வந்துகொண்டிருக்கும் செய்தி, "யுக்ரேனை புதிய வைரஸ் தாக்கியுள்ளது": செலன்ஸ்கி
விளாடிமிர் புதினை நோக்கி பேசிய செலன்ஸ்கி, “உங்களின் நாட்டுக்கு திரும்பி போங்கள். உங்கள் நாட்டிற்கே.” என்று தெரிவித்துள்ளார்.
“ரஷ்ய மொழி பேசும் மக்களை புதின் பாதுகாக்க வேண்டும். ஆனால் உலகம் முழுவதும் உள்ளவர்களை அல்ல. உங்கள் நாட்டில் உள்ளவர்களை மட்டும்”
யுக்ரேனில் உள்ள ரஷ்ய மொழி பேசும் மக்களுக்காக என தங்களின் படையெடுப்பை நியாயப்படுத்திய ரஷ்யாவின் கூற்றுக்கான பதிலாக இவ்வாறு செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
“யுக்ரேனில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பதிவாகி இரண்டு வருடங்கள் ஆகின. ஆனால் கடந்த வாரம் யுக்ரேனை இன்னொரு வைரஸ் தாக்கியுள்ளது,” என செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.