கீயவில் இருந்து வெளியேறிய இந்தியர்கள் - தூதரகம் மூடப்பட்டதாக அறிவிப்பு

கீயவில் உள்ள தொலைக்காட்சி கோபுரத்திற்கு அருகில் ஒரு பெரிய புகை மூட்டம் வெளிப்படுவதை காணொளியில் பார்க்கிறோம்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஆ. லட்சுமி காந்த் பாரதி

  1. யுக்ரேன் தாக்குதல்: குடும்பங்கள் அழைத்தும் யுக்ரேனை விட்டு வராத இந்திய மாணவர்கள். காரணம் என்ன?

      • எழுதியவர், பிரசாந்த் முத்துராமன்
      • பதவி, பிபிசி தமிழ்
    யுக்ரேன் நெருக்கடி

    பட மூலாதாரம், GETTY IMAGES

    படக்குறிப்பு, தாக்குதலுக்குள்ளான கட்டடம்

    யுக்ரேனை விட்டு வெளியில் வரமுடியாத மாணாக்கர்கள் பலர், எப்படியாவது எங்களை மீட்டு விடுங்கள் என்ற கோரிக்கையுடன் யுக்ரேனில் உள்ள பதுங்கிடங்களில் பாதுகாப்புக்காக தங்கியுள்ளனர். இந்தச் சூழ்நிலையில் குறிப்பிட்ட சில காரணங்களுக்காக, இந்தியாவுக்கு வர விரும்பவில்லை என்றும் இரு மாணாக்கர்கள் தெரிவித்துள்ளனர். ஏன்?

  2. யுக்ரேனில் பரவலாக வான் தாக்குதல் அபாய எச்சரிக்கை ஒலி

    யுக்ரேன் நெருக்கடி

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கோப்புப்படம்

    யுக்ரேனில் வான் தாக்குதல் அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு வருகிறது.

    தலைநகர் கீயவ் மட்டுமல்லாமல், யுக்ரேனின் மேற்கு நகரங்களான டெர்னோபில், வின்னிட்ஸியா, ரிவீன், மத்திய நகரங்களான செர்காஸி, கிரோபிவ்னிட்ஸ்கி ஆகிய நகரங்களிலும் வான் தாக்குதல் அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு வருவதாக, பிபிசி யுக்ரேன் சேவை தெரிவித்துள்ளது.

  3. ரஷ்ய பீரங்கித் தாக்குதலில் 70 யுக்ரேன் படையினர் உயிரிழப்பு

    யுக்ரேன் நெருக்கடி

    பட மூலாதாரம், Dmytro Zhyvytskyi/Telegram

    படக்குறிப்பு, தாக்குதல் நடைபெற்றது குறித்து டிமிட்ரோ லெவிட்ஸ்கி பகிர்ந்த புகைப்படம்.

    நேற்று முன்தினம் (பிப். 27), ஞாயிற்றுக்கிழமை, யுக்ரேனின் வட-கிழக்கு நகரம் ஓக்டிர்காவில் ரஷ்யாவின் பீரங்கித் தாக்குதலில் 70க்கும் மேற்பட்ட யுக்ரேன் படையினர் கொல்லப்பட்டதாக, உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இந்த தாக்குதலில், யுக்ரேன் ராணுவ பிரிவு ஒன்று அழிக்கப்பட்டதாகவும், உயிரிழந்தவகளின் சடலங்களை கண்டெடுக்கும் பணியில் மீட்புக்குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் சுமி நகர அரசு நிர்வாக தலைவர் டிமிட்ரோ லெவிட்ஸ்கி தெரிவித்தார்.

    “பல பேர் இறந்துள்ளனர். தற்போது உயிரிழந்த 70 யுக்ரேன் படையினரை புதைப்பதற்கான இடங்கள் தயாராகிவருகின்றன” என, அவர் டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    “ஆனால், எதிரிகளுக்கும் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது,” எனக்கூறிய அவர், “அந்நகரத்தில் ஏராளமான ரஷ்ய சடலங்களும்” இருப்பதாக கூறினார். அந்த சடலங்கள் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அவருடைய இந்த கூற்றை சரிபார்க்க முடியவில்லை.

  4. ரஷ்யப் பணப் பரிவர்த்தனைக்கு மாஸ்டர் கார்ட் தடை

    மாஸ்டர் கார்ட்

    பட மூலாதாரம், Getty Images

    ரஷ்யாவில் இருந்து மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்னைகளுக்கு மாஸ்டர்கார்ட் நிறுவனம் தடை விதித்துள்ளது.

    ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகளை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ஸ்விஃப்ட் பரிவர்த்தனை முறையில் இருந்து ரஷ்யாவை விலக்கப் போவதாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் கனடா உள்ளிட்ட நாடுகள் ஏற்கெனவே அறிவித்துள்ளன. இதனால் ரஷ்யாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பணப் பரிவர்த்தனை மேற்கொள்வது முடங்கும் எனக் கருதப்படுகிறது.

  5. சரணடையவோ, ரஷ்யாவின் அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டோம்: யுக்ரேன்

    ரஷ்யாவிடம் சரணடையவோ, அதன் அழுத்தத்துக்கு அடிபணியவோ மாட்டோம் என யுக்ரேன் கூறியுள்ளது.

    சிஎன்பிசி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த யுக்ரேன் வெளியுறவு அமைச்சர் திமித்ரோ குலேபா, 'பேச்சுவார்த்தை மூலமான தீர்வை விரும்பினாலும் சரணடையவோ, ரஷ்யாவின் நிபந்தனைகளை ஏற்கவோ மாட்டோம்' என்று கூறினார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  6. தடை செய்யப்பட்ட குண்டை வீசியது ரஷ்யா: யுக்ரேன்

    வெப்ப அழுத்தக் குண்டு

    பட மூலாதாரம், Getty Images

    திங்களன்று யுக்ரேனில் நடந்த சண்டையின் போது ரஷ்யா தடைசெய்யப்பட்ட தெர்மோபரிக் எனப்படும் வெப்ப அழுத்தக் குண்டை வீசியதாக அமெரிக்காவுக்கான யுக்ரைன் தூதர் தெரிவித்தார்.

    "அவர்கள் இன்று வெற்றிட குண்டைப் (Vacuum Bomb) பயன்படுத்தினார்கள், இது ஜெனீவா உடன்பாடு மூலம் தடைசெய்யப்பட்டுள்ளது" என்று ஒக்ஸானா மார்க்கரோவா செய்தியாளர்களிடம் கூறினார். எனினும் இந்தத் தகவல் பிபிசியால் சரிபார்க்கப்படவில்லை.

    தெர்மோபரிக் எனப்படும் வெப்ப அழுத்த அல்லது வெற்றிடக் குண்டுகள் வழக்கமான வெடிமருந்துகளைப் பயன்படுத்துவதில்லை.

    அதற்கு பதிலாக அவை உயர் அழுத்த வெடிபொருளால் நிரப்பப்பட்டு, சுற்றியுள்ள சூழலில் இருந்து ஆக்ஸிஜனை உறிஞ்சி மிகவும் சக்திவாய்ந்த வெடிப்பு மற்றும் அழுத்த அலையை உருவாக்குகின்றன.

    சனிக்கிழமையன்று, ரஷ்ய நகரமான பெல்கோரோட் அருகே தெர்மோபரிக் ராக்கெட் லாஞ்சரைப் பார்த்ததாக சிஎன்என் செய்தி வெளியிட்டது.

  7. யுக்ரேன் தலைநகர் கீயவில் முன்னேறும் ரஷ்யாவின் மிக நீண்ட படை வரிசை

    யுக்ரேன் நெருக்கடி

    பட மூலாதாரம், Maxar

    யுக்ரேன் தலைநகர் கீயவில் ரஷ்யாவின் மிக நீண்ட படைவரிசை 17 மைல்கள் (27 கி.மீ.) நீளத்திற்கு முன்னேறியுள்ளதாக, வெளியான தகவல்கள் தவறானது என செயற்கைக்கோள் படங்களை வெளியிடும் மக்ஸர் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மாறாக, ரஷ்ய படை வரிசை கீயவில் 40 மைல்கள் தொலைவுக்கு நீண்டுள்ளதாக, மக்ஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மேலும், யுக்ரேன் எல்லைக்கு 20 மைல்களுக்கும் குறைவான தொலைவில் உள்ள தெற்கு பெலாரூஸில் தரைப்படையினர் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஆகியவை இருக்கும் புதிய படங்களையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    யுக்ரேன் நெருக்கடி

    பட மூலாதாரம், maxar

  8. வணக்கம் நேயர்களே!

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். யுக்ரேன் மீது ரஷ்யா நடத்திவரும் படையெடுப்பு குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.

    உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றி எங்கள்டிவிட்டர் கணக்கின் மூலம்தகவல் அளியுங்கள்.நேற்றைய நேரலை பக்கத்தைப்படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

    நேற்றைய நேரலை பக்கத்தின் சில முக்கியச் செய்திகள்:

    • யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் ஐந்தாவது நாளில், இரு நாடுகளின் பிரதிநிதிகளும் பெலாரூஸில் கூடி 5 மணி நேரம் பேசினர். ஆனால், முடிவு எட்டப்படவில்லை.
    • இரு தரப்பினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டதாகவும், அடுத்த சில நாட்களில் மீண்டும் சந்திப்போம் என்றும் ரஷ்யா தெரிவித்தது.
    • யுக்ரேன் தலைநகர் கீயவில் மீண்டும் ஒருமுறை வான் தாக்குதல் அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பபட்டு வருகிறது. நகருக்கு வெளியே ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வருகின்றன.
    • யுக்ரேனின் கார்கீவில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் திங்கட்கிழமை அதிகாலையில் டஜன் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக யுக்ரேனிய உள்துறை தெரிவித்தது.
    • பெலாரூஸ் பேச்சுவார்த்தைக்கு முன்பாக யுக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி, ரஷ்ய படையினர் ஆயுதங்களை கீழே போடுமாறும் ஐரோப்பிய ஒன்றியம் யுக்ரேனுக்கு உறுப்புரிமை வழங்குமாறும் கோரினார்.
    • ரஷ்ய ராணுவத்தின் “அணுஆயுதப் படை பிரிவை” தயார் நிலையில் இருக்குமாறு விளாதிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

    தொடர்ந்து இணைந்திருங்கள்.