யுக்ரேன் Vs ரஷ்யா மோதல்: உஷார்! சமூக ஊடகங்களில் உலா வரும் போலிச்செய்திகள் #BUSTFAKENEWS
5ஆவது நாளாக யுக்ரேனுக்குள் தாக்குதல் நடத்தி வருகிறது ரஷ்யா. இதற்கிடையில், சமூக வலைதளங்களில் இந்தத் தாக்குதல் தொடர்பாக பல்வேறு போலியான படங்களும் காணொளிகளும் வெளியாகி வருகின்றன.
எளிதில் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ள முடியாதபடி, பழைய ராணுவத் தாக்குதல்களின் படங்கள், வைரல் வீடியோக்களின் பகுதிகள் ஆகியவை பரப்படுகின்றன.
குறிப்பாக, சில ஆண்டுகளுக்கு முந்தைய பழைய வீடியோ என்று பிபிசியால் உறுதி செய்யப்பட்ட ஒரு வீடியோ ஒரே நாளில் 27 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இதற்கிடையில் சில வீடியோ கேம் காட்சிகளும் கூட உலா வருகின்றன.
இதுபோன்ற தவறாக வழிநடத்தவல்ல பதிவுகள் அதிகாரப்பூர்வ கணக்குகள் மற்றும் சாதாரண பயனர் கணக்குகள் என இரண்டின் மூலமாகவும் வெளியிடப்படுகின்றன.