யுக்ரேன் நெருக்கடி: ஜோ பைடன் அறிவித்த கூடுதல் தடைகள் - முழு விவரம்
யுக்ரேன் மீது திட்டமிட்டே ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ஜோ பைடன் குற்றம்சாட்டியுள்ளார். உலகம் மீது ரஷ்யாவுக்கு விஷமத்தனமான பார்வை இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். அந்த நாடு மீது அதிபர் ஜோ பைடன் கூடுதல் தடைகளை அறிவித்திருக்கிறார்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
நந்தினி வெள்ளைச்சாமி
ராணுவ சட்டத்தை அமல்படுத்த யுக்ரேன் அதிபர் முடிவு!
யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தனது தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு ராணுவ சட்டத்தை
அமல்படுத்த அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தப் பிரச்னை குறித்து
முடிவெடுக்க பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டத்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யுக்ரேன் பதற்றம்: எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலராக உயர்ந்துள்ளது
யுக்ரேன் பதற்றம் அதிகரித்து வருவதால், எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலராக
உயர்ந்துள்ளது.
ரஷ்ய அதிபர் புதின் கிழக்கு யுக்ரேனில் “ராணுவ நடவடிக்கையை” தொடங்குவதாக அறிவித்துள்ள நிலையில், கடந்த ஏழு ஆண்டுகளில் முதல் முறையாக
எண்ணெய் விலை 100 டாலர்களுக்கும் மேல் உயர்ந்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் 2 முதல் 3% வரை குறையவும் இது காரணமாக அமைந்தது. பதற்றம் அதிகரித்ததால், சந்தைகள் கடந்த சில நாட்களாகவே கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன.
பிபிசியின் ஆசிய வணிக நிருபர் மரிகோ ஓய், “அமெரிக்க டாலர் மற்றும் ஜப்பானிய யென் ஆகியவை வலுப்பெறும் அதே வேளையில், தங்கத்தின் விலை ஓராண்டில் மிகவும் அதிகரித்துள்ளது,” என்று கூறுகிறார்.
யுக்ரேன் நாட்டில் ரஷ்யா எந்த வழிகளில் எல்லாம் தாக்குதல் நடத்தக்கூடும்?
பட மூலாதாரம், Getty Images
யுக்ரேன் நாட்டை ஆக்கிரமிக்க ரஷ்யா
திட்டமிடவில்லை என்று அதிபர் புதின் தொலைக்காட்சியில் தெரிவித்திருந்தாலும், ராணுவ தாக்குதலுக்கு உத்தரவிடப்பட்டு,
தொடங்கிவிட்டதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
ரஷ்யா இந்தத் தாக்குதலில், எந்த வழிகளில்
எல்லாம் தாக்கக்கூடும் என்று ராணுவ ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்த முழுமையான கட்டுரையை இங்கே படிக்கலாம்.
யுக்ரேனில் உள்ள 20,000 இந்தியர்களின் நிலை என்ன்?
ஐக்கிய நாடுகள் சபையின் இந்திய தூதர், யுக்ரேன் நிலை குறித்த ஐ.நாவின்
அவசரக் கூட்டத்தில் பேசினார். ரஷ்யாவிற்கும் யுக்ரேனுக்கும் இடையே பதற்றங்கள் அதிகரித்த
நிலையில், 15 நாடுகளைக் கொண்ட ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் புதன்கிழமை
இரவு யுக்ரேனில் அவசரக் கூட்டத்தை நடத்தியது.
அப்போது, ரஷ்யாவிற்கும் யுக்ரேனுக்கும் இடையிலான பதற்றங்களை உடனடியாகத் தணிக்க இந்தியா
அழைத்து விடுத்தது. மேலும் கிழக்கு யுக்ரேனில் “ராணுவ நடவடிகை” தொடங்குவதற்கான தனது முடிவை ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தது, ஒரு பெரிய நெருக்கடிக்கான அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் எச்சரித்தது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
ஐ.நாவுக்கான இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி, “புது டில்லி இரண்டு நாட்களுக்கு முன்பு யுக்ரேனில் நடந்த கூட்டத்தில் பதற்றங்களை
அவசரமாகத் தணிக்க இந்தியா அழைப்பு விடுத்தது. அதோடு, இந்த நிலைமை
தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் தீர்க்க நீடித்த கவனம் செலுத்தும் ராஜ தந்திரத்தை
வலியுறுத்தியது,” என்று கூறினார்.
நிலைமையை மோசமாக்குவதில் பங்களிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் உடனடியாகத்
தணிக்கவும் தவிர்க்கவும் இந்தியா அழைப்பு விடுத்தது.
மாணவர்கள்
உட்பட, 20,000 இந்தியக் குடிமக்கள்யுக்ரேனின்
பல்வேறு பகுதிகளில் இருப்பதாகக் குறிப்பிட்ட திருமூர்த்தி, அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்குத் தேவையான
முயற்சிகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்
"உலக நாடுகள் புதினை தடுக்க வேண்டும்"
யுக்ரேன் வெளியுறவுத் துறை அமைச்சர், “புதின் யுக்ரேனில் முழு அளவிலான
படையெடுப்பைத் தொடங்கியுள்ளார்,” என்று ட்வீட் செய்துள்ளார்.
அதோடு, “யுக்ரேன் தன்னைத் தற்காத்துக் கொள்ளும்”, “உலக நாடுகளால்
புதினை தடுக்க முடியும் மற்றும் தடுக்க வேண்டும்,” என்று அவர்
வலியுறுத்தினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
வந்துகொண்டிருக்கும் செய்தி, “யுக்ரேனை ஆக்கிரமிக்கும் திட்டம் ரஷ்யாவுக்கு இல்லை” – புதின்
பட மூலாதாரம், Getty Images
இன்று காலை ரஷ்ய மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய ரஷ்ய அதிபர்
விளாடிமிர் புதின், யுக்ரேனை “ஆக்கிரமிக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை,” என்று கூறினார்.
“சிறப்பு ராணுவ நடவடிக்கையை,” அறிவித்த புதின் தனது கருத்துகளில் யுக்ரேனிய மக்கள்
நாட்டை ஆட்சி செய்பவர்களைச் “சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்க” முடியும் என்று கூறினார்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, யுக்ரேன் - ரஷ்யாவுக்கு இடையில் போர் தொடங்கிவிட்டது: யுக்ரேன்
யுக்ரேன்
ஐ.நா தூதர் செர்ஜி கிஸ்லிட்யா, ரஷ்யாவின் ஐ.நா தூதர், யுக்ரேன் மீது போர் அறிவித்ததை “தனது அதிபர்” உறுதிபடுத்தியதாகத் தெரிவித்துள்ளார்
என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
யுக்ரேனிய உள்துறை அமைச்சகம் “படையெடுப்பு தொடங்கிவிட்டது,” என்று
சிஎன்என் இடம் தெரிவித்துள்ளது
வந்துகொண்டிருக்கும் செய்தி, யுக்ரேன் தலைநகரில் 5 முதல் 6 குண்டுவெடிப்புகள்
கீவ்வில் உள்ள பிபிசியின் செய்தியாளர் பால் ஆடம்ஸ், கீவ்வில் ஐந்து முதல் ஆறு குண்டுவெடிப்புகள் கேட்டதாகத் தெரிவித்தார். மேலும்
நாட்டில் வேறு இடங்களிலும் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்திருப்பது குறித்த அறிக்கைகள்
வருவதாகவும் கூறுகிறார்.
கீவ்வில் உள்ள முக்கிய விமான நிலையமான போரிஸ்பில் அருகே வியாழக்கிழமை துப்பாக்கிச்
சூடு சத்தம் கேட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கியேவில் உள்ள முக்கிய விமான நிலையமான போரிஸ்பில்
அருகே வியாழக்கிழமை துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக உள்ளூர் ஊடகங்கள்
தெரிவிக்கின்றன.
வந்துகொண்டிருக்கும் செய்தி, அமெரிக்காவின் கூட்டாளிகள் பதிலடி தருவார்கள் : ஜோ பைடன்
பட மூலாதாரம், Getty Images
"ரஷ்ய ராணுவத்தின் தூண்டுதலற்ற மற்றும் நியாயமற்ற தாக்குதல்" என்று ரஷ்யாவின் நடவடிக்கையை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
"உலகின் பிரார்த்தனைகள் உக்ரைன் மக்களுடன் இருக்கின்றன" என்று அவர் கூறியுள்ளார்.
"அதிபர் புதின் ஒரு திட்டமிடப்பட்ட போரைத் தேர்ந்தெடுத்துள்ளார். அது பேரழிவுகரமான உயிர் இழப்பு மற்றும் மனித துயரங்களைக் கொண்டுவரும்," என்று அவர் கூறியுள்ளார்.
"இந்த தாக்குதலால் ஏற்படும் மரணம் மற்றும் அழிவுக்கு ரஷ்யா மட்டுமே பொறுப்பாகும். அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தீர்க்கமான முறையில் பதிலளிக்கும்" என்று அவர் கூறியுள்ளார்.
பெரும் வெடிப்பு சப்தம் கேட்டது: பிபிசி செய்தியாளர்
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
ராணுவ நடவடிக்கையைத் தொடங்குவதாக ரஷ்யா அறிவித்திருக்கும் நிலையில், கிழக்கு யுக்ரேனின் டொனாட்ஸ்க் பிராந்தியத்தில் பெரும் வெடிப்பு சப்தம் கேட்டதாக பிபிசி செய்தியாளர் சாரா ரெய்ன்ஸ்ஃபோர்ட் கூறியுள்ளார்.
“யுக்ரேன் – ரஷ்யா மோதல் தவிர்க்க முடியாதது” – ரஷ்ய அதிபர் புதின்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதி, “நீதியும் உண்மையும்” ரஷ்யாவின் தரப்பில் இருப்பதாகக்
கூறியுள்ளார். அதோடு, ரஷ்யாவை யாராவது ஆக்கிரமிக்க முயன்றால்,
மாஸ்கோ அதற்கு “உடனடியாக” பதிலளிக்கும் என்று எச்சரித்துள்ளார்.
ரஷ்ய அதிபர்
தனது நாட்டின் நடவடிக்கைகள், தற்காப்பு சார்ந்தது என்றும் யுக்ரேனின்
ராணுவத்திற்கு அவர்கள் நவ நாஜிக்களுக்கு உதவுவதற்காக, அவர்களுடைய
அப்பாக்களும் தாத்தாக்களும் சண்டையிடவில்லை என்றும் கூறினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
மேலும், யுக்ரேனிய மற்றும் ரஷ்ய படைகளுக்கு இடையிலான மோதல் “தவிர்க்க
முடியாதது” என்று புதின் கூறியுள்ளார்.
சற்று நேரத்திற்கு முன்னர், ஐ.நா-வின் துணைச் செயலாளர், ராணுவ
விரிவாக்கம் “ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பு, துன்பம் மற்றும்
அழிவுக்கு,” வித்திடும் என்று எச்சரித்திருந்தார். அதோடு,
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ்,
“அமைதிக்கு ஒரு வாய்ப்பளியுங்கள்,” என்று அதிபர்
புதினிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவையும் பாதிக்குமா யுக்ரேன் – ரஷ்யா விவகாரம்?
யுக்ரேன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான நெருக்கடி
கடுமையாக தீவிரமடைந்து வருகிறது. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கிழக்கு யுக்ரேனி
எல்லைக்கு உள்பட்ட இரண்டு பிரிவினைவாத ஆதிக்கம் நிறைந்த பகுதிகளை அவற்றின்
தன்னாட்சி மிக்க பிரதேசங்களாக அங்கீகரித்துள்ளார்.
டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய இந்த இரண்டு பகுதிகள். ஏற்கெனவே ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் தனி குடியரசுகள் ஆக அழைக்கப்பட்டு வருகின்றன.
பட மூலாதாரம், Getty Images
இந்த நிலையில், இந்த பகுதிகளுக்கு செல்லுமாறு ரஷ்ய படைகளுக்கு புதின் உத்தரவிட்டுள்ளார். புதினின் இந்த அறிவிப்பால் மேற்கத்திய நாடுகளில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் விளைவாக அமெரிக்காவும் ஐரோப்பாவும் ரஷ்யா மீது கடுமையான தடைகளை அறிவிக்கக்கூடும்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, யுக்ரேன் வீரர்கள் சரணடைய புதின் வலியுறுத்தல்
யுக்ரேன் ராணுவ வீரர்கள் ரஷ்யாவிடம் சரணடைய வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புதின் தனது தொலைக்காட்சி உரையில் வலியுறுத்தினார்.
ரத்தக்களறி ஏற்பட்டால் அதற்கு யுக்ரேனே பொறுப்பாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, யுக்ரேனில் போரைத் தொடங்கியது ரஷ்யா
யுக்ரேனின் டோன்பாஸ் பிராந்தியத்தில் ராணுவ நடவடிக்கைத் தொடங்க ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் தொலைக்காட்சியில் உரையாற்றியபோது அவர் இதைத் தெரிவித்தார்.
இதன் மூலம் யுக்ரேனில் அதிகாரப்பூர்வமாகப் போர் தொடங்கியிருக்கிறது.
“ஐரோப்பிய கண்டத்தில் ஒரு பெரிய போரின் தொடக்கமாக இது இருக்கும்” – யுக்ரேன் அதிபர்
யுக்ரேனுக்கு எதிரான தாக்குதலுக்கு ரஷ்யா ஒப்புதல் அளித்துள்ளதாக யுக்ரேன்
அதிபர் வோலோடிமிர்
ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அழைப்புக்கு
பதில் அளிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், “யுக்ரேனின் எல்லைகளில் கிட்டத்தட்ட 200,000 படைகள்
மற்றும் ஆயிரக்கணக்கான போர் வாகனங்களை,” ரஷ்யா குவித்துள்ளதாக
யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
இரவு நேர தொலைக்காட்சி உரையில், “ரஷ்ய குடிமக்களை யுக்ரேனின் குடிமகன் என்று குறிப்பிடுவதற்காக,
“ஜெலன்ஸ்கி ரஷ்ய மொழியில் பேசத் தொடங்கினார்.
அதில், “நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். யுக்ரேனிய மக்கள் அமைதியை விரும்புகிறார்கள்.
யுக்ரேனிய அதிகாரிகள் அமைதியை விரும்புகிறார்கள்,” என்று அவர்
கூறினார்.
யுக்ரேன்
எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள ரஷ்ய வீரர்களைப் பற்றிக் குறிப்பிடுகையில், மாஸ்கோவில் இருக்கும் தலைமை, “அவர்கள் முன்னேறுவதற்கு,”
ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறியவர், “இந்த நடவடிக்கை
ஐரோப்பிய கண்டத்தில் ஒரு பெரிய போரின் தொடக்கமாக இருக்கலாம்,” என்றார்.
வணக்கம் நேயர்களே!
நான் க.சுபகுணம். பிபிசி தமிழின் நேரலைப்
பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன்.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள்,
விளையாட்டு, சினிமா, அரசியல்
உள்ளிட்ட பல்துறை செய்திகள் ஆகியவற்றை இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.
உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றி எங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள். நேற்றைய நேரலைப் பக்கத்தை இங்கே காணலாம்.
நேற்றைய நேரலை பக்கத்தின் சில முக்கியச் செய்திகள்:
தேர்தல் விதிகளை
மீறியதாகவும் வன்முறையைத் தூண்டியதாகவும் தொடரப்பட்ட வழக்கில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள்
அமைச்சர் டி. ஜெயக்குமாரை பிணையில் விடுவிக்க சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம்
மறுத்து விட்டது.
தமிழகத்தில் நேற்ன்று புதிதாக 618 பேருக்கு கொரோனா தொற்று
கண்டறியப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனா
தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34,47,006 ஆக
உயர்ந்துள்ளது.
4 வயது
சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில்
குற்றம்சாட்டப்பட்டிருந்த இளைஞருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து
ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழகத்தில் இன்று
புதிதாக 618 பேருக்கு
கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34,47,006 ஆக உயர்ந்துள்ளது.
செஸ் போட்டியில் உலக
சாதனை படைத்த சென்னையை சேர்ந்த 16 வயது சிறுவன் பிரக்ஞானந்தாவை பிரதமர் நரேந்திர மோதி
பாராட்டியுள்ளார்.
அஜித் நடித்து
பிப்ரவரி 24ஆம்
தேதி வெளியாகவுள்ள வலிமை திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை
எட்டியுள்ளது. இந்தப் படம் தொடர்பான ஹாஷ்டாகுகள் தொடர்ந்து ட்ரெண்டிங்கிள்
உள்ளன