“ரஷ்ய தாக்குதலால் ஒரு கட்டடம் விடாமல் சேதமடைந்துள்ளன”
சுமார் 450,000 மக்கள் வசிக்கும் துறைமுக நகரமான மேரியோபோல் மீதான இரக்கமற்ற ஷெல் குண்டு தாக்குதல் மற்றும் முற்றுகை குறித்து நிறைய கேள்விப்பட்டோம்.
ஆனால், சிறிய நகரமான வோல்னோவாகா கடுமையான தாக்குதலை எதிர்கொண்ட போதிலும், செய்திகளில் அதிகம் இடம் பெறவில்லை.
அது, மேரியோபோல் மற்றும் டொனெட்ஸ்க் ஆகிய இரண்டுக்கும் நடுவே அமைந்துள்ள, 25,000 மக்கள் வசிக்கும் சிறிய நகரம்.
ஏறக்குறைய ஒவ்வொரு கட்டடமும் ரஷ்ய படைகளால் அழிக்கப்பட்டதாகவோ அல்லது சேதமடைந்ததாகவோ இருப்பதாக அங்குள்ள மக்கள் தி கார்டியன் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.
உள்ளூர் அமைச்சர், டிமிட்ரோ லுபினெட்ஸ், சண்டை மிகவும் உக்கிரமானது என்றும் உயிரிழந்தோரின் உடல்கள் சேகரிக்கப்படாமல் கிடப்பதாகவும் கூறியுள்ளார்.
சனிக்கிழமை அன்று, லுபினெட்ஸ் போர் நிறுத்ததை உறுதி செய்ததோடு, போக்ரோவ்ஸ்க் நகரத்தில் முடிவடைகின்ற வெளியேறுவதற்கான வழித்தடப் பாதை குறித்த விவரங்களைத் தெரிவித்தார்.