மீண்டும் காற்றில் பறந்த போர் நிறுத்த ஒப்பந்தம்: கைவிடப்பட்ட மக்கள்
"போர் நிறுத்தம் பொய்யானது. துப்பாக்கிச் சூட்டை நிறுத்த ஒரு தரப்பு ஒருபோதும் திட்டமிடவில்லை. அவர்கள் மற்றொரு போர் நிறுத்தம் இருப்பதாகச் சொன்னால் நாங்கள் வெளியேற முயல வேண்டும். "
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
க. சுபகுணம்
ரஷ்ய ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்படும் காட்சி
ஏவுகணை தாக்கியதில் ரஷ்ய ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய தருணத்தின் காணொளியை, யுக்ரேன் ஆயுதப்படை பகிர்ந்துள்ளது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்
YouTube பதிவின் முடிவு
இந்திய மாணவர்களை அழைத்து வர நாளை யுக்ரேனுக்கு 12 விமானங்களை அனுப்ப முடிவு
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
ஆபரேஷன் கங்கா மூலம், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 448 மாணவர்களை யுக்ரேனில்
இருந்து வெளியேற்றியுள்ளதாகவும் இன்னும் 236 மாணவர்களை வெளியேற்ற வேண்டியுள்ளதாகவும்
நாளை 12 விமானங்கள் யுக்ரேனுக்குச் செல்வதாகவும் கர்நாடக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின்
ஆணையர் முனைவர்.மனோஜ் ராஜன் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
“நிலைமை மேலும் மோசமடைந்து கொண்டிருக்கிறது” – யுக்ரேன் துணைப் பிரதமர்
யுக்ரேனின்
துணைப் பிதமர்களில் ஒருவரான ஒல்ஹா ஸ்டெஃபானிஷ்யா, பிபிசி ஒன்னில் ஞாயிறு காலை
சோஃபி ராவர்த்துடன் பேசினார்.
அப்போது,
“யுக்ரேனிய ரானுவம் எப்போதும் இல்லாத அளவுக்கு வலிமையாக உள்ளது. இந்தப் படையெடுப்பை மிகுந்த உறுதியோடு யுக்ரேன் எதிர்த்தாலும், இதுவரை போரின் முடிவை நெருங்கவில்லை,” என்றார்.
மேலும்,
“ரஷ்யாவின் பயங்கரவாதத் திட்டத்தின்” மற்றோர் அலை தொடங்கியுள்ளது என்றவர், “நிலைமை
மோசமாகி வருவதாகவும் யுக்ரேனிய நகரங்களில் மருத்துவமனைகள் மற்றும் மழலையர் பள்ளிகள்
மீது ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
மேலும், அதன் வீரர்களின்
உயிர்கள் உட்பட ரஷ்யாவிற்கு ஏற்பட்ட பெரும் இழப்புகள், விளாதிமிர் புதினைத் தடுக்கைவ்ல்லை.
மாறாக, படையெடுப்பை மேலும் ஊக்குவிப்பதாகக் கூறினார்.
ரஷ்யாவை எதிர்கொள்ள பிரிட்டன் பிரதமர் வழங்கிய ஆலோசனைகள் என்ன?
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் "பயங்கரமான" படையெடுப்பை தோல்வி அடையச் செய்ய முயற்சி மேற்கொள்ளுமாறு, உலகத் தலைவர்களுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்துள்ளார். அதோடு ரஷ்யாவை எதிர்கொள்ள அவர் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அதை எளிமையாகப் புரிந்துகொள்ள இந்தக் காணொளியைக் காணுங்கள்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்
YouTube பதிவின் முடிவு
வந்துகொண்டிருக்கும் செய்தி, 15 லட்சம் மக்களுக்கும் மேல் யுக்ரேனில் இருந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர் – ஐ.நா
யுக்ரேனில்
இருந்து வெளியேறி கடந்த 10 நாட்களில் அண்டை நாடுகளுக்கு 15 லட்சத்திற்கும் அதிகமான
மக்கள் அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்ந்தனர் என அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையர் ஃபிலிப்போ
க்ராண்டி தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போருக்குப்
பின்னர் ஐரோப்பில் விரைவாக வளர்ந்து வரும் அகதிகள் நெருக்கடியாக இது மாறியது.
மேரியோபோலுக்கான புதிய போர் நிறுத்தம் மற்றும் மக்கள் வெளியேற்றத்திற்கான திட்டங்கள் என்ன?
முந்தைய
செய்தியின்படி, உள்ளூர் நேரப்படி காலை 10 மணி முதல் மேரியோபோல் நகரத்தில் போர் நிறுத்தம்
அறிவிக்கப்பட்டதாக நகர சபை கூறியுள்ளது. தற்போது, யுக்ரேனில் காலை 11 மணியை நெருங்கிவிட்டதால்,
ஏற்கெனவே அது தொடங்கியிருக்க வேண்டும்.
ஸாப்போரிஷியாவில்
முடிவடைகின்ற, முன்பு திட்டமிடப்பட்ட பாதை வழியாகப் நகரின் மூன்று இடங்களில் இருந்து
புறப்படும் பேருந்துகளில் பொதுமக்கள் மேரியோபோலை விட்டு வெளியேற முடியும் என்று அதிகாரிகள்
கூறுகின்றனர்.
தனியார்
வாகனங்களும் வெளியேற்றத்தில் இணைந்துகொள்ளலாம். ஆனால், செஞ்சிலுவை சங்கம் தலைமையில்
பேருந்துகள் அதற்குப் பின்னால் வர வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஓட்டுநர்கள்
தங்கள் வாகனங்களில் அனைத்து இருக்கைகளையும் நிரப்ப வேண்டுமென நகர சபை கூறியுள்ளது.
போர் நிறுத்தம் பற்றிய செய்தி
நேர்மறையானதுதான். இருப்பினும், சற்று எச்சரிக்கையுடன் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இதேபோன்ற திட்டம் சனிக்கிழமை அன்று, மேரியோபோல் மற்றும் வோல்னோவாகா நகரங்களில் அறிவிக்கப்பட்டது.
ஆனால், அது விரைவாக நிறுத்தப்பட்டது.
யுக்ரேனில் இருக்கும் இந்தியர்கள் கவனத்திற்கு!
இன்னமும் யுக்ரேனில் இருக்கும் இந்தியர்கள் உடனடியாக கூகுள் ஃபார்ம் ஒன்றை நிரப்ப வேண்டும் என கூறி அந்த படிவத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது யுக்ரேனில் உள்ள இந்திய தூதரகம்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
வந்துகொண்டிருக்கும் செய்தி, “போர் நிறுத்தம் மீண்டும் அமலாக்கப்படுகிறது” – மேரியோபோல் நகர சபை
தெற்கு
யுக்ரேனில் உள்ள துறைமுக நகரமான மேரியோபோலில் உள்ளூர் நேரப்படி, காலை 10 மணி முதல்
இரவு 9 மணி வரை தற்காலிக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர்
நேரப்படி, 12 மணி முதல் நிர்ணயிக்கப்பட்ட பாதை வழியாக பொதுமக்கள் நகரத்தைக் காலி செய்ய
முடியும்.
நேற்று (சனிக்கிழமை) அறிவிக்கப்பட்ட
இதேபோன்ற திட்டம் அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே தொடங்கிய குண்டுவெடிப்புகளின்
காரணமாக நிறுத்தப்பட்டது.
ஜோசஃப் ஸ்டாலினின் சர்வாதிகார முகம் எத்தையது? - ரஷ்ய வரலாற்றில் அவர் பங்கு என்ன?
ஜோசஃப் ஸ்டாலின்தான் நீண்டகாலம் சோவியத் ஒன்றியத்தை ஆட்சி புரிந்தவர். அவருக்கு அடுத்தபடியாக நீண்ட காலத்திற்கு ரஷ்யாவின் அதிபராக இருப்பவர், இப்போதைய ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின். ஸ்டாலினுடைய கடுமையான அணுகுமுறையைப் போலவே, தற்போது புதினின் அணுகுமுறையும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதேநேரம், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நடக்கும் மிகப் பெரிய படையெடுப்பாகவும் இப்போது நிகழும் ரஷ்யாவின் யுக்ரேன் படையெடுப்பு கூறப்படுகிறது. இந்தச் சூழலில் ஜோசஃப் ஸ்டாலின் குறித்த பேச்சுகள் எழுந்த வண்ணம் இருக்கும் நிலையில், அவர் எப்படிப் பட்டவர் என்பதை வரலாற்றுப் பார்வையில் பார்ப்பது அவரைப் புரிந்துகொள்ள உதவும்.
ரஷ்யா இதுவரை 88 விமானங்களை இழந்துள்ளது – யுக்ரேன் பாதுகாப்பு அமைச்சகம்
பட மூலாதாரம், EPA
யுக்ரேன்
பாதுகாப்பு அமைச்சகம், ரஷ்யா-யுக்ரேன் மோதல் குறித்து தனது தினசரி அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதிலுள்ள சில முக்கிய தகவல்கள் இங்கே:
போர் தொடங்கியதில்
இருந்து ரஷ்ய படைகள் 88 விமானங்கள் மற்றும் ஹெல்காப்டர்களை இழந்துள்ளன.
பல ரஷ்ய
விமானிகள் பிடிபட்டுள்ளனர்.
யுக்ரேனின்
ஆயுதப் படைகள் தென்கிழக்கில் உள்ள பெரிய துறைமுக நகரமான மேரியோபோலைத் தொடர்ந்து தற்காத்து
வருகின்றன.
“கணிசமான
அளவு” ரஷ்ய உபகரணங்கள் மைகோலேவ் பகுதியில், தெற்கே ஒடெஸ்ஸாவுக்கு அருகில் கைப்பற்றப்பட்டன.
யுக்ரேனிய
எதிர்ப்பின் வலிமையால் ரஷ்ய வீரர்கள் “மனச் சோர்வு” அடைந்துள்ளனர்.
யுக்ரேனிய ராணுவம் கூறுவதை
பிபிசி சுயாதீனமாகச் சரிபார்க்க முடியாது. யுக்ரேனில் தனது படைகளால் ஏற்பட்ட இழப்புகளின்
சில விவரங்களை ரஷ்யா வழங்கியுள்ளது. ஆனால், யுக்ரேனிய எதிர்ப்பின் வலிமையால் அது ஆச்சர்யம்
அடைந்துள்ளதாகவும், அதன் விநியோகப் பாதைகள் மற்றும் படைகளின் மன உறுதியில் சிக்கலைச்
சந்தித்துள்ளதாகவும் ராணுவ வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர்.
விசா, மாஸ்டர் கார்டை ரஷ்யாவில் ரத்து செய்தது, சாமானியர்களைப் பாதிக்குமா?
யுக்ரேன்
மீதான படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பணம் செலுத்தும் நிறுவனங்களான
விசா மற்றும் மாஸ்டர் கார்ட் ஆகியவை ரஷ்ய சந்தையில் இருந்து வெளியேறுகின்றன. இரண்டு
நிறுவனங்களும் சேர்ந்து, சீனாவிற்கு வெளியே உலகில் 90% க்ரெடிட் மற்றும் டெபிட் பணப்
பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்துகின்றன.
இந்த நடவடிக்கை
சாதாரண ரஷ்யர்களுக்கு எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்?
ரஷ்யாவின்
முக்கிய வங்கிகள் ஏற்கெனவே தங்கள் வாடிக்கையாளர்களின் தாக்கத்தைக் குறைத்து மதிப்பிட்டுள்ளன.
ரஷ்ய வங்கிகளால் வழங்கப்படும் அனைத்து விசா மற்றும் மாஸ்டர்கார்ட் வங்கி அட்டைகளும்
ரஷ்யாவில் வழக்கமாகச் செயல்படும் என்று ரஷ்யாவின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
ரஷ்யாவின் பெரும்பான்மையான அரசு வங்கிகள் மற்றும் நிதி சேவைகளைக் கட்டுப்படுத்தும் ஸிபர்பாங்க், “பணத்தை எடுக்கவும் அட்டை எண்ணைப் பயன்படுத்தின் பரிமாற்றம் செய்யவும் நேரடியாக மற்றும் இணையவழியில் அவற்றைப் பயன்படுத்தி ரஷ்ய கடைகளில் பணம் செலுத்தவும் கார்டுகள் வேலை செய்யும்” என்று கூறியது.
“அவை ரஷ்ய பிரதேசத்தில் தொடர்ந்து வேலை செய்யும். ஏனெனில், ரஷ்யாவில் அனைத்தும் கொடுப்பனவுகளும் ஒரு தேசிய அமைப்பு மூலம் செய்யப்படுகின்றன மற்றும் வெளிநாட்டு அமைப்புகளைச் சார்ந்து இல்லை,” என்று மத்திய வங்கி கூறியுள்ளது.
இருப்பினும், ரஷ்யாவால் வழங்கப்பட்ட மாஸ்டர்கார்ட் அல்லது விசா அட்டைகள் வெளிநாடுகளில் வேலை செய்யாது. மேலும் வெளிநாட்டில் வழங்கப்பட்ட கார்டுகள் ரஷ்யாவிற்குள் வேலை செய்யாது.
பாதுகாப்பு கருதி க்ரைமியாவில் இருந்து இந்தியா வந்த மாணவர்கள்
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
க்ரைமியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள், ரஷ்யா-யுக்ரேன்
நெருக்கடிக்கு மத்தியில் நிலவும் பதற்றத்தை உணர்ந்து, இரண்டு நாடுகளுக்கும் மத்தியில் அமைந்திருக்கும் க்ரைமியாவில் இருந்து இன்று டெல்லி வந்து சேர்ந்ததாக ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.
அவர்கள், க்ரைமியாவில் நிலைமை சாதாரணமாக இருந்தாலும்கூட, ரஷ்யா
மற்றும் யுக்ரேனுக்கு இடையில் இருப்பதால், பாதுகாப்பு கருதி வந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.
கல்லூரிகள், இந்திய மாணவர்களை இணைய வழியில் வகுப்புகளில் கலந்துகொள்ள அனுமதித்துள்ளதாகவும்
மாணவர்கள் கூறினர்.
"யுக்ரேனில் இருந்து 40 லட்சம் மக்கள் வெளியேறலாம்" - ஐரோப்பிய ஒன்றியம்
யுக்ரேனில் இருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேறியுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது. 40 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற முயற்சி செய்வர் என்று ஐரோப்பிய ஒன்றியம் மதிப்பிட்டுள்ளது. இந்நிலையில், யுக்ரேனில் இருந்து போர் அகதிகளாக வெளியேறும் மக்களின் நிலை என்ன என்பதை விளக்குகிறது இந்தக் காணொளி.
படையெடுப்பில் தற்போது நடந்துகொண்டிருப்பது என்ன? ரஷ்ய படைகள் எங்கு இருக்கின்றன?
ரஷ்யாவின் “தாக்குதலைத் தாங்கிக் கொண்டோம்,” என்று யுக்ரேனிய
மக்களிடம் கூறிய அதிபர் ஸெலன்ஸ்கி, மக்களைத் தொடர்ந்து போராடுமாறு வலியுறுத்தினார்.
கீயவின் தலைநகருக்கு வெளியே, 64 கி.மீ நீளத்திற்கு ஒரு பெரிய
கான்வாய் நகருக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ளது மற்றும் யுக்ரேனிய பாதுகாப்பு அதிகாரிகள்
தங்களால் இயன்ற அளவுக்கு அவற்றுள் தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளைத் தாக்கியதாகக் கூறுகிறார்கள்.
யுக்ரேன் படையெடுப்பில் ரஷ்யாவின் நிலைமை என்ன?
கீயவின் வடமேற்கே இர்பின் என்ற நகரத்தில், ஹோஸ்டோமெல் விமானதளத்திற்கு அருகே கடுமையான சண்டை நடந்து வருகிறது.
பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடுவதற்காக நடந்தே அந்தப்
பகுதியை விட்டு வெளியேறி வருகின்றனர்.
யுக்ரேனிய அதிகாரிகள், “தெற்கு துறைமுக நகரமான மேரியோபோலில் இருந்து பொதுமக்கள் தப்பிக்க அனுமதிக்கும்
வகையில் போர் நிறுத்தம் ஒப்புக்கொள்ளப்பட்ட சில நிமிடங்களிலேயே மீண்டும் ஷெல் குண்டு தாக்குதல் தொடங்கிவிட்டது,” என்றனர்.
தெற்குப் பகுதியைத் தனது படையெடுப்பின் வெற்றிக்கு முக்கியமானதாக
ரஷ்யா கருதுகிறது. அதோடு, ஒடெஸ்ஸா துறைமுகத்தில் உள்ள மக்கள் கடலில் இருந்து நடக்கக்கூடிய
ரஷ்ய தாக்குதல் குறித்து அஞ்சுகின்றனர்.
கிழக்கில் கார்ஹிவ் மற்றும் சுமி நகரங்கள் மீண்டும் குண்டுவீச்சிற்கு
உட்பட்டுள்ளன.
டான்பாஸ் பகுதியில் 7 கி.மீட்டருக்கு,
பல சிறுநகரங்கள் மற்றும் கிராமங்களைக் கைப்பற்றியவாறு முன்னேறியுள்ளதாக ரஷ்யா கூறியது.
ரஷ்யா, யுக்ரேனின் மன உறுதியை உடைக்க அதன் நகரங்களில் குண்டு வீசுகிறது – பிரிட்டன்
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, யுக்ரேனின் கார்ஹிவ் நகரத்தின் மீது ரஷ்ய படைகள் தொடர்ச்சியான ஷெல் குண்டு தாக்குதல்
யுக்ரேனில் உள்ள மக்கள் வசிக்கும் பகுதிகளில் ரஷ்யா குண்டு வீசி
தாக்குதல் நடத்தியது, அவர்களுடைய மன உறுதியை உடைக்கும் முயற்சி என்று பிரிட்டன் பாதுகாப்பு
அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் தினசரி உளவுத்துறை அறிக்கையில்,
யுக்ரேனுடைய எதிர்ப்பின் வலிமை ரஷ்யாவை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. கார்ஹிவ், செர்னிஹிவ்
மற்றும் மேரியோபோல் உள்ளிட்ட நகரங்களைக் குறி வைத்து பதிலடி கொடுத்தது.
2016-ல் சிரியாவிலும் 1999-ல் செச்னியாவிலும் ரஷ்ய ராணுவம் கட்டமைக்கப்பட்ட
பகுதிகள் மீது தீவிர ஷெல் குண்டு தாக்குதல் நடத்தியதோடு, தற்போதைய ரஷ்யாவின் மூலோபாயத்தை
அது ஒப்பிடுகிறது.
யுக்ரேன் ரஷ்யாவின் விநியோகப்
பாதைகளைக் குறி வைத்ததன் மூலம், அதன் முன்னேற்றம் குறைந்துள்ளதாகவும் அந்த அறிக்கை
கூறுகிறது.
மின்சாரம், நீர் விநியோகம் எதுவுமின்றித் தவிக்கும் வடக்கு சுமி மக்கள்
சுமி மற்றும் மேரியோபோல் நகரங்களின் நிலைமை,
“மனிதாபிமான பேரழிவின் விளிம்பில் உள்ளன,” என்று யுக்ரேன் அரசு அதிகாரி ஒருவர் யுக்ரேன்-24
தொலைக்காட்சி சேனலுக்கு ஞாயிற்றுக் கிழமை காலை தெரிவித்தார்.
வடக்கு சுமி பிராந்தியத்தில் உள்ள அக்திர்கா
மற்றும் ட்ரோஸ்டியானெட்ஸ்
நகரங்களில் தற்போது மின்சாரம் அல்லது நீர் விநியோக இல்லை என்று அரசாங்க ஆலோசகர் வாடிம்
டெனிசென்கோ கூறினார்.
மேரியோபோல் நகரிலிருந்து பொதுமக்கள் தப்பிச்
செல்வதற்காக மேற்கொள்ளப்பட்ட முந்தைய போர் நிறுத்தம், 30 நிமிடங்களுக்குக் குறைவாகவே
நீடித்தது. அதற்கு ஷெல் குண்டு தாக்குதல் தொடங்கிவிட்டது என்று யுக்ரேனிய அதிகாரிகளிடமிருந்து
வந்த தகவல்களைக் கேட்டிருந்தோம்.
எப்படியிருப்பினும், மனிதாபிமான வழித்தடம்
ஞாயிற்றுக் கிழமை மீண்டும் திறக்கப்படலாம் என்று கிளர்ச்சியாளர்களால் நடத்தப்படும்
டொனெட்ஸ்கில் உள்ள ஓர் அதிகாரியான எட்வர்ட் பாசுரின் கூறியதாக ரஷ்ய இன்டெர்ஃபாக்ஸ்
செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது.
யுக்ரேனில் ரஷ்யா நடத்தும் 11-வது நாள் போர்: இதுவரை நடந்தது என்ன?
யுக்ரேன் மீது ரஷ்யா 11-வது நாளாக படையெடுப்பு
நடத்தி வருகிறது. இந்நிலையில், இன்றைய படையெடுப்பு நடவடிக்கைகளில் இதுவரை நடந்தது
என்ன?
உங்களுக்காகச் சுருக்கமாக...
ரஷ்யா போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்த யுக்ரேனின் இரண்டு
நகரங்களில் ஒன்றான மேரியோபோலில் ரஷ்யா வெடி குண்டு வீசுவதை தீவிரப்படுத்தியுள்ளது என்று
அந்நகர மேயர் வாடிம் பாய்சென்கோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இஸ்ரேல்
பிரதமர் நஃப்டாலி பென்னட் ஆகியோருடன் யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி சனிக்கிழமை,
பாதுகாப்பு, நிதி உதவி, ரஷ்யா மீது தொடர்ந்து தடைகள் ஆகியவை குறித்துப் பேசினார்.
யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு எதிராக கெர்சன்
நகரில் 2000க்கும் மேற்பட்ட யுக்ரேனிய மக்கள், தேசிய கீதத்தைப் பாடியபடியும் ரஷ்ய படையெடுப்பிற்கு
எதிராகக் கோஷமிட்டபடியும் போராட்டம் நடத்தினர்.
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்துப் போராட வெளிநாட்டு தன்னார்வலர்களுக்கான
அழைப்பை யுக்ரேன் விடுத்த நிலையில், 3,000 அமெரிக்கர்கள் பதிலளித்துள்ளனர்.
யுக்ரேன் மீதான ரஷ்யாவின்
"பயங்கரமான" படையெடுப்பை தோல்வி அடையச் செய்ய முயற்சி மேற்கொள்ள, உலகத் தலைவர்களுக்கு
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக அவர் ஆலோசனைகளை
வழங்கியுள்ளார்.
வணக்கம் நேயர்களே!
நான் க.சுபகுணம். பிபிசி தமிழின் நேரலை
பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறேன். இதுவரை லட்சுமிகாந்த் பாரதி வழங்கிக் கொண்டிருந்த
நேரலை செய்திகளை இனி நான் வழங்கவுள்ளேன்.
யுக்ரேன் மீது ரஷ்யா நடத்தி வரும் படையெடுப்பு குறித்த
செய்திகளை உடனுக்குடன் இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை எதிர்கொள்ள போரிஸ் ஜான்சன் சொன்ன ஆறு ஆலோசனைகள்
பட மூலாதாரம், Getty Images
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் "பயங்கரமான" படையெடுப்பை தோல்வி அடையச் செய்ய முயற்சி மேற்கொள்ள, உலகத் தலைவர்களுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்காக அவர் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
அந்த ஆலோசனைகள்:
உலகத் தலைவர்கள் யுக்ரேனுக்காக ஒரு "சர்வதேச மனிதாபிமான கூட்டணியை" அணிதிரட்ட வேண்டும்
உலகத் தலைவர்கள் யுக்ரேனை அதன் "தற்காப்புக்கான முயற்சிகளில்" ஆதரிக்க வேண்டும்.
ரஷ்யா மீதான பொருளாதார அழுத்தத்தை மேலும் அதிகரிக்க வேண்டும்
யுக்ரேன் மீது ரஷ்யாவின் படையெடுப்பு "இயல்புநிலை" நடவடிக்கையாக மாறியுள்ளது. இந்த போக்கை சர்வதேச சமூகம் எதிர்க்க வேண்டும்.
படையெடுப்பை முடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்பட வேண்டும், ஆனால் யுக்ரேன் அரசாங்கத்தின் முழுப் பங்கேற்புடன் மட்டுமே அதை நடத்தவேண்டும்
நேட்டோ நாடுகளிடையே "பாதுகாப்பு மற்றும் எதையும் எதிர் கொள்ளும்தன்மையை வலுப்படுத்த விரைவான நடவடிக்கை" மேற்கொள்ள வேண்டும்.
வரும் திங்களன்று, பிரதமர் அலுவலகத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் டச்சு பிரதமர் மார்க் ரூட்டே ஆகியோருடனான சந்திப்புகளின்போது, பிரதமர் போரிஸ் ஜான்சன் இதே கருத்துக்களை வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யுக்ரேன் மீது ரஷ்ய படையெடுப்பு: எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுகின்றனவா மேற்கு நாடுகள்?
பட மூலாதாரம், SERGEI MALGAVKO
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் கடுமையான நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு மத்தியில் மேற்கு நாடுகளின் தலைவர்களின் கொள்கையும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.
மேற்கத்திய ஊடகங்கள் இந்தத் தாக்குதல் குறித்த செய்திகளில் மேற்கு நாடுகளுக்கு ஆதரவாகவே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாகப் மேற்கு நாடுகளை சேராத நிபுணர்கள் கவலை தெரிவித்ததோடு, மேற்கத்தியத் தலைவர்கள் இரட்டைக் கொள்கையைக் கடைப்பிடிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். மேற்கத்திய தலைவர்கள் ரஷ்யாவை வில்லனாகச் சித்தரிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்துவருகின்றனர் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. அதே நேரத்தில், தற்போதைய நெருக்கடிக்கு மேற்கு நாடுகளும் பொறுப்பாகும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
அரபு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் ஊடகவியலாளர்களின் வலையமைப்பான அரபு மற்றும் மத்திய கிழக்கு ஊடகவியலாளர்கள் சங்கம், மேற்கத்திய ஊடகங்களின் "இனவெறி" சார்ந்த செய்திகள் குறித்து ஒரு அறிக்கையில் கவலை தெரிவித்தது.