யுக்ரேனில் தற்போது காலை சுமார் 7.30 மணி ஆகிறது. யுக்ரேன்
தலைநகர் கீவில் காலையிலேயே தீவிரமான சண்டை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
யுக்ரேன் ஆயுதப்படையின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், கீவின் வாசில்கீவ் பகுதியில்
“தீவிரமான போர் நடைபெறுகிறது”
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீவ் தெருக்களில் சண்டை நடைபெற்று வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது
தொடர்பாக, கீவ் அரசு முன்னதாக வெளியிட்ட அறிக்கையிலும் சண்டை
குறித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில், மக்கள் பாதுகாப்பான
இடங்களிலேயே தங்கியிருக்குமாறும், ஜன்னல்கள் அல்லது பால்கனிகளுக்கு
செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீவில் உள்ள பத்திரிகையாளர்கள் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் அளிக்கும் தகவல்களிலும், கீவ் தெருக்களில் சண்டை வெடித்துள்ளதாக தெரிய வருகிறது.
இதன் காரணமாக, பெரும் சத்தம் மற்றும் துப்பாக்கி சூடு சத்தம்
நகரத்தின் மத்தியில் கேட்பதாக, பலரும் விவரித்துள்ளனர்.
இதனிடையே, “எதிரி இலக்குகள்” பலவற்றை பகல் பொழுதில் முறியடித்ததாகவும்,
ரஷ்ய படைகள் யுக்ரேன் நகரங்களை கைப்பற்றுவதை தடுத்து நிறுத்தியதாகவும்,
யுக்ரேன் ஆயுதப்படை தெரிவித்துள்ளது.