மீண்டும் காற்றில் பறந்த போர் நிறுத்த ஒப்பந்தம்: கைவிடப்பட்ட மக்கள்

"போர் நிறுத்தம் பொய்யானது. துப்பாக்கிச் சூட்டை நிறுத்த ஒரு தரப்பு ஒருபோதும் திட்டமிடவில்லை. அவர்கள் மற்றொரு போர் நிறுத்தம் இருப்பதாகச் சொன்னால் நாங்கள் வெளியேற முயல வேண்டும். "

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

க. சுபகுணம்

  1. யுக்ரேனுக்கு உதவ முன்வந்துள்ள 3000 அமெரிக்க தன்னார்வலர்கள்

    அமெரிக்க

    பட மூலாதாரம், Anadolu Agency via Getty Images

    யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்துப் போராட வெளிநாட்டு தன்னார்வலர்களுக்கான அழைப்பை யுக்ரேன் விடுத்த நிலையில், 3,000 அமெரிக்கர்கள் பதிலளித்துள்ளனர் என்று அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டிசியில் உள்ள யுக்ரேன் தூதரகத்தின் பிரதிநிதி வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா செய்தி சேவையிடம்( Voice of America news service) தெரிவித்துள்ளார்.

    மேற்கத்திய நாடுகள் யுக்ரேனுக்கு உதவ எந்தவிதமான படைவீரர்களையும் அனுப்பாத சூழலில், போருக்கு ஆயுதங்களை வழங்கி வருகின்றனர். அதேபோல் ரஷ்ய தொழிலதிபர்கள் மற்றும் ரஷ்ய தலைவர்களுக்கு எதிராக பொருளாதார தடைகளையும் அவர்கள் கொண்டு வந்துள்ளனர்.

    யுக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி மற்றும் பிற மூத்த யுக்ரேனிய அதிகாரிகள், போரை எதிர்த்துப் போராட உதவும் வெளிநாட்டு தன்னார்வலர்களின் "சர்வதேச படையணி"யை உருவாக்க அழைப்பு விடுத்துள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு, சுமார் 16,000 வெளிநாட்டினர் யுக்ரேனில் போராட உதவ முன்வந்ததாக யுக்ரேனிய அதிபர் குறிப்பிட்டிருந்தார்.

  2. யுக்ரேன் அகதிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்கள் எங்கு செல்லக்கூடும்?

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  3. ரஷ்யா பிடித்த கெர்சன் நகரில் யுக்ரேன் மக்கள் எதிர்த்துப் போராட்டம்

    ரஷ்யா

    யுக்ரேன் மீதான ரஷ்யப் படை எடுப்புக்கு எதிராக கெர்சன் நகரில் 2000க்கும் மேற்பட்ட யுக்ரேனிய மக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது யுக்ரேனிய கொடிகளை ஏந்திக்கொண்டு மற்றும் அவர்களின் தேசியகீதத்தை பாடியபடியும் ரஷ்ய படையெடுப்புக்கு எதிராக கோஷம் போட்டனர்.

    கெர்சன் நகரம் யுக்ரேனின் மிக முக்கியமான நகரமாக உள்ளது.

    இந்த வார தொடக்கத்தில் ரஷ்ய படையினர் இந்த நகரத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    யுக்ரேனை சேர்ந்த உள்ளூர்வாசி ஒருவரான யெவ்ஹென், பிபிசியிடம், "இந்த போராட்டம் சுதந்திரம் மற்றும் யுக்ரேனிய விடுதலைக்கான அணிவகுப்பு" என்று கூறினார்.

    யுக்ரேனிய படைகள் கெர்சனை மீட்டெடுக்க முயற்சிக்கின்றனவா என்று பிபிசி அவரிடம் கேட்டபோது, ​​அவர் கூறியது, "ஒவ்வொரு இரவும் ஆறு அல்லது 10 வெடிப்புகளை நாங்கள் கேட்கிறோம். இது சிறு பீரங்கி போல் தெரிகிறது. யார், யார் மீது குண்டுவீசுகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது," என்றார் அவர்.

  4. அமெரிக்க அதிபர் பைடனுடன் பேசிய ஸெலன்ஸ்கி, மத்தியஸ்தம் செய்யும் இஸ்ரேல்

    ஸெலன்ஸ்கி

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, ஸெலன்ஸ்கி

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் நஃப்டாலி பென்னட் ஆகியோருடன் சனிக்கிழமை பேசினார் யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி.

    "தொடர் விவாதத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபருடன் மேலும் ஓர் உரையாடலை நிகழ்த்தினேன். பாதுகாப்பு, யுக்ரேனுக்கு நிதி உதவி, ரஷ்யா மீது தொடர்ந்து தடைகள் இவை குறித்தே பேசினோம்," என ஸெலன்ஸ்கி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    மாஸ்கோவில் அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதினுடன் மூன்று மணி நேரம் சந்தித்துப் பேசிய இஸ்ரேல் பிரதமர் நஃடாலி பென்னெட்டுடனும் ஸெலன்ஸ்கி பேசினார். அமெரிக்காவுக்கு இஸ்ரேல் முக்கியக் கூட்டாளி என்றபோதிலும், ரஷ்யாவுடனும் நல்ல உறவைப் பேண பென்னட் முயற்சித்து வருகிறார். ஸெலன்ஸ்கியின் வேண்டுகோளை ஏற்று ரஷ்யா - யுக்ரேன் சிக்கலில் மத்தியஸ்தம் செய்ய இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.

  5. மேரியோபோல் நகரில் தொடர்ந்து ரஷ்யா தாக்குதல் - சிக்கிக்கொண்ட மக்கள்

    ரஷ்யா போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்த யுக்ரேனின் இரண்டு நகரங்களில் ஒன்றான மேரியோபோலில் ரஷ்யா வெடி குண்டு வீசுவதை தீவிரப்படுத்தியுள்ளது என்று அந்நகர மேயர் வாடிம் பாய்சென்கோ தெரிவித்துள்ளார்.

    இந்த துறைமுக நகரம் "முற்றுகையின் மிக கடினமான கட்டத்தில்" இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

    “குடியிருப்புப் பகுதிகள் மீது ஓயாத குண்டு வீச்சு நடந்துகொண்டிருக்கிறது. விமானங்கள் குடியிருப்புப் பகுதிகள் மீது குண்டு வீசிக்கொண்டிருக்கின்றன,” என பாய்சென்கோ கூறியதாக ஏ.பி. செய்தி முகமை தெரிவிக்கிறது.

    நகரை விட்டு வெளியேற முயலும் நேரத்தில் பெண்கள், குழந்தைகள் மீது தாக்குதல் நடப்பதாக அவர் கூறியுள்ளார்.

    யுக்ரேனின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடல் தொடர்பை துண்டிக்கவேண்டும் என்ற இலக்கோடு இந்த நகரின் மீது தீவிர தாக்குதல் தொடுக்கப்படுகிறது.

  6. வணக்கம் நேயர்களே!

    நாங்கள் அ.தா.பாலசுப்ரமணியன் மற்றும் லட்சுமிகாந்த் பாரதி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம். யுக்ரேன் மீது ரஷ்யா நடத்திவரும் படையெடுப்பு குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.

    உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றி எங்கள்டிவிட்டர் கணக்கின் மூலம்தகவல் அளியுங்கள்.நேற்றைய நேரலை பக்கத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

    நேற்றைய நேரலை பக்கத்தின் சில முக்கியச் செய்திகள்:

    • யுக்ரேனின் மேரியோபோல், வோல்னவோகா நகரங்களில் சண்டை நிறுத்தம், மக்கள் வெளியேற மனிதாபிமான வழித்தடம் அறிவித்தது ரஷ்யா.
    • ஆனால், அந்த நகரங்கள் மீது குண்டுவீச்சு தொடர்ந்துகொண்டிருக்கிறது.
    • ஐ.நா அகதிகள் அமைப்பின் கருத்துப்படி, யுக்ரேனில் போரினால் வெளியேறும் அகதிகளின் எண்ணிக்கை விரைவில் 15 லட்சத்தைத் தாண்டக்கூடும்.
    • யுக்ரேனிய அதிகாரிகளின் கூற்றுப்படி, இன்றைய குறுகிய கால போர் நிறுத்தத்தின்போது வோல்னோவாகா மற்றும் அதற்கு அருகிலுள்ள குடியிருப்புகளில் இருந்து 400 பேர் மட்டுமே வெளியேற்றப்பட்டனர்.
    • ரஷ்யாவில் ராணுவ சட்டத்தை அறிவிக்கும் திட்டம் இல்லை என்று விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
    • உலகமெங்கும் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேநேரத்தில், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் யுக்ரேனிய நகரமான கெர்சனிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
    • யுக்ரேனில் இருந்து 13,000-க்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவிற்கு வந்து சேர்ந்துள்ளனர். இது தேர்தலிலும் சரி மக்களிடமும் சரி சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் தெரிவித்துள்ளார்.
    • ரஷ்ய அரசின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோஃப், பேசியபோது, ரஷ்ய ராணுவத்தைப் பற்றி “போலி செய்திகளை” வெளியிடுபவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் சட்டத்தை நியாயப்படுத்தியுள்ளார்.
    • பெய்ஜிங்கில் நடந்த குளிர்கால பாராலிம்பிக்ஸ் போட்டிகளின் முதல் நாளில் யுக்ரேன், மொத்தம் மூன்று தங்கம் மற்றும் ஏழு இதர பதக்கங்களைப் பெற்று பதக்கப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.