யுக்ரேனின் கார்கிவ், செரீனிஹிவ் பகுதிகளில் குண்டுமழை - கடும் சண்டை

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் ஐந்தாம் நாள் தாக்குதலின்போது கார்கிவ், செரீனிஹிவ் ஆகிய பகுதிகளில் ரஷ்ய படையினர் குண்டு மழையை பொழிந்து வருகின்றனர். ரஷ்ய படையினருக்கு யுக்ரேனிய படையினரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஆ. லட்சுமி காந்த் பாரதி

  1. யுக்ரேன் Vs ரஷ்யா மோதல்: உஷார்! சமூக ஊடகங்களில் உலா வரும் போலிச்செய்திகள் #BUSTFAKENEWS

    TWITTER

    பட மூலாதாரம், TWITTER

    5ஆவது நாளாக யுக்ரேனுக்குள் தாக்குதல் நடத்தி வருகிறது ரஷ்யா. இதற்கிடையில், சமூக வலைதளங்களில் இந்தத் தாக்குதல் தொடர்பாக பல்வேறு போலியான படங்களும் காணொளிகளும் வெளியாகி வருகின்றன.

    எளிதில் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ள முடியாதபடி, பழைய ராணுவத் தாக்குதல்களின் படங்கள், வைரல் வீடியோக்களின் பகுதிகள் ஆகியவை பரப்படுகின்றன.

    குறிப்பாக, சில ஆண்டுகளுக்கு முந்தைய பழைய வீடியோ என்று பிபிசியால் உறுதி செய்யப்பட்ட ஒரு வீடியோ ஒரே நாளில் 27 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இதற்கிடையில் சில வீடியோ கேம் காட்சிகளும் கூட உலா வருகின்றன.

    இதுபோன்ற தவறாக வழிநடத்தவல்ல பதிவுகள் அதிகாரப்பூர்வ கணக்குகள் மற்றும் சாதாரண பயனர் கணக்குகள் என இரண்டின் மூலமாகவும் வெளியிடப்படுகின்றன.

  2. யுக்ரேன் நெருக்கடி: அணு ஆயுதத்தை எடுக்குமா ரஷ்யா?

    புதின்

    பட மூலாதாரம், ANADOLU AGENCY VIA GETTY IMAGES

    ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். பலமுறை, புதின் இதைச் செய்ய மாட்டார் என்று நான் நினைத்தது பொய்த்துப்போயுள்ளது.

    "நிச்சயம் அவர் கிரைமியாவை ஆக்கிரமிக்கமாட்டார்" - ஆக்கிரமித்தார்.

    "டான்பாஸில் போரைத் துவங்கமாட்டார்" - துவங்கினார்.

    "யுக்ரேன் மீதான முழு ஆக்கிரமிப்பைச் செய்யமாட்டார்" - செய்தார்.

    "செய்யவே மாட்டார் என்ற சொல் விளாதிமிர் புதினுக்குப் பொருந்தாது என்ற முடிவுக்கு நான் வந்தேன்.

    இப்போது ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது.

    "அணு ஆயுதப் போரை அவர் தொடங்குவாரா?" என்பது தான் அது.

  3. வந்துகொண்டிருக்கும் செய்தி, யுக்ரேனில் இருந்து 1,400 இந்தியர்கள் மீட்பு, இன்னும் 8,000 உள்ளனர் - இந்திய வெளியுறவுத்துறை

    யுக்ரேன் ரஷ்யா நெருக்கடி

    பட மூலாதாரம், ANI

    படக்குறிப்பு, அரிந்தம் பக்சி, இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர்

    யுக்ரேனில் இருந்து இன்று மாலை 6 மணி நிலவரப்படி, இதுவரை 6 விமானங்கள் மூலம் 1,400 இந்திய குடிமக்கள் வெளியே வந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    டெல்லியில் இது தொடர்பாக திங்கள்கிழமை மாலையில் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி செய்தியாளர்களிடம் பேசினார்.

    புக்காரெஸ்டிலிருந்து (ருமேனியா) நான்கு விமானங்கள், புடாபெஸ்டிலிருந்து (ஹங்கேரி) இரண்டு விமானங்கள் இதுவரை இந்தியாவுக்கு வந்துள்ளன.

    வெளியேற்ற முயற்சிகளின்போது கள நிலைமை மிகவும் சிக்கலாக உள்ளதாகவும் அங்குள்ள சூழல் கவலையளிக்கிறது என்றும் அரிந்தம் பக்சி தெரிவித்தார்.

    ஆனால் வெளியுறவுத்துறை அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு எல்லைக்கு வெளியே வரும் இந்தியர்களை உரிய வழிகாட்டுதலைப் பின்பற்றி தாயகத்துக்கு அழைத்து வருவதாகவும் யுக்ரேனில் இன்னும் 8,000 இந்தியர்கள் இருப்பதாகவும் அரிந்தம் பக்சி கூறினார்.

  4. யுக்ரேனில் இருந்து டெல்லிக்கு வந்த 23 தமிழக மாணவர்கள்

    யுக்ரேன்
    படக்குறிப்பு, யுக்ரேனில் இருந்து டெல்லி விமானத்தில் வந்த தமிழக மாணவர்கள்

    யுக்ரேனில் இருந்து வெளியேறிய தமிழக மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். டெல்லி விமான நிலையத்தில் அவர்களை வரவேற்ற தமிழக அரசு அதிகாரிகள் அவர்களை சென்னைக்கு புறப்படும் அடுத்த விமானத்துக்கான பயண ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    இன்று, திங்கட்கிழமை யுக்ரேன் நாட்டில் மருத்துவம் பயிலும் 23 மாணவ, மாணவிகள் ஹங்கேரி மற்றும் ருமேனியா வழியாக 2 விமானங்களில் டெல்லிக்கு வந்தனர்.

    இவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை செல்வதற்கு விமான டிக்கெட்கள் வழங்கி, தேவையான உணவுகள் மற்றும் இதர வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. விமான நிலைய வளாகத்திலேயே கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டு அந்த மாணவர்கள் தமிழ்நாடு செல்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

    யுக்ரேனில் இருந்து வரும் இந்தியர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு சார்பில் இரண்டு குழுக்கள் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

    டெல்லிக்கு நேற்றுவரை யுக்ரேனில் இருந்து 20 மருத்துவ மாணவர்கள் வருகை தந்துள்ளனர். இன்று 23 பேர் வருகை தந்துள்ளனர்.

  5. யுக்ரேன் Vs ரஷ்யா: சமீபத்திய தகவல் என்ன?

    யுக்ரேன்

    பட மூலாதாரம், Getty Images

    நீங்கள் எங்களுடன் சில நிமிடங்களுக்கு முன்பு இணைந்திருந்தால் யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் ஐந்தாவது நாளின் சமீபத்திய முன்னேற்றங்கள் இதோ

    • யுக்ரேன் மற்றும் ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தை பெலாரூஸில் தொடங்கியுள்ளது. ஆனால் அதன் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக இல்லை
    • ரஷ்யா, யுக்ரேன் மோதல் குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூடி விவாதிக்க உள்ளனர்.
    • யுக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, ரஷ்ய துருப்புக்கள் தங்கள் ஆயுதங்களைக் கீழே போடவும், உடனடியாக ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமையை தமது நாட்டுக்கு வழங்குமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
    • இன்று காலை கீயவ் மற்றும் கார்கீவ் பகுதியில் குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டது. அதே நேரத்தில் வடக்கு நகரமான செர்ன்ஹைவில் உள்ள குடியிருப்பு கட்டடம் ஏவுகணை தாக்குதுக்கு இலக்கானது.
    • ரஷ்யா அதன் நாணயம் வீழ்ச்சியடைவதால் அதன் வட்டி விகிதத்தை 20% ஆக இரட்டிப்பாக்கியுள்ளது.
    • ரஷ்யாவின் மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தை 9.5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது.
    • நிதி நெருக்கடி இருந்தபோதிலும், ரஷ்யா பொருளாதார தடைகளை "சமாளிக்கும்" என்று அந்நாட்டின் அதிபர் மாளிகை கூறியிருக்கிறது.
  6. வந்துகொண்டிருக்கும் செய்தி, "எனது ரத்தம் இந்த மண்ணில் கலந்திருப்பதால் தமிழன் என்று உணர்ந்தேன்"- ராகுல் காந்தி

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

    தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் 'உங்களில் ஒருவன்' புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய ராகுல் காந்தி, "தமிழகத்தை பற்றி ஏன் அதிகமாக பேசுகிறீர்கள் என என்னிடம் செய்தியாளர்கள் கேட்கிறார்கள். நாடாளுமன்றத்தில் நான் பேசியதை தமிழகம் கொண்டாடியது. என்னை அறியாமலேயே தமிழன் என்ற வார்த்தை என் வாயில் வந்தது. எனது ரத்தம் இந்த மண்ணில் கலந்திருப்பதால்தான் நானும் தமிழன் என்று உணர்ந்தேன்," என அவர் கூறினார்.

  7. யுக்ரேன் மீதான நடவடிக்கை பற்றி சரியான தகவலை கொடுங்கள்: இந்திய ஊடகங்களிடம் வலியுறுத்திய ரஷ்ய தூதரகம்

    ரஷ்யா, யுக்ரேன் இடையே நடைபெற்று வரும் போர் குறித்து இந்திய ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகள் தொடர்பாக ஒரு ட்வீட்டை இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் வெளியிட்டுள்ளது.

    அதில், யுக்ரேனில் நிலவும் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, இந்திய மக்கள் நடுநிலையான தகவல்களைப் பெறுவதற்கு, துல்லியமான தகவல்களைத் தருமாறு இந்திய ஊடகங்கள் கேட்டுக் கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    "யுக்ரேனுக்கும் அதன் மக்களுக்கும் எதிராக ரஷ்யா போரை நடத்தவில்லை. இது ரஷ்யாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கையாகும். யுக்ரேனின் ராணுவமயமாக்கல் மற்றும் நாசிசத்தை நிறுத்த முயலும் நடவடிக்கை. யுக்ரேனின் எட்டு ஆண்டு கால போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா விரும்புகிறது," என்று ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

  8. ரஷ்யா - யுக்ரேன் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ள இரு நாட்டு பிரதிநிதிகள்

    யுக்ரேன் மற்றும் ரஷ்ய அதிகாரிகள் எதிரெதிரே ஒரு மேஜையில் அமர்ந்துள்ளனர்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, யுக்ரேன் மற்றும் ரஷ்ய அதிகாரிகள் எதிரெதிரே ஒரே மேஜையில் அமர்ந்துள்ளனர்

    யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தை பெலாரூஸில் தொடங்கியுள்ளது. இதில் இரு நாட்டு பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். அதன் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

    யுக்ரேன் ரஷ்யா தாக்குதல்

    பட மூலாதாரம், Reuters

    படக்குறிப்பு, பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக பெலாரூஸுக்கு ஹெலிகாப்டரில் வந்த யுக்ரேனிய பேச்சுவார்த்தைக்குழு
  9. "ஜம்மு காஷ்மீரில் தொடங்கியது அங்கேயே முடிய வேண்டும்"- ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்

    ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்
    படக்குறிப்பு, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்

    "ஜம்மு காஷ்மீரில் தொடங்கியது அங்கேயே முடிய வேண்டும்," என்று அம்மாநில முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியிருக்கிறார்.

    தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் உங்களில் ஒருவரன் புத்தக விழாவில் பங்கேற்றுப் பேசிய ஒமர் அப்துல்லா, "காஷ்மீரிகளின் ஒப்புதலின்றி ஜம்மு காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஜம்முவில் இருந்து நான் இங்கு வந்துள்ளேன். பல வேற்றுமைகளை கொண்டதுதான் இந்தியா. எந்தவித ஆடை அணியவேண்டும் என்பது தனி மனித சுதந்திரம். ஒரு ஆளுநர் மாநிலத்தைப் பிரித்தால் அது ஏற்க முடியாதுதான்ஸ" என்றார் ஒமர் அப்துல்லா.

  10. வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழ்நாடு முதல்வரின் ‘உங்களில் ஒருவன்’ புத்தகத்தை வெளியிட்ட காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ புத்தக வெளியீட்டு விழா நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மைய கூட்டரங்கில் தொடங்கியுள்ளது.

    இந்த நிகழ்வில், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  11. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் ‘உங்களில் ஒருவன்’ புத்தக வெளியீட்டு விழா

  12. யுக்ரேனில் குண்டு வீச்சுகளுக்கு இடையே சிக்கித் தவிக்கும் தமிழக மாணவருடன் நேரலை

  13. வந்துகொண்டிருக்கும் செய்தி, ரஷ்யா, யுக்ரேன் இடையேயான சமாதான பேச்சுவார்த்தை தொடங்கியது

    யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் ஐந்தாவது நாளில், இரு நாடுகளின் பிரதிநிதிகளும் படையெடுப்பை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர்.

    யுக்ரேனிய அதிபரின் அலுவலகம், உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் மற்றும் ரஷ்ய படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

    அமைதி பேச்சுவார்த்தைக்கு வருகை தந்துள்ள ரஷ்ய பிரதிநிதி விளாதிமிர் மெடின்ஸ்கி, இரு தரப்பும் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஒரு உடன்பாட்டை எட்ட விரும்புவதாக கூறினார்.

    அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பு, ரஷ்ய படைவீரர்கள் தங்கள் ஆயுதங்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார் யுக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி.

    மேலும் ஐரோப்பிய ஒன்றியம் யுக்ரேனுக்கு உடனடியாக முகாமின் உறுப்புரிமையை வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

  14. 5000க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டனர் - யுக்ரேன் அரசு

    ரஷ்ய

    பட மூலாதாரம், Getty Images

    யுக்ரேனில் கடந்த நான்கு நாட்களில் சுமார் 5,000க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக கீயவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இது சம்பந்தமாக முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், சுமார் 5,300 ரஷ்ய படைவீரர்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 191 டாங்கிகள், 29 போர் விமானங்கள், 29 ஹெலிகாப்டர்கள் மற்றும் 816 ராணுவ கவச வாகனங்கள் யுக்ரேனிய படைகளால் அழிக்கப்பட்டதாக யுக்ரேனிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

    ஆனால், இந்தக்கூற்று பிபிசியால் உறுதி செய்யப்படவில்லை. அதேசமயம், படையெடுப்பின் ஆரம்ப கட்டங்களில் ரஷ்யா "கடுமையான" உயிரிழப்புகளை சந்தித்ததாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் நம்புகிறது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை, யுக்ரேனிய படையெடுப்பின்போது தங்கள் நாட்டு வீரர்கள் கொல்லப்பட்ட தகவலை ரஷ்ய பாதுகாப்புத்துறை கூறியது. ஆனால், எத்தனை பேர் இறந்தனர் என்ற கணக்கை அதன் அதிகாரிகள் வெளியிடவில்லை

    முதல்நாள் நடந்த ரஷ்ய யுக்ரேனிய படையெடுப்பில், குறைந்தது 94 பொதுமக்கள் இறந்ததை உறுதிப்படுத்தியதாகவும், ரஷ்ய படையெடுப்பால் "கடுமையான மனிதாபிமான விளைவுகள் " தூண்டப்பட்டுள்ளதாகவும் உயிரிழப்புகள் கணிசமாக அதிகமாக இருக்கலாம் என்றும் ஐ.நா பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

  15. யுக்ரேன் மோதல்: இன்று தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் இந்தியா வருகை

    யுக்ரேனில் சிக்கி மீட்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பேர் உள்பட 200க்கும் அதிகமான இந்தியர்கள், இன்று மாலை 5.30 மணியளவில் தலைநகர் டெல்லிக்கு ஏர் இந்தியா தனி விமானத்தில் வருகின்றனர்.

    ஏற்கெனவே இன்று அதிகாலை 3 மணியளவில் தாயகம் வந்த இந்தியர்களில் 2 தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் டெல்லி வந்துள்ளனர். விமான நிலையத்தில் அவர்களை வரவேற்ற தமிழக அரசு அதிகாரிகள், அங்கிருந்தபடி அடுத்த விமானத்தில் தமிழக பயணிகளை சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

  16. வந்துகொண்டிருக்கும் செய்தி, ரஷ்யாவுடன் பேச்சு நடத்த பெலாரூஸ் வந்தது யுக்ரேனிய அதிகாரிகள் குழு

    யுக்ரேன் ரஷ்யா மோதல்

    பட மூலாதாரம், Getty Images

    ரஷ்யாவுடனான சண்டை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்துவதற்காக யுக்ரேனிய அதிகாரிகள் பெலாரூஸ் வந்தடைந்துள்ளனர்.

    சண்டை நிறுத்தத்தை அமல்படுத்தும் முன்பாக, யுக்ரேன் பிரதேசத்தில் இருந்து ரஷ்ய துருப்புக்கள் வெளியேற வேண்டும் என்று யுக்ரேன் வலியுறுத்தியுள்ளது.

    இதே கோரிக்கை, பேச்சுவார்த்தையின்போதும் வலியுறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  17. வந்துகொண்டிருக்கும் செய்தி, யுக்ரேனில் இருந்து வரும் இந்தியர்களுக்காக பயண அறிவுறுத்தல்களில் மாற்றம்: இந்திய அரசு

    யுக்ரேனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அங்கிருந்து வெளியேற்ற ஏதுவாக, சர்வதேச பயணிகளுக்கான சுகாதாரத்துறை அறிவுறுத்தல்களை இந்திய அரசு மாற்றியிருக்கிறது.

    இது தொடர்பாக இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய பயண அறிவுறுத்தல் குறிப்பில், யுக்ரேனில் இருந்து வரும் இந்தியர்களுக்கு சில விதிவிலக்குகள் வழங்கப்பட்டுள்ளன. சர்வதேச விமானங்களில் இந்தியா வரும் பயணிகளுக்கான ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி சான்றிதழ் காண்பிப்பதில் இருந்து இந்திய குடிமக்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

    தற்போது ஏர்-சுவிதா இணையதளத்தில் புறப்படுவதற்கு முன் இந்திய பயணிகள் இந்த ஆவணங்களை கட்டாயமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆனால், யுக்ரேனில் இருந்து தாயகம் வரும் இந்தியர்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

    தாயகம் வரும் பயணியால் வருகைக்கு முன் ஆர்டிபிசிஆர் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க முடியாவிட்டாலோ கோவிட்-19 தடுப்பூசி இரண்டு டோஸ்களை முழுமையாக போட்டுக்கொள்ள முடியாவிட்டாலோ தாயகம் திரும்பிய 14 நாட்களுக்குள் தங்களின் உடல்நிலையை அந்த பயணி சுயமாக கண்காணிக்க வேண்டும். பிறகு தங்களுடைய மாதிரிகளை பரிசோதனை செய்து முடிவுகளை சமர்ப்பிக்க அந்த பயணி அனுமதிக்கப்படுவார்.

    பிப்ரவரி 28ஆம் தேதி பகல் 12 மணி நிலவரப்படி, யுக்ரேனில் இருந்து இதுவரை ஐந்து விமானங்களில் 1,156 இந்தியர்கள் தாயகம் வந்துள்ளனர், அவர்களில் யாரும் இதுவரை தனிமைப்படுத்தப்படவில்லை என்று இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  18. வந்துகொண்டிருக்கும் செய்தி, "நாங்கள் ஏராளமான பொதுமக்கள் உயிரிழப்புகளை சந்தித்து வருகிறோம்"- இந்தியாவுக்கான யுக்ரேனிய தூதர் கருத்து

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    நாங்கள் ஏராளமான பொதுமக்கள் உயிரிழப்புகளை சந்தித்து வருகிறோம். யுக்ரேனிய அமைச்சகத்தின் அதிகாரபூர்வ தகவலின்படி, ரஷ்யாவிற்கு எதிராக அமைதியான முறையில் போராடும் நடவடிக்கையில், 16 குழந்தைகள் குண்டுவெடிப்புகள் மற்றும் பல்வேறு தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளனர் என இந்தியாவுக்கான யுக்ரேனிய தூதர் டாக்டர் ஈகோர் பொலிகா தெரிவித்துள்ளார்.

  19. வந்துகொண்டிருக்கும் செய்தி, ரஷ்யாவை எதிர்க்க விரும்பினால் சிறையில் கைதிகளாக உள்ள முன்னாள் வீரர்கள் விடுதலை: யுக்ரேனிய அதிபர்

    ரஷ்யாவுக்கு எதிராக சண்டையிட சிறையில் கைதிகளாக இருக்கும் முன்னாள் விரும்பினால், அவர்களை விடுதலை செய்கிறேன் என்று யுக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  20. வந்துகொண்டிருக்கும் செய்தி, பெலாரூஸில் தயார் நிலையில் யுக்ரேன் - ரஷ்யா இடையிலான அமைதி பேச்சுவார்தை அறை - நிபந்தனை விதிக்கும் யுக்ரேன் அதிகாரிகள்

    பெலாரஸ்

    பட மூலாதாரம், Belarus Foreign Ministry

    பெலாரூஸில் யுக்ரேனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான அமைதி பேச்சு வார்தைக்கான இடம் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    யுக்ரேன் மீது ரஷ்யாவின் படையெடுப்பு, ஐந்தாவது நாளாக நடந்து வருகின்றது. இந்திய நேரப்படி இந்த பேச்சுவார்த்தை பிற்பகல் 2.30 முதல் 3 மணி வரை நடைபெற உள்ளது.

    இந்த நிலையில், பேச்சுவார்த்தை தொடங்கும் முன்பாக சண்டை நிறுத்தத்தை ரஷ்யா மேற்கொள்ள வேண்டும் என்று யுக்ரேன் தரப்பில் இருந்து கோரப்பட்டிருக்கிறது.