நிறைவடைகிறது இன்றைய நேரலை பக்கம். இதுவரை நடந்த நிகழ்வுகளின் செய்தித் துளிகள் இதோ...
இன்று காலையில் இருந்து இன்றைய நேரலை பக்கத்தில் பதிவான முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.
- யுக்ரேன் நெருக்கடிக்கு ராஜீய ரீதியிலான தீர்வு காண்பதற்கான அனைத்து நம்பிக்கைகளும் இழக்கப்படவில்லை என அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
- இந்தியா - இலங்கை கிரிக்கெட் போட்டி தொடரின் அட்டவணை மாற்றப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
- "கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பதிலாக, பிரெஞ்சு ஓபன் மற்றும் விம்பிள்டன் பட்டங்களை விட்டுக்கொடுக்க தயாராக உள்ளேன்" என ஜோகோவிச் பிபிசிக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
- ஹேக் செய்யப்பட்ட சன்சத் டிவியின் யூடியூப் பக்கம் சில மணி நேரத்துக்குப் பிறகு மீட்கப்பட்டதாக சன்சத் தொலைக்காட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
- பிகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், சட்டவிரோதமாக ₹ 139.35 கோடி அளவுக்கு கருவூலத்திலிருந்து பணம் எடுத்ததாக தொடரப்பட்ட பழைய வழக்கில் குற்றவாளி என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.