திய குடிமக்கள் யுக்ரேனில் இருந்து வெளியேறுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் செய்த உதவிகளுக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.
- யுக்ரேனில் இருந்து வெளியேறும் மக்கள், பெலாரூஸ் அல்லது ரஷ்யாவிற்கு அகதியாக செல்லும் வகையில் திறக்கப்படும் பாதை தொடர்பான ரஷ்ய முன்மொழிவு “முற்றிலும் நியாயமற்றது” என்று யுக்ரேன் கூறியது.
- கீயவில் ஒரு ரகசிய இடத்திலுள்ள நிலத்தடி தங்குமிடத்தில் இருந்து, யுக்ரேனின் இளம் அமைச்சர் மிக்கைலோ ஃபெடோரோவ் ரஷ்யா மீது ஒரு டிஜிட்டல் போரை நடத்தி வருகிறார்.
- யுக்ரேனின் தகவல் தொடர்பு வசதிகளை ரஷ்யா வேண்டுமென்றே குறிவைப்பதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. கடந்த வாரம் கீயவில் இதேபோன்ற தாக்குதல் நடந்ததைத் தொடர்ந்து, ஞாயிற்றுக் கிழமை கார்ஹிவில் உள்ள தொலைக்காட்சி கோபுரத்தின் மீது தாக்குதல் நடந்ததாகச் செய்திகள் வந்தன.
- யுக்ரேன் படையெடுப்பை நிறுத்தக் கோரி சர்வதேச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் கலந்து கொள்ள ரஷ்யா மறுத்து விட்டது.
- ஸெலென்ஸ்கி தனது இன்றைய உரையின்போது, தொடர்ச்சியான படையெடுப்பு, “யுக்ரேனுக்கு எதிரான தன் திட்டங்களை ரஷ்யா கைவிடவில்லை,” என்பதைக் காட்டுகிறது என்று கூறினார். மேலும், “அதனால், புதிதாக ரஷ்யா மீது விதிப்பதற்கான தடைகளின் தொகுப்பு தேவை,” என்றார்.
- யுக்ரேனுக்கான பிரிட்டிஷ் தூதர், “தீவிரமான பாதுகாப்பு நிலைமை” காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.
பிபிசியின்டிவிட்டர் பக்கத்தில்அண்மைய செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்.
முகப்பு பக்கத்திற்குஇங்கே கிளிக் செய்யவும்










