இந்தியா - மத்திய ஆசியா உச்சி மாநாடு: நாளை நடத்தும் பிரதமர் மோதி

இந்தியா - மத்திய ஆசிய நாடுகள் இடையிலான முதல் உச்சி மாநாடு நாளை வியாழக்கிழமை நடக்கவுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. நன்றி நேயர்களே!

    இன்றைய இந்த நேரலையில் இணைந்திருந்த நேயர்களுக்கு நன்றி.

    நாளை வேறொரு நேரலைப் பக்கத்தில் சந்திப்போம்.

    இந்த இரவு இனியதாகட்டும்.

  2. கச்சத்தீவு அந்தோனியார் தேவாலய விழாவுக்கு இந்திய யாத்ரிகர்களை அனுமதிக்க முடியாது - இலங்கை

    எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய உற்சவத்திற்கு, இந்திய யாத்திரிகர்களை அனுமதிக்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் தெரிவிக்கின்றார்.

    இந்தியாவில் பரவிவரும் கோவிட் ஒமிக்ரோன் தொற்று மற்றும் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு ஆகியவற்றை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

    இதன்படி, சுமார் 500 வரையான மட்டுப்படுத்தப்பட்ட இலங்கை யாத்திரிகர்களுடன் இம்முறை உற்சவம் நடத்தப்படவுள்ளது.

    இலங்கை சுகாதார அதிகாரிகளினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

    கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த உற்சவம் இம்முறை மார்ச் மாதம் 11 மற்றும் 12ம் தேதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  3. இந்தியா - மத்திய ஆசியா உச்சி மாநாடு நாளை நடத்தும் பிரதமர் மோதி

    முதல் இந்தியா - மத்திய ஆசியா மாநாட்டை நாளை வியாழக்கிழமை இணைய வழியில் நடத்துகிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி.

    இதில் உறவை மேம்படுத்துவதற்கான வழிகள், பாதுகாப்பு சூழ்நிலைகள் ஆகியவை குறித்து தலைவர்கள் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  4. வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழ்நாட்டில் பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

    தமிழ்நாட்டில் பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனி குமார் அறிவித்துள்ளார்.

    உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

    எல்லா இடங்களிலும் மின்னணு முறையில் வாக்குப் பதிவு நடைபெறும்.

    பிப்ரவரி 22ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்.

    மனுத்தாக்கல் தொடக்கம் - 28.01.2022மனுத்தாக்கல் முடிவு - 04.02.2022 வேட்புமனு பரிசீலனை - 05.02.2022 வேட்புமனு திரும்பப் பெற - 07.02.2022

    பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தலைவர், துணைத் தலைவர், மேயர், துணை மேயர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் மார்ச் 4ம் தேதி நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா பரவலை கவனத்தில் கொண்டு, ஜனவரி 31 வரை பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். 80 ஆயிரம் போலீசார் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

  5. தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

    இந்த ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள முதலமைச்சர் யார் யாருக்கு இந்த விருந்து என்றும்அதில் வெளியிட்டுள்ளார்.

    மேலும் இந்த ஆண்டு முதல் முதல் விருது பெறும் ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகை ரூபாய் 1 லட்சத்தில் இருந்து ரூபாய் 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இது தவிர, ஒரு சவரன் தங்கப்பதக்கம், விருதுக்கான தகுதியுரை ஆகியன வழங்கி பொன்னாடை அணிவித்து விருதாளர்கள் சிறப்பிக்கப்படுவர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

    பேரறிஞர் அண்ணா விருது நாஞ்சில் சம்பத்திற்கும் ஜி.யு. போப் விருது பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வனுக்கும் அயோத்திதாச பண்டிதர் விருது ஞான. அலாய்சியஸிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  6. இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் இனிப்புகளை பகிர்ந்துகொண்ட எல்லை பாதுகாப்பு வீரர்கள்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    இந்தியா முழுவதும் இன்று 73-வது குடியரசு தினவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் மற்றும் ஜெய்சால்மர் மாவட்டங்களில் உள்ள சர்வதேச எல்லையில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தான் வீரர்களுக்கு குடியரசு தின கொண்டாட்ட நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இனிப்புகளை வழங்கினர்.

  7. திருச்சியில் சுதந்திர போராட்ட வீரர்கள் உருவங்களுடன் பேரணி

    குடியரசு தின விழா

    பட மூலாதாரம், DYFI

    திருச்சியில் சுதந்திர போராட்ட தலைவர்கள் உருவங்களுடன் அலங்கார ஊர்தி பேரணி மற்றும் உறுதி மொழி ஏற்பு நடைபெற்றது.

    இந்திய குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் உருவம் பொறித்த முகமூடி அணிந்தும் விடுதலைப் போராட்ட வீரர்களின் அலங்கார ஊர்தி பேரணி மற்றும் உறுதி ஏற்பு நிகழ்ச்சியும் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

    ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.சுரேஷ் தலைமையில், வாலிபர்சங்கத்தின் மாநகர் மாவட்டச் செயலாளர் பா.லெனின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் S.ஸ்ரீதர், மாநகர் மாவட்ட செயலாளர் R.ராஜா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

    சுதந்திர போராட்ட வீராங்கனை ராணி வேலு நாச்சியார், வ.உ.சிதம்பரனார், பாரதியார் உள்ளிட்டோர் உருவங்களுடன் வடிவமைக்கட்ட அலங்கார ஊர்தியை முக்கிய சாலைகளில் இயக்கினர்.

  8. பிகாரில் ரயிலுக்கு தீ வைப்பு - ரயில்வே தேர்வில் முறைகேடு என நடைபெற்ற போராட்டத்தில்

    பிஹார் போராட்டம்

    பட மூலாதாரம், ANI

    பிகார் மாநிலம் கயாவில் ரயில்வே தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரயிலுக்கும் தீ வைத்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கயாவில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், ''சிபிடி 2 தேர்வு தேதி அறிவிக்கப்படவில்லை. இது குறித்த எந்தவித புதிய தகவலும் இல்லை. முடிவுக்காக காத்திருக்கிறோம். எனவே தேர்வு முடிவை வெளியிட வேண்டும்'' என்று தெரிவித்தனர்.

    இது குறித்து கயா எஸ்.பி ஆதித்ய குமார் கூறுகையில், தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. போராட்டக்குழுவினர் ரயிலுக்கு தீ வைத்தனர். அவர்களில் சிலரை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம் என்றார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  9. எடப்பாடி பழனிசாமியிடம் வருத்தம் தெரிவித்த அண்ணாமலை

    அண்ணாமலை

    பட மூலாதாரம், BJP TN

    படக்குறிப்பு, கே. அண்ணாமலை

    தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சட்டப்பேரவைக்குழு தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுகவில் உள்ள தலைவர்களை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்த விவகாரத்தில், அவரது கருத்து கட்சியினுடையது ஆகாது என்று தெளிவுபடுத்தியிருக்கிறார் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே. அண்ணாமலை.

    இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''நயினார் நாகேந்திரன் விஷயத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசி வருத்தம் தெரிவித்துக் கொண்டுள்ளதாக.'' கூறினார்.

    அதிமுக, பாஜக இடையிலான அரசியல் உறவு சமூகமாக இருப்பதாகக் கூறிய அவர், ''அந்த உறவில் எவ்வித பதற்றமும் ஏற்படாமல் இருக்க பார்த்துக் கொள்வேன்'' என்று தெரிவித்துள்ளார்.

  10. சேலம் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா - தேசிய கொடி ஏற்றிய டிஆர்ஓ

    சேலம்

    சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, மாவட்ட வருவாய் அலுவலர் தேசிய கொடியை ஏற்றினார்.

    சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், காய்ச்சல் காரணமாக கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதனைத்தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில், சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கவிதா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

  11. கச்சத்தீவில் தேசிய கொடி ஏற்ற போராட்டம் - ராமேஸ்வரத்தில் 50 பேர் கைது

    சிவசேனா போராட்டம்

    கச்சத்தீவில் தேசியக் கொடி ஏற்றுவதாக சென்ற 50க்கும் மேற்பட்டவர்கள் ராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டனர்.

    இந்திய மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை மத்திய அரசு பெற்றுத்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, குடியரசு தின நாளான இன்று சிவசேனா கட்சி மாநில துணை தலைவர் போஸ் தலைமையில் ராமேஸ்வரத்தில் கச்சத்தீவு மீட்கும் போராட்டடம் நடைபெற்றது.

    ராமேஸ்வரம் - திட்டக்குடி சந்திப்பில் இருந்து 50க்கும் மேற்பட்ட சிவசேனா கட்சியை சேர்ந்தவர்கள் பேரணியாக, அக்னி தீர்த்த கடற்கரை வழியாக கச்சத்தீவு செல்ல முயன்றனர்.

    அவர்களை காவல்துறையினர் கடலில் இறங்க விடாமல் தடுத்து, நிறுத்தினர். இதனால், தேசிய கொடியுடன் கச்சத்தீவைத் திரும்பப் பெற வேண்டும், தமிழக மீனவர்கள் பாரம்பரிய இடத்தில் மீன்பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

  12. நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா

    தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

    தெலுங்கு திரைப்பட நடிகர் சிரஞ்சீவிக்கு லேசான அறிகுறியுடன், செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து, ''வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும்''. என்று சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  13. நாகை மீனவர்கள் மீது தாக்குதல், கொள்ளை - போலீசார் விசாரணை

    தமிழ்நாடு மீனவர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல் நடத்தி 4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடித்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம் மாவட்டம் ஆரியநாட்டு தெருவைச் சேர்ந்த சேர்ந்தவர் சுப்புராஜ் இவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே ஊரைச் சேர்ந்த வசந்தபாலன், நிர்மல், மணிகண்டன், தில்லைநாதன் ஆகிய 4 மீனவர்களும் நேற்று மதியம் நாகை கடற்கரையில் இருந்து பைபர் படகில் மீன்பிடிக்க சென்றனர்.

    இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, இரண்டு படகில் 8 பேர் இவர்களின் படகில் ஏறி, அரிவாளால் வெட்டியதாகவும் படகில் இருந்த 60 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய மீன்கள், 2 செல்போன்கள், ஜிபிஎஸ் கருவி, வலைகள் ,படகு இன்ஜின் உள்ளிட்ட 4 லட்ச ரூபாய் மதிப்புடைய பொருட்களை கொள்ளையடித்து கொண்டு சென்றுவிட்டதாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் புகார் அளித்தனர்.

    காயம்பட்ட 4 மீனவர்களும் ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு வந்து , அங்கிருந்து வேதாரண்யம் அரசு மருத்துவனைக்கு சென்று சிகிச்சை பெற்றனர்.

    இதில், வசந்தபாலன், நிர்மல் இருவரும் மேர் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், தில்லைநாதன், மணிகண்டன் இருவரும் மேற் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

  14. புதுச்சேரியில் தேசிய கொடியை ஏற்றி வைத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை, நடராஜன் சுந்தர்

    புதுச்சேரி
    படக்குறிப்பு, புதுச்சேரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசிய கொடியை ஏற்றும் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன்.

    இந்தியாவின் 73வது குடியரசு தின விழாவை முன்னிட்டு புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தேசிய கொடி ஏற்றி காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    கொரோனா பரவல் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளுக்கு இடையே குடியரசு தின விழா புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி திடல் முன்பு நடைபெற்று வருகிறது.

    குடியரசு தினம்

    இதில், தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன், இன்று காலையில் தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

    பிறகு தனி விமானம் மூலம் புதுச்சேரி வந்த அவர், இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய கொடியை ஏற்றினார்.

    குடியரசு தினம்

    பட மூலாதாரம், PIB MOD

    இதையடுத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து, முன்னாள் ராணுவத்தினர் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், காவல்துறை தலைவர் உள்ளிட்ட அரசு துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  15. வந்துகொண்டிருக்கும் செய்தி, 21 குண்டுகள் முழங்க தேசிய கொடியை ஏற்றினார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

    குடியரசு தினம்

    பட மூலாதாரம், MOD - PIB

    படக்குறிப்பு, ராம்நாத் கோவிந்த், இந்திய குடியரசு தலைவர்
    குடியரசு தினம்

    பட மூலாதாரம், MOD - PIB

    படக்குறிப்பு, நரேந்திர மோதி, இந்திய பிரதமர்

    இந்தியாவின் 73ஆவது குடியரசு தினத்தையொட்டி, டெல்லி ராஜ்பாத்தில் தேசிய மூவர்ண கொடியை ஏற்றினார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.

    அப்போது தேசிய கீதம் பின்னணியில் இசைக்கப்பட, 21 குண்டுகள் முழங்கப்பட்டன.

    பிரதமர் நரேந்திர மோதி, மத்திய அமைச்சர்கள், இந்திய முப்படை தளபதிகள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    குடியரசு தலைவர்

    பட மூலாதாரம், MOD - PIB

    நரேந்திர மோதி

    பட மூலாதாரம், MOD - PIB

  16. இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2.85 லட்சம் ஆக பதிவானது

    கொரோனா

    பட மூலாதாரம், Getty Images

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 2, 85,914 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

    இந்தியா முழுவதும் ஒரு நாளில் மட்டும் 665 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஒரு நாளில் 2, 99, 073 பேர் சிகிச்சை முடிந்து நலம் பெற்றுள்ளனர். தற்போது வரை மொத்தம் 22, 23, 018 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    தினசரி தொற்று விகிதம் 16.16 விழுக்காடாக உள்ளது. இது வரை மொத்தம் 1,63,58,44,536 பேருக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது என்று இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  17. வந்துகொண்டிருக்கும் செய்தி, டெல்லி போர் நினைவுச்சின்னத்தில் பிரதமர் நரேந்திர மோதி மரியாதை

    டெல்லியில் போர் நினைவுச் சின்னத்தில் பணியில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் நினைவாக அங்குள்ள நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி.

    அவரைத் தொடர்ந்து முப்படைத்தளபதிகளும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    இதேவேளை, குடியரசு தின அணிவகுப்பு விழா நடைபெறும் ராஜ்பாத் பகுதிக்கு இந்திய குடியரசு தலைவரும் முப்படைகளின் தலைமை தளபதியுமான ராம்நாத் கோவிந்தை அவரது மாளிகையில் இருந்து ராணுவ உயரதிகாரிகள் அவரது மெய்க்காப்பாளர்கள் புடை சூழ அழைத்து வருகின்றனர்.

    குடியரசு தலைவர்

    பட மூலாதாரம், MOD-PIB

    ராஜ்பாத்துக்கு குடியரசுத் தலைவர் வருகை தரும் முன்பாக அந்த பகுதிக்கு பிரதமர் நரேந்திர மோதி முன்கூட்டியே வருகை தந்து ராம்நாத் கோவிந்தை வரவேற்க தயாராக காத்திருக்கும் வகையில் நிகழ்ச்சி நேர அட்டவணை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

    குடியரசு தலைவர்

    பட மூலாதாரம், MOD-PIB

    குடியரசு தலைவர்

    பட மூலாதாரம், MOD - PIB

  18. தெலங்கானா, புதுச்சேரியில் அடுத்தடுத்து தேசிய கொடி ஏற்றிய தமிழிசை

    தமிழிசை

    பட மூலாதாரம், Dr.Tamilisai Soundararajan

    படக்குறிப்பு, தெலங்கானா மாநில குடியரசு தின விழாவில் ஆளுநர் தமிழிசை

    தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை வகித்து வரும் தமிழிசை செளந்தர்ராஜன், இன்று காலையில் தெலங்கானா மாநிலத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்த பிறகு, புதுச்சேரி வந்து அங்கு நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் தேசிய கொடியை ஏற்றினார்.

  19. ஃபுளோரிடா கடலில் படகு மூழ்கியதில் டஜன் கணக்கானோர் மாயம்

    அமெரிக்க கடலோர காவல் படை

    பட மூலாதாரம், US COAST GUARD

    படக்குறிப்பு, ஃபுளோரிடா கடல் பகுதியில் மூழ்கும் நிலையில் இருக்கும் படகு மேல் உயிருக்கு போராடிய நபர் (நாள்: செவ்வாய்க்கிழமை)

    அமெரிக்காவின் ஃபுளோரிடா கடல் பகுதியில் சனிக்கிழமை இரவு கப்பல் கவிழ்ந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் கடலில் மூழ்கிய 39 பேரை காணவில்லை என்று அமெரிக்க கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களை தேடும் பணி தொடர்வதாக அவர்கள் கூறியுள்ளனர்.

    ஃபோர்ட் பியர்ஸ் நகரிலிருந்து 45 மைல் (72 கிமீ) தொலைவில் மூழ்கும் நிலையில் இருந்த ஒரு படகின் மேலோட்டத்தில் ஒருவர் ஒட்டிக்கொண்டிருப்பதை மீனவர்கள் கண்டதும் அது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    கடந்த சனிக்கிழமை இரவு பஹாமாஸின் பிமினியில் இருந்து படகில் சிலர் புறப்பட்டபோது மோசமான வானிலையால் படகு கடலில் மூழ்கியதாக உயிர் பிழைத்தவர் கூறியுள்ளார்.

    இந்த படகு நாட்டுக்குள் நுழைய முற்படும் நபர்களை கடத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடையாளம் காணப்படாத உயிர் பிழைத்தவரின் கூற்றுப்படி, படகில் இருந்தவர்கள் யாரும் உயிர்காக்கும் அங்கிகளை அணிந்திருக்கவில்லை.

  20. தமிழ்நாட்டில் 8 பேருக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம்

    சென்னை குடியரசு தின விழா

    பட மூலாதாரம், CMOTamilNadu

    குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் 8 பேருக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன.

    இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றினார்.

    விழாவில், திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நீரில் முழ்கிய சிறுமியை காப்பாற்றிய சிறுவன் லோகித், உயிருக்கு போராடியவரை தோளில் தூக்கிச் சென்ற டி.பி சத்திரம் காவல் ஆய்வாளார் ராஜேஸ்வரி, கோவை வன கால்நடை மருத்துவர் அசோகன், திருப்பூரில் நீரில் முழ்கிய 5 சிறுமிகளைக் காப்பாற்றிய சொக்கநாதன், சுதா, மதுரையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்ட ஓட்டுநர் முத்துகிருஷ்ணன், திருவெற்றியூரில் கட்டட விபத்தின் போது காப்பாற்றிய தனியரசு, விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூரில் வெள்ளத்தில் தவித்தவர்களை காப்பாற்றிய தீயணைப்புத்துறை ராஜீவ்காந்தி ஆகியோருக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த பதக்கத்துடன் ரூபாய் ஒரு லட்சம் காசோலையும் வழங்கப்பட்டது.

    மேலும், சிறந்த காவல் நிலையமாக திருப்பூர் தெற்கு காவல் நிலையம், திருந்திய நெல் சாகுபடியை சிறப்பாக செய்து அதிக மகசூல் பெற்ற விவசாயி ராமசாமி, காவலர்கள் 5 பேருக்கு காந்தியடிகள் விருது உள்ளிட்டவையும் வழங்கப்பட்டது.

    டெல்லியில் நடைபெறும் விழாவில் அலங்கார அணி வகுப்பில் அனுமதி மறுக்கப்பட்ட, தமிழ்நாட்டின் ஊர்திகள் உள்ளிட்ட 4 அலங்கார ஊர்திகளின் அணி வகுப்பு நடைபெற்றது. வேலு நாச்சியார், வ.உ.சி, பாரதியார் உருவங்கள் கொண்ட ஊர்தி இடம் பெற்றது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரை மணி நேரத்திற்குள் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றது.