216 அடி உயர ராமானுஜர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோதி

இந்த ராமானுஜர் சிலையின் உயரம் 108 அடி. இதன் மேடையின் மொத்த உயரம் 54 அடி மற்றும் பத்ம பீடத்தின் உயரம் 27 அடி. அந்த இடத்திற்கு பத்ரபீடம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஆ. லட்சுமி காந்த் பாரதி

  1. அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணித்த அதிமுக

    அதிமுக

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே. பழனிசாமி

    தமிழ்நாடு மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு அளித்து சட்டப்பேரவை இயற்றிய மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பிய நிலையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி கலந்து கொள்ளவில்லை என்று அறிவித்த நிலையில் தற்போது அதிமுகவும் இந்தக் கூட்டத்தை புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

    கடந்ம ஆண்டு, செப்டம்பர் 13ஆம் தேதி தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி, சட்டப்பேரவையில் தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவை சட்டப்பேரவை சபாநாயகரின் மறுபரிசீலனைக்காக திருப்பி அனுப்பியுள்ளார், மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி.

    இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு சுமார் 5 மாதங்களுக்குப் பின் தமது நிலைப்பாட்டை ஆளுநர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  2. டொனால்ட் ட்ரம்பின் கூற்றை மறுத்த முன்னாள் அமெரிக்க துணை அதிபர்

    ஜோ பைடன்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

    முன்னாள் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், ஜோ பைடன் கடந்த வருடம் அதிபர் ஆவதை என்னால் தடுத்திருக்க முடியும் என்ற டொனால்ட் டிரம்பின் கூற்றை மறுத்துள்ளார். தேர்தலை மாற்றி அமைத்திருக்க முடியும் என்று டிரம்ப் கூறியது தவறு என்று கூறியுள்ளார்.

    குடியரசு கட்சி, கேப்பிட்டல் கலவரத்தை விசாரணை செய்த தனது 2 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கண்டித்துள்ளது. ஜோ பைடன் அதிபர் ஆனதை உறுதி செய்வதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கடந்த வருடம் ஜனவரி 6ஆம் தேதி கேப்பிட்டலில் கூடியபோது, ஒரு கும்பல் உள் நுழைந்தது.

    இந்தக் கலவரத்தில் நான்கு பேர் இறந்தனர். மேலும் ஒரு போலீஸ் அதிகாரி, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு அடுத்த நாள் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

  3. பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்!

    பிபிசி தமிழ் நேரலைக்கு வரவேற்கிறோம்

    தமிழ்நாடு, இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    இன்றைய முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவது ஆ. லட்சுமி காந்த் பாரதி.

    நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காண இங்கே சொடுக்கவும்.

    தொடர்ந்து இணைந்திருங்கள்.