"இந்திய முஸ்லிம் பெண்களின் உரிமைகளை தடுக்காதீர்கள்" - மலாலா
கர்நாடகாவில் பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணியும் விவகாரம் தற்போது வன்முறையாக மாறியுள்ளது. அந்த மாநிலத்தின் இரு மாவட்டங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் சிலர் காவி சால்வை அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் நோபல் பரிசு பெற்றவரும் பெண்ணுரிமை செயல்பாட்டாளருமான மலாலா யூசுஃப்சாய் ஹிஜாப் அணியும் மாணவிகளுக்காக தமது ஆதரவை தெரிவித்துள்ளார்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
ஆ. லட்சுமி காந்த் பாரதி
இன்றைய நேரலை நிறைவடைகிறது
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,
இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம். எங்களுடன் இந்த பக்கத்தில் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.
ஹிஜாப் சர்ச்சை: இந்திய முஸ்லிம் மாணவிகளின் உரிமையை தடுக்காதீர்கள் - மலாலா
கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணியும் மாணவிகளுக்கு வகுப்பறைக்குள் அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் அந்த மாணவிகளுக்கு ஆதரவாக சர்வதேச பெண்ணுரிமை செயல்பாட்டாளரும் நோபல் பரிசு பெற்றவருமான மலாலா யூசுஃப்சாய் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் அவர் இன்று ஒரு இடுகையை பகிர்ந்துள்ளார். அதில் அவர், "படிப்புகளுக்கும் ஹிஜாபுக்கும் இடையே தேர்வு செய்ய நம்மை கல்லூரி கட்டாயப்படுத்துகின்றன. குறைவாகவோ, அதிகமாகவோ - தங்களுடைய ஹிஜாபை அணிந்தபடி மாணவிகள் பள்ளிக்கு செல்வதை மறுப்பது பயங்கரமானது. முஸ்லிம் பெண்களை ஒடுக்குவதை இந்திய தலைவர்கள் நிறுத்த வேண்டும்," என்று கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
“பிபிசியின் இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 5 வீராங்கனைகளில் நீங்கள் விரும்பும் ஒருவரை வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்” - நடிகர் விமல்
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்
YouTube பதிவின் முடிவு
டெல்லியில் ஒரு நாள் கொரோனா பதிவு 1,114 ஆக பதிவாகியுள்ளது.
டெல்லியில் ஒரு நாளில் மட்டும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 2,079 பேர் குணமடைந்துள்ளனர்.
நேற்று ஒரு நாள் மட்டும் மொத்தம் 12 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது டெல்லியில் மொத்தம் 6,908 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று டெல்லி மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களாக டெல்லியில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் இன்று 4,519 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று
தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,519 ஆக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் இன்றைய நாளில் மட்டும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 20,237 பேர் குணமடைந்துள்ளனர். இன்று ஒரு நாள் மட்டும் மொத்தம் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது தமிழ்நாட்டில் மொத்தம் 90,137 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
உத்தர பிரதேச தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு ஓய்ந்தது - பிப்ரவரி 10இல் வாக்குப்பதிவு
பட மூலாதாரம், PIB INDIA
படக்குறிப்பு, கோப்புப்படம்
உத்தர பிரதேசத்தில் முதல் கட்டமாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ள 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது. அங்கு பிப்ரவரி 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும், உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
உத்தர பிரதேசத்திற்கு ஏழு கட்டங்களாகவும், பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகவும் மணிப்பூர் மாநிலத்திற்கு இரு கட்டமாகவும் தேர்தல் நடைபெறும்.
பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா ஆகிய 3 மாநிலங்களுக்கு பிப்ரவரி 14 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் உத்தர பிரதேசத்துக்கான முதல் கட்ட தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது.
டெல்லியை அடுத்த காஜியாபாத், நொய்டா, ஆக்ரா, மதுரா, ஃபடேபுர் சிக்ரி, அலிகர், மீரட் உள்பட 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் அதிகபட்சமாக மதுரா தொகுதியில் 27 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
உத்தர பிரதேச தேர்தல் நாட்கள்
முதல் கட்டம் - பிப்ரவரி 10
இரண்டாம் கட்டம் - பிப்ரவரி 14
மூன்றாம் கட்டம் - பிப்ரவரி 20
நான்காம் கட்டம் - பிப்ரவரி 23
ஐந்தாம் கட்டம் - பிப்ரவரி 27
ஆறாம் கட்டம் - மார்ச் 3
ஏழாம் கட்டம் - மார்ச் 7
இலங்கை கடற்படை சிறைப்பிடித்த தமிழக மீனவர்களை விடுவிக்க பிரதமர் மோதிக்கு தமிழ்நாடு முதல்வர் கடிதம்
இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட 29 மீனவர்கள், 79 படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்கத்தைச் சேர்ந்த அப்பாவி மீனவர்கள் திரும்பத் திரும்ப இலங்கை கடற்படை கைது செய்து வருவதாகவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
'ஆளுநர் தனது வரம்புக்குள் இருக்க வேண்டும்'- காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் கருத்து.
தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியது குறித்து பேசிய காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, ‘ஆளுநர் தனது வரம்புக்குள் இருக்க வேண்டும். தமிழக மக்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவை ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார். முதல்வர் ஒரு ஹை ஓல்ட்ஹெஜ், அவரை நெருங்க முடியாது. குடியரசு தலைவருக்கான அதிகாரத்தை ஆளுநர் பயன்படுத்தி உள்ளது ஏற்கத்தக்கதல்ல. ஒரு போதும் தமிழகம் தொட்டத்தை விடாது’ என்று தெரிவித்தார்.
போட்டியின்றி 2 பாஜக வேட்பாளர்கள் உள்ளாட்சித் தேர்தலில் தேர்வு
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்க இரண்டு தினங்களே இருக்கக் கூடிய சூழ்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆரல்வாய்மொழி பஞ்சாயத்து இரண்டாவது வார்டில் மாதவன் பிள்ளை, இரணியல் டவுன் பஞ்சாயத்து உட்ப்பட்ட 12 வது வார்டில் ஸ்ரீகலா ஆகிய நபர்கள் தேர்வாகியுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் .
அனைவரும் சமம் என்ற கருத்திற்கு எதிராக ஒரு தரப்பு இயங்கி வருவதாக கனிமொழி எம் பி ட்வீட்
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய மாநில அரசு தடை விதித்த விவகாரத்தில் மக்களவையில் இருந்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
கர்நாடக சம்பவத்தை மேற்கோள்காட்டி திமுக எம்.பி கனிமொழி ஒரு இடுகையை பதிவிட்டுள்ளார். அதில், "இந்திய அரசியலமைப்பின்படி சாதி, மதம், மொழி, இன பேதங்கள் இன்றி அனைவரும் சமம் என்ற கருத்திற்கு எதிராக தொடர்ந்து ஒரு தரப்பு இயங்கி வருகிறது. அவர்களின் சதிக்கு சில கல்வி நிறுவனங்களும் பலியாகி வருகின்றன. மத நல்லிணக்கம், வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் பண்பாட்டையும், அரசியலமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் காப்பதற்கு ஒன்று கூட வேண்டிய நேரமிது. பெண்கள் என்ன ஆடை உடுத்துகிறார்கள் என்பதில்லை இந்த சமூகத்தின் பிரச்னை" என கனிமொழி குறிப்பிட்டிருக்கிறார்.
ஹிஜாப் விவகாரம்: மக்களவையில் இருந்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
மக்களவையில் இருந்து திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக, மதிமுக, ஐ.யூ.எல்.எம், ஜே.எம்.எம், உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிய தடை விதிப்பது தவறானது எனக் கூறி எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டதாக தகவல்
இன்று காலை நடந்த தமிழ்நாடு சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மசோதா நிறைவேற்றப்பட்டது. காலையில் நிறைவேற்றப்பட்ட மசோதா தற்போது மாநில ஆளுநருக்கு அனுப்பப்பட்டுவிட்டது என தெரிவித்துள்ளனர்.
இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸை, இந்திய வெளியுறவுத்துறை செயலாளருடன் சந்திப்பு
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸை, இன்று இந்திய வெளியுறவுத் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா சந்தித்துப் பேசியுள்ளதாகவும், அப்போது இரு நாட்டு மக்களிடம் ஆரோக்கியமான உறவை வலுப்படுத்துவது உட்பட பல துறைகளில் உறவை வலுப்படுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
"மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும்" - கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற ஹிஜாப் அணியும் விவகாரத்தில் மத்திய அமைச்சர் கருத்து
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
கர்நாடகா மாணவிகள் ஹிஜாப் அணியும் விவகாரத்தில் "மாணவ, மாணவிகள் அனைவரும் பள்ளி நிர்வாகம் பரிந்துரைக்கும் ஆடைகளை பின்பற்ற வேண்டும். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும். இந்த பிரச்னையில் மாணவர்களை தூண்டுவது யார் என்பதை நாம் கண்டறியவேண்டும்," என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கருத்து தெரிவித்துள்ளார்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, கர்நாடகாவில் தீவிரமாகும் ஹிஜாப் போராட்டங்கள் - 3 நாட்களுக்கு பள்ளிகளை மூட மாநில அரசு உத்தரவு
கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வருவதை தடை செய்யும் அரசாணைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாகி வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடகா உயர் நீதிமன்றம், மாணவ சமுதாயம் உணர்ச்சி வசப்படாமல் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கர்நாடகாவில் குறிப்பிட்ட சில பள்ளிகளின் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வந்த செயல்பாடு சர்ச்சையானது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு, 1
இந்த விவகாரத்தில் அவர்களுக்கு ஆதரவாக ஒரு பிரிவினரும், ஹிஜாப் அணிந்து வர அனுமதித்தால் காவி நிற ஆடையில் வருவோம் என மற்றொரு தரப்பும் போராட்டத்தில் குதித்துள்ளது.
பள்ளி வளாக அளவில் நடைபெற்ற இந்த போராட்டம் இப்போது கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் இருந்து மத்திய மற்றும் வடக்கு மாவட்டங்களில் நகரங்களில் வன்முறையாக விரிவடைந்தது.
தாவணகெரேவில் வன்முறையில் ஈடுபட்ட கும்பலை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
ஷிவமொக்காவில் மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடலோர நகரான உடுப்பி மற்றும் குந்தாபுராவில் மாணவிகள் ஹிஜாப் அணிந்ததற்கு எதிரான போராட்டங்களுக்கு மத்தியில் தொடங்கிய கல் வீச்சு சம்பவங்கள், வடக்கு கர்நாடகாவின் பாகல்கோட்டில் உள்ள பன்னஹட்டி வரை பரவியது.
அதே நேரத்தில் ஷிவமோகாவில் இரண்டு கல்லூரிகளில் நிலைமை கட்டுப்பாட்டை மீறியது. அங்கு கல்லூரியை மூட உத்தரவிடப்பட்டது. உடுப்பியிலும், பன்னஹட்டியிலும் மதிய உணவு நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பலப்பிரயோகம் செய்து காவல்துறையினர்
தாவணகெரேவில் போராட்டக்காரர்கள் கற்களை வீசி வாகனங்களுக்கு தீவைக்க முயன்றதைத்தொடர்ந்து இந்த வன்முறை தீவிரமானது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு, 2
இந்த விவகாரத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணுமாறு முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், பள்ளி-கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்திடமும், கர்நாடகா மக்களிடமும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணுங்கள். அடுத்த மூன்று நாட்களுக்கு அனைத்து உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூட உத்தரவிட்டுள்ளேன். இந்த விஷயத்தில் அனைவரின் ஒத்துழைப்பும் கோரப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
நூறு வயதிலும் காசாளர் பணி: தளராமல் உழைத்து உற்சாகமூட்டும் பாட்டி
காணொளிக் குறிப்பு, நூறு வயதிலும் தளராமல் உழைத்து உற்சாகமூட்டும் பாட்டி
பிபிசி தனது முதல் ஒளிபரப்பை தொடங்கிய 1922ஆம் ஆண்டு பெரில் பிறந்தார். பொருளாதாரமும் கலாசாரமும் பெரும் வளர்ச்சியை கண்ட காலத்தில் வளர்ந்தார்.
இப்போது அவருக்கு 100 வயது. தளராமல் உணவகம் ஒன்றில் காசாளராக பணியாற்றி வருகிறார்.
"தற்போது வரை 5 கோடி பதின்ம வயதினருக்கு முதலாவது தடுப்பூசி போடப்பட்டுள்ளது" - இந்திய சுகாதார அமைச்சர்
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
இந்தியாவில் இதுவரை, 15-18 வயதுக்குட்பட்ட 5 கோடி பதின்ம வயதினருக்கு முதலாவது கொரோனா தடுப்பூசி டோஸ் போடப்பட்டுள்ளது என்று இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் 3 நாட்களுக்கு கல்லூரி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளை மூட உத்தரவு
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
அனைத்து மாணவர்கள் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகங்கள், கல்லூரிகள் மற்றும் கர்நாடக மக்கள் அனைவரையும் அமைதி காக்கும்படியும், அடுத்த 3 நாட்களுக்கு கல்லூரி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளை மூட உத்தரவிட்டுள்ளதாகவும், இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும், கர்நாடக முதலமைச்சர் அறிவித்துள்ளார் .
முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கும், இந்து மாணவர்கள் காவி நிற துண்டு அணிவதற்கும் இடையிலான மோதல் பிரச்னை நடந்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சியின் முதல் 'மாநகர தந்தை' ஆகப்போவது யார்? - மேயர் பதவியைக் கைப்பற்ற திமுக வியூகம்
பட மூலாதாரம், TRICHIRAPPALLI CITY CORPORATION
திருச்சி 'மாநகர தந்தை' வாய்ப்பு முதல்முறையாக உருவாகியுள்ளது. பல்லாண்டு காலமாக மாநகராட்சியாக உள்ள திருச்சிக்கு இதுவரை பெண்கள் மட்டுமே திருச்சியின் மேயராக இருந்துள்ளனர்.
முக்கியத்துவம் வாய்ந்த மேயர் பதவியை பிடிக்க, திமுக, அதிமுக கட்சிகளில் பலத்த போட்டி நிலவுகிறது. மாநகராட்சி கவுன்சிலர்கள் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு, மறைமுகத் தேர்தல் மூலம்தான் மேயர், துணை மேயர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆகையால், மேயர், துணை மேயர் வேட்பாளர்கள் யார் என்பதை கட்சிகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனாலும், இவருக்குத்தான் வாய்ப்பு என்று கட்சியினர் வெளிப்படையாக பேசி வருகின்றனர்.