வந்துகொண்டிருக்கும் செய்தி, "ரஷ்ய ஆயுதப் படையில் 450 பேர் உயிரிழந்துள்ளனர்" - பிரிட்டன் பாதுகாப்பு செயலர்
பிபிசி ரேடியோ 4-ல் தற்போது பேசிய பிரிட்டன் பாதுகாப்பு செயலாளர், பிரிட்டன் உளவுத்துறையின் சரிபார்க்கப்பட்ட மதிப்பீட்டின் படி, ரஷ்யா தனது நோக்கங்களில் முதல் நாளே தோல்வியடைந்து விட்டது எனத் தெரிவித்தார்.
“யுக்ரேனியர்கள் சண்டையிட்டதால் அது தோல்வியடைந்தது.
புதினின் ஈகோ காரணமாக அது தோல்வியுற்றது. அவர் ஒரு விடுதலை அளிப்பவர் என்று மக்கள் நினைப்பார்கள் என்று எண்ணியதால் அது சிதைந்தது.
ரஷ்ய டேங்கர்கள் மற்றும் விமானங்களை யுக்ரேனியர்கள் எதிர்த்துத் தாக்கியதால் அது தோல்வியடைந்தது,” என்று கூறிய பென் வாலஸ், அதைத் தொடர்ந்து, “ரஷ்ய ஆயுதப் படைகள் சுமார் 450 பேரை இழந்துள்ளன. அவர்கள் தங்கள் உயரடுக்கு சிறப்புப் படையுடன் சேர்ந்து கீவ்வின் வடக்கே விமான நிலையத்தை கைப்பற்ற முடியாமல் போனது,” என்று அவர் கூறினார்.











