ரஷ்யா-யுக்ரேன் மோதல்: குடிமக்களிடம் துப்பாக்கியை கொடுத்து சண்டையிட யுக்ரேனிய அதிபர் அழைப்பு

யுக்ரேனிய தலைநகரில் ரஷ்ய படைகள் முன்னேறும்போது, படையெடுக்கும் துருப்புகளை எதிர்க்க தங்களால் இயன்ற அனைத்தையும் செய்யுமாறு அதிகாரிகள் மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றனர். பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் இரண்டும் கியவ் மக்களிடம், “படைகளின் நடமாட்டம் பற்றி எங்களுக்குத் தெரிவிக்கவும் பெட்ரோல் குண்டுகளை உருவாக்கவும் எதிரிகளைச் செயலிழக்க வைக்கவும் வேண்டும்,” என்று வேண்டுகோள் விடுத்துள்ளன.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

அ.தா. பாலசுப்ரமணியன்

  1. வந்துகொண்டிருக்கும் செய்தி, ரஷ்ய படையெடுப்பில் 57 பேர் பொதுமக்கள் உள்பட 194 யுக்ரேனியர்கள் பலி

    விளாதிமிர் புதின் அறிவித்த ரஷ்ய படையெடுப்பு நேற்று தொடங்கியதில் இருந்து 450 ரஷ்ய வீரர்கள் மற்றும் 57 பொதுமக்கள் உள்ளிட்ட 194 யுக்ரேனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பிரிட்டன் ஆயுதப் படைகள் துறை அமைச்சர் ஜேம்ஸ் ஹீப்பி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.

    இன்று ஐ.நா மனித உரிமை கவுன்சில் மேற்கோள் காட்டிய அறிக்கையில் குறிப்பிடப்பட்ட 25 உயிரிழப்புகளை விட இது அதிகமான எண்ணிக்கையாகும்.

    மேலும், பிரிட்டன் படைகள் திட்டமிட்டதை விட முன்னதாகவே நேட்டோ நட்பு நாடான எஸ்டோனியாவிற்கு அனுப்பப்படுவதாகவும் யுக்ரேனின் அண்டை நாடுகள், அந்நாட்டிலிருந்து வெளியேறும் மக்களுக்கு உதவுவதற்காக மொத்தம் 1,000 படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் ஹீப்பி கூறினார்.

  2. ஐரோப்பிய மக்களை யுக்ரேனுக்கு ஆதரவாகப் போராடுமாறு வலியுறுத்திய யுக்ரேன் அதிபர்

    யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி கியவில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து ராணுவ உடை அணிந்துகொண்டு பேசினார்.

    அப்போது, ரஷ்யா முன்னேறும் வேகத்தைக் குறைக்க ஐரோப்பிய தலைவர்கள் போதுமான நடவடிக்கையை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

    “டேங்கர்களின் நீண்ட வரிசை மற்றும் வான்வழித் தாக்குதல்கள், ஐரோப்பா நீண்டகாலத்திற்கு முன்பு, இரண்டாம் உலக போரின் போது பார்த்ததைப் போலவே இருக்கின்றது.

    யுக்ரேன் அதிபர்

    பட மூலாதாரம், Office of the President of Ukraine

    அந்த நிலை ‘இனி ஒருபோதும் வரக்கூடாது’ என்று அப்போது ஐரோப்பா கூறியது,” என்று கூறியவர், ஆனால், மீண்டும் இப்போது 2022-ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போர் முடிந்து 75 ஆண்டுகள் கழித்து நடந்துகொண்டிருக்கிறது,” என்றார்.

    இன்னும் நேரம் கடந்து விடவில்லை. ஐரோப்பிய தலைவர்கள் விரைந்து செயல்பட்டால், ரஷ்ய ஆக்கிரமிப்பை நிறுத்த முடியும் என்று கூறினார். அதோடு, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மக்களை போராட்டங்களை முன்னெடுத்து, அரசுக்கு இதுகுறித்த முடிவை எடுக்க அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தினார்.

  3. "மீண்டும் அதிகாரத்தைப் பெறவே ரஷ்யாவின் இந்தத் தாக்குதல்" - பேராசிரியர் ராமுவுடன் ஃபேஸ்புக் நேரலை

    யுக்ரேன் மீதான ரஷ்ய நடவடிக்கை குறித்து பேராசிரியர் ராமு வண்ணனுடன் ஒரு நேரலை உரையாடல்.

  4. வந்துகொண்டிருக்கும் செய்தி, யுக்ரேனில் இருந்து ருமேனியா, ஹங்கேரி வழியாக இந்தியர்களை வெளியேற்ற முயற்சி

    யுக்ரேன் ரஷ்யா மோதல்

    பட மூலாதாரம், Getty Images

    யுக்ரேனில் உள்ள இந்திய குடிமக்களுக்கு அங்குள்ள இந்திய தூதரகம்புதிய அறிவுறுத்தல் குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியர்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    ருமேனியா, ஹங்கேரி வழியாக குடிமக்களை வெளியேற்றும் பணியில் இந்திய அரசும் தூதரகமும் ஈடுபட்டு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இரண்டு எல்லை சோதனைச் சாவடிகளின் பெயர்களும் அந்த அறிவுறுத்தல் குறிப்பில் கூறப்பட்டுள்ளன.

    இந்த எல்லை சோதனைச் சாவடிகளுக்கு அருகே வசிக்கும் இந்திய குடிமக்களில் குறிப்பாக மாணவர்கள், வெளியுறவு அமைச்சகத்தின் குழுக்களுடன் ஒருங்கிணைந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    இந்த பாதை செயல்பாட்டுக்கு வந்தவுடன், குடிமக்கள் இந்த சோதனைச் சாவடிகளுக்குச் செல்ல அறிவுறுத்தப்படுவார்கள்.

    இதற்காக தூதரகம் கட்டுப்பாட்டு அறையையும் உருவாக்கி வருகிறது. மாணவர்கள் தங்ககளுடைய மாணவர் ஒருங்கிணைப்பாளர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    அனைத்து குடிமக்களும் அவசர செலவுகளுக்காக கொஞ்சம் டாலர்களும், பாஸ்போர்ட் ஆவணங்களையும் வைத்திருக்குமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியிருக்கிறது.

    மேலும், அவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை வைத்திருக்கவும், முடிந்தால் உங்கள் வாகனங்களில் மூவர்ண இந்திய தேசிய கொடியை ஒட்டி வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

  5. யுக்ரேன் தலைநகரில் தொடர்ந்து கேட்கும் வெடிச் சத்தம்

    கீயவில் உள்ள மின்ஸ்க் மாசிஃப் மற்றும் ஒபோலானில் துப்பாக்கிச் சூடுகள் கேட்கப்படுகின்றன.

    ரஷ்ய படைகள் மற்றும் உளவு குழுக்கள் கீவ் நகருக்குள் நுழைந்துள்ளதாக யுக்ரேன் ராணுவம் தெரிவித்துள்ளது. நகரத்தில் தொடர்ந்து சைரன் ஒலிகளும் வெடி சத்தங்களும் கேட்கின்றன.

    பிபிசி யுக்ரேன் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள காணொளி இது.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  6. தலைநகர் கீயவின் குடியிருப்புப் பகுதியை ஏவுகணை தாக்கும் காட்சி

    யுக்ரேன் தலைநகர் கியவின் வடமேற்கே இருக்கும் குடியிருப்புப் பகுதியை ஏவுகணை தாக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

    பிபிசி சரிபார்த்த காட்சி, கியவின் வடமேற்கில் உள்ள புச்சாவில் ஏவுகணை தாக்கும் பகுதியில் இருந்து பதிவேற்றப் பட்டுள்ளது.

    ரஷ்ய படைகள் தலைநகரின் வடக்குப் பகுதிகளுக்குள் நுழைந்துள்ளதாக யுக்ரேன் எச்சரித்துள்ள நிலையில், இந்தக் காணொளி வெளிவந்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  7. ரஷ்ய படைகள் கீவ்வில் நுழைந்த பிறகு இதுவரை நடந்தது என்ன?

    யுக்ரேனிய தலைநகருக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் ரஷ்ய படைகள், ஒபோலானின் வடக்கு மாவட்டத்தைச் சுற்றி வளைத்திருப்பதாகத் தெரிகிறது.

    • கீவ்வின் நாடாளுமன்றம் மற்றும் நகர மையத்தில் இருந்து வடக்கே 9 கி.மீ தொலைவில் அதிகக் குடியிருப்புப் பகுதிகள் உள்ளன.
    • உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு முன்னதாக யுக்ரேனின் பாதுகாப்பு அமைச்சகம், எதிரி படைகள் அந்தப் பகுதியில் இருப்பதாக ட்வீட் செய்தது.
    • யுக்ரேன் பாதுகாப்பு அமைச்சகம் உள்ளூர் மக்களை ஒன்று திரட்டி பெட்ரோல் குண்டுகளைப் பயன்படுத்தி எதிர்த்துப் போராட அழைப்பு விடுத்தது.
    யுக்ரேன் நெருக்கடி
    • இதற்கிடையே, ஒபோலானில் பெரும்பாலும் காலியான சாலைகளில் கவச வாகனங்கள் செல்வதைக் காட்டும் பல காணொளிகள் சமூக ஊடகங்களில் உள்ளன.
    • காணொளிகளில் காணப்பட்ட இடம் ஒபோலான் என்பதை பிபிசி உறுதி செய்தது.
    • ராணுவச் சீருடையில் உள்ளவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் சண்டை நிகழ்வதைக் காட்டும் காணொளிகளும் வந்தன.
    • கீவ் வான் வழியாகத் தாக்கப்பட்டது. பொதுமக்கள் சுரங்க ரயில் நிலையங்களில் தஞ்சம் அடைகின்றன.
  8. யுக்ரேனில் தவிக்கும் தமிழக மாணவர்

    ரஷ்ய படையெடுப்பால் யுக்ரேனில் வசிக்கும் தமிழர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன?

  9. பிரிட்டன் விமானங்கள் ரஷ்ய வான் பகுதியில் பறக்கத் தடை

    பிரிட்டன் விமானங்கள் ரஷ்ய வானில் பறக்கத் தடை

    பட மூலாதாரம், EPA

    பிரிட்டனுடன் தொடர்புள்ள அனைத்து விமானங்களும் தனது வான் பாதையில் பறக்க ரஷ்யா தடை விதித்துள்ளது.

    யுக்ரேன் மீதான படையெடுப்புக்குப் பதிலளிக்கும் விதமாக ரஷ்யாவின் முதன்மை கரியர் ஏரோஃப்ளாட்டை தன் நாட்டில் தரையிறங்க விடாமல் பிரிட்டன் தடுத்தது.

    அதைத் தொடர்ந்து, “பிரிட்டனுடன் தொடர்புள்ள அல்லது பிரிட்டனில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான விமானங்களுக்கு ரஷ்ய வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது,” என்று ரஷ்ய விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

    “பிரிட்டன் விமான போக்குவரத்து அதிகாரிகளின் முடிவுகளுக்கு” எதிர்வினையே இது என்று ரஷ்யா விவரித்துள்ளது.

  10. யுக்ரேனில் சிக்கியுள்ள மகன்களை மீட்டுத் தருமாறு ஆட்சியரிடம் மனு அளித்த பெற்றோர்

    மதுரை தெற்கு வாசல் பாப்பன் கிணறு தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் பங்கஜனாபன் மற்றும் வில்லாபுரத்தைச் சேர்ந்த சஜூவ் குமார் ஆகியோர் யுக்ரேன் நாட்டில் 2018ஆம் ஆண்டிலிருந்து ஏரோ ஸ்பேஸ் துறையில் பொறியியல் படித்து வருகிறார்கள். தற்போது இறுதியாண்டு கல்லூரி படிப்பை முடித்து இந்தியா திரும்ப வேண்டிய நிலையில் யுக்ரேன் நாட்டில் பதற்றமான சூழல் நிலவுவதால். மாணவர்களை பத்திரமாக மீட்கக் கோரி, பெற்றோர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர்.

    தனது மகன் கடந்த இரண்டு தினங்களாக இரவு எங்களிடம் ஃபோனில் பேசி வந்தார். நேற்று இரவு போனில் பேசிய போது அவர் தங்கியிருக்கும் இடம் அருகே குண்டு மழை பொழிவதாகக் கூறியதாக பங்கஜ்னாபனின் பெற்றோர் தெரிவித்தனர்.

    அதன் பிறகு இப்போது வரை மகனைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தனது மகனையும் இந்தியாவிலிருந்து அங்கு படிக்கச் சென்ற அனைவரையும் பத்திரமாக மீட்டுத் தர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என்றும் பங்கஜனாபனின் பெற்றோர் கூறினர்.

  11. பிரிவினைவாதிகளைச் சந்தித்த ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர்

    ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் முன்னதாக ஒரு காணொளியை வெளியிட்டது.

    வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோஃப் ரஷ்யாவை ஆதரிக்கும் பிரிவினைவாதிகள் கைவசம் உள்ள இரண்டு முக்கிய பிராந்தியங்களின் பிரதிநிதிகளைச் சந்திப்பதைக் காட்டுகிறது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    டானைஸ்க் மக்கள் குடியரசு மற்றும் லூஹான்ஸ்க் மக்கள் குடியரசு என்று சுயமாக அறிவிக்கப்பட்ட அந்த இரண்டு பிராந்தியங்களும் யுக்ரேன் நாட்டின் கிழக்கில் உள்ளன.

    யுக்ரேன் மீதான முழு படையெடுப்பிற்கு முன்னதாகவே அவற்றை சுதந்திர நாடுகளாக அங்கீகரிக்கும் முடிவை புதின் எடுத்துவிட்டார்.

  12. "நாங்கள் செர்னோபிள் பயங்கரவாதிகளிடம் இருந்து பாதுகாக்கிறோம்" - ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம்

    ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், செர்னோபிள் அணுமின் நிலையத்தை “பாதுகாப்பதற்காகவே” அதன் படைகள் அங்கு இருப்பதாக ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    “தேசியவாத குழுக்களும் பிற பயங்கரவாத அமைப்புகளும் அணு ஆயுதத் தூண்டுதலை நடத்துவதற்காக நாட்டில் நிலவும் சூழ்நிலையைப் பயன்படுத்த முடியாது” என்பதை உறுதி செய்யவே இதைச் செய்ததாக அந்த அறிக்கை கூறுகிறது.

    ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் கதிர்வீச்சின் அளவு இயல்பாக இருப்பதாகவும் கதிரியக்க அளவை, தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் ரஷ்யா கூறியது.

    யுக்ரேன் நெருக்கடி

    மேலும், டானைஸ்க், லூஹான்ஸ்க் ஆகிய இடங்களில் படைகள் முன்னேறிவிட்டதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அதோடு, 150-க்கும் மேற்பட்ட யுக்ரேனிய படைகள் சரணடைந்ததாகவும் டஜன் கணக்கிலான யுக்ரேனிய ராணுவ உள்கட்டமைப்பு தளங்கள், ஆயுதங்கள் மற்றும் வாகனங்கள் அழிக்கப்பட்டதாகவும் கூறுகிறது.

    இதற்கிடையே ஒரு ஃபேஸ்புக் பதிவில் யுக்ரேனின் ஆயுதப் படைகள், ரஷ்ய படைகளை டானைஸ்க், லூஹான்ஸ்கில் ரஷ்ய படைகளை தக்க வைத்திருப்பதாகவும் பின்னுக்குத் தள்ளி வருவதாகவும் கூறியுள்ளனர்.

    இருதரப்பு கூற்றுகளையும் தற்போது சரிபார்க்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  13. வந்துகொண்டிருக்கும் செய்தி, ரஷ்யா - யுக்ரேன் மோதல்: பொதுமக்கள் வாழும் 33 பகுதிகளில் ரஷ்ய படையினர் தாக்குதல்

    ரஷ்ய படைகள் யுக்ரேனில் உள்ள பொதுமக்கள் வாழும் பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருவதாக யுக்ரேனிய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    “ரஷ்யா, பொதுமக்கள் வாழும் பகுதிகளைத் தாக்கவில்லை என்று கூறுகிறது. ஆனால், கடந்த 24 மணி நேரத்தில் பொதுமக்கள் வாழும் 33 பகுதிகள் தாக்கப்பட்டுள்ளன,” என்று வாடிம் டெனிசென்கோ ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

    வியாழக்கிழமை படையெடுப்பு தொடங்கியதிலிருந்து யுக்ரேனின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கில் உள்ள பல முனைகளில் இருந்து ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறி, தலைநகர் கீவ்வை அடைந்துள்ளன.

    ரஷ்ய படைகள் ஏற்கெனவே தலைநகரில் இருப்பதாக யுக்ரேனிய அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த நிலையில், உள்ளூர் மக்கள் ரஷ்ய படையினர் மீது பெட்ரோல் குண்டுகளை பயன்படுத்தி எதிர்க்குமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

  14. யுக்ரேன் மீதான தாக்குதலில் ரஷ்யாவின் அடுத்தகட்ட திட்டம் என்ன?

    இன்று மிகவும் கடினமான நாளாக இருக்கும் என்று யுக்ரேனிய உள்துறை அமைச்சக ஆலோசகர் ஆன்டன் ஹெராஷ்சென்கோ எச்சரிக்கிறார். அவர் வடகிழக்கு மற்றும் வடமேற்கில் இருந்து தலைநகரில் இறங்கும் டேங்கர்கள் தலைநகர் கீவ்வை கைப்பற்ற முயல்வதாகக் கூறுகிறார்.

    அதோடு, யுக்ரேன் எதிர்-உளவுத்துறையின் ஓர் ஆதாரம், யுக்ரேன்ஸ்கா ப்ராவ்டா வலைதளத்திடம் நாட்டைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர தலைநகரைக் கையகப்படுத்தும் ரஷ்யாவின் திட்ட விவரங்களைத் தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால், ரஷ்யா செய்ய விரும்புவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    எல்லையில் தாக்குதல்களால் ராணுவத்தை திசை திருப்பி, 10,000 படைகள் தரையிறங்க அனுமதிக்கும் வகையில் ஒரு பெரிய கீவ் விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவது.

    பீதியை ஏற்படுத்தும் வகையில் கீவ்வின் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்புகளை அழிப்பது

    யுக்ரேனிய ஆயுதப் படைகள் நடமாடுவதைத் தடுக்க அகதிகளின் வெளியேற்றத்தைத் தூண்டுவது

    அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றம் உள்ளிட்ட அரசாக்க கட்டிடங்களைக் கைப்பற்றி நாட்டின் தலைமையைக் கைப்ப்ற்றி, ரஷ்ய விதிமுறைகளின் அடிப்படையில் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட கட்டாயப்படுத்துவது

    ரஷ்ய சார்பு தலைவர்களைக் கொண்டு வந்து யுக்ரேனை கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனி போல இரண்டு பகுதிகளாகப் பிரிப்பது.

    இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

  15. யுக்ரேன் தலைநகர் கீவில் துப்பாக்கிச் சூடு

    ரஷ்ய படைகள் கீவில் முன்னேறி வரும் நிலையில், யுக்ரேன் தலைநகரில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக இப்போது பல செய்திகள் வந்துள்ளதாகக் கூறுகிறார் அங்குள்ள பிபிசி செய்தியாளர் பால் ஆடம்ஸ்.

    X பதிவை கடந்து செல்ல, 1
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 1

    புலனாய்வு இதழியல் வலைதளமான பெல்லிங்கேட்டின் நிர்வாக இயக்குநர் க்றிஸ்டோ க்ரோஸெவ் இதைப் பதிவிட்டுள்ளார்:

    X பதிவை கடந்து செல்ல, 2
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 2

    இதற்கிடையே, யுக்ரேனிய செய்தியாளர் நிகா மெல்கொஸெரோவா குண்டு வெடிக்கும் சத்தத்தைக் கேட்டுள்ளார்:

    X பதிவை கடந்து செல்ல, 3
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 3

  16. “எங்கள் படைகள் தலைநகரை நெருங்கிவிட்டன” – ரஷ்ய அதிகாரிகள்

    ரஷ்யா படைகள் தற்போது யுக்ரேன் தலைநகரமான கீயவுக்கு அருகில் இருப்பதாக யுக்ரேன் அதிகாரிகள் ட்வீட் மூலம் உறுதி செய்துள்ளனர்.

    யுக்ரேன் பாதுகாப்பு அமைச்சகம், “எதிரி” கீயவின் நாடாளுமன்றத்திற்கு வடக்கே சுமார் 9 கி.மீ தொலைவிலுள்ள ஒபோலான் மாவட்டத்தில் இருப்பதாக கூறியுள்ளது.

    உள்ளூர் மக்களை பெட்ரோல் குண்டுளைத் தயாரித்து எதிர்க்குமாறு ஊக்குவித்ததோடு மற்றவர்களை பாதுகாப்பான இடம் தேடுமாறு அறிவுறுத்தியுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    “மக்கள் கவனமாக இருங்கள், வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்!” என்றும் யுக்ரேன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கீவில் உள்ள பிபிசி செய்தியாளர்கள் முன்னர் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகத் தெரிவித்திருந்த போதிலும், அது எதைக் குறிக்கிறது என்பதைத் தற்போது தெரிந்துகொள்வது சாத்தியமில்லை என்றும் கூறியுள்ளனர். அதோடு அதிகளவு சத்தத்தோடு குண்டுகள் வெடிப்பதைக் கேட்க முடிவதகாவும் அவர்கள் கூறுகின்றனர்.

  17. "அன்பும் அமைதியும் வெற்றி பெறட்டும்" - சஷி தரூர்

    “யுக்ரேனிய தேசிய கொடி போர்த்திய ஆண் ஒருவர், ரஷ்ய தேசிய கொடி போர்த்திய பெண் ஒருவரை தழுவுகிறார். போர் மற்றும் மோதலைக் கடந்து, அன்பும் அமைதியும் வெற்றி அடையும் என்று நம்புவோம்” என்று காங்கிரஸ் எம்.பி சஷி தரூர் ட்வீட் செய்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  18. வந்துகொண்டிருக்கும் செய்தி, தலைநகருக்குள் புகுந்த ரஷ்ய படைகள் - ஒபோலானுக்கு வருவதைக் காட்டும் காணொளி

    ரஷ்ய டேங்கர்கள் கீவுக்கு வருவதை காணொளிகள் காட்டுகின்றன

    கீவின் நகர மையத்திற்கு வடக்கே உள்ள ஒபோலோன் வழியாக ரஷ்ய டேங்கர்கள் வருவதை சமூக ஊடக காணொளிகள் காட்டுகின்றன.

    கடந்த ஒரு மணி நேரத்தில், யுக்ரேனின் பாதுகாப்பு அமைச்சகம் ரஷ்ய படைகள் அந்த மாவட்டத்தின் குடியிருப்புப் பகுதிக்குள் ஊடுருவியதை உறுதி செய்தது.

    இந்த காணொளிகள் உள்ளூர் மக்களால் தங்கள் வீடுகளில் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதில் உள்ள அமைப்பு ஒபோலான் என்பதை பிபிசி சரிபார்த்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  19. யுக்ரேன் அமைச்சர்: நான் எனது ஏ.கே.47-ஐ வெறித்துக் கொண்டிருக்கிறேன்

    பிபிசியின் ரேடியோ 4-ல் யுக்ரேனிய அமைச்சர் ஸ்வியாடோஸ்லாவ் யுராஷுடன் இன்று ஓர் அசாதாரண நேர்காணலை நாங்கள் இப்போது கேட்டோம். ரஷ்யாவின் படையெடுப்பை யுக்ரேன் ராணுவம் எதிர்கொள்ளத் தவறினால், உங்கள் திட்டம் என்ன என்று கேட்டதற்கு, அமைச்சர், தனது தனிப்பட்ட ஏகே 47 துப்பாக்கியை வெறித்துப் பார்த்ததாக பதில் அளித்தார்.

    “இது யுக்ரேனிய அரசை அழித்து அதைக் கைப்பற்றும் நோக்கம் கொண்ட முழுவீச்சிலான ஒரு படையெடுப்பு,” என்று யுராஷ் கூறுகிறார். போருக்கு உதவும் அனைத்து யுக்ரேனியர்களுக்கும் அதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.

    “அந்தப் போராட்டத்தை ரஷ்யாவுக்கு எதிராக எல்லா வகையிலும் எடுத்துச் செல்ல மக்களிடம் நாங்கள் ஆயுதம் வழங்குகிறோம். நாங்கள் 40 மில்லியன் மக்களைக் கொண்ட தேசம். ரஷ்யா தனது எல்லைகளைத் தாண்டும்போது நாங்கள் அமைதியாக இருக்கப் போவதில்லை. உலகம் எங்களுக்கு வழங்கும் ஆதரவோடு, எங்களிடம் உள்ள அனைத்தையும் வைத்துச் சண்டையிடுவோம்,” என்று அவர் அந்த நேர்காணலில் கூறினார்.

  20. அண்டை நாடுகளுக்குத் தப்பிச் செல்லும் யுக்ரேன் மக்கள்

    கிழக்கு, வடக்கு, தெற்கு ஆகிய திசைகளில் இருந்து ரஷ்யா நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ஏராளமான பொதுமக்கள் மால்டோவா, ரொமானியா, போலந்து, ஹங்கேரி போன்ற அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.