நீட் தேர்வு தொடர்பாக பா.ஜ.கவின்
நிலைப்பாட்டைக் கண்டித்தேபா.ஜ.கவின் மாநில
தலைமையகத்தில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டுவீசியதாக கைதுசெய்யப்பட்ட நபர்
கூறியுள்ளார். இவர் இதற்கு முன்பாகவும் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில்
கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள
பா.ஜ.கவின் மாநிலத் தலைமையகமான கமலாலயம் மீது இன்று அதிகாலை 1.20
மணியளவில் பெட்ரோலால் நிரப்பட்ட
பாட்டில்களை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீசிச் சென்றார். இந்த விவகாரத்தில்
நந்தனத்தைச் சேர்ந்த கருக்கா வினோத் என்பவரைக் காவல்துறை கைது செய்துள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவம் ஏன்
நடைபெற்றது என்பது தொடர்பாக சென்னை நகரக் காவல்துறை அறிக்கை ஒன்றை
வெளியிட்டுள்ளது. "இந்த சம்பவம்
தொடர்பாக மாம்பலம் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் சிசிடிவி கேமரா பதிவுகளை
வைத்து விசாரணை நடத்தியதில், பழைய குற்றவாளியான
வினோத்என்ற கருக்கா
வினோத் இந்தச் செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து நந்தனத்தைச் சேர்ந்த
கருக்கா வினோத் (38) கைதுசெய்யப்பட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் தமிழ்நாட்டில் நீட் தேர்வு தொடர்பாக பா.ஜ.கவின்
நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு, ஆத்திரத்தில்
பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் நிரப்பிய மூன்று பாட்டில்களைவீசியது தெரியவந்தது.
இவர் மத ரீதியாகவோ,
அரசியல் சம்பந்தமாகவோ மேற்படி குற்ற
சம்பவத்தில் ஈடுபடவில்லை என்பதும் இவ்வாறு பொதுப் பிரச்சனைகளில் தானாகவே தலையிட்டு,
குடிபோதையில் இதுபோன்ற
குற்றசம்பவங்களில் ஈடுபடும் மனநிலை கொண்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் நடத்தப்பட்ட விசாரணையில்,
கைதுசெய்யப்பட்ட வினோத் தேனாம்பேட்டை
காவல் நிலையத்தில் சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளி என்றும் இவர் மீது 4
கொலை முயற்சி வழக்கு உட்பட 10
குற்றவழக்குகள் நிலுவையில்
உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதுதவிர, 2015ஆம் ஆண்டு மாம்பலம்காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி
பெட்ரோல் குண்டு வீசியதும் 2017ஆம் ஆண்டில்
தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசியதும் தெரியவந்துள்ளது"
எனக் காவல்துறை தெரிவித்திருக்கிறது.