யுக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதல்: ஐ.நா தீர்மானத்துக்கு 141 நாடுகள் ஆதரவு, இந்தியா உள்பட 35 நாடுகள் புறக்கணிப்பு
இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளில்தான் யுக்ரேனின் கெர்சன் துறைமுகத்தில் ரஷ்ய படையினர் கடுமையான வான் தாக்குதல்கள் மற்றும் கார்கிவ் நகரில் ஏவுகணை, குண்டு தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. மரியூபோல் நகரில் இடைவிடாது நடத்தப்பட்ட தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
ஆ. லட்சுமி காந்த் பாரதி
கெர்சன் நகர மத்திய பகுதியில் வலம் வலும் ரஷ்ய வீரர்கள்
பட மூலாதாரம், Youtube
தெற்கு யுக்ரேனில் உள்ள துறைமுக நகரான கெர்சன், இன்று காலை முதல் ரஷ்ய வீரர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக தகவல் வெளியானது. ஆனால் கெர்சனில் உள்ள உள்ளூர் அதிகாரிகள் அந்த பகுதி யுக்ரேனின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக தற்போது வரை கூறி வருகின்றனர்.
இந்த காணொளியின் நம்பகத்தன்மை, பிபிசியால் சரிபார்க்கப்படவில்லை.
பட மூலாதாரம், Youtube
வந்துகொண்டிருக்கும் செய்தி, கார்கிவ் தாக்குதலில் நான்கு பேர் படுகொலை
கார்கிவில் ரஷ்ய படையினர் நடத்திய பீரங்கி தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாக கார்கிவ் கிழக்கு அவசரகால சேவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
கார்கிவில் உள்ள கராசின் தேசிய பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான கட்டடம் மற்றும் கார்கிவின் காவல்துறை கட்டடத்தில் இந்த தாக்குதல் உள்ளூர் நேரப்படி 8:10 மணியளவில் நடந்தது.
ரஷ்ய படையெடுப்புக்கு பிறகு பாதிக்கப்பட்ட கராசின் தேசிய பல்கலைக்கழக கட்டடம் மற்றும் காவல் நிலையத்தில் யுக்ரேனிய தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பட மூலாதாரம், Anadolu Agency
பட மூலாதாரம், Anadolu Agency
பட மூலாதாரம், Anadolu Agency
மூன்றாம் உலக போர் அழிவுகரமான, அணு ஆயுத யுத்தமாக இருக்கும் - ரஷ்ய வெளியுறவு அமைச்சர்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, செர்கே லாவ்ரோஃப், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்
மூன்றாம் உலக போர் அழிவுகரமான மற்றும் அணு ஆயுத யுத்தமாக இருக்கும் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோஃப் தெரிவித்துள்ளார்.
மேற்கு நாடுகளிடம் இருந்து அணு ஆயுதங்களை யுக்ரேன் வாங்க ரஷ்யா அனுமதிக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
யுக்ரேனுடன் ரஷ்யா எப்போது இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை நடத்தும் என அவரிடம் கேட்டதற்கு, "அதற்கு ரஷ்யா தயாராக உள்ளது, ஆனால் யுக்ரேன் அமெரிக்காவின் கட்டளையை பின்பற்றுகிறது," என்று பதிலளித்தார்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, நாங்கள் ஐந்தாயிரத்துக்கும் அதிகமான ரஷ்ய வீரர்களை கொன்றோம் - யுக்ரேன் அரசு
"நாங்கள் 5,840 ரஷ்ய வீரர்களைக் கொன்றுள்ளோம் என்று யுக்ரேன் கூறுகிறது.
ரஷ்ய படையெடுப்பின் தொடக்கத்திலிருந்து பதிவான ஆரம்பநிலை புள்ளிவிவரங்கள் அதற்கு ஏற்பட்ட சேதங்களை பிரதிபலிக்கின்றன என்று யுக்ரேனின் ஆயுதப்படைகள் கூறுகின்றன.
பிபிசி இந்த தகவல்களை சுயாதீனமாக சரிபார்க்கவில்லை. ஆனால் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் யுக்ரேன் மீதான அதன் படையெடுப்பின் போது ரஷ்ய படைகள் பெரும் இழப்பை சந்தித்ததாக நம்புகிறது.
இதுவரை யுக்ரேன் கோரியுள்ள மொத்த ரஷ்ய இழப்புகளின் விவரம்:
5,840 வீரர்கள்
30 விமானங்கள்
31 ஹெலிகாப்டர்கள்
211 டாங்கிகள்
862 கவச ரோந்து வாகனங்கள்
85 பீரங்கி தளவாடங்கள்
9 விமான எதிர்ப்பு சாதனங்கள்
60 எரிபொருள் டாங்கிகள்
355 வாகனங்கள்
40 ராக்கெட் லாஞ்சர்கள் (கைப்பற்றப்பட்டவை)
புதின் தப்புக் கணக்குப் போட்டுவிட்டார்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் சீறிய பைடன்
பட மூலாதாரம், POOL
யுக்ரேன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், யுக்ரேன் மீது படையெடுத்தால் மேற்கு நாடுகள் எப்படி எதிர்வினையாற்றும் என்பது குறித்து புதின், தவறாக கணக்குப் போட்டுவிட்டார் என தெரிவித்தார்.
'ஸ்டேட் ஆஃப் யூனியன்' (அமெரிக்க ஒன்றியத்தின் நிலை) உரையை அமெரிக்க நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்த்தியபோது பைடன் இவ்வாறு தெரிவித்தார்.
யுக்ரேன் மீது நடக்கும் படையெடுப்புக்கு புதின் மட்டுமே பொறுப்பு என்றார் அவர்.
இதற்காக புதின் "நீண்ட காலம் தொடர்ந்து பெரிய விலை தரவேண்டியிருக்கும்" என்றும் கூறினார் பைடன்.
சர்வாதிகாரிகள் தங்கள் ஆக்கிரமிப்புக்கு உரிய விலையை தராவிட்டால், அவர்கள் மேலும் குழப்பத்தை விளைவிப்பார்கள் என்று கூறிய பைடன், முன்கூட்டியே திட்டமிட்ட, தூண்டுதல் ஏதுமில்லாத போரை தொடங்கியபோது "சுதந்திரத்தை நேசிக்கும் நாடுகள்" அமெரிக்காவுடன் நிற்பதாக கூறினார் பைடன்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்
YouTube பதிவின் முடிவு
"யுக்ரேனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்திய அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம்"- இந்தியாவுக்கான ரஷ்ய தூதர்
கார்கிவ் மற்றும் கிழக்கு யுக்ரேனின் பிற பகுதிகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் விஷயத்தில் நாங்கள் இந்திய அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம் என்று இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா ஆக்கிரமித்துள்ள யுக்ரேனிய பகுதியில் சிக்கியுள்ள அனைவரையும் அவசர அவசரமாக வெளியேற்றுவதற்கான இந்தியாவின் கோரிக்கைகள் கிடைக்கப் பெற்றதை அடுத்து இதை இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ செய்து முகமை ட்வீட் செய்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
வந்துகொண்டிருக்கும் செய்தி, யுக்ரேன் கெர்சன் நகரம் தனது கட்டுப்பாட்டில் உள்ளதாக ரஷ்யா தகவல்
ரஷ்யாவின் படைவீரர்கள் தற்போது தெற்கு யுக்ரேனின் கெர்சன் நகரை கைப்பற்றியுள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கெர்சன் நகரம், இதுவரை யுக்ரேனில், ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்ட நகரங்களில் மிகப்பெரியதாக கருதப்படுகிறது.நேற்று இரவில் ரஷ்ய படைவீரர்கள் கெர்சன் நகரின் தெருக்களில் காணப்பட்டதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் கெர்சனின் ரயில் நிலையம் மற்றும் துறைமுகம் கைப்பற்றப்பட்டதாக கெர்சனின் மேயர் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
யுக்ரேன் கார்கிவ் நகரில் நடந்த பீரங்கி தாக்குதலில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டதாக தகவல்
பட மூலாதாரம், EPA
யுக்ரேனின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமான கார்கிவ் மீது நடந்த பீரங்கி தாக்குதலில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டனர், 112 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்த நகர மேயர் தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக கார்கிவ் நகரின் மாநில நிர்வாகத்தின் ஆளுநர், செவ்வாய் அன்று இரவில் கார்கிவ் மீது கடுமையான குண்டுவீச்சுகள் நடத்தப்பட்ட போதிலும், அனைத்து ரஷ்ய தாக்குதலையும் "நாங்கள் எதிர் கொண்டோம்" மற்றும் தற்போது தாக்குதல் நடத்திய பகுதிகளை எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம் என்று கூறினார்.
மேலும் கார்கிவ் ஆளுநர் ஓலே சினெகுபோவ் கூறுகையில், "ரஷ்ய படை இழப்புகளை சந்தித்துள்ளது" என்று தெரிவித்தார்.
ரஷ்ய படைவீரர்கள் கார்கிவ் நகரின் வடகிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளுக்குள் நுழைந்து, ஜெட் பீரங்கிகளால் தாக்கினர்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, கார்கிவ் நகரக் காவல்துறை கட்டிடத்தின் மீது தாக்குதல்
பட மூலாதாரம், Anton Gerashchenko
படக்குறிப்பு, கார்கிவ் நகரின் காவல்துறை கட்டிடம்
யூஎன்ஐஏஎன்(UNIAN) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், யுக்ரேனின் கார்கிவ் நகரில் உள்ள காவல் துறை கட்டிடத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுக்ரேன் அரசாங்க ஆலோசகர் டெலிகிராம் செயலியில் வெளியிட்ட காணொளியில், கட்டிடம் தீ பிடித்தது எரிந்து கொண்டிருந்தது தெரிகிறது.
யுக்ரேன் உள்துறை அமைச்சரின் ஆலோசகர் அன்டன் ஜெராசென்கோ, இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து கராசின் தேசிய பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான கட்டிடமும் எரிந்து கொண்டிருக்கிறது என்று கூறுகிறார்.
பிபிசியால் இதுவரை அந்த காணொளி உறுதிசெய்யப்படவில்லை.
யுக்ரேனிய அகதிகளுக்கு 1,00,000 இலவச இருக்கைகளை வழங்குகிறது விஸ் ஏர்
ஐரோப்பிய விமான நிறுவனமான விஸ் ஏர் (Wizz Air), யுக்ரேனிய அகதிகளுக்கு, அவர்களின் குறுகிய தூர விமானங்களில் 1,00,000 பேருக்கு இலவச இருக்கைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இது சம்பந்தமாக அவர்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள தகவலில், யுக்ரேனிய அகதிகள் அவர்களின் இலக்கை அடைய உதவுவதில் அந்த நிறுவனம் "உறுதியாக" இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தில் போலந்து, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் ருமேனியாவில் இருந்து புறப்படும் விஸ் ஏர் விமானங்களில் உள்ள இருக்கைகள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக 6,60,000க்கும் அதிகமான யுக்ரேனிய மக்கள் ஏற்கனவே வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர் என்றும், அதிகமாக அகதிகள் போலந்து பகுதிக்கு சென்றுள்ளதாகவும் ஐ.நாவின் அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், இதுவரை மொத்த அகதிகளில் 4,50,000 பேர் போலந்துக்கு வந்துள்ளதாக அந்நாட்டின் துணை உள்துறை அமைச்சர் பாவெல் செஃபர்னேக்கர் புதன்கிழமை தனியார் ரேடியோ நிறுவனமான ஜெட்டிடம்( Zet) தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
யுக்ரேன் கெர்சன் நகரில் சண்டை நடந்துகொண்டிருக்கிறது - மேயர்
யுக்ரேனின் கெர்சன் நகரில் சண்டை நடந்துகொண்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் அந்நகர மேயர்.
தெற்கத்திய நகரமான கெர்சனை அமெரிக்கப் படையினர் பிடித்துவிட்டதாகத் தெரிவதாக ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம்.
ஆனால், இப்போது கெர்சனில் நிலைமை என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. தெருக்களில் ரஷ்யப் படையினர் இருப்பதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
நகரின் ரயில் நிலையத்தையும், துறைமுகத்தையும் செவ்வாய்க்கிழமை இரவு ரஷ்யப் படையினர் கைப்பற்றிவிட்டதாக நகர மேயர் கோலிகாயேவ் உள்ளூர் ரேடியோவில் பேசியதாக பிபிசி ரஷ்ய சேவை செய்தி வெளியிட்டது.
“சண்டை நடந்துகொண்டிருக்கிறது. நமது நகரின் மீதான ஆக்கிரமிப்பு நடந்துகொண்டிருக்கிறது," என்று அவர் கூறியிருக்கிறார்.
மக்கள் வெளியேறவோ அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவோ படையினர், பொதுமக்கள், அரசு அதிகாரிகள் முயற்சி செய்துவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
3 லட்சம் மக்கள் தொகை கொண்டது இந்நத நகரம்.
வணக்கம் நேயர்களே!
நான் ஆ.லட்சுமி காந்த் பாரதி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். இதுவரை அ.தா. பாலசுப்ரமணியன் மற்றும் நந்தினி வெள்ளைச்சாமி வழங்கிக்கொண்டிருந்த நேரலை செய்திகளை இனி நான் வழங்கவிருக்கிறேன். யுக்ரேனில் நடந்துவரும் ரஷ்ய படையெடுப்பு சம்பந்தமான செய்திகளை, பிபிசி களத்திலிருந்து இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.
நேற்றிரவு யுக்ரேனில் நடந்தது என்ன?
தற்போது யுக்ரேனில் பொழுது விடிந்துகொண்டிருக்கிறது.
கடந்த இரவில் யுக்ரேனின் இரண்டு முக்கிய நகரங்களில் ரஷ்யப் படைகள் முன்னேறிக்கொண்டிருக்கின்றன. ஒன்று கார்கிவ் மற்றொன்று கீயவ்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் அமெரிக்க ஒன்றியத்தின் நிலை குறித்து வழக்கமாக அதிபர் நிகழ்த்தும் ஸ்டேட் ஆஃப் யூனிய.ன் உரையின் பெரும்பகுதியை யுக்ரேன் யுத்தமே ஆக்கிரமித்திருந்தது.
முந்திய இரவில் யுக்ரேனில் நடந்தவை இவைதான்:
யுக்ரேனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில் ரஷ்யப் படையினர் பாராசூட்டில் இறங்கி அந்த நகரின் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தினர். நேற்று அந்நகரில் பல டஜன் சிவிலியன்கள் குண்டு வெடிப்புகளில் கொல்லப்பட்டனர்.
சிறிய தெற்கத்திய நகரமான கெர்சன் ரஷ்யப் படைகளிடம் வீழ்ந்ததாக யுக்ரேன் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
6 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் யுக்ரேனை விட்டு வெளியேறிவிட்டனர் என்கிறது ஐ.நா.
போயிங், எக்சான்மொபில் ஆகிய மேற்கத்திய நிறுவனங்கள் ரஷ்யாவுடனான தங்கள் வணிகத் தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டன.
ரஷ்ய கூட்டாளி நாடான பெலாரஸ் யுக்ரேனின் வடக்கு எல்லைப் பகுதியில் தனது படை வலிமையை இரட்டிப்பாக்கியுள்ளது.
ரஷ்ய விமான நிறுவனங்களுக்கான ஆதரவை நிறுத்திக்கொண்ட போயிங் நிறுவனம்
பட மூலாதாரம், Getty Images
உலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுவனமான
அமெரிக்காவின் போயிங் நிறுவனம், ரஷ்யாவை
சேர்ந்த தங்கள் தொழில் கூட்டாளிகளுடனான உறவை துண்டித்துக்கொண்டது.
மாஸ்கோவில்
தங்கள் நிறுவனத்தின் முக்கிய செயல்பாடுகளை நிறுத்துவதாக, அந்நிறுவனம் நேற்று
செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
ரஷ்ய
விமான நிறுவனங்களுக்கான தொழில்நுட்ப உதவி,
பராமரிப்பு, விமான பாகங்கள் ஆகியவற்றை போயிங்
நிறுவனம் இனி வழங்காது.
யுக்ரேன்
தலைநகர் கீயவ்வில் உள்ள தங்கள் அலுவலகத்தை திங்கள்கிழமை அந்நிறுவனம் மூடியது. மேலும்,
மாஸ்கோவில் விமான ஓட்டுநர் பயிற்சிகளையும் நிறுத்தியது.
அந்நிறுவனத்தைச்
சேர்ந்த செய்தித்தொடர்பாளர் கூறுகையில்,
“அந்த பிராந்தியத்தில் உள்ள தங்கள் குழுவினரின் பாதுகாப்பை உறுதிசெய்வதில்
கவனம் செலுத்திவருகிறோம்” என தெரிவித்தார்.
அமெரிக்க வான் பரப்பில் ரஷ்ய விமானங்களுக்குத் தடை - உறுதி செய்த பைடன்
அமெரிக்க வான் பரப்பில் ரஷ்ய விமானங்களுக்குத் தடை விதிக்கப்படும் என்று இன்று காலை நம் நேரலையின் தொடக்கத்தில் கூறியிருந்தோம். தற்போது அந்த தடையை உறுதி செய்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
ரஷ்யாவின் தனியார் மற்றும் வணிக விமானங்கள் அனைத்தையும் அமெரிக்க வான் பரப்பில் இருந்து தடை செய்வதாக பைடன் அறிவித்துள்ளார்.
முன்னதாக ஐரோப்பிய நாடுகளும், கனடாவும் இது போன்ற தடையை விதித்திருந்தன.
இந்த தடை ரஷ்யாவை பொருளாதார ரீதியாக மேலும் தனிமைப்படுத்தும். அதன் பொருளாதாரத்தையும் பாதிக்கும்.
ரஷ்யப் பணமான ரூபிள் 30 சதவீத மதிப்பையும், ரஷ்யாவின் பங்குச் சந்தை 40 சதவீத மதிப்பையும் ஏற்கெனவே இழந்துவிட்டன என்று தெரிவித்துள்ளார் பைடன்.
யுக்ரேன் மக்களின் "இரும்பு போன்ற மன உறுதியில் இருந்து" அமெரிக்கர்கள் ஊக்கம் பெறவேண்டும் என்றும் பைடன் குறிப்பிட்டார். "கீயவ் நகரை புதின் டாங்கிகளால் சுற்றி வளைக்கலாம். ஆனால், ஒருபோதும் யுக்ரேன் மக்களின் இதயங்களையோ, ஆன்மாவையோ அவர் வெல்ல முடியாது" என்றும் அவர் கூறினார்.
விளாதிமிர் புதின் நீண்டகாலம் பெரிய விலை தரவேண்டியிருக்கும்: எச்சரித்த பைடன்
பட மூலாதாரம், Getty Images
யுக்ரேன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் குறித்து வாஷிங்டனில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், யுக்ரேன் மீது நடக்கும் படையெடுப்புக்கு புதின் மட்டுமே பொறுப்பு என்றார்.
இதற்காக புதின் "நீண்ட காலம் தொடர்ந்து பெரிய விலை தரவேண்டியிருக்கும்" என்றும் கூறினார் பைடன்.
'ஸ்டேட் ஆஃப் யூனியன்' (அமெரிக்க ஒன்றியத்தின் நிலை) உரையை அமெரிக்க நாடாளுமன்றத்தில் தொடங்கிய பைடன் இந்த எச்சரிக்கையை விடுத்தார். சர்வாதிகாரிகள் தங்கள் ஆக்கிரமிப்புக்கு உரிய விலையை தராவிட்டால், அவர்கள் மேலும் குழப்பத்தை விளைவிப்பார்கள் என்று கூறிய பைடன், முன்கூட்டியே திட்டமிட்ட, தூண்டுதல் ஏதுமில்லாத போரை தொடங்கியபோது "சுதந்திரத்தை நேசிக்கும் நாடுகள்" அமெரிக்காவுடன் நிற்பதாக கூறினார் பைடன்.
"புதின் தவறாக கணக்குப் போட்டுவிட்டார். நாங்கள் தயாராகவே இருந்தோம்," என்றும் தெரிவித்தார் பைடன்.
பெரும் முதலாளிகளாலும், வன்முறை நிறைந்த இந்த ஆட்சியில் இருந்து பல்லாயிரம் கோடியைத் திருடிக் கொண்ட ஊழல் அதிகாரிகளாலும் ரஷ்ய ஆட்சி தாங்கிப் பிடிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார் பைடன். தங்கள் ஐரோப்பியக் கூட்டாளிகளுடன் இணைந்து ரஷ்ய சொகுசுக் கப்பல்கள், ஜெட் விமானங்கள், சொகுசு சொத்துக்களை பறிமுதல் செய்யப்போவதாகவும் கூறினார் பைடன்.
"தவறான வழியில் சம்பாதித்த உங்கள் லாபத்தை நோக்கி வருகிறோம்," என்று அவர் கூறினார். எந்தெந்த ரஷ்யப் பெருமுதலாளிகள் மீது தடைவிதிக்கப்பட்டது என்ற பட்டியலை அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் ஏற்கெனவே வெளியிட்டுள்ளன.
குடும்பம் குடும்பமாக இடம் பெயரும் யுக்ரேன் மக்கள்
தங்கள் நாட்டின் மீது ரஷ்யா நடத்திவரும் படையெடுப்பு காரணமாக பல்லாயிரக்கணக்கான யுக்ரேன் மக்கள் குடும்பம் குடும்பமாக வெளிநாடுகளுக்கும், தங்கள் நாட்டின் வேறு சில பகுதிகளுக்கும் இடம் பெயர்கிறார்கள். அது பற்றிய காணொளி இதோ.
காணொளிக் குறிப்பு, யுக்ரேன் ரஷ்யா மோதல்: தாக்குதலால் குடும்பம் குடும்பமாக இடம்பெயரும் யுக்ரேனியர்கள்
யுக்ரேன் மீது படையெடுப்பு: ரஷ்யாவை இந்தியா கண்டிக்காதது ஏன்?
பட மூலாதாரம், Getty Images
மாஸ்கோ மற்றும் மேற்கு நாடுகளுடன் தனது உறவுகளை சமநிலையில் தக்க வைக்கும் முயற்சியில், கடந்த சில நாட்களாக யுக்ரேன் விவகாரத்தில், ராஜிய உறவுகள் என்னும் கயிற்றின் மீது நடப்பது போல மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டிய சூழல் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) இந்தியாவின் முதல் அறிக்கையில் நேரடியாக எந்த நாட்டின் பெயரும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், பேச்சுவார்த்தைக்கு ஒரு வாய்ப்பை வழங்குமாறு சர்வதேச சமூகம் விடுத்த அழைப்புகள் புறக்கணிக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தது.
இருப்பினும், அது ரஷ்யாவை விமர்சிப்பதைத் தவிர்த்தது. படையெடுப்பைக் கண்டிக்கும் வரைவு ஐநா தீர்மானத்தின் மீது ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் வாக்களிப்பதற்கு முன்பு, ரஷ்யா, அமெரிக்கா மற்றும் யுக்ரேன் ஆகிய நாடுகள் இந்தியா, "சரியானதைச் செய்ய வேண்டும்" என்று அழைப்பு விடுத்தன. ஆனால் என்ன நடந்தது? இந்தியாவுக்கு என்ன நெருக்கடி? முழுமையான அலசலைப் படிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்.
ஜைட்டோமைர் நகரின் மீது விமானத் தாக்குதல் - இருவர் கொல்லப்பட்டதாக தகவல்
பட மூலாதாரம், State Emergency Service, Ukraine
படக்குறிப்பு, பற்றி எரியும் வீடுகளைக் காட்டும் படம்.
யுக்ரேன் தலைநகர் கீயவ்-வுக்கு மேற்கில் உள்ள ஜைட்டோமைர் நகரின் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக யுக்ரேன் அரசு அவசரகால சேவை கூறுகிறது.
மூவர் காயமடைந்திருப்பதாகவும், மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்றும் அந்த சேவை தெரிவிக்கிறது.
இந்த தாக்குதலில் குறைந்தது பத்து வீடுகள், ஒரு மருத்துவமனை ஆகியவை சேதமடைந்திருப்பதாகவும் அது கூறுகிறது.
சேதமடைந்த வீடுகள் சிலவற்றில் தீப்பற்றி எரிவதாகக் காட்டும் சில புகைப்படங்களையும் அந்த சேவை வெளியிட்டுள்ளது.
இந்த தகவல்களை பிபிசியால் சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.