யுக்ரேனிய நகரங்களில் ஊரடங்கு: தொடரும் தாக்குதல் - தவிக்கும் தமிழக மாணவர்கள்
"இந்திய அரசு சொல்வதுபோல் எல்லைக்குச் செல்ல வேண்டுமெனில் நாங்கள் சுமார் 800 கி.மீ பயணிக்க வேண்டும். இந்தச் சூழலில் அதற்கு வாய்ப்பே இல்லை. அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை"
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
நந்தினி வெள்ளைச்சாமி
யுக்ரேன் போர்: ரஷ்யா மீது விதிக்கப்படும் தடைகள் என்ன? சர்வதேச உறவுகளில் தடைகளின் பொருள் என்ன?
பட மூலாதாரம், REUTERS
படக்குறிப்பு, புதின்
யுக்ரேன் மீது படையெடுப்பைத் தொடங்கிய ரஷ்யா மீது கடுமையான தடைகளை மேற்கத்திய நாடுகள் விதித்து வருகின்றன.
ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்குவதற்கும், அதிபர் விளாதிமிர் புதினை ராணுவ நடவடிக்கையை நிறுத்தச்செய்வதற்கும் இந்த நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.
வந்துகொண்டிருக்கும் செய்தி, மெலிடோபோல் நகரத்தைக் கைப்பற்றியதாக கூறும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம்
யுக்ரேனின் தெற்கு பகுதியில் உள்ள ஸேபர்ஸியாவின் மெலிடோபோல் நகரத்தை ரஷ்ப படையினர் கைப்பற்றியதாக, ரஷ்ய செய்தி நிறுவனமான இன்டர்ஃபேக்ஸ், ரஷ்ய பாதுகாப்பு
அமைச்சகத்தை மேற்கோள் காட்டி கூறியுள்ளது.
மரியுபோல் யுக்ரேன் துறைமுகத்தில் உள்ள நடுத்தர
அளவிலான நகரம் மெலிடோபோல் ஆகும்
.
விளாதிமிர் புதின்: யுக்ரேன் மீது படையெடுக்கும் இந்த ரஷ்ய அதிபர் யார்?
பட மூலாதாரம், SERGEI GUNEYEV
படக்குறிப்பு, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்
சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் குழப்பத்திற்கு இடையே அதிவேகமாக தலைவராக அவர் உயர்வதற்கு முன்னால் சோவியத் உளவு அமைப்பான கேஜிபியில் பணியாற்றினார்.
அவரது நெருங்கிய உதவியாளர்கள் மற்றும் நண்பர்கள் பலருக்கு இந்த உளவு அமைப்புடன் தொடர்புகள் உள்ளன.
விளாதிமிர் புதினின் அரசியல் வாழ்க்கை 1990 களின் முற்பகுதியில் தொடங்கியது. அவர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மேயர் அனடோலி சோப்சாக்கின் உயர் உதவியாளராக பணியாற்றினார். சோப்சாக் முன்பு அவருக்கு பல்கலைக்கழகத்தில் சட்டம் கற்பித்தார்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, கருங்கடலில் இருந்து யுக்ரேன் மீது ஏவுகணை தாக்குதல்
யுக்ரேனின் தெற்கே உள்ள கருங்கடலில் இருந்து
யுக்ரேன் மீது ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாக, செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், பல பகுதிகளில் வான்வழி தாக்குதல்கள்
நடைபெறுவதாகவும், செய்திகள் வெளியாகியுள்ளன.
இது
குறித்த மேலதிக தகவல்கள் எங்களுக்குக் கிடைத்தவுடன் விரைவில் வழங்குகிறோம்.
யுக்ரேன்: இந்தியர்கள் அண்டை நாடுகளின் எல்லைப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் – தூதரகம் அறிவிப்பு
யுக்ரேனில் உள்ள இந்தியர்கள் அண்டை நாடுகளின் எல்லைப் பகுதிகளுக்கு
செல்ல வேண்டாம் என, இந்திய தூதரகம் அறிவித்துள்ளாது.
இது தொடர்பாக யுக்ரேனில் உள்ள இந்திய தூதரகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், “யுக்ரேனின்
அண்டை நாடுகளின் எல்லைகளில் உள்ள இந்திய அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல்,
யுக்ரேனில் உள்ள இந்தியர்கள் எல்லைப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இந்தியர்களை வெளியேற்ற அண்டை நாட்டு தூதரகங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை
நடைபெற்று வருகிறது. முன்னறிவிப்பின்றி செல்வோரை எல்லை தாண்ட வைப்பது சிரமமாக உள்ளது.
யுக்ரேனின் மேற்கு நகரங்களில் அடிப்படை வசதிகளுடன் தங்குவது, எல்லை
தாண்டுவதுடன் ஒப்பிடுகையில் பாதுகாப்பானது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்குப் பகுதியில் உள்ளவர்கள் அங்கேயே பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
3,500க்கும் மேற்பட்ட ரஷ்ய படையினர் கொல்லப்பட்டுள்ளனர்: யுக்ரேன்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி
இதுவரை 3,500க்கும் மேற்பட்ட ரஷ்ய படையினர் கொல்லப்பட்டுள்ளதாக, யுக்ரேன்
ராணுவம் தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
அதில், இந்த படையெடுப்பில்
ஈடுபட்ட 3,500க்கும் மேற்பட்ட ரஷ்ய படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 14 விமானங்கள், 8 ஹெலிகாப்டர்கள்,
102 டேங்குகள் ஆகியவற்றையும் ரஷ்யா இழந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், யுக்ரேனின் இந்த அறிவிப்புகளை பிபிசியால் சரிபார்க்க
முடியவில்லை.
தங்கள் தரப்பில் உயிரிழப்புகள் குறித்து ரஷ்யா இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை.
யுக்ரேன் நெருக்கடி: தற்போது அங்கு என்ன நடக்கிறது?
யுக்ரேனில் ரஷ்ய படையெடுப்பு மூன்றாவது நாளாக தொடர்கிறது.
யுக்ரேனில் இரவு முழுவதும் வான் தாக்குதலுக்கான சைரன்கள் ஒலித்ததால், தங்கள்
வீடுகள் அல்லது நிலவறைகளில் பதுங்கியுள்ள பலருக்கும் நேற்றைய இரவு தூங்கா இரவாக அமைந்தது.
இரவில், தீவிரமான சண்டை மற்றும் வெடிகுண்டு தாக்குதல்கள் கீயவ் நகரில்
பரவலாக நடைபெற்றதாக எங்களுக்கு செய்திகள் வந்தன.
அங்கு இப்போது என்ன நடக்கிறது என்பதை இங்கு வழங்குகிறோம்:
ரஷ்ய
தாக்குதல்களிலிருந்து தப்பிக்க யுக்ரேன் படைகள் முயற்சித்து வருகின்றன. கீயவில்
உள்ள ராணுவப் பிரிவு ஒன்று, நகரின் முக்கிய பகுதி ஒன்றில், ரஷ்ய படையை விரட்டியதாக, யுக்ரேன் ராணுவம் முகநூல்
பதிவில் தெரிவித்துள்ளது.
கீயவில் காலையிலேயே
தீவிரமான சண்டை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. யுக்ரேன்
ஆயுதப்படையின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், கீயவின் வாசில்கீவ் பகுதியில் “தீவிரமான
போர் நடைபெறுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது,
யுக்ரேன்
அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, ரஷ்யா கீயவ் நகரை கைப்பற்ற முயல்வதாக
தெரிவித்த நிலையில், அங்கு சண்டை நடைபெற்று வருகிறது.
கீயவ் இன்டிபென்டென்ட்
(Kyiv Independent) ஊடகம் அளித்த தகவலின்படி, தலைநகர் கீயவில் 50-க்கும் மேற்பட்ட குண்டு வெடிப்புகள் மற்றும் துப்பாக்கிசூடு
சம்பவங்கள் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தேசிய
பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் கூறுகையில், கீயவில் ராணுவம் நிலைமையை
“கட்டுப்படுத்துவதாக” தெரிவித்தார். “இருக்கும் அனைத்து வழிகளிலும் படைகளை நிறுத்துகிறோம்,”
என யுக்ரேன் செய்தி வலைதளமான Lb.ua-ல் அவர் தெரிவித்தார்.
அமெரிக்க நிர்வாகம் யுக்ரேனுக்கு
உதவ 6.4 பில்லியன் டாலர் நிதியுதவியை அளிக்க நாடாளுமன்ற அவையை கேட்டுக்கொண்டுள்ளது.
50 லட்சத்துக்கும் அதிகமான
யுக்ரேன் மக்கள் சுற்றியுள்ள நாடுகளுக்கு செல்வார்கள் என, ஐநா
முகமைகள் கணித்துள்ளன.
யுக்ரேன் நெருக்கடி: கீவ் தெருக்களில் சண்டை, துப்பாக்கி சூடு
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கீவ் நகரில் ஊரடங்கு
யுக்ரேனில் தற்போது காலை சுமார் 7.30 மணி ஆகிறது. யுக்ரேன்
தலைநகர் கீவில் காலையிலேயே தீவிரமான சண்டை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
யுக்ரேன் ஆயுதப்படையின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், கீவின் வாசில்கீவ் பகுதியில்
“தீவிரமான போர் நடைபெறுகிறது”
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீவ் தெருக்களில் சண்டை நடைபெற்று வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது
தொடர்பாக, கீவ் அரசு முன்னதாக வெளியிட்ட அறிக்கையிலும் சண்டை
குறித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில், மக்கள் பாதுகாப்பான
இடங்களிலேயே தங்கியிருக்குமாறும், ஜன்னல்கள் அல்லது பால்கனிகளுக்கு
செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீவில் உள்ள பத்திரிகையாளர்கள் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் அளிக்கும் தகவல்களிலும், கீவ் தெருக்களில் சண்டை வெடித்துள்ளதாக தெரிய வருகிறது.
இதன் காரணமாக, பெரும் சத்தம் மற்றும் துப்பாக்கி சூடு சத்தம்
நகரத்தின் மத்தியில் கேட்பதாக, பலரும் விவரித்துள்ளனர்.
இதனிடையே, “எதிரி இலக்குகள்” பலவற்றை பகல் பொழுதில் முறியடித்ததாகவும்,
ரஷ்ய படைகள் யுக்ரேன் நகரங்களை கைப்பற்றுவதை தடுத்து நிறுத்தியதாகவும்,
யுக்ரேன் ஆயுதப்படை தெரிவித்துள்ளது.
ரஷ்யப் படையெடுப்பைக் கண்டிக்கும் ஐ.நா. தீர்மானம்: இந்தியா வாக்கெடுப்பில் பங்கேற்காதது ஏன்?
மனித
உயிர்களைப் பறிப்பது எந்தத் தீர்வையும் கொடுக்காது என, ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானம் மீது இந்தியா தெரிவித்துள்ளது.
யுக்ரேன்
மீது ரஷ்யா நடத்திவரும் படையெடுப்பைக் கண்டிக்கும் வரைவு ஐ.நா. பாதுகாப்பு
கவுன்சில் தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி முறியடித்தது ரஷ்யா.
இது எதிர்பார்க்கப்பட்டதுதான்.
பாதுகாப்புக்
கவுன்சிலில் நடந்த ஒரு விவாதத்துக்குப் பிறகு நடந்த வாக்கெடுப்பில் கண்டனத்
தீர்மானத்துக்கு ஆதரவாக 11 உறுப்பு நாடுகள் வாக்களித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய
அரபு எமிரேட் ஆகியவை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தன.
இது
குறித்து ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலுக்கான இந்திய பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி பேசுகையில், “யுக்ரேனில்
நடந்து வரும் நிகழ்வுகள் குறித்து இந்தியா மிகவும் கவலை கொண்டுள்ளது. வன்முறையை
விடுத்து வெறுப்பைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு திரும்புங்கள் என வேண்டுகிறோம். மனித
உயிர்களைப் பறிப்பது எந்தத் தீர்வையும் கொடுக்காது. யுக்ரேனில் சிக்கியுள்ள
இந்தியர்கள், குறிப்பாக இந்திய மாணவர்களை மீட்பதில் கவனம்
செலுத்தி வருகிறோம்.
பேச்சுவார்த்தை
மட்டுமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஒரே வழி. இந்த காரணங்களுக்காக இந்தியா இந்த
தீர்மானத்தில் வாக்களிப்பதைத் தவிர்க்கிறது” என தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு, 2
பட மூலாதாரம், IndiaUNNewYork/Twitter
படக்குறிப்பு, டி.எஸ்.திருமூர்த்தி
மேற்கு யுக்ரேன் பகுதிகளில் இந்திய தூதரக கட்டுப்பாட்டு அறைகள் விரிவாக்கம்
மேற்கு யுக்ரேன் மற்றும் அதன் அருகே உள்ள எல்லை பகுதிகளில், இந்தியர்களை மீட்க இந்திய தூதரக கட்டுப்பாட்டு அறைகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக டெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகம் மற்றும் யுக்ரேன் தலைநகர் கீயவில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
இந்த பகுதியில் உள்ள தூதரக அதிகாரிகள் இந்தியர்களை யுக்ரேனில் இருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
வணக்கம் நேயர்களே!
நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன்.
யுக்ரேன் மீது ரஷ்யா நடத்திவரும் படையெடுப்பு குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, யுக்ரேனிய தலைநகர் கீயவ் தெருக்களில் சண்டை வெடித்துள்ளது
யுக்ரேனிய தலைநகர் கீயவ் தெருக்களில் சண்டை வெடித்துள்ளது. யுக்ரேனிய செய்தி நிறுவனமான இன்டர்ஃபேக்ஸ் (Interfax) அரசாங்க அறிக்கை ஒன்றை மேற்கோள் காட்டி இதனைக் கூறுகிறது.
அதில் கீயவ் தெருக்களில் சண்டை வெடித்துள்ளது என்றும், மக்கள் இருப்பிடங்களில் தங்குமாறும், ஜன்னல்கள் அல்லது வீட்டில் உள்ள திறந்தவெளி பகுதியை பயன்படுத்த வேண்டாம் என்றும் அது எச்சரிக்கிறது.
ரஷ்யா யுக்ரேனுக்குள் துருப்புக்களை அனுப்புவது ஏன், புதின் விரும்புவது என்ன?
பட மூலாதாரம், RUSSIAN DEFENCE MINISTRY
பல மாதங்களாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் யுக்ரேனைத் தாக்கும் திட்டத்தை மறுத்து வந்தார். ஆனால் பிப்ரவரி 23ஆம் தேதி அவர் ரஷ்யாவின் "சிறப்பு ராணுவ நடவடிக்கை" பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். தொலைக்காட்சியில் தோன்றி நேரடியாகவே இந்த அறிவிப்பை அவர் வெளியிட்ட பிறகு யுக்ரேன் தலைநகர் கீஃப் மற்றும் நாட்டின் பிற பகுதிகளிலும் துப்பாக்கிச்சூடு, ஷெல் குண்டு தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
'அமைதியை பேணுவதற்காக' என்று கூறி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு கிழக்கு பிராந்தியங்களுக்குள் துருப்புக்கள் செல்ல உத்தரவிட்ட சில நாட்களுக்குப் பிறகு,புதின் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
சமீபத்திய மாதங்களில் ரஷ்யா குறைந்தபட்சம் 2,00,000 துருப்புக்களை யுக்ரேனின் எல்லைகளுக்கு அருகில் நிறுத்தியிருந்தது.
மேலும் அதன் சமீபத்திய நடவடிக்கை புதிய படையெடுப்பின் முதல் அடியை குறிக்கிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
ரஷ்ய ராணுவப் படைகளின் தொடர்ச்சியான தாக்குதல்கள் இருந்தபோதிலும், யுக்ரேனால் அதன் முக்கிய நகரங்களைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது
ரஷ்ய படைகள் யுக்ரேனிய தலைநகர் கீயவை சுற்றி வளைக்க முயற்சித்ததாகவும் பல முனைகளில் இருந்து தாக்குதல் நடத்தியதாகவும், ஆனால் யுக்ரேனிய ஆயுதப் படைகள் "வலுவான எதிர்ப்பை" கொடுத்ததாகவும் அந்த அறிக்கை கூறியது.
தெற்கு யுக்ரேனில் அமைந்துள்ள மரியுபோல் மற்றும் மெலிடோபோல் நகரங்களுக்கு இடையே உள்ள பகுதியில் ரஷ்ய படைகள் கப்பல் வழியே தரையிறங்கியுள்ளன என்று தெரிவித்துள்ளது அந்த அறிக்கை.
யுக்ரேனுக்கு ஆதரவு தெரிவிக்கும் உலக நாடுகள்
யுக்ரேனுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக உலகிலுள்ள உலகில் உள்ள முக்கிய சின்னங்களை, யுக்ரேன் நாட்டின் கொடி வண்ணங்களில் ஒளியேற்றி ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பாரிசில் உள்ள ஈபிள் டவர்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பெர்லினில் உள்ள பிராண்டன்பர்க் கேட்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, லண்டனில் உள்ள டிராஃபல்கர் சதுக்கத்தில் உள்ள நெல்சன் தூண்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ரோம் நகர கொலோசியம்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, லண்டன் ஐ
யுக்ரேன் தலைநகர் கீயவில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் பிறந்த குழந்தை
பட மூலாதாரம், Kievmap on Telegram
யுக்ரேன் தலைநகர் கீயவ் மீதான வான்வழித் தாக்குதலை அடுத்து, மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள நிலத்தடியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் ரயில் நிலையத்தில் தஞ்சம் அடைந்தவரில் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ள மக்கள், டெலிகிராம் செயலி மூலம் வெளியுலகுடன் தகவல்களை பரிமாறிக் கொண்டிருக்கின்றனர்.
சில மணிநேரங்களுக்கு முன்பு டெலிகிராமில் உள்ள ஒரு குழுவில், மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளதாக தகவலை பகிர்ந்துள்ளனர்.
யுக்ரேன் மீது இரண்டாவது நாளாக நேற்றும் தாக்குதலை நடத்திய ரஷ்யா, என்ன நடந்தது என்பதை இந்தக் காணொளியில் விரிவாக பார்க்கலாம்
ரஷ்யப் படையெடுப்பைக் கண்டிக்கும் ஐ.நா. தீர்மானம் முறியடிப்பு - இந்தியா என்ன செய்தது?
யுக்ரேன் மீது ரஷ்யா நடத்திவரும் படையெடுப்பைக் கண்டிக்கும் வரைவு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி முறியடித்தது ரஷ்யா. இது எதிர்பார்க்கப்பட்டதுதான்.
பாதுகாப்புக் கவுன்சிலில் நடந்த ஒரு விவாதத்துக்குப் பிறகு நடந்த வாக்கெடுப்பில் கண்டனத் தீர்மானத்துக்கு ஆதரவாக 11 உறுப்பு நாடுகள் வாக்களித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு எமிரேட் ஆகியவை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தன.
ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் நிரந்தர உறுப்பினராக இருக்கும் ரஷ்யாவுக்கு வீட்டோ அதிகாரம் உண்டு. வீட்டோ அதிகாரம் உள்ள நாடுகள் தங்கள் ஒரு வாக்கின் மூலம் தீர்மானங்களை முறியடிக்க முடியும்.
யுக்ரேன் சந்திப்பது போன்ற ஆக்கிரமிப்புகளை தடுக்க முயல்வதற்காகவே ஐ.நா. உருவாக்கப்பட்டது என்று ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதர் விவாதத்தின்போது தெரிவித்தார்.
ரஷ்யப் படை கீயவ்வில் நுழைய இருப்பதாக கூறும் யுக்ரேன் அதிபர்
யுக்ரேனில் படையெடுப்பை நிகழ்த்திவரும் ரஷ்யப் படையினர் தலைநகர் கீயவ்வில் நுழையத் தயாராக இருப்பதாக அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி கூறியுள்ளார்.
இன்னும் சில மணி நேரங்களில் ரஷ்யப் படைகள் தலைநகரில் நுழையலாம் என்றும், இந்த நகரை விட்டுக்கொடுக்க முடியாது என்றும் கூறிய ஸெலன்ஸ்கி எதிர்த்துப் போராடுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வணக்கம் நேயர்களே!
நான் லட்சுமி காந்த் பாரதி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன்.யுக்ரேன் மீது ரஷ்யா நடத்திவரும் படையெடுப்பு குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.
ரஷ்ய தலைவர் விளாதிமிர் புதின் மற்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோஃப் மீது ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இதன் மூலம் அவர்களின் ஐரோப்பிய ஒன்றிய சொத்துகள் முடக்கப்படும். ஆனால், பயண தடை விதிக்கப்படாது என பிபிசி புரிந்து கொண்டிருக்கிறது.முன்னதாக இதேபோன்ற தடையை பிரிட்டனும் புதின் மற்றும் லாவ்ரோஃப் மீது விதித்தது.
தலைநகர் கியவில் பொதுமக்களுக்கு துப்பாக்கிகளைக் கொடுத்து ரஷ்ய படையினரை எதிர்க்குமாறு அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கேட்டுக் கொண்டுள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் யுக்ரேனில் ஆளும் அதிபரின் ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றுமாறு அந்நாட்டு ராணுவத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
யுக்ரேன் எல்லையில் இருந்து வெளியேறி ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கும் இந்தியர்களை மீட்டு அழைத்து வர டெல்லி மற்றும் மும்பையில் இருந்து தனி விமானங்கள் இயக்கப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தலைநகரை விட்டு வெளியேறியதாக ரஷ்ய ஊடகங்களில் வதந்தி பரவிய விலையில், தலைநகர் கியெவின் வீதியில் இருந்தபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர்
கியவின் மையப்பகுதியில் இருந்து 50 கிமீ தூரத்தில் ரஷ்ய படைகள் நிலைகொண்டிருப்பதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.
ஐ.நா அகதிகள் அமைப்பு, சுமார் 100,000 பேர் ஏற்கெனவே இடம் பெயர்ந்துள்ளதாக மதிப்பிடுகிறது. அதேநேரம், மோதல் தீவிரமடையும்போது 5 மில்லியன் பேர் வரை வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல முயற்சி செய்யலாம் எனவும் நம்புகிறது.
யுக்ரேனிய தலைநகரில் ரஷ்ய படைகள் முன்னேறும்போது, படையெடுக்கும் துருப்புகளை எதிர்க்க தங்களால் இயன்ற அனைத்தையும் செய்யுமாறு அதிகாரிகள் மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றனர்.