வணக்கம் நேயர்களே!
மார்ச் 5ஆம் தேதி நேரலை பக்கம் நிறைவடைகிறது. இதுவரை நடந்த நிகழ்வுகளின் முக்கிய துளிகள் இதோ...
இன்று காலையில் இருந்து இன்றைய நேரலை பக்கத்தில் பதிவான முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.
- ஐ.நா அகதிகள் அமைப்பின் கருத்துப்படி, யுக்ரேனில் போரினால் வெளியேறும் அகதிகளின் எண்ணிக்கை விரைவில் 15 லட்சத்தைத் தாண்டக்கூடும்.
- யுக்ரேனிய அதிகாரிகளின் கூற்றுப்படி, இன்றைய குறுகிய கால போர் நிறுத்தத்தின்போது வோல்னோவாகா மற்றும் அதற்கு அருகிலுள்ள குடியிருப்புகளில் இருந்து 400 பேர் மட்டுமே வெளியேற்றப்பட்டனர்.
- ரஷ்யாவில் ராணுவ சட்டத்தை அறிவிக்கும் திட்டம் இல்லை என்று விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
- உலகமெங்கும் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேநேரத்தில், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் யுக்ரேனிய நகரமான கெர்சனிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
- யுக்ரேனில் இருந்து 13,000-க்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவிற்கு வந்து சேர்ந்துள்ளனர். இது தேர்தலிலும் சரி மக்களிடமும் சரி சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் தெரிவித்துள்ளார்.
- ரஷ்ய அரசின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோஃப், பேசியபோது, ரஷ்ய ராணுவத்தைப் பற்றி “போலி செய்திகளை” வெளியிடுபவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் சட்டத்தை நியாயப்படுத்தியுள்ளார்.
- பெய்ஜிங்கில் நடந்த குளிர்கால பாராலின்பிஸ் போட்டிகளின் முதல் நாளில் யுக்ரேன், மொத்தம் மூன்று தங்கம் மற்றும் ஏழு இதர பதக்கங்களைப் பெற்று பதக்கப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
பிபிசியின் டிவிட்டர் பக்கத்தில்அண்மைய செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.
முகப்பு பக்கத்திற்கு இங்கே கிளிக் செய்யவும்