லாலு பிரசாத் மேலும் ஒரு ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு

பிகார் முன்னாள் முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான லாலு பிரசாத் யாதவ், டோராண்டா அரசு கருவூலத்தில் இருந்து சட்டவிரோதமாக ₹ 139.35 கோடி பணம் எடுத்ததாக தொடரப்பட்ட பழைய ஊழல் வழக்கில் அவரை குற்றவாளி என்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஆ. லட்சுமி காந்த் பாரதி

  1. நிறைவடைகிறது இன்றைய நேரலை பக்கம். இதுவரை நடந்த நிகழ்வுகளின் செய்தித் துளிகள் இதோ...

    இன்று காலையில் இருந்து இன்றைய நேரலை பக்கத்தில் பதிவான முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

    • யுக்ரேன் நெருக்கடிக்கு ராஜீய ரீதியிலான தீர்வு காண்பதற்கான அனைத்து நம்பிக்கைகளும் இழக்கப்படவில்லை என அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
    • இந்தியா - இலங்கை கிரிக்கெட் போட்டி தொடரின் அட்டவணை மாற்றப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
    • "கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பதிலாக, பிரெஞ்சு ஓபன்‌ மற்றும்‌ விம்பிள்டன் பட்டங்களை விட்டுக்கொடுக்க தயாராக உள்ளேன்" என ஜோகோவிச் பிபிசிக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
    • ஹேக் செய்யப்பட்ட சன்சத் டிவியின் யூடியூப் பக்கம் சில மணி நேரத்துக்குப் பிறகு மீட்கப்பட்டதாக சன்சத் தொலைக்காட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
    • பிகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், சட்டவிரோதமாக ₹ 139.35 கோடி அளவுக்கு கருவூலத்திலிருந்து பணம் எடுத்ததாக தொடரப்பட்ட பழைய வழக்கில் குற்றவாளி என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
  2. சேலத்தில் அதிமுக வேட்பாளரை விசாரணைக்காக அழைத்து சென்றதால் அதிமுகவினர் சாலை மறியல்

    அதிமுக

    சேலத்தில் அதிமுக வேட்பாளரை விசாரணைக்காக அழைத்து சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் சாலை மறியல் செய்தனர்.

    சேலம் அதிமுக சார்பாக 58வது வார்டில் போட்டியிடுகிறவர் பாண்டியன். இவர் இன்று இந்திரா நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில், திமுகவினர் மாநகராட்சி ஊழியர்களின் உதவியுடன் சாக்கடை சரிசெய்யும் பணியை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அப்பகுதிக்கு சென்ற அதிமுக வேட்பாளர், தேர்தல் நேரத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

    இதனால் இரண்டு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.

    இந்த பிரச்னை சம்பந்தமாக அன்னதானபட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட, காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    உடனே அதிமுக வேட்பாளர் பாண்டியன் நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறி, சேலம் அரசு மருத்துவமனைக்கு செல்ல முயன்றார்.

    ஆனால் அன்னதானப்பட்டி காவல்துறையினர் அதிமுக வேட்பாளர் பாண்டியனை விசாரணைக்கு அழைத்து செல்வதாக கூறி, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    இதையடுத்து சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் அன்னதானப்பட்டி காவல் நிலையத்திற்கு வருகை தந்தனர்.

    விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வேட்பாளரை விடுவிக்குமாறு கோரிக்கையோடு காவல் நிலையம் முன்பாக உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

  3. "தமிழ்நாடு சட்டமன்றம் முடக்கப்பட்டால் திமுக 200 இடங்களில் வெற்றி பெறும்" - உதயநிதி ஸ்டாலின்

    தமிழ்நாடு சட்டமன்றம் முடக்கப்பட்டு மறு தேர்தல் நடைபெற்றால் திமுக 200 இடங்களில் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் இளைஞர் அணி தலைவரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மதுரை முனிச்சாலை ஓபுளா படித்துறை அருகே உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்ட போது, "திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற சமயத்தில் கொரோனா 2ஆவது அலை மிகத் தீவிரமாக இருந்தது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்கள் அனைவரையும் முடுக்கிவிட்டு அதனை திறம்பட எதிர்கொண்டார்," என்று கூறினார்.

    உதயநிதி ஸ்டாலின்
    படக்குறிப்பு, சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின்

    மேலும் அவர், கடந்த அதிமுக ஆட்சி ஓராண்டில் ஒரு கோடி தடுப்பூசி மட்டுமே செலுத்தி இருந்த நிலையில், ஆட்சிப் பொறுப்பேற்ற 30 மாதங்களில் திமுக அரசு, 10 கோடி தடுப்பு ஊசிகளை செலுத்தி சாதனை படைத்துள்ளது. அதிமுக நிறைய தடுப்பூசி மருந்துகளை வீணடித்தது. திமுக, சட்டமன்ற தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. ஆகையால் குடும்பத் தலைவிகளுக்கு வழங்குவதாக அறிவித்த உரிமைத் தொகை ரூபாய் ஆயிரம் விரைவில் வழங்கப்படும்.

    முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கு வங்கத்தில் சட்டமன்றத்தை முடக்கியது போன்று தமிழகத்திலும் முடக்குவோம் என்று பேசியுள்ளார். தயவு செய்து அந்த பணியை செய்யுங்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாடு சட்டமன்றம் முடக்கப்பட்டு மறு தேர்தல் நடைபெற்றால் திமுக 200 இடங்களில் வெற்றி பெறும் என்பதை உறுதியாகச் சொல்கிறேன்", என்றார் உதயநிதி.

  4. அரியலூர் பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு

    சிபிஐ வழக்குப் பதிவு

    பட மூலாதாரம், Getty Images

    தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

    கடந்த ஜனவரி 19ஆம் தேதி இறந்த, 12 ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவியின் தற்கொலை தொடர்பான விசாரணையை மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை கடந்த ஜனவரி 31ஆம் தேதி உத்தரவிட்டது.

    மகளின் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணை கோரிய, லாவண்யாவின் தந்தையின் மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு வழக்கை சிபிஐக்கு மாற்றுமாறு உத்தரவு பிறப்பித்ததுள்ளது.

  5. ஆசிய கோடீஸ்வரர்களின் பட்டியலில் முகேஷ் அம்பானியை முந்திய கௌதம் அதானியின் கதை

    காணொளிக் குறிப்பு, முகேஷ் அம்பானியை முந்திய கௌதம் அதானியின் கதை
  6. இந்தியா - இலங்கை கிரிக்கெட் போட்டி தொடரின் அட்டவணை மாற்றம்- பிசிசிஐ

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    இந்தியா - இலங்கை கிரிக்கெட் போட்டி தொடரின் அட்டவணை மாற்றப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    இலங்கைக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது.

    டெஸ்ட் போட்டிகள், 2021-23 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இருக்கும்.

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) போட்டி அட்டவணையை மாற்றியுள்ளது.

    இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இரு நாடுகளுக்கும் இடையே முதலில் டி20 போட்டிகளும், அதன்பிறகு டெஸ்ட் போட்டிகளும் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

    அதன்படி, முதல் டி20 போட்டி லக்னோவிலும், மீதமுள்ள இரண்டு டி20 போட்டிகள் தர்மசாலாவிலும் நடைபெற உள்ளது.

    இந்தியா-இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியில் மார்ச் 4ஆம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூரில் மார்ச் 12 முதல் 16ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.

  7. உணவும் உடல்நலமும்: இறைச்சி உணவை விட வீகன் உணவு ஆரோக்கியமானதா?

    உணவு

    பட மூலாதாரம், GETTY IMAGES

    இரட்டையர்களான ஹியூகோவும் ரோஸ் டர்னரும், ஒரு பரிசோதனை முயற்சியாக 12 வாரங்கள் டயட்டில் இருந்தனர்.

    ஹியூகோ 'வீகன்' உணவு உண்பவராக மாறினார். ரோஸ் தொடர்ந்து இறைச்சி சாப்பிட்டார்.

    என்ன நடந்தது?

  8. பிபிசி தமிழில் சமீபத்தில் அதிகமாக வாசிக்கப்பட்ட கட்டுரை

    பகதூர் ஷா ஜாஃபர

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, இறுதியாக எடுக்கப்பட்ட பகதூர் ஷா ஜாஃபரின் படம்

    இந்திய வரலாறு: ஆங்கிலேயர்களால் ஆடை களையப்பட்டு முகலாய இளவரசர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட கதை. முழுமையாக படிக்க இங்கே சொடுக்கவும்

  9. ராமநாதபுரம் வனத்துறையை கண்டித்து கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம், ஆ.பிரபுராவ்

    மீனவர்கள் போராட்டம்
    படக்குறிப்பு, கடலில் இறங்கிப் போராட்டம்.

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே பிச்சை மூப்பன் வலசையில், மன்னார் வளைகுடா கடற்கரை பகுதிகளில் சூழலியல் சுற்றுலா படகு சவாரி திட்டத்துக்காக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உள்ளிட்ட உரிமைகளை பறிக்க முயல்வதாக கூறி மீனவர்கள் கடலில் இறங்கிப் போராட்டம் நடத்தினர்.

    வனத்துறை மற்றும் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளையை கண்டித்து செவ்வாய்க்கிழமை நடந்த இந்தப் போராட்டத்தை கடல் தொழிலாளர்கள் சங்கம் ஒருங்கிணைத்தது.பிச்சைமூப்பன் வலசை கிராமத்தையொட்டி உள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சிறிய தீவுகளும் மணல் திட்டுகளும் உள்ளன. இதனால் இங்கு வனத்துறை மற்றும் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை சார்பில் சூழலியல் சுற்றுலா படகு சவாரி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த படகு சவாரிக்கு இடைஞ்சலாக படகுகளை நிறுத்தியுள்ளதாக கூறி, பிச்சை மூப்பன் வலசை கிராம பாரம்பரிய மீனவர்களை கடற்கரையை விட்டே வெளியேற்ற வனத்துறை முயல்வதாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இது அத்து மீறல் நடவடிக்கை என்று கூறி ராமநாதபுரம் மாவட்ட கடல் தொழிலாளர் சங்கம், மற்றும் ஏர்வாடி ஊராட்சி நாட்டுப்படகு மீனவ கிராம மக்கள் இணைந்து பிச்சை மூப்பன் வலசை கிராமத்தில், கடலில் இறங்கி கண்டண ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட சிஐடியூ செயலாளர் சிவாஜி, மாவட்ட கடல்தொழிலாளர்கள் சங்க செயலாளர் கருணைமூர்த்தி உள்ளிட்ட ஏராளமான மீனவர்கள், பெண்கள் பங்கேற்றனர்.

  10. அரியலூர் மாணவி மரணத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் மாணவர்கள் போராட்டம்

    மாணவர்கள் போராட்டம்
    படக்குறிப்பு, டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மற்றும் டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

    தமிழ்நாட்டின் அரியலூரில் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவர் மதமாற்றம் செய் கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறப்படுவது குறித்து விசாரிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் நூற்றுக்கணக்கானோர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு விருந்தினர் இல்லத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் தடுத்து பேருந்துகள் மூலம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

  11. வந்துகொண்டிருக்கும் செய்தி, லாலு பிரசாத் மேலும் ஒரு ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு - ஜார்கண்ட் நீதிமன்றம்

    லாலு பிரசாத்

    பட மூலாதாரம்,

    படக்குறிப்பு, லாலு பிரசாத் யாதவ், பிகார் முன்னாள் முதல்வர்

    பிகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், டோராண்டா அரசு கருவூலத்தில் இருந்து சட்டவிரோதமாக ₹ 139.35 கோடி அளவுக்கு பணம் எடுத்ததாக தொடரப்பட்ட பழைய வழக்கில் அவரை குற்றவாளி என்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    இத்துடன் லாலு பிரசாத் ஐந்து கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளிலும் குற்றவாளி என்று விசாரணை நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

    இந்த வழக்கில் நீதிபதி சி.கே. சஷி செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளிப்பதையொட்டி நீதிமன்றத்தில் லாலு பிரசாத் யாதவ் ஆஜரானார். அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மேலும் 98 பேரும் ஆஜராகினர், அவர்களில் 24 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக நீதிபதி சஷி அறிவித்தார்.

    குற்றம்சாட்டப்பட்டவர்களில் முன்னாள் எம்பி ஜெகதீஷ் சர்மா, அப்போதைய பொதுக் கணக்குக் குழு (பிஏசி) தலைவர் துருவ் பகத் உட்பட 35 பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வகையில் அவர்கள் ஜாமீன் கோரி விண்ணப்பிக்கும் உரிமை பெறலாம் என்று நீதிபதி தெரிவித்தார்.

    இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் 39 குற்றவாளிகள் மீதான தண்டனை தொடர்பான வாதங்கள் பிப்ரவரி 21ஆம் தேதி நடைபெறும் என்றும் நீதிபதி கூறினார்.

    லாலு பிரசாத் யாதவ் மீது 950 கோடி ரூபாய் மதிப்பிலான கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான நான்கு வழக்குகளில் ஏற்கெனவே அவர் குற்றவாளி என விசாரணை நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    சாய்பாசா கருவூலத்தில் இருந்து ₹ 37.7 கோடி மற்றும் ₹ 33.13 கோடி எடுத்தது, தியோகர் கருவூலத்தில் இருந்து ₹ 89.27 கோடி மற்றும் ₹ 3.76 கோடி மோசடி எடுத்தது ஆகிய வழக்குகள் இதில் அடங்கும்.

    தும்கா கருவூல பணம் கையாடல் வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையுடன் ₹60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    அந்த நான்கு தீர்ப்புகளையும் எதிர்த்து லாலு பிரசாத் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த வரிசையில் தற்போதைய வழக்கின் தீர்ப்பையும் எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  12. BoycottChennaiSuperKings ட்ரெண்டாவது ஏன்?

    டி20

    பட மூலாதாரம், GARETH COPLEY-ICC VIA GETTY IMAGES

    படக்குறிப்பு, டி20 உலகக்கோப்பை போட்டியில் இலங்கை - நமீபியா இடையிலான போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற மஹீஷ். (கோப்புப்படம்)

    அண்மையில் நடந்து முடிந்த ஐபில் மெகா ஏலம் 2022ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இலங்கையைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான மஹீஷ் தீக்‌ஷனவை ரூ.70 லட்சத்திற்கு ஏலம் எடுத்தற்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இலங்கை ராணுவத்தில் பணியாற்றுபவரான மஹீஷ் தீக்‌ஷனவை ரூ.70 லட்சத்திற்கு ஏலம் எடுத்ததன் எதிரொலியாக தற்போது ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் BoycottChennaiSuperKings எனும் சென்னை அணிக்கு எதிரான ஹேஷ்டேக் ட்ரெண்டாகத் தொடங்கியிருக்கிறது.

  13. "பிரெஞ்சு ஓபன்‌ மற்றும்‌ விம்பிள்டன் பட்டங்களை விட்டுக்கொடுக்க தயாராக உள்ளேன்"- ஜோகோவிட்ச் பிபிசிக்கு பிரத்யேக பேட்டி

    நோவாக் ஜோகோவிட்ச்

    பட மூலாதாரம், ge

    படக்குறிப்பு, டென்னிஸ் நட்சத்திர வீரர் நோவாக் ஜோகோவிட்ச்

    டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிட்ச், "கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடுவதை விட, எனது வருங்கால கோப்பைகளை நான் இழக்க தயாராக உள்ளேன். தடுப்பூசிக்கு எதிராக நான் இல்லை. எனது உடம்புக்குள் என்ன செலுத்த வேண்டும் என்ற முடிவை எடுப்பதற்கான சுதந்திரத்தை மட்டுமே நான் பயன்படுத்திக் கொள்கிறேன்," என்று கூறியுள்ளார். இதற்கு விலையாக பிரெஞ்ச் ஓபன்‌ மற்றும்‌ விம்பிள்டன் பட்டங்களை விட்டுக்கொடுக்க தயாராக உள்ளதாகவும் அவர் பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

    தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் எந்த நாட்டிலும் இருக்கலாம் என்ற உரிமையை பெற்ற நோவாக் ஜோகோவிட்ச் வைத்திருந்த ஆஸ்திரேலிய விசாவை அந்நாட்டின் குடிவரவு அமைச்சகம் சில வாரங்களுக்கு முன்பு ரத்து செய்தது. இதனால் அவரால் ஆஸ்திரேலிய ஓபனில் விளையாட முடியாமல் போனது.

  14. வந்துகொண்டிருக்கும் செய்தி, யுக்ரேன் எல்லை: படைகளை திரும்ப அழைக்கும் ரஷ்யா

    யுக்ரேன் எல்லையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தங்கள் நாட்டு படைகள் தங்களது நிலைக்கே மீண்டும் திரும்பி வருவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கிறது.

    இது யுக்ரேன் - ரஷ்யா இடையிலான மோதல் நிலையை குறைக்கும் என்ற நம்பிக்கையை தந்தாலும் ரஷ்யா எந்த எண்ணிக்கையில் படைகளைத் திரும்ப அழைத்து உள்ளது என்று இன்னும் தெளிவாகவில்லை.

    ரஷ்யா தனது படைகள் அனைத்தையும் யுக்ரேன் எல்லையில் இருந்து விலக்க வேண்டும் என்று யுக்ரேன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரி குலேபா தெரிவித்துள்ளார்.

    ''எங்களுக்கு ஒரு விதி உள்ளது; எதைக் கேட்கிறீர்களோ அதை நம்பக்கூடாது; எதைப் பார்க்கிறார்களோ அதைத்தான் நம்ப வேண்டும்,'' என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ''படைகள் பின் வாங்கியது என்றால் மோதல் நிலை குறைகிறது என்று நாங்கள் நம்புகிறோம்,'' என்றும் அவர் கூறியுள்ளார்.

  15. யுக்ரேன் நெருக்கடி: ரஷ்யாவுடன் போரை தடுப்பதற்கான 5 சாத்திய வழிகள் என்னென்ன?

    சித்தரிப்புப் படம்

    பட மூலாதாரம், GETTY IMAGES

    • மேற்கத்திய நாடுகள் ரஷ்ய அதிபர் புதினை பின்வாங்கும்படி வற்புறுத்தலாம்
    • நேட்டோவும் ரஷ்யாவும் ஒரு புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்ளலாம்
    • யுக்ரேனும் ரஷ்யாவும் மின்ஸ்க் ஒப்பந்தங்களை புதுப்பிக்க இயலும்
    • பின்லாந்து நாடு போல் யுக்ரேன் நடுநிலை வகிக்கலாம்
    • தற்போதைய நிலைப்பாடு நிலையாக மாறலாம்முழுமையாக படிக்க இங்கே சொடுக்கவும்
  16. மு.க. ஸ்டாலினை விமர்சிக்கும் எடப்பாடி பழனிசாமி

    எடப்பாடி பழனிசாமி
    படக்குறிப்பு, தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
  17. மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக பட்டாசு விற்பனையோ தயாரிப்போ செய்தால் கடும் நடவடிக்கை: மாவட்ட எஸ்பி பாஸ்கரன் எச்சரிக்கை

    பட்டாசு
    படக்குறிப்பு, பட்டாசுகள் வெடித்து சிதறியதில் இடிந்து விழுந்த மாடி வீடு

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லிவீரன்பட்டியைச் சேர்ந்த பிரவீன் என்பவர் சிவகாசியில் பட்டாசு கடை நடத்தி வருகிறார். இன்று அவரது வீட்டின் மேல் மாடியில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் மாடி வீடு இடிந்து விழுந்தது, இதில் பணியாற்றிக் கொண்டிருந்த அஜித் என்பவரது உடல் சிதறி உயிரிழந்த சூழலில், மேலும் இருவர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த விபத்து தொடர்பாக மதுரை மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன், உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன், "வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருத்த பட்டாசுகள் வெடித்துள்ளன. இதில் ஒருவர் பலியாகி உள்ள நிலையில் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது," என்று கூறினார்.

    "வெடித்துச் சிதறிய பட்டாசுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தனவா? சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கப்பட்டனவா? என நிபுணர்களை வரவழைத்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது என அவர் கூறினார்.

    மேலும், மதுரை மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து, சட்டவிரோதமாக பட்டாசு விற்பனையோ தயாரிப்போ நடைபெறுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என எஸ்பி பாஸ்கரன் எச்சரித்தார்.

  18. ஹேக் செய்யப்பட்ட சன்சத் டிவியின் யூடியூப் பக்கம் சில மணி நேரத்துக்குப் பிறகு மீட்பு

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    இன்று அதிகாலை 01:00 மணிக்கு, சன்சத் டிவியின் யூடியூப் சேனல் ஹேக்கிங் செய்யப்பட்டதாகவும், சிறிது நேரம் குறிப்பிட்ட யூடியூப் சேனலில் நேரலை செய்வதற்கான முயற்சிகள் நடந்தது எனவும் சன்சத் தொலைக்காட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இந்திய நாடாளுமன்ற அலுவல்கள், அதன் முக்கிய கூட்டங்கள், செய்தியாளர் சந்திப்பு போன்ற நிகழ்வுகள் சன்சத் டிவியில் ஒளிபரப்பாகும். இதன் நிகழ்ச்சிகள் அந்நிறுவன யூட்யூப் பக்கத்திலும் நேரலையில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில், சன்சத் டிவியின் யூடியூப் பக்கம், "Ethereum" என்று பெயர் மாற்றப்பட்டது என்றும், பிறகு மீண்டும்ண்டும் 03.45 மணி அளவில் தொழில்நுட்ப வல்லுநர் குழு உதவியுடன் மீண்டும் சன்சத் டிவியின் யூடியூப் பக்கம் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    சைபர் தாக்குதல் நிகழ்வுகளை கண்காணித்து எச்சரிக்கை விடுக்கும் அமைப்பான சிஇஆர்டி எனப்படும் இந்திய கணினி அவசரகால உதவிக்குழுவும் இது குறித்து சன்சத் டிவியிடம் தெரிவித்துள்ளதாக அந்த தொலைக்காட்சி வெளியிடப்பட் டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  19. பிகாரில் சட்ட விரோதமாக மாட்டிறைச்சியை எடுத்துச் சென்றதாக சொல்லி, டெம்போ வாகனத்தை சேதப்படுத்தியதாக புகார்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    பிகார் மாநிலத்தில் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டு சிறுவர்கள் சிலர், முசாபர்பூரில் உள்ள பகவான்பூர் சௌக் பகுதியில், ஒரு டெம்போவில் சட்ட விரோதமாக மாட்டிறைச்சியை எடுத்துச் சென்றதாகக் குற்றம்சாட்டி போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தியது மட்டுமின்றி அந்த வாகனத்தை சேதப்படுத்தியும் உள்ளனர்.

    இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகிறோம் என்று சதர் காவல் நிலையம் ஆய்வாளர் மணி பூஷன் குமார் ஏ.ஏன்.ஐ செய்தி முகமையிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

  20. சென்னை கொரோனா நிலவரம்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    சென்னையில் நேற்றைய நிலவரப்படி 5,746 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது.

    சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,47,200 மற்றும், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 7,32,408 பேர் குணமடைந்துள்ளனர்.

    நேற்று வரை மொத்தமாக 9,046 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.