ரஷ்ய படைக்குவிப்பு இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிகப்பெரியது: அமெரிக்கா

யுக்ரேன் எல்லையில் ரஷ்ய படைக் குவிப்பு “இரண்டாம் உலக போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நிகழ்ந்த மிகப்பெரிய ராணுவ அணி திரட்டல்” என அமெரிக்கா கூறியுள்ளது

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. புதிய ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நரேந்திர மோதி

    மோதி

    பட மூலாதாரம், ANI

    மகாராஷ்டிர மாநிலம் தானே - திவா இடையே புதிதாக அமைக்கப்பட்ட ரயில் பாதையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இன்று நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்க உள்ளார் என்று ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது. இன்று மாலை 4.30 அளவில் வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து மும்பை புறநகர் ரயில்வேயின் இரண்டு புதிய ரயில்களையும் பிரதமர் கொடியசைத்துத் தொடக்கிவைப்பார் என்றும் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாக ஏ.என்.ஐ. முகமை கூறுகிறது.

    தொடர்புடைய செய்தி:

  2. வணக்கம் நேயர்களே!

    நான் அ.தா.பாலசுப்ரமணியன். பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள், விளையாட்டு, சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்துறை செய்திகள் ஆகியவற்றை இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம். உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றி எங்கள்டிவிட்டர் கணக்கின் மூலம்தகவல் அளியுங்கள்.நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காணஇங்கே சொடுக்கவும். நேற்றைய நேரலைப் பக்கத்தின் சில முக்கியச் செய்திகள்:

    • சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் லீ சென் லூங், ஜவஹர்லால் நேருவை பாராட்டிப் பேசியிருப்பதும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பற்றி கூறியிருப்பதும் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.
    • இன்னும் சில நாள்களில் ரஷ்யா யுக்ரேன் மீது தாக்குதல் நடத்துவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
    • சவுதி அரேபியாவில் பெண் ரயில் ஓட்டுநருக்கான 30 காலி பணியிடங்களுக்கு 28,000 விண்ணப்பங்கள் வரப்பெற்றதாக, ரயில் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
    • பிரேசிலின் பெட்ரோபோலிஸ் பிராந்தியத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • என்.எஸ்.இ முன்னாள் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

    இந்த நாள் இனியதாகட்டும்.