யுக்ரேனில் தாக்குதலை தொடங்கியது ரஷ்யா: காணொலி
யுக்ரேனில் தாக்குதலை தொடங்கியது ரஷ்யா. அதனை விளக்கும் காணொலி:
You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
யுக்ரேன் மீது திட்டமிட்டே ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ஜோ பைடன் குற்றம்சாட்டியுள்ளார். உலகம் மீது ரஷ்யாவுக்கு விஷமத்தனமான பார்வை இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். அந்த நாடு மீது அதிபர் ஜோ பைடன் கூடுதல் தடைகளை அறிவித்திருக்கிறார்.
நந்தினி வெள்ளைச்சாமி
யுக்ரேனில் தாக்குதலை தொடங்கியது ரஷ்யா. அதனை விளக்கும் காணொலி:
யுக்ரேன் - ரஷ்யா மோதல்: ஏடிஎம்-இல் வரிசை, எகிறிய எண்ணெய் விலை யுக்ரேன் பதற்றம் அதிகரித்து வருவதால், எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலருக்கும் மேல் உயர்ந்துள்ளது. அதிபர் புதின் கிழக்கு யுக்ரேனில், ராணுவ தாக்குதலைத் தொடங்கிய பிறகு, கடந்த ஏழு ஆண்டுகளில் முதல் முறையாக எண்ணெய் விலை 100 டாலர்களுக்கும் மேல் உயர்ந்துள்ளது.
யுக்ரேனின் பல்வேறு பகுதிகளில் மக்கள் ஏடிஎம் வாசல்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். முழு விவரங்களைத் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
ரஷ்ய படைகளின் வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளதாக, யுக்ரேன் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஒடேசாவுக்கு வெளியேபொடில்ஸ்க்கில் உள்ள ஒரு ராணுவப்பிரிவின் மீது நடைபெற்ற தாக்குதலில், 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் 7 பேர் காயமடைந்தனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
19 பேர் காணாமல் போயுள்ளனர்.
மரியுபோல் நகரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சில மணிநேரங்களுக்கு முன்னதாக, யுக்ரேன் மீது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ராணுவ நடவடிக்கையை அறிவித்தார்.
இதையடுத்து, யுக்ரேன் தலைநகர் கீஃப்-ல் பெரும்பாலான மக்கள் மெட்ரோ ரயில் நிலையங்களில் அடைக்கலம் புகுந்தனர். பெரும்பாலானோர்பேருந்துகள் மூலம் நகரத்தை விட்டு வெளியேறுகின்றனர். மேலும், பலர் கார்களிலும் நகரத்தை விட்டு வெளியேற முயற்சித்ததால், பல கார்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
யுக்ரேனின் டோன்பாஸ் பிராந்தியத்தில் ராணுவ நடவடிக்கையைத் தொடங்க ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். ஆங்காங்கே தாக்குதல்கள் தொடங்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
இந்தச் சூழலில் ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையே மோதல் நடப்பதற்கான காரணம் என்பதை மிக எளிமையாகத் தெரிந்து கொள்ளஇங்கே கிளிக் செய்யவும்
ரஷ்யாவின் 5 விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக, யுக்ரேன் ஆயுதப்படைகள் தெரிவித்துள்ளன.
“அமைதியாக இருங்கள். யுக்ரேன் ஆதரவாளர்களை நம்புங்கள்” என, யுக்ரேன் ஆயுதப்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ரஷ்ய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக யுக்ரேன் கூறுவதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் மறுத்துள்ளது.
யுக்ரேனில் முழு வீச்சிலான போரைரஷ்யா தொடங்கியுள்ளது. இந்நிலையில், யுக்ரேனில் வாழும் தமிழர்கள் உதவிக்கு தொடர்பு கொள்ள தொடர்பு எண், மின்னஞ்சல் உள்ளிட்டவற்றை அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம் வெளியிட்டுள்ளது. அந்த விவரங்கள்:
யுக்ரேனில் முழு வீச்சிலான போரை ரஷ்யா தொடங்கியது. இந்த நேரலை பக்கத்தில் நீங்கள் இப்போதுதான் இணைந்தீர்கள் என்றால், யுக்ரேன் – ரஷ்யா நெருக்கடி விவகாரத்தில் தற்போது வரை என்ன நடந்திருக்கிறது என்பதை இங்கே அறியுங்கள்:
யுக்ரேன் – ரஷ்யா நெருக்கடி விவகாரத்தில் உடனடி கள நிலவரத்தை அறிய எங்களுடன் இந்த நேரலை பக்கத்தில் இணைந்திருங்கள்.
ரஷ்யா மீது அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அவற்றின் நட்பு நாடுகள் தடைகளை விதித்துள்ளன. தடை விதிப்பது என்றால் என்ன? அதனால் என்ன ஆகும்?
மாஸ்கோ நேரப்படி, அதிகாலை 5.55 மணிக்கு யுக்ரேனுக்கு ராணுவ தாக்குதலை அறிவித்தார் புதின். சில நிமிடங்களுக்குப் பிறகு யுக்ரேனில் முதல் ஷெல் மற்றும் ஏவுகணைகள் ஏவப்பட்டன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைநகர் கீவ்வில், அவசரக்கால சைரன் ஒலிக்கப்பட்டது. மேலும் மக்கள் நகரத்தை விட்டு வெளியேறும் போது கார்களின் வரிசை விரைவுச் சாலையை அடைத்திருப்பதைப் படங்கள் காட்டுகின்றன.
சமூக ஊடக சாட்சியங்கள் வளர்ந்து வரும் அச்ச உணர்வைப் பற்றிப் பேசுகின்றன. சிலர் தாங்கள் வெடிகுண்டு கூடாரங்களுக்கும் அடித்தளங்களுக்கும் விரைந்ததாகக் கூறுகின்றனர். மக்கள் தெருக்களில் குழுமியிருந்து பிரார்த்தனை செய்வதை தொலைகாட்சி காணொளிகள் காட்டுகின்றன.
கீவ்வில் உள்ள கார்டியன் செய்தியாளர் லூக் ஹார்டிங் ட்விட்டரில் மக்கள் ஏடிஎம் இயந்திரங்களின் முன் வரிசையில் நிற்பதாகக் கூறியுள்ளார்.
நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். இதுவரை க.சுபகுணம் வழங்கிய நேரலை செய்திகளை இனி நான் உங்களுக்கு வழங்கவிருக்கிறேன்.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள், விளையாட்டு, சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்துறை செய்திகள் ஆகியவற்றை இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.
ரஷ்ய ராணுவாம் நாட்டின் கிழக்கிலுள்ள யுக்ரேனிய படைப் பிரிவுகள் மீது தீவிர தாக்குதல்களைத் தொடங்கியதாக யுக்ரேனிய ஆயுதப் படைகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கீவ் அருகே உள்ள போரிஸ்பில் விமான நிலையம் மற்றும் பல விமான நிலையங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் வான் வழித் தாக்குதலை முறியடிக்க யுக்ரேன் விமானப் படை போராடி வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தெற்கு துறைமுக நகரமான ஒடேஸ்ஸாவில் ரஷ்ய பாராசூட் படைகள் பற்றிய செய்திகளை செய்திகளை மறுத்தது.
யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுப்பைத் தொடங்கியிருக்கும் நிலையில், உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நேட்டோ அமைப்பு ஆலோசித்து வருகிறது.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ள நேட்டோ என்ற வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பு, தமது துருப்புகளை ரஷ்யா எல்லை நோக்கி நகர்த்தியிருக்கிறது. சில உறுப்பு நாடுகள் யுக்ரேனுக்கு ராணுவ உதவியை வழங்கியிருக்கின்றன.
யுக்ரேன் போரில் முக்கியப் பங்கு வகிக்கப் போகும் இந்த அமைப்பைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள. இங்கே கிளிக் செய்யவும்.
அமெர்க்க அதிபர் ஜோ பைடன், யுக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பேசியதாகவும் சர்வதேச கண்டனங்களைத் திரட்டுவதற்கு அவர் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து தனக்கு விளக்கம் அளித்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், ஓர் அறிக்கையில், பைடன் இந்தத் தாக்குதலை நியாயமற்றது எனக் கண்டித்ததுள்ளார்.
மேலும், அதிபர் புதினின் அப்பட்டமான ஆக்கிரமிப்பிற்கு எதிராகத் தெளிவாகப் பேசவும் யுக்ரேன் மக்களுடன் நிற்கவும் உலகத் தலைவர்களை அழைக்குமாறு ஜெலன்ஸ்கி தன்னைக் கேட்டுக் கொண்டதாகவும் பைடன் கூறியுள்ளார்.
அதோடு, அமெரிக்க அதிபர் வியாழன் அன்று, ஜி7 தலைவர்களைச் சந்திப்பதாகவும் அமெரிக்காவும் நட்பு நாடுகளும் “ரஷ்யா மீது கடுமையான தடைகளை விதிக்கும்” என்றும் கூறியவர், “யுக்ரேனுக்கும் அதன் மக்களுக்கும் நாங்கள் தொடர்ந்து ஆதரவையும் உதவியையும் வழங்குவோம்,” என்று அவர் கூறினார்.
பல செய்திகள் தற்போது யுக்ரேனிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி, பெலாரஸில் உள்ள படைகள் ரஷ்ய தாக்குதலில் இணைவதாகக் கூறுகின்றன. அதாவது தாக்குதல் இப்போது யுக்ரேனின் வடக்கிலிருந்து வருகிறது.
யுக்ரேனின் வடக்கு எல்லையில் இருக்கும் பெலார்ஸ் நீண்ட காலமாக ரஷ்யாவுடன் நட்புறவு கொண்டுள்ளது. ஆய்வாளர்கள் சிறிய நாட்டை ரஷ்யாவின் “வாடிக்கையாளர் நாடு” என்று விவரிக்கின்றனர்.
யுக்ரேனின் கிழக்கில் ரஷ்யாவின் தாக்குதல்கள், தெற்கில் ஒடெஸ்ஸா மீதான ரஷ்ய படை நகர்வும் ஆகியவற்றோடு, தற்போது வடக்கிலிருந்தும் தாக்குதல் சேர்ந்துள்ளது
யுக்ரேன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான போர் தொடங்கிவிட்ட நிலையில், இதன் விளைவாக அமெரிக்காவும் ஐரோப்பாவும் ரஷ்யா மீது கடுமையான தடைகளை அறிவித்து வருகின்றன.
இது இந்தியாவுக்கு எந்த வகையில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியா இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறது. விரிவாகத் தெரிந்து கொள்ள...இங்கே கிளிக் செய்யவும்
பிபிசி கீவ் செய்தியாளர் ஜேம்ஸ் வாட்டர்ஹவுஸ், “இதுவரை ரஷ்ய ராணுவ நடவடிக்கையின் விவரங்களை யுக்ரேன் அரசாங்க அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று காலை கீவ்வில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்களும் நாட்டின் தெற்கே உள்ள ஒடெஸ்ஸாவில் படைகளின் நகர்வும் இருப்பதாக அந்த அதிகாரி கூறுகிறார்.
ரஷ்ய எல்லையிலிருந்து சுமார் 25 மைல் தொலைவில் உள்ள கார்கிவ் என்ற இடத்தில் துருப்புகள் எல்லையைக் கடந்து வருவதாகவும் அந்த அதிகாரி கூறுகிறார்.
சாட்சிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் கூற்றுப்படி, இது மிகப்பெரிய அளவிலான ஒன்று,” என வாட்டர்ஹவுஸ் கூறுகிறார்.
சில ஏவுகணை தாக்குதல்கள் யுக்ரேனின் ராணுவ ஏவுகணை கட்டளை மையங்கள் மற்றும் கீவ்வில் உள்ள ராணுவ தலைமையகத்தைத் தாக்கியதாக யுக்ரேனின் உள்துறை அமைச்சகத்தை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகங்கள் பல செய்திகளை வெளியிடுகின்றன.
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் யுக்ரேனிய நகரங்களைத் தாக்குவதை மறுத்துள்ளது. அது ராணுவ உள்கட்டமைப்பு, வான் பாதுகாப்பு மற்றும் விமானப் படைகளை, “உயர் துல்லியமான ஆயுதங்களுடன்” குறி வைப்பதாகக் கூறியுள்ளது.
கிராமடோர்ஸ்க், டொனெட்ஸ்க் பகுதி: காலை 5 மணி ஆவதற்குக் கொஞ்சம் முன்னதாக, பலத்த சத்தத்தால் நான் எழுந்தேன்.
இந்தப் போரை நிறுத்துமாறு யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கியின் உணர்ச்சி மிக்க வேண்டுகோளை ரஷ்ய மக்களிடம் நேரடியாக விடுத்த பிறகு, நான் தூங்கவில்லை.
அது நம்பிக்கையற்ற கடைசி முயற்சியாக ஒலித்தது.
அவசர அவசரமாக மாஸ்கோவில் விளாதிமிர் புதின், கிழக்கு யுக்ரேனில் நடந்ததாகக் கூறப்படும் இனப்படுகொலை (இதுவொரு அப்பட்டமான பொய்) மற்றும் யுக்ரேனில் நாஜிமயமாக்கலை ஒழிப்பதன் தேவை குறித்துப் பேசியதைப் பார்த்தேன். அது மிகவும் வினோதமாக இருந்தது.
மேற்கு நாடுகளுக்கு இதில் தலையிட வேண்டாம் என்று விடப்பட்ட அச்சுறுத்தலும் அப்படித்தான் இருந்தது. புதின் ஏற்கெனவே தன்னிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை நினைவூட்டியிருந்தார்.
நேற்றிரடவு கிராமடோர்ஸ்கில் நான் நூற்றுக்கணக்கானவர்களோடு இருந்தேன். அவர்கள் பிரதான சதுக்கத்தில் யுக்ரேனிய கொடிகளால் மூடப்பட்டு, ஒரு சிறிய எதிர்ப்பை வெளிப்படுத்தி, தேசிய கீதம் மற்றும் தேச பக்திப் பாடல்களைக் பாடிக் கொண்டிருந்தார்கள். நிறைய குழந்தைகள் இருந்தனர்.
நேற்று இரவு உணவகங்கள் பரபரப்பாகக் காணப்பட்டன. பூக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. நான் பேசியவர்களில் அனைவருமே பயந்து போயிருந்தனர். எதை எதிர் பார்ப்பது என்று யாருக்கும் தெரியவில்லை.
ஆனால், அவர்கள் தங்கள் நாட்டில் இந்த முழுத் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை என்று நான் நினைக்கிறேன். இப்போது நான் பேசிய மக்கள் அஞ்சுகிறார்கள். அவர்கள் உறைந்து போனதைப் போல் இருக்கிறது. ஒருவேளை தப்பிக்க விரும்பினால், எங்கு ஓடுவது என்று கூட யாருக்கும் தெரியாது.
யுக்ரேன் நகரங்களை தாங்கள் தாக்கவில்லை என்றும், விமானத் தாக்குதல் தடுப்பு வசதிகள், துல்லியத் தாக்குதல் நடத்தும் விமானப் படை ஆயுதங்கள் போன்ற ராணுவ இலக்குகளையே தாக்குவதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
யுக்ரேனில் ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்தது பற்றிய செய்திகளை அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி உறுதி செய்ததாக ராய்டர்ஸ் செய்தி முகமை கூறுகிறது.
யுக்ரேனின் உள்கட்டமைப்பு மீதும், எல்லை காவலர்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.