மேற்கு நாடுகளுடனான ராஜரீக உறவு ரஷ்யாவுக்கு தேவையில்லை
என, ரஷ்யாவின் முன்னாள் அதிபர்
டிமிட்ரி மேட்வேடேவ் தெரிவித்துள்ளார்.
யுக்ரேன் மீது ரஷ்யா ராணுவ தாக்குதலை நடத்தி வரும் நிலையில், மேற்கு
நாடுகள் பல ரஷ்யாவுக்கு எதிராக தடைகளை விதித்துள்ளன. இதையடுத்து, இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டு பிரதமர் பதவியிலிருந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர்
புதினால் நீக்கப்பட்ட டிமிட்ரி, பாதுகாப்பு கவுன்சிலின் துணை தலைவராக பதவி வகித்து
வருகிறார். அவர், ரஷ்ய சமூக வலைதளமான வி.கே. பக்கத்தில்,
“தூதரகங்களை மூட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
புதினால் வரையறுக்கப்பட்ட இலக்குகளை அடையும் வரை, யுக்ரேன்
மீதான ரஷ்ய படையெடுப்பு தொடரும் என, அவர் தெரிவித்தார். புதினின்
நோக்கங்கள் என்ன என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.
ஐரோப்பிய
கவுன்சிலில் இருந்து ரஷ்யா நீக்கப்பட்டதற்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால், ரஷ்ய சட்டத்தில் மரண தண்டனையை மீண்டும் கொண்டு வருவதற்கு இதுவொரு வாய்ப்பை
வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.