பிப்ரவரி 1 முதல் ஒன்று முதல் பிளஸ்டூ வரை நேரடி வகுப்புகள் - தமிழக அரசு

தமிழ்நாட்டில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை நேரடி வகுப்புகள் தொடங்க அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தளர்வுகளுடன் கூடிய கொரோனா கட்டுப்பாடுகளை இன்று வெளியிட்டுள்ள தமிழக அரசு சில முக்கிய முடிவுகளை அறிவித்திருக்கிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

கௌதமன் முராரி

  1. ரஷ்யாவின் கோரிக்கையை நிராகரித்த அமெரிக்கா

    பீரங்கி

    பட மூலாதாரம், RUSSIAN DEFENCE MINISTRY

    யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுக்கக்கூடும் என்று மேற்குலக நாடுகள் எச்சரிக்கை விடுத்து வரும் சூழலில் யுக்ரேனை நேட்டோ அமைப்பில் சேர்க்க கூடாது என்ற ரஷ்யாவின் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஆண்டனி ப்ளிங்கன் ரஷ்யாவுக்கு வழங்கியுள்ள அலுவல்பூர்வமான பதிலில் இதைத் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்கா வழங்கியுள்ள பதிலை தங்கள் நாடு ஆய்வு செய்துவிட்டு தங்கள் தரப்பை தெரிவிக்கும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

    யுக்ரேனுடனான ரஷ்ய எல்லையில் சுமார் ஒரு லட்சம் ரஷ்ய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். யுக்ரேன் உடனான எல்லையில் படைகளை தொடர்ந்து அதிகரித்து வரும் ரஷ்யா அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறி வருகிறது.

  2. பிபிசி தமிழ் நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். தமிழ்நாடு, இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குபவர் கௌதமன் முராரி.

    தொடர்ந்து இணைந்திருங்கள்.