கீயவில் இருந்து வெளியேறிய இந்தியர்கள் - தூதரகம் மூடப்பட்டதாக அறிவிப்பு

கீயவில் உள்ள தொலைக்காட்சி கோபுரத்திற்கு அருகில் ஒரு பெரிய புகை மூட்டம் வெளிப்படுவதை காணொளியில் பார்க்கிறோம்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஆ. லட்சுமி காந்த் பாரதி

  1. யுக்ரேன் Vs ரஷ்யா: கார்கிவ் தாக்குதலில் இந்திய மாணவர் பலி - இதுநாள் வரை நடந்தது என்ன?

    கார்கிவில் பள்ளி முன்பு ஏற்றப்பட்டிருந்த யுக்ரேன் தேசிய கொடி. இப்பள்ளி ஷெல் தாக்குதலில் சேதமடைந்ததாக குடியிருப்புவாசிகள் தெரிவிக்கின்றனர்.

    பட மூலாதாரம், Reuters

    படக்குறிப்பு, கார்கிவில் பள்ளி முன்பு ஏற்றப்பட்டிருந்த யுக்ரேன் தேசிய கொடி. இப்பள்ளி ஷெல் தாக்குதலில் சேதமடைந்ததாக குடியிருப்புவாசிகள் தெரிவிக்கின்றனர்.

    யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் ஆறாவது நாளான செவ்வாய்க்கிழமையும் சண்டைகள் தொடர்கின்றன.

    திங்கட்கிழமை அன்று ஏவுகணைத் தாக்குதல்கள் நாட்டின் இரண்டாவது நகரமான கார்கிவில் டஜன் கணக்கான பொதுமக்களைக் கொன்றன, அதே நேரத்தில் தலைநகரான கீயவில் விமானத் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் மீண்டும் ஒலித்தன.

    கார்கிவ் நகரில் பொதுமக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகள், இன்று ரஷ்ய படையினரின் ஏவுகணை மற்றும் ஷெல் குண்டு தாக்குதல்களால் இலக்கு வைக்கப்பட்டன.

  2. கார்கிவில் ரஷ்யா நடத்தும் தாக்குதல் அரச பயங்கரவாதம் - யுக்ரேனிய அதிபர்

    யுக்ரேன் ரஷ்யா

    பட மூலாதாரம், Vladimir Zelensky FB

    படக்குறிப்பு, வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, யுக்ரேன் அதிபர்

    தங்களுடைய நாட்டின் கார்கிவ் பகுதியில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல்கள் அரச பயங்கரவாதம் என்று குற்றம்சாட்டியிருக்கிறார் யுக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி.

    யுக்ரேனின் கிழக்கு நகரான கார்கிவ் மீதான தாக்குதல்கள் ரஷ்யாவால் மேற்கொள்ளப்பட்ட அரச பயங்கரவாதத்திற்கு சமம் என்று ஸெலென்ஸ்கி தமது சமீபத்திய சமூக ஊடக காணொளியில் தெரிவித்துள்ளார்.

    காணொளி காட்சி மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற அமர்வில் பேசிய ஸெலென்ஸ்கி, கார்கிவ் மத்திய பகுதி மற்றும் நிர்வாக கட்டடம் மீதான தாக்குதல் ஒரு போர்க்குற்றம் மட்டுமின்றி சுயநினைவுடன் மக்களை இலக்கு வைத்து நிகழ்த்தப்பட்ட அழிவுகர செயல் என்று சாடினார்.

    "ராக்கெட்டுகள், வெடிகுண்டுகள் மற்றும் பீரங்கிகளால் ஆயுதம் ஏந்திய கொடூரமான செயல்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்," என்று அவர் வலியுறுத்தினார்.

    பொருளாதாரத்தை அவர்கள் அழித்து விட்டனர். மனிதகுலம் இனி தற்காத்துக் கொள்ள முடியும் என்பதை நாம் காட்ட வேண்டும்," என்று ஸெலென்ஸ்கி யுக்ரேனியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

  3. வந்துகொண்டிருக்கும் செய்தி, கார்கிவ் பகுதியில் இறந்த நவீனின் பெற்றோருக்கு கர்நாடக முதல்வர் இரங்கல்

    கார்கிவ் நகரில் கர்நாடக மாணவர் நவீன் மரணம் அடைந்தது தொடர்பாக அவரது குடும்பத்தினரை அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

    யுக்ரேனின் ஹாவேரியைச் சேர்ந்த நவீன் சேகரப்பாவின் தந்தை சேகர் கெளடாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.

    நவீனைப் பற்றிய கூடுதல் விவரங்களைப் பெற்ற பொம்மை, துயரமான இந்த நேரத்தில் குடும்பத்துடன் தாம் இருப்பதாகக் கூறினார்.

    "இது ஒரு பெரிய அடி. எல்லாம் வல்ல இறைவன் நவீனுக்கு நித்திய சாந்தியை வழங்கட்டும். நடக்கும் துயரத்தைத் தாங்க நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும்," என்று பசவராஜ் பொம்மை கூறினார்.

    நவீனின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக நீவின் தந்தையுடனான உரையாடலின் போது பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

    முன்னதாக காலையில்தான் தமது மகனுடன் செல்பேசியில் பேசியதாக சேகரப்பா கூறினார். தினமும் இரண்டு அல்லது மூன்று முறை பெற்றோரை தொடர்பு கொள்வதை நவீன் வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும் சேகரய்யா கூறினார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  4. வந்துகொண்டிருக்கும் செய்தி, யுக்ரேனில் இந்தியர் பலி - இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு காங்கிரஸ் அறிவுரை

    யுக்ரேனின் கார்கிவில் இந்திய மாணவர் உயிரிழந்ததற்கு காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்கட்சி தலைவருமான ஆதிர் ரஞ்சன் செளத்ரி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    தேர்தலுக்குப் பதிலாக யுக்ரேனில் உள்ள இந்திய மாணவர்களை வெளியேற்றுவதில் பிரதமர் நரேந்திர மோதி கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் தமது ட்விட்டர் பக்கம் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    யுக்ரேனில் நிலைமை மோசமாகி வருவதாகவும் அங்குள்ள ஆதரவற்ற இந்திய மாணவர்களுடன் ஒட்டுமொத்த தேசமும் நிற்கிறது என்று ஆதிர் ரஞ்சன் செளத்ரி கூறியுள்ளார்.

  5. வந்துகொண்டிருக்கும் செய்தி, கார்கிவ் - இடிபாடுகளுக்குள் சடலங்கள், காயம் அடைந்தவர்களை தேடும் அவசரகால மீட்புக்குழு

    யுக்ரேன் ரஷ்யா

    பட மூலாதாரம், Reuters

    யுக்ரேனின் கார்கிவ் பகுதியில் ஏவுகணை மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் சேதம் அடைந்த கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் அல்லது இறந்தவர்களின் சடலங்களை அவசரகால மீட்புப்பணி ஊழியர்கள் தேடி வருகின்றனர்.

    கார்கிவ் நகரில் உள்ள அரசு நிர்வாக அலுவலகத்தின் மீது ஷெல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளதாக அந்நகரின் அவசரகால மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த கூற்றுக்களை பிபிசி சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.

    கட்டடம் இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல் காணொளியில், கடுமையாக சேதமடைந்த கட்டடத்திற்கு வெளியே உள்ள ஒரு அவசரகால ஊழியர், அந்த கட்டடம் பகுதியளவு அழிக்கப்பட்டதாக பேசுகிறார்.

    மேலும் அருகே உள்ள கட்டடத்தின் தளம் இடிந்து விழுந்ததில் அங்கிருந்த மக்கள் அடிப்பகுதியில் சிக்கியதாக அந்த ஊழியர் கூறுகிறார்.

    அங்கு சுமார் 20 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் மேலும் ஆறு பேர் மீட்கப்பட்டதாகவும் அந்த நபர் காணொளியில் பேசுகிறார்.

    இருப்பினும் அங்குள்ள மக்களின் நிலைமையை உறுதிப்படுத்த இயலவில்லை.

    "இடிபாடுகளுக்குள் சல்லடை போட்டு காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் உடல்களை தேடி வருகிறோம். எங்களின் பணி தொடர்கிறது," என்கிறார் அந்த மீட்புப்பணி ஊழியர்.

  6. வந்துகொண்டிருக்கும் செய்தி, யுக்ரேனின் கார்கிவ் நகரின் மையத்தை தாக்கிய ஏவுகணை - காணொளி

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    யுக்ரேனின் வெளியுறவு துறை அமைச்சர், கார்கிவ் சுதந்திர சதுக்கத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல் காணொளியை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அப்பட்டமான போர்க்குற்றத்தில் ஈடுபடுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    மேலும் ரஷ்யாவை தனிமைப்படுத்த உலக நாடுகளுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

    எச்சரிக்கை - இங்கே இணைக்கப்பட்டுள்ள ட்விட்டர் காணொளியில் உள்ள காட்சிகள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கிறோம்.

    குறிப்பு - இந்த காணொளியின் உண்மைத்தன்மை பிபிசியால் சரிபார்க்கப்பட்டது,

  7. யுக்ரேன்: கார்கிவை இலக்கு வைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல்

    யுக்ரேனின் இதயமாக கருதப்படும் கார்கிவ் நகரை இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியிருக்கிறது.

    யுக்ரேனிய மக்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இந்த நகரம் கருதப்படுகிறது. இது ரஷ்யாவுக்கு அருகே உள்ளது.

    இந்த நகரில் நடந்த ஒரு மிகப்பெரிய வெடிப்பு பற்றிய படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகின்றன.

    போல்ஷிவிக்குகளால் அமைக்கப்பட்ட யுக்ரேனிய சோவியத் சோஷலிச குடியரசின் முதல் தலைநகரம் இதுவாகும். இது யுக்ரேனின் மிக முக்கிய தொழில்துறையின் தாயகமாகவும் விளங்கி வருகிறது.

    இங்கு ஏராளமான தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன.

    இன்று காலையில், பிராந்திய நிர்வாக அலுவலகத்திற்கு வெளியே சுதந்திர சதுக்கம் கட்டடத்தை இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்த நடவடிக்கையை "அப்பட்டமான போர் குற்றம்" என்று அந்த பிராந்திய நிர்வாகத்தின் தலைவர் ஓலே சினேஹுபோவ் கூறினார்.

  8. வந்துகொண்டிருக்கும் செய்தி, யுக்ரேன் கார்கிவ் நகரில் நடந்த தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழப்பு

    யுக்ரேனின் கார்கிவ் நகரில் இன்று காலை வெடிகுண்டு தாக்குதலில், இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சம்பந்தமாக வெளியுறவுத் துறை அமைச்சகம் ட்வீட் செய்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    கார்கிவ் மற்றும் பிற மோதல் மண்டலங்களில் உள்ள நகரங்களில் இன்னும் சிக்கியிருக்கும் இந்திய குடிமக்கள், அவசரமாகவும் பாதுகாப்பாகவும் வெளியேறும் பாதையை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்ள டெல்லியில் உள்ள ரஷ்யா மற்றும் யுக்ரேனிய நாடுகளின் தூதர்களை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா அழைத்திருக்கிறார்.

    இதேபோன்ற நடவடிக்கையை ரஷ்யா மற்றும் யுக்ரேனில் உள்ள இந்திய தூதர்களும் அந்தந்த நாட்டு அரசுகளிடம் வலியுறுத்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    யுக்ரேன் ரஷ்யா

    பட மூலாதாரம்,

    படக்குறிப்பு, நவீன் சேகரப்பா
  9. யுக்ரேனில் உள்ள இந்தியர்களை மீட்க இந்திய விமானப்படையை பயன்படுத்த பிரதமர் நரேந்திர மோதி உத்தரவு

    பிரதமர் நரேந்திர மோதி

    பட மூலாதாரம், ANI

    இந்திய விமானப்படை

    பட மூலாதாரம், IAF

    யுக்ரேனில் ரஷ்ய படையெடுப்பால், அங்கு சிக்கி உள்ள இந்தியர்களை மீட்குமாறு இந்திய விமானப்படைக்கு பிரதமர் நரேந்திர மோதி உத்தரவிட்டுள்ளார்.

    இதையடுத்து, யுக்ரேனில் உள்ள இந்தியர்களை மீட்டு வருவதற்கான ஆபரேஷன் கங்காவின் ஒரு பகுதியாக, இந்திய விமானப்படையின் C-17 குளோப்மாஸ்டர் விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

    பிப்ரவரி 24ஆம் தேதி முதல் யுக்ரேனின் வான் பகுதி மூடப்பட்டதால், யுக்ரேனின் மேற்குப் பகுதி எல்லை நாடுகளான ருமேனியா மற்றும் ஹங்கேரி வழியே இந்தியர்கள் தனியார் போக்குவரத்து உதவியுடன் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

    பிப்ரவரி 26ஆம் தேதி, யுக்ரேனில் சிக்கித் தவிக்கும் சுமார் 14,000 இந்திய குடிமக்களை வெளியேற்றும் முயற்சிகளை இந்தியா தொடங்கியது. ஆபரேஷன் கங்கா திட்டம் என்ற பெயரில் நடைபெறும் இந்தப் பணிக்காக ஏர் இந்தியா மற்றும் பிற தனியார் விமான நிறுவனங்கள் மீட்புச் சேவையை வழங்கி வருகின்றன.

    இந்த நிலையில், இந்த பணியில் இந்திய விமானப்படையை பயன்படுத்துமாறு பிரதமர் மோதி உத்தரவிட்டுள்ளதாக அவரது அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்திய விமானப்படையின் C-17 குளோப்மாஸ்டர் என்ற போயிங் தயாரிப்பு போர் விமானங்கள், இந்த மீட்புப் பணிக்கு பயன்படுத்தப்படவுள்ளன.

    கொரோனா காலத்திலும் ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் தாக்குதல் நடத்திய காலத்திலும் இந்த ரக போர் விமானத்தையே மக்களின் மீட்புப் பணிக்காக பல்வேறு நாடுகள் பயன்படுத்தியுள்ளன.

    இந்த ரக ராட்சத போர் விமானங்கள் இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் பயன்பாட்டில் உள்ளன.

    இதில் சராசரியாக 400 பேர் வரை இடைவெளியின்றி பயணம் செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், ஆப்கன் மீட்பு நடவடிக்கையின்போது ஒரே நேரத்தில் சுமார் 800 வரை இந்த விமானத்தில் நெரிசலாக அமர்ந்து ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினார்கள். அந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரான நிலையில், இந்த ரக போர் விமானத்தின் தனித்துவமான சேவை உலக அளவில் கவனத்தைப் பெற்றது.

    இந்திய விமானப்படை

    பட மூலாதாரம், IAF

  10. "யுக்ரேனில் இருந்து அனைவரையும் மீட்கும் வரை முயற்சிகள் தொடரும்"- இந்திய சுகாதாரத்துறை அமைச்சர்

    யுக்ரேனில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா டெல்லியில் வரவேற்றார்.

    அப்போது அவர், "உங்கள் நண்பர்களில் பலர் இன்னும் யுக்ரேனில் சிக்கியுள்ளனர், அவர்களை அழைத்து வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர்களிடம் கூறுங்கள். அனைவரையும் மீட்கும் வரை எங்களின் முயற்சிகள் தொடரும்," என்று தெரிவித்தார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  11. யுக்ரேனில் தாக்குதலுக்கு உள்ளான சுதந்திர சதுக்கம் கட்டடம்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    யுக்ரேனின் சுதந்திர சதுக்கம் கட்டடத்தின் மீது நடைபெற்ற தாக்குதலின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

    தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் மூலம் அந்த கட்டடத்தில் எப்படிப்பட்ட தாக்குதல் நடை பெற்றிருக்கிறது என்பதை காணமுடிகிறது.

    தாக்குதலுக்கு உள்ளான சுதந்திர சதுக்கம் கட்டிடம் யுக்ரேனின் வரலாற்று சிறப்புமிக்கது என்பது குறிப்பிடத்தக்கது

    குண்டுவெடிப்புக்கு

    பட மூலாதாரம், TSN CHANNEL

    படக்குறிப்பு, குண்டுவீச்சுக்கு முன்னதாக கார்கிவ் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடையுமாறு, வான்வழித் தாக்குதல் சைரன்கள் மூலம் எச்சரிக்கப்பட்டனர்.
    யுக்ரேனில்

    பட மூலாதாரம், TSN CHANNEL

    படக்குறிப்பு, குண்டுவீச்சால் பாதிக்கப்பட்ட பகுதி
    குண்டுவெடிப்பால்

    பட மூலாதாரம், TSN CHANNEL

    படக்குறிப்பு, குண்டுவீச்சால் ஏற்பட்ட சேதத்தின் அளவு இன்னும் தெரியவில்லை
  12. யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பால் இலங்கை பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் என்ன?

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  13. ரஷ்யா - யுக்ரேன் நெருக்கடி: உலகில் எந்த நாட்டிடம் எத்தனை அணு ஆயுதங்கள் உள்ளன?

    யுக்ரேன்

    பட மூலாதாரம், GETTY IMAGES

    படக்குறிப்பு, யுக்ரேன்

    யுக்ரேனில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் அணு ஆயுதங்கள் உட்பட தனது எதிர்ப்புத்திறன்களை "சிறப்பு உஷார் நிலையில்" வைக்குமாறு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ரஷ்ய ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

    மேற்கத்திய நாடுகளின் ஆக்ரோஷமான அறிக்கைகள் அவ்வாறு செய்ய வேண்டியதன் அவசியத்தை ஏற்படுத்தியதாக புதின் தனது பாதுகாப்புத்துறை தலைவர்களிடம் கூறினார்.

    ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்த விரும்புகிறது என்ற அவரது அறிவிப்புக்கு அர்த்தம் இல்லை. ஆனால், அவரது அறிவிப்பு உலகில் அணு ஆயுதங்கள் பற்றிய விவாதத்தை ஆரம்பித்துள்ளது.

    பனிப்போர் காலத்திற்குப்பிறகு அணு ஆயுதங்களின் கையிருப்பு வெகுவாகக் குறைந்திருந்தாலும், மிகக் குறுகிய காலத்திற்குள் பயன்படுத்தக்கூடிய நூற்றுக்கணக்கான அணு ஆயுதங்கள் இன்னும் உலகில் உள்ளன.

  14. யுக்ரேன் மீது ரஷ்ய படையெடுப்பில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வுகள்

    நீங்கள் எங்களுடன் சில நிமிடங்களுக்கு முன்பு இணைந்திருந்தால், யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் ஆறாவது நாளின் சமீபத்திய முன்னேற்றங்கள் இதோ,

    • ரஷ்ய பீரங்கி தாக்குதலில் குறைந்தது 70 வீரர்கள் கொல்லப்பட்டதாக யுக்ரேன் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அவசரகாலப் பணியாளர்கள், இடிபாடுகளில் தேடி வருகின்றனர்.
    • யுக்ரேனில் உள்ள கெர்சன் பகுதியில் ரஷ்ய படைவீரர்கள் குவிந்துள்ளனர், "எல்லா இடங்களிலும்" படைவீரர்கள் மற்றும் இராணுவ உபகரணங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • யுக்ரேனிய தலைநகர் கியவில் 65 கிமீ நீளமுள்ள ரஷ்ய ராணுவ கவச வாகனத் தொடரணியைக் காட்டும் செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன.
    • யுக்ரேனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது, ரஷ்ய ஏவுகணை தாக்குதல்களில் பத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திங்களன்று கொல்லப்பட்டனர்.
    • யுக்ரேன் அரசாங்கம் தனது ஆயுதப் படைகளுக்கு பணம் செலுத்த, போர் பத்திரங்களை விற்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது
    யுக்ரேன்

    பட மூலாதாரம், Getty Images

  15. வந்துகொண்டிருக்கும் செய்தி, இந்தியர்கள் கீயவை விட்டு இன்றே வெளியேற தூதரகம் அறிவுறுத்தல்

    மாணவர்கள் உட்பட அனைத்து இந்தியர்களும் இன்று அவசரமாக கீயவ் விட்டு வெளியேறுமாறு யுக்ரேனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளனர்.

    கீயவை விட்டு வெளியேற, ரயில்கள் அல்லது ஏதோ ஒரு வகையில் பயணம் மேற்கொள்ளவும் குறிப்பிட்டுள்ளனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  16. குழந்தைகள் வார்டாக மாறிய கீயவ் மருத்துவமனை அடித்தளம்

    புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உட்பட மற்ற குழந்தைகளுக்கும், கீயவில் உள்ள மருத்துவமனையின் அடித்தளத்தில் சிகிச்சை அளிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

    ரஷ்ய ராணுவத்தின் குண்டு தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள, மருத்துவனையின் அடித்தளம், ஒரு தற்காலிக தங்குமிடம் மற்றும் குழந்தைகளுக்கான சிகிச்சை அளிக்கும் வார்டாக மாற்றப்பட்டுள்ளது.

    REUTERS/Umit Bekta

    பட மூலாதாரம், REUTERS/Umit Bektas

    படக்குறிப்பு, புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், "படையெடுப்பு வேண்டாம் " என்று எழுதப்பட்ட பதாகைகளுடன் இருப்பதை படத்தில் காணலாம்
    தாய் மற்றும் குழந்தைகள் இருவரும் தற்காலிகமாக உருவாக்கப்பட்ட மருத்துவமனை வார்டில் உள்ளனர்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, தாய் மற்றும் குழந்தை இருவரும், தற்காலிகமாக உருவாக்கப்பட்ட மருத்துவமனை வார்டில் உள்ளனர்
    குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்
  17. வணக்கம் நேயர்களே!

    நான் ஆ.லட்சுமி காந்த் பாரதி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். இதுவரை எம். மணிகண்டன் மற்றும் நந்தினி வெள்ளைச்சாமி வழங்கிக்கொண்டிருந்த நேரலை செய்திகளை இனி நான் வழங்கவிருக்கிறேன். யுக்ரேனில் நடந்துவரும் ரஷ்ய படையெடுப்பு சம்பந்தமான செய்திகளை, பிபிசி களத்திலிருந்து இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.

  18. ரஷ்யா – யுக்ரேன் நெருக்கடி: ஸ்விஃப்ட் என்றால் என்ன? ரஷ்யாவை தடை செய்வது ஏன் முக்கியமானது?

      • எழுதியவர், ரஸ்ஸல் ஹாட்டன்
      • பதவி, பிபிசி நியூஸ்
    ஸ்விஃப்ட்

    பட மூலாதாரம், GEOFFROY VAN DER HASSELT

    படக்குறிப்பு, கோப்புப்படம்

    ஆயிரக்கணக்கான நிதி நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் சர்வதேச பணப்பரிவர்த்தனை சேவை அமைப்பான ஸ்விஃப்டில் இருந்து பல ரஷ்ய வங்கிகளை விலக்கி வைக்க ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.

    இந்த நடவடிக்கையானது ரஷ்யாவின் வங்கி அமைப்பு மற்றும் ஸ்விஃப்ட் மூலமான நிதி போக்குவரத்துகளை தாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஸ்விஃப்ட், உலகளாவிய பணப் பரிவர்த்தனைக்கு முக்கியமானது.

  19. 'நாங்கள் இருக்கும் நகரம் அழிக்கப்படுகிறது' - யுக்ரேனில் தவிக்கும் மாணவிகள்

    ஐஸ்வர்யா

    இந்தியாவிலிருந்து யுக்ரேனுக்கு மருத்துவம் உள்ளிட்ட பட்டப்படிப்பு படிக்க சென்ற மாணவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் பல்வேறு நகரங்களில் சிக்கி தவிக்கின்றனர்.

    ரஷ்ய தாக்குதலால் யுக்ரேனின் வான்வெளி மூடப்பட்டுள்ள நிலையில் தரை வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு மாணவர்களை அழைத்து வந்து இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.

    கோயம்புத்தூரைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்கிற நான்காம் ஆண்டு மருத்துவ மாணவி பிபிசி தமிழிடம் பேசினார்.

    "நான் யுக்ரேன் நாட்டில் தென்கோடியில் உள்ள மைகோலெய்வ் நகரில் அமைந்துள்ள பெட்ரோ மொய்லா பிளாக் சீ தேசிய பல்கலைக்கழகத்தில் (Petro Mohyla Black Sea National University) மருத்துவம் நான்காம் ஆண்டு படித்து வருகிறேன்.

    இந்த நகரில் 400க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் உள்ளனர். எங்கள் பல்கலைக்கழகத்தின் விடுதியில் 70க்கும் மேற்பட்டவர்கள் உள்ளோம்.

    கடந்த ஐந்து நாட்களாக இங்குள்ள பதுங்கு குழியில் தான் தஞ்சமடைந்துள்ளோம். இங்கே கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் சொற்பமாக உள்ளதால் மாணவர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது.

    சூப்பர் மார்க்கெட் போன்ற உணவு கிடைக்கும் இடங்கள் மூடப்பட்டுள்ளதால் உணவுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது இரண்டு நாட்களுக்கு அளவான உணவு மட்டுமே கையிருப்பில் உள்ளது.

    யுக்ரேனுக்கு மைகோலெய்வ் நகரம் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தப் பகுதியில்தான் துறைமுகம் அமைந்துள்ளதால் ரஷ்யாவும் இந்த இடத்தை முக்கியமாக பார்க்கிறது.

    இந்த நகரம் கடலை ஒட்டி அமைந்துள்ளதால் அண்டை நாட்டிற்கு செல்லும் சாத்தியம் இங்கு இல்லை. இங்குள்ள ரயில் நிலையமும் தகர்க்கப்பட்டுள்ளது. இதனால் சாலை வழியாக மட்டுமே பயணிக்க வேண்டிய நிலைமை உள்ளது.

    ஆனால் ரஷ்ய படைகள் மைகோலெய்வ் நகரத்தை இணைக்கும் முக்கியமான தரை பாலங்களை குண்டுவைத்து தகர்த்துவிட்டார்கள். இதனால் இங்கிருந்து எப்படி வெளியே செல்வது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    நேற்று இரவு கூட எங்கள் விடுதிக்கு மிக அருகில் இரண்டு இடங்களில் குண்டு வெடித்துள்ளது. மிக விரைவில் மைகோலெய்வ் நகரம் அழிக்கப்படும் என்கிறார்கள். இதனால் எங்களுக்கு அச்சமாக உள்ளது.

    தற்போது எங்களை இந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்கள். எங்கு என தெளிவாக தெரியவில்லை. ஆனால் கிழக்கு யுக்ரைன் பக்கம் கொண்டு செல்லலாம் எனத் தெரிகிறது." என்றார்.

  20. யுக்ரேன்-ரஷ்யா மோதலால் இலங்கை பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் என்ன?

      • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
      • பதவி, பிபிசி தமிழுக்காக
    இலங்கை

    பட மூலாதாரம், GETTY IMAGES

    படக்குறிப்பு, இலங்கையில் தேயிலை பறிக்கும் பெண்கள்

    ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய நாடுகளுக்கு இடையில் சண்டை நடந்து வரும் நிலையில், இலங்கையின் ஏற்றுமதி துறைக்கும் அதனால் பாதிப்பு ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளது. பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில், இது மேலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று கூறப்படுகின்றது.