யுக்ரேன் நெருக்கடி: ஜோ பைடன் அறிவித்த கூடுதல் தடைகள் - முழு விவரம்

யுக்ரேன் மீது திட்டமிட்டே ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ஜோ பைடன் குற்றம்சாட்டியுள்ளார். உலகம் மீது ரஷ்யாவுக்கு விஷமத்தனமான பார்வை இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். அந்த நாடு மீது அதிபர் ஜோ பைடன் கூடுதல் தடைகளை அறிவித்திருக்கிறார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. யுக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்ப பிரிட்டன் முடிவு: பிரதமர் போரிஸ் ஜான்சன்

    போரிஸ் ஜான்சன்

    பட மூலாதாரம், PA Media

    யுக்ரேனுக்கு உதவி வழங்குவது தொடர்பாக யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியிடம் பேசியதாக, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

    நம் மோசமான அச்சம் உண்மையாகியுள்ளதாகவும், ரஷ்ய படையெடுப்பு குறித்த அனைத்து எச்சரிக்கைகளும் துல்லியமானவை என நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஐரோப்பாவில் போரை கட்டவிழ்த்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.

    “தரை, கடல் மற்றும் வான் வழியாக பரவலாக படையெடுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என அவர் கூறினார்.

    “இது மிக தொலைவில் உள்ள சிறிய நாட்டில் நடக்கவில்லை” என போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.

    ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய நாடு யுக்ரேன் என கூறிய அவர், பல தசாப்தங்களாக சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை அனுபவித்த நாடு என தெரிவித்தார்.

    “அந்த சுதந்திரம் தடைபட நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என தெரிவித்தார்.

    யுக்ரேனுக்கு உதவ அந்நாட்டுக்கு தற்காப்பு ஆயுதங்களை முதலாவதாக வழங்கும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக பிரிட்டன் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

  2. யுக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவது ஏன்?

    யுக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவது ஏன்? இதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? எந்தெந்த நாடுகள் யார் பக்கம் நிற்கின்றன? என்பது குறித்த பிபிசி தமிழின் முகநூல் நேரலையை இங்கே காணுங்கள்.

  3. ரஷ்யா யுக்ரேனுக்குள் துருப்புக்களை அனுப்புவது ஏன், புதின் விரும்புவது என்ன?

      • எழுதியவர், பால் கிர்பி
      • பதவி, பிபிசி நியூஸ்
    யுக்ரேன் - ரஷ்யா நெருக்கடி

    பட மூலாதாரம், RUSSIAN DEFENCE MINISTRY

    பல மாதங்களாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் யுக்ரேனைத் தாக்கும் திட்டத்தை மறுத்து வந்தார். ஆனால் பிப்ரவரி 23ஆம் தேதி அவர் ரஷ்யாவின் "சிறப்பு ராணுவ நடவடிக்கை" பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். தொலைக்காட்சியில் தோன்றி நேரடியாகவே இந்த அறிவிப்பை அவர் வெளியிட்ட பிறகு யுக்ரேன் தலைநகர் கீஃப் மற்றும் நாட்டின் பிற பகுதிகளிலும் துப்பாக்கிச்சூடு, ஷெல் குண்டு தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

  4. யுக்ரேன்: தமிழக மாணவர்களை மீட்க இந்திய வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

    மு.க.ஸ்டாலின்

    பட மூலாதாரம், FACEBOOK/M.K.STALIN

    யுக்ரேனில் தவித்து வரும் தமிழர்களை அங்கிருந்து உடனடியாக மீட்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    அந்த கடிதத்தில், “தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 5,000 மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் யுக்ரேனில் தவித்து வருகின்றனர். அவர்களை அங்கிருந்து உடனடியாக வெளியேற்றுமாறு உதவி கோரி அவர்களின் குடும்பத்தினரிடமிருந்து நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்புகள் எங்களுக்கு வருகின்றன. எனினும், யுக்ரேனில் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக, எங்களுக்கு தகவல்கள் வந்துள்ளன. இந்தியாவுக்கு பாதுகாப்பாக திரும்ப அவர்களுக்கு நம் ஆதரவு தேவை.

    இதுதொடர்பாக, 24 மணிநேரமும் இயங்கும் உதவி முகாம்களை தமிழக அரசு அமைத்துள்ளது. மேலும், இதுதொடர்பாக இந்திய அரசு, மாவட்ட நிர்வாகம், குடும்பங்களுடன் ஒன்றிணைந்து செயல்பட அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார்.

    எனவே, யுக்ரேனில் வாழும் தமிழர்களை வெளியேற்ற இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். யுக்ரேனின் பல்வேறு பகுதிகளிலிருந்து அவர்களை வெளியேற்ற ‘வந்தே பாரத்’ போன்ற சிறப்பு விமானங்களை இயக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

    ஸ்டாலின்

    பட மூலாதாரம், TNDIPR

  5. யுக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு துருக்கி அதிபர் எதிர்ப்பு - "இந்த நடவடிக்கை சரியல்ல"

    ரிசெப் தயீப் எர்துவான்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, ரிசெப் தயீப் எர்துவான்

    யுக்ரேன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை நிராகரிப்பதாக துருக்கி அதிபர் ரிசெப் தயீப் எர்துவான் தெரிவித்துள்ளார். ரஷ்யாவும் யுக்ரேனும் துருக்கியின் நட்பு நாடுகள் என்றும் அவர் கூறியுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல, 1
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 1

    இது தொடர்பாக அங்காவில் தொலைக்காட்சியில் தோன்றிப் பேசிய எர்துவான், யுக்ரேனில் ரஷ்யா மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அதை நிராகரிக்கிறோம் என்றும் கூறினார்.

    ரஷ்யாவின் இந்த நடவடிக்கை சர்வதேச சட்டத்திற்கு எதிரானது. இது பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பெரும் அடியாக இந்த நடவடிக்கை அமையும் என்று அவர் எச்சரித்தார்.

    யுக்ரேன் மக்கள் மட்டுமின்றி அங்கு வாழும் துருக்கியர்களின் பாதுகாப்பை தமது அரசு உறுதி செய்யும் என்று கூறிய எர்துவான், அங்குள்ள முன்னேற்றங்கள் குறித்து யுக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசியதாகவும் தெரிவித்தார்.

    X பதிவை கடந்து செல்ல, 2
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 2

    ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு துருக்கி கடந்த காலங்களிலும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. யுக்ரேன் நெருக்கடி விவகாரத்தில் பலமுறை துருக்கி அதிபர் மத்தியஸ்தராக இருந்துள்ளார். மேற்கத்திய நாடுகள் இந்த விவகாரத்தை சரியாக கையாளவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

  6. யுக்ரேனிய பாதுகாப்பு உளவுத்துறை தலைமையகம் அருகே பெரிய தீ

    ரஷ்யா - யுக்ரேன் நெருக்கடி

    பட மூலாதாரம், Reuters

    மத்திய கீஃபில் உள்ள யுக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுத்துறை தலைமையகத்தில் கரும்புகை எழுவதைப் பார்ப்பதாக அங்கிருந்து தகவல்கள் வந்துள்ளன.

    உளவுத்துறை கட்டடத்துக்கு ஏதும் ஆகவில்லை. ஆனால், அதற்கு அடுத்ததாக ஒரு பெரிய தீயில் இருந்து புகை வருகிறது.

    சீருடை அணிந்தவர்கள் சில பைகளை நெருப்பில் வீசுவதை காண முடிவதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

    இதற்கிடையே, தமது ராணுவ கட்டளை மையங்களை ரஷ்ய படையினர் தாக்கியிருப்பதாக யுக்ரேன் தெரிவித்துள்ளது.

    கீஃபை அடுத்த ப்ரோவாரி நகரில், தொடர்ச்சியான ஏவுகணை தாக்குதல்களால் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

  7. வந்துகொண்டிருக்கும் செய்தி, ரஷ்யா – யுக்ரேன் நெருக்கடி: பாதுகாப்பு திட்டங்களை முடுக்கிவிட்ட நேட்டோ

    ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க்

    பட மூலாதாரம், NATO

    படக்குறிப்பு, ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க்

    யுக்ரேனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், யுக்ரேனில் தங்கள் நாட்டு படைகளை வாபஸ் பெற்று, ராஜீய அணுகுமுறையை தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும்,நேட்டோ அமைப்பின் பொது செயலாளர் யென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் கேட்டுக்கொண்டுள்ளார்.

    ரஷ்யா தன் படைகளை பயன்படுத்தி, வரலாற்றை மீண்டும் எழுத முயற்சிப்பதாகவும், யுக்ரேனுக்கு அதன் சுதந்திரத்தை மறுப்பதாகவும் யென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    அதில், அனைத்து நாடுகளையும் பாதுகாப்பதே நேட்டோவின் முக்கியமான பணி என அவர் கூறியுள்ளார்.

    “ஒன்றின் (நாட்டின்) மீதான தாக்குதல், அனைத்து நாடுகள் மீதான தாக்குதலாக கருதப்படும்.

    நேட்டோ அமைப்பின் முடிவுகளை தீர்மானிக்கும் அமைப்பான வட அட்லான்டிக் கவுன்சில், மற்ற நாடுகளை காப்பதற்கான பாதுகாப்பு திட்டங்களை முடுக்கிவிட முடிவெடுத்துள்ளது என ஸ்டோல்டென்பெர்க் தெரிவித்துள்ளார்.

    அதாவது, தேவையான பகுதிகளில் தன் படைகளை நேட்டோ அனுப்பும் என அவர் கூறுகிறார்.

    இதற்கிடையே யுக்ரேனுக்கு அமெரிக்கா தனது படைகளை அனுப்பப்படாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  8. ரஷ்யா மீது அமெரிக்கா, பிரிட்டன் விதித்துள்ள தடைகள்: இனி அடுத்தது?

    ரஷ்யா மீது அமெரிக்கா, பிரிட்டன் விதித்துள்ள தடைகள்: இனி அடுத்தது? காணொலியை பாருங்கள்.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  9. அதிர்ச்சி, பேரச்சம், திகைப்பு: மாஸ்கோவில் என்ன நடக்கிறது?

      • எழுதியவர், செர்கேய் கோர்யாஷ்கோ
      • பதவி, பிபிசி ரஷ்யாவுக்காக மாஸ்கோவிலிருந்து
    விளாடிமிர் புதின்

    பட மூலாதாரம், REUTERS

    படக்குறிப்பு, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்: கோப்புப்படம்

    அதிர்ச்சி, பேரச்சம், திகைப்பு – ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இன்று காலையில் பெரும்பாலானோரின் மனநிலையை விவரிக்கும் மூன்று வார்த்தைகள் இவை.

    யுக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் ராணுவ தாக்குதல் குறித்த செய்தி வெளிவந்த உடனேயே, மாஸ்கோவில் வாழும் மக்கள் தங்களுக்குள் செய்திகளை பரிமாறி, அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். உணவுப்பொருட்களையும், அமெரிக்க டாலர்களையும் சேமித்து வைத்துக் கொண்டனர்.

    பங்குச்சந்தை வர்த்தகத்தை மாஸ்கோ நிறுத்திய பிறகு, ரூபிள் மதிப்பு (ரஷ்ய பணம்) என்னவாகும் என மற்றவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

    வங்கிகளிலும் பணப் பரிமாற்ற மையங்களிலும் வரிசைகளில் மக்கள் காத்திருந்தனர். சாலைகளில் காவல்துறையினர் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    யுக்ரேனுக்கு எதிரான போரை எதிர்ப்பவர்கள், மாஸ்கோவில் இன்று மாலை பேரணி நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதித்து வருகின்றனர்.

    இத்தகைய பேரணியை நடத்துவதற்கான அனுமதி கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. கடந்த சில தினங்களாக மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் காவலில் வைக்கப்பட்டனர்.

    ராணுவ நடவடிக்கைக்கு முன்னதாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், சுமார் பாதிக்கும் மேலான ரஷ்ய மக்கள் யுக்ரேனுடனான போர் சாத்தியம் என்பதை நம்பவில்லை.

    மேற்கு நாடுகளுடனான அதிகரித்துவரும் தற்போதைய பதட்டத்திற்கு நேட்டோ மீது பலரும் குற்றம்சாட்டுகின்றனர்.

  10. இந்திய பிரதமர் மோதியின் உதவியை கோரும் யுக்ரேன்

    ஈகோர் போலிகா

    பட மூலாதாரம், ANI

    படக்குறிப்பு, ஈகோர் போலிகா

    யுக்ரேன் மீது ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பை தொடங்கியுள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோதியிடம் யுக்ரேன் உதவி கோரியுள்ளது.

    இது தொடர்பாக டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான யுக்ரேனிய தூதர் ஈகோர் போலிகா ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசுகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி உலகின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் மதிக்கத்தக்க தலைவர்களுள் ஒருவர்," என்று கூறினார்.

    “எத்தனை உலக தலைவர்கள் கூறுவதை புதின் கேட்பார் என எனக்குத் தெரியவில்லை. ஆனால், மோதியின் வலுவான கூற்றை புதின் கேட்கலாம். அவர் கூறுவதை குறைந்தபட்சம் புதின் சிந்திக்க வேண்டும். யுக்ரேனுக்கு ஆதரவாக மோதி பேசினாலோ உதவினாலோ, யுக்ரேன் அதற்கு நன்றிக்குரியதாக இருக்கும். இந்திய அரசின் இன்னும் ஆதரவான அணுகுமுறையை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என யுக்ரேனிய தூதர் தெரிவித்தார்.

    “இந்த சூழலில் இந்திய பிரதமர், புதினுடனும் பேசலாம். யுக்ரேன் அதிபருடனும் பேசலாம். வரலாற்றில் பல சமயங்களில் இந்தியா அமைதியை நிலைநாட்டும் பங்கை வகித்துள்ளது. இந்த போரை நிறுத்த இந்தியாவின் வலுவான குரலை நாங்கள் கேட்க விரும்புகிறோம்” என்று யுக்ரேனிய தூதர் கூறினார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  11. யுக்ரேனுக்கு எதிரான ரஷ்ய ராணுவ நடவடிக்கை: நேட்டோ கண்டனம்

    ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க்

    பட மூலாதாரம், NATO

    படக்குறிப்பு, ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க்

    யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் பொறுப்பற்றது என, நேட்டோ அமைப்பின் பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக, அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், “எண்ணிலடங்காத மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இது, சர்வதேச சட்டத்திற்கு எதிரான மிகக்கடுமையான விதிமீறல். யூரோ-அட்லான்டிக்கின் பாதுகாப்பை அச்சுறுத்துவதாகவும் இது உள்ளது” என தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  12. யுக்ரேனின் பல நகரங்களில் ரஷ்யா குண்டு மழை

    யுக்ரேன் - ரஷ்யா நெருக்கடி

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கிழக்கு யுக்ரேனில் உள்ள சுவி (Chuguiv) பகுதியில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றதைத் தொடர்ந்து, தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் காட்சி.

    யுக்ரேன் மீது எல்லை தாண்டி ரஷ்ய படைகள் மிகப்பெரிய அளவிலான ராணுவ தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில், முக்கிய நகரங்களுக்கு அருகே ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன.

    எங்கு தாக்குதல்கள் நடக்கின்றன என்பது குறித்து தற்போது பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    சமூக ஊடகங்களில் சில காணொளிகளை நீங்கள் பார்த்திருக்கலாம் - அவற்றைப் பகிர்வதற்கு முன், அதில் உள்ளவற்றைப் பார்த்து, அவை உண்மையானவையா என்பதைச் சரிபார்த்து வருகிறோம்.

    யுக்ரேன் - ரஷ்யா நெருக்கடி
  13. யுக்ரேனில் சிக்கியுள்ள தமிழக மாணவி: மீட்டுத்தர பெற்றோர் கோரிக்கை

    யுக்ரேன் - ரஷ்யா நெருக்கடி

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, யுக்ரேனில் பாதுகாப்பான இடத்தை நோக்கி செல்லும் மக்கள்.

    யுக்ரேன் நாட்டில் ரஷ்யா ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ள பகுதியில் சிக்கியுள்ள கொடைக்கானல் மாணவியை மீட்டுத் தரக்கோரி பெற்றோர் இந்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் வசித்து வரும் ராஜ் மோகன் என்பவரின் இளைய மகள் அனுஷியா மோகன் யுக்ரேன் நாட்டின் தலைநகர் கீஃப்-ல் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு படித்து வருகிறார்.

    யுக்ரேன் – ரஷ்யா நெருக்கடி தீவிரமடைந்துள்ளாதால், உணவு, மின் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அங்கு கிடைக்கவில்லை என்பதால், தனது மகளையும் தனது மகளுடன் உள்ள இந்திய மாணவிகளையும் பத்திரமாக மீட்டு இந்தியாவிற்கு அனுப்ப வேண்டும் என அனுஷியா மோகனின் பெற்றோர் இந்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  14. யுக்ரேன் தலைநகருக்கு பயணம் செய்யாதீர்கள் - இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

    யுக்ரேன் - ரஷ்யா நெருக்கடி

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, யுக்ரேன் தலைநகர் கீஃப்-ல் பிரார்த்தனை செய்யும் பெண் ஒருவர்.

    யுக்ரேன் தலைநகர் கீஃப்-ல் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “யுக்ரேனில் தற்போதைய நிலைமை மிகவும் நிச்சயமற்றதாக உள்ளது. தயவுகூர்ந்து அமைதியைக் கடைபிடியுங்கள். வீடுகள், ஹோட்டல்கள், தங்குமிடங்கள் என எங்கு இருந்தாலும், இடம்பெயரும் போதும் பாதுகாப்பாக இருங்கள்.

    யுக்ரேன் தலைநகர் கீஃப்-ஐ நோக்கி பயணிப்பவர்களும், கீஃப்-ன் மேற்கு பகுதிகளிலிருந்து பயணிப்பவர்களும் தற்காலிகமாக அங்கிருந்து தங்களுடைய நகரங்களுக்குத் திரும்ப அறிவுறுத்தப்படுகின்றனர். குறிப்பாக, மேற்கு எல்லை நாடுகளில் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லுங்கள்.

    இதுதொடர்பான மேலதிக ஆலோசனைகள் உடனுக்குடன் வெளியிடப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  15. யுக்ரேன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை: இதுவரை நடந்தது என்ன?

    யுக்ரேன் - ரஷ்யா நெருக்கடி

    பட மூலாதாரம், Getty Images

    யுக்ரேன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையை அறிவித்துள்ளது. இந்த நேரலை பக்கத்தில் நீங்கள் இப்போதுதான் இணைந்தீர்கள் என்றால், இதுவரை நடந்தது என்ன என்பதை இங்கே அறியுங்கள்:

    • யுக்ரேனின் டோன்பாஸ் பிராந்தியத்தில் ராணுவ நடவடிக்கையை தொடங்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். இதனை தொலைக்காட்சி உரை மூலம் அவர் அறிவித்தார். யுக்ரேன் விவகாரத்தில் அவர் அமைதி காக்க வேண்டும் என, ஐநா பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்திய நிலையில் புதின் இவ்வாறு அறிவித்தார்.
    • யுக்ரேன் ராணுவத்தை அங்கிருந்து அகற்றுவதே இந்த “சிறப்பு ராணுவ நடவடிக்கையின்” நோக்கம் என, புதின் தொலைக்காட்சி உரையில் தெரிவித்தார்.
    • யுக்ரேனின் பல பகுதிகளில் ஏவுகணை தாக்குதல்கள் நடைபெற்றதாக செய்திகள் வருகின்றன. தலைநகர் கீஃப்-ல் கூட இத்தகைய தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
    • “பரவலான தாக்குதல்” நடத்துவதாக ரஷ்யா மீது யுக்ரேன் வெளியுறவு துறை அமைச்சர் குற்றம்சாட்டினார். இதனை நிறுத்த சாத்தியமான அனைத்தையும் ஐநா மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
    • யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களை கொல்லும் முன்தயாரிப்புடன் கூடிய போரை ரஷ்ய அதிபர் புதின் தேர்ந்தெடுத்துள்ளதாக, பைடன் தெரிவித்தார்.
    • பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், ஐநா, நேட்டோ ஆகியவற்றின் தலைவர்களும் ரஷ்யாவின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்த நேரலை பக்கத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.

  16. வந்துகொண்டிருக்கும் செய்தி, யுக்ரேன் – ரஷ்யா நெருக்கடி: தமிழ்நாடு இல்லத்தில் உதவி முகாம் திறப்பு

    தமிழ்நாடு இல்லம்

    பட மூலாதாரம், tnhouse.tn.gov.in/website

    யுக்ரேன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இந்நிலையில், யுக்ரேன் தொடர்பான தகவல்களை பெற டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் (பொதிகை இல்லம்) வரவேற்பறையில் உதவி முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

    தொடர்பு எண்: 011 21610286

    வாட்ஸ்அப் உடன் கூடிய செல்பேசி எண்: 9289516716

    மின்னஞ்சல்: ukrainetamils@gmail.com

  17. வந்துகொண்டிருக்கும் செய்தி, யுக்ரேனுக்கு புறப்பட்டுப் பாதி வழியில் திரும்பிய ஏர் இந்தியா விமானம்

    இந்தியர்களை அழைத்து வர டெல்லியில் இருந்து யுக்ரேன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அங்கு நிலவி வரும் மோசமான சூழ்நிலையால் நடுவானிலேயே தாயகம் திரும்ப உத்தரவிடப்பட்டது.

    ஏஐ 1947 என்ற எண் கொண்ட அந்த விமானம் டெல்லி விமான நிலையத்தில் இருந்து காலை 7:30 மணியளவில் யுக்ரேனிய தலைநகர் கீஃப்வுக்குப் புறப்பட்டது. புறப்பட்ட நேரத்தில் இருந்து ஆறரை மணி நேரத்தில் அது அங்கு சென்றிருக்க வேண்டும்.

    ஆனால், இரான் வான் பரப்பில் இருந்தபோது அந்த விமானம் திரும்பி தாயகம் வர முடிவெடுக்கப்பட்டது.

    கீஃப்வில் தொடரும் குண்டு மழை பொழிவைத் தொடர்ந்து யுக்ரேனின் வான் பாதை பயணம் மூடப்பட்டிருக்கிறது. இதையடுத்தே இந்திய விமானம் டெல்லிக்கு திரும்பி இருக்கிறது.

    யுக்ரேனுக்கு கிளம்பி பாதி வழியில் பின்வாங்கிய ஏர் இந்தியா விமானம்
  18. யுக்ரேனில் உள்ள இந்திய குடிமக்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

    இந்திய தூதரகம்

    பட மூலாதாரம், India in Ukraine/Twitter

    யுக்ரேன் தலைநகர் கீஃப்-ல் உள்ள இந்திய தூதரகம், இந்திய குடிமக்கள் மற்றும் மாணவர்களுக்காக இன்று வெளியிட்ட அறிவிப்பில், “யுக்ரேனின் வான்வெளிப் பயணம் மூடப்பட்டதால், சிறப்பு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. யுக்ரேனிலிருந்து இந்திய குடிமக்கள் வெளியேற மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஏற்பாடுகள் இறுதி செய்யப்பட்டவுடன், விரைவில் அதுகுறித்த தகவல்களை தூதரகம் தெரிவிக்கும். இதன்மூலம், இந்திய குடிமக்கள் அந்நாட்டின் மேற்கு பகுதிக்கு இடம்பெயர முடியும்.

    அனைத்து நேரமும் உங்களின் பாஸ்போர்ட்டுகள் மற்றும் அவசியமான ஆவணங்களை உடன் வைத்திருங்கள். உடனடி தகவல்களை அறிய தூதரகத்தின் இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களை (முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம்) பின்பற்றுங்கள்” என தெரிவித்துள்ளது.

    மேலும், தூதரகத்தை தொடர்புகொள்ள உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  19. ரஷ்யாவின் படையெடுப்பு மூன்றாம் உலகப் போருக்கான தொடக்கமா?

    யுக்ரேன்

    பட மூலாதாரம், Getty Images

    "அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ள ஆரம்பித்தால், அது ஓர் உலகப்போர் தான்," என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருந்தார்.

    உண்மையில் இப்போது நாம் அதைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோமா? - விரிவாகத் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

  20. ரஷ்யாவின் இலக்கு என்ன?

    யுக்ரேன் - ரஷ்யா நெருக்கடி

    பட மூலாதாரம், GETTY IMAGES

    படக்குறிப்பு, ரஷ்யாவின் இலக்குக்கு உள்ளான கார்கிஃப் அருகே உள்ள ராணுவ விமான நிலையம்.

    யுக்ரேனின் ராணுவ கட்டமைப்பு மற்றும் எல்லை பாதுகாப்புப் பிரிவுகள் மீது ரஷ்யா முதலில் தாக்குதலை தொடங்கியதாக, யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். பின்னர், ரஷ்ய ராணுவ வாகனங்கள் வடக்கில் கார்கிஃப்பிலும், கிழக்கில் லுஹான்ஸ்க்கிலும், தெற்கில் ரஷ்யா கைப்பற்றிய கிரைமியாவிலும், பெலாரூஸிலும் எல்லையை தாண்டியதாக, யுக்ரேன் படைகள் தெரிவித்துள்ளன.

    கீஃப்-ல் உள்ள போரிஸ்பில் சர்வதேச விமானநிலையம் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்த விமான தளங்களுள் ஒன்று எனவும், கீஃப்,ட்னிப்ரோ, கார்கிஃப், மரியுபோல் ஆகிய பெருநகரங்களில் உள்ள ராணுவ தலைமையகங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகள் ஆகியவற்றிலும் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக, யுக்ரேன் ராணுவம் தெரிவித்துள்ளது.

    யுக்ரேன் எல்லையில் 2,00,000 படைவீரர்கள், போர் வாகனங்களை ரஷ்யா நிறுத்தியுள்ளது என, ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.

    கார்கிஃப் அருகே உள்ள ராணுவ விமான நிலையமும் ரஷ்யாவின் இலக்குக்கு உள்ளானதாக, யுக்ரேன் தெரிவித்துள்ளது.