வணக்கம் நேயர்களே!
மார்ச் 6ஆம் தேதி நேரலை பக்கம் நிறைவடைகிறது. இதுவரை நடந்த நிகழ்வுகளின் முக்கிய துளிகள் இதோ...
இன்று காலையில் இருந்து இன்றைய நேரலை பக்கத்தில் பதிவான முக்கியச்செய்திகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.
- யுக்ரேனில் உள்ள மக்கள் வசிக்கும் பகுதிகளில் ரஷ்யா குண்டுவீசி தாக்குதல் நடத்தியது, அவர்களுடைய மன உறுதியை உடைக்கும் முயற்சி என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
- டான்பாஸ் பகுதியில் 7 கி.மீட்டருக்கு, பல சிறுநகரங்கள் மற்றும் கிராமங்களைக் கைப்பற்றியவாறு முன்னேறியுள்ளதாக ரஷ்யா கூறியது.
- யுக்ரேன் மீதான படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பணம் செலுத்தும் நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்ட் ஆகியவை ரஷ்ய சந்தையில் இருந்து வெளியேறுகின்றன.
- போர் தொடங்கியதில் இருந்து ரஷ்ய படைகள் 88 விமானங்கள் மற்றும் ஹெல்காப்டர்களை இழந்துள்ளன என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- தெற்குயுக்ரேனில்உள்ளதுறைமுகநகரமானமேரியோபோலில்உள்ளூர்நேரப்படி, காலை 10 மணிமுதல்இரவு 9 மணிவரைதற்காலிகபோர்நிறுத்தம்அறிவிக்கப்பட்டுள்ளது.
- யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி, ஈலோன் மஸ்க்கை போருக்குப் பிறகு யுக்ரேனுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஈலோன் மஸ்க்கும் அங்கு வரும் நாளை எதிர்நோக்கி இருப்பதாகக் கூறினார்.
- இன்று காலையில் போர் நிறுத்தம் மற்றும் புதிய வெளியேற்ற முயற்சியை அறிவித்த மேரியோபோல் நகர சபை, அதற்கான திட்டங்கள் கைவிடப்பட்டதை உறுதி செய்தது.
- யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி, சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில், உலகத் தலைவர்களிடம் யுக்ரேன் வானில் “விமானங்கள் பறக்கத் தடை மண்டலம்” அறிவிக்க வேண்டுமென்ற தனது வேண்டுகோளை முன்வைத்தார்.
பிபிசியின்டிவிட்டர் பக்கத்தில்அண்மைய செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்.
முகப்பு பக்கத்திற்குஇங்கே கிளிக் செய்யவும்
















