"எங்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம்" - பாகிஸ்தானை எச்சரிக்கும் ஒவைஸி

கர்நாடகாவில் பள்ளி வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிய உரிமை கோரி சில மாணவிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் தெரிவித்துள்ள கருத்துக்கு கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கிறார் ஒவைஸி.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. சமத்துவத்துக்கான சிலை சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளது: ராகுல் காந்தி விமர்சனம்

    ராகுல் காந்தி

    பட மூலாதாரம், GETTY IMAGES

    ஹைதராபாத் புறநகரில் உள்ள முச்சிந்தலா கிராமத்தில் ஷம்ஷாபாத் விமான நிலையம் அருகே ராமானுஜர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது உயரமான சிலை என்றும், உலகின் 26வது பெரிய சிலை என்றும் கூறப்படுகிறது.

    'சமத்துவத்துக்கான ராமானுஜர் சிலை' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சிலையின் பயன்பாட்டை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பிப்ரவரி 5-ம் தேதி தொடங்கி வைத்தார்.

    இந்நிலையில், ராமானுஜர் சிலை சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளதாக, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

    இது தொடர்பாக, அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “சமத்துவத்துக்கான சிலை சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. ‘புதிய இந்தியா’ சீனா நிர்பார் (சீன தயாரிப்பு) என மாறிவிட்டதோ?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதன்மூலம், சுயசார்பு இந்தியா திட்டமான ஆத்மநிர்பார் குறித்து பேசிவரும் பிரதமர் நரேந்திர மோதியை ராகுல் காந்தி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  2. ராமஜெயம் கொலை வழக்கு: '10 ஆண்டுகளாகியும் முன்னேற்றம் இல்லை!' - சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்றம்

    ராமஜெயம்

    பட மூலாதாரம், K.N.RAMAJAYAM WELFARE ASSOCIATION TRICHY

    படக்குறிப்பு, ராமஜெயம்: கோப்புப்படம்

    அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சியில் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதியன்று அதிகாலையில் நடைப்பயிற்சிக்காக வெளியில் சென்ற அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், திருச்சி-கல்லணை சாலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

    சிபிஐ விசாரணை நடத்தியும் இந்த வழக்கில் ஆதாரத்தைக் கண்டறிய முடியவில்லை.

    இந்நிலையில், சிபிஐ விசாரணையில் எதுவும் கண்டறியப்படாததால் மாநில காவல்துறையே விசாரிக்க வேண்டும் எனக் காவல்துறை தலைமை இயக்குநரிடம் மனு அளித்துள்ளதாகவும் அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு ராமஜெயத்தின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.இந்த வழக்கு புதன்கிழமையன்று விசாரணைக்கு வந்தபோது, தூத்துக்குடி எஸ்.பி ஜெயக்குமார், அரியலூர் டி.எஸ்.பி மதன், சி.பி.ஐ அதிகாரி ரவி ஆகியோர் அடங்கிய குழு, சி.பி.சி.ஐ.டி டி.ஜி.பி ஷகீல் அக்தர் மேற்பார்வையில் செயல்படும் என்று நீதிபதி பாரதிதாசன் தெரிவித்தார்.மேலும், இந்த சிறப்பு புலனாய்வுக்குழுவை நீதிமன்றம் கண்காணிக்கும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து 15 நாள்களுக்கு ஒருமுறை வழக்கின் நிலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.பத்து ஆண்டுகளாக சி.பி.சி.ஐ.டி, சி.பி.ஐ என விசாரணை நடத்தியும் கொலைக்கான நோக்கம் என்னவென்று கண்டறிய முடியாதததால் சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு மாற்றப்படுவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

  3. ஹிஜாப் சர்ச்சை: பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது - கமல்ஹாசன்

    கமல்ஹாசன்

    பட மூலாதாரம், KAMAL HASSAN

    கர்நாடகாவில் பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணியும் விவகாரம் தற்போது வன்முறையாக மாறியுள்ளது. அந்த மாநிலத்தின் இரு மாவட்டங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் சிலர் காவி சால்வை அணிந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    கர்நாடகாவில் ஹிஜாப் ஆதரவு மற்றும் எதிர்ப்பு மாணவர் குழுவினர் இடையே வன்முறை மற்றும் மோதல்கள் வெடித்ததையடுத்து, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூன்று நாட்களுக்கு மூட மாநில அரசு உத்தரவிட்டது.

    இந்நிலையில், இது தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (பிப். 09) தன் ட்விட்டர் பக்கத்தில், “கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது. கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது. ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது. முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது” என பதிவிட்டுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  4. விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம்: ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி, மோகன்

    விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம்: ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி

    பட மூலாதாரம், bbc

    கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த ஜனவரி 9-ம் தேதியிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட கூலி உயர்வு வழங்கக் கோரி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நடைபெற்ற நான்கு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்திருந்தன.

    இந்த நிலையில் நேற்று திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    நேற்று இரவு வரை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் ஒப்பந்தம் கையெழுத்தாகதால் ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது.

  5. மலையில் சிக்கிக்கொண்ட இளைஞர் மீட்பு

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    கடந்த 40 மணி நேரத்திற்கும் மேலாக மலை பிளவில் சிக்கிய இளைஞர் மீட்பு கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா என்கிற மலைத்தொடரில் கடந்த திங்கட்கிழமையன்று மலையேற்றம் சென்ற 23 வயதான பாபு என்ற இளைஞர் மலை பிளவு ஒன்றில் சிக்கிக்கொண்டார்.

    இரண்டு குழுக்களாக அப்பகுதிக்கு விரைந்த ராணுவத்தினர், அவரை மீட்கும் பணியில் நள்ளிரவு முதல் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில், தற்போது ராணுவத்தினர் பாபுவை மீட்டுள்ளனர் என்று ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

  6. கேரளா மலையில் சிக்கிய இளைஞரை மீட்கும் பணி தீவிரம்

    X பதிவை கடந்து செல்ல, 1
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 1

    கேரளாவில் உள்ள மலம்புழா பகுதியில், மலையேற்றம் சென்ற போது, பாபு என்ற இளைஞர், அங்குள்ள ஒரு பிளவில் தவறி விழுந்துள்ளார்.

    இதனை தொடர்ந்து அவரை மீட்கும் பணியில், ராணுவத்தினர் ஈடுப்பட்டுள்ளனர். அந்த இளைஞரை தொடர்பு கொண்டு பேசிய ராணுவம், அவர் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

    மேலும், இந்த சம்பவம் தொடர்பாக, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மலம்புழா மலையில் சிக்கியுள்ள இளைஞரை மீட்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. இரண்டு ராணுவ குழுக்கள் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். விமானப்படை ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் உள்ளன”, என்று தெரிவித்துள்ளார்.

    கேரளாவில் உள்ள மலம்புழா

    பட மூலாதாரம், pib india

    X பதிவை கடந்து செல்ல, 2
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 2

  7. ராகுல் காந்தியை விமர்சித்த பா.ஜ.க எம்.பி தேஜஸ்வி சூர்யா

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு வெளியுறவுக் கொள்கை பற்றிய அறிவு என்பது அவரது வெளிநாட்டு விடுமுறை பயணம் வரை மட்டுமே உள்ளது என்று பா.ஜ.க எம்.பி தேஜஸ்வி சூர்யா விமர்சித்துள்ளார்.மேலும் அவர் ஏ.என்.ஐ முகமைக்கு அளித்த பேட்டியில், ராகுல் காந்தி வெளிநாட்டு விடுமுறையில் இல்லாதபோது, நாடாளுமன்றத்திற்கு வருகிறார். வெளியுறவுக் கொள்கைகள் குறித்து மத்திய அரசுக்கு, அவர் விவரிக்க அதிகாரம் இல்லை. அவர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஊதுகுழலாக செயல்படுகிறார்”, என்று கூறியுள்ளார்.

  8. பிட்காயின் கொள்ளை: இதுவரை இல்லாத அளவுக்கு 5 பில்லியன் டாலர் பறிமுதல்

    Bitcoin

    பட மூலாதாரம், Getty Images

    கடந்த 2016ஆம் ஆண்டு கொள்ளையடிக்கப்பட்ட 5 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள பிட்காயினை அமெரிக்க நீதித்துறை பறிமுதல் செய்துள்ளது. இது இதுவரை இல்லாத அளவில் நடந்த மிகப்பெரிய பறிமுதல் ஆகும்.

    மேலும், கிட்டத்தட்ட 1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள பிட்காயின் தொகையை சட்டப்பூர்வப் பணமாக மாற்ற முயன்றதாக செவ்வாய்க்கிழமையன்று இரண்டு பேரை அமெரிக்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

    2016ஆம் ஆண்டில் கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தை ஹேக் செய்து, ஒரு ஹேக்கர் திருடிய இந்த தொகையின் மதிப்பு சுமார் 71 மில்லியன் டாலராக இருந்தது.

    ஆனால், பிட்காயினின் மதிப்பு தற்போது அதிகரித்துள்ளதால், அதன் மதிப்பு இப்போது 5 பில்லியன் டாலருக்கும் மேலாக உள்ளது.

  9. ரஷ்யப் படைகள் நெருக்கடியை அதிகரிக்காது என புதின் உறுதி: பிரான்ஸ் அதிபர்

    யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி உடன் பிரான்ஸ் அதிபர்

    பட மூலாதாரம், Reuters

    படக்குறிப்பு, யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி உடன் பிரான்ஸ் அதிபர்

    யுக்ரேன் எல்லைக்கு அருகே ரஷ்யப் படைகள் தனது நெருக்கடியை அதிகரிக்காது என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் தனக்கு உறுதியளித்ததாக பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

    யுக்ரேன் நாட்டு அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்திப்பதற்கு முன், "எந்த விதமான சீரழிவோ அல்லது விரிவாக்கமோ இருக்காது என்று எனக்கு உறுதியளிக்கப்பட்டது" என்று அவர் கூறியுள்ளார்.

    இருப்பினும், உத்தரவாதம் அளிக்கும் எந்தவொரு கூற்றும் சரியானதல்ல என்று ரஷ்யா கூறியுள்ளது.

    பிரான்ஸ் நாட்டு அதிபர் மக்ரோங் இந்த வாரம் தேசிய தலைநகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    திங்கட்கிழமையன்று மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதினுடன் கிட்டத்தட்ட 6 மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தைக்குப் பிறகு, செவ்வாய்கிழமையன்று அவர் யுக்ரேன் தலைநகரமான கீவை வந்தடைந்தார்.

    யுக்ரேன் எல்லையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. ரஷ்யா யுக்ரேன் மீது படையெடுக்க திட்டமிட்டுள்ளதாக மேற்குலக நாடுகள் கூறுகின்றன. ஆனால் அதை ரஷ்யா மறுக்கிறது.

  10. பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்!

    பிபிசி தமிழ் நேரலைக்கு வரவேற்கிறோம்.

    தமிழ்நாடு, இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    தொடர்ந்து இணைந்திருங்கள்.