You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது- முன்னாள் அமைச்சர் தங்கமணி

உலக நாடுகள் விரிவான நடவடிக்கை எடுத்தால் கொரோனாவுக்கு இந்த ஆண்டே முடிவு கட்டலாம் என்று கூறியிருக்கிறார் உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானம் கேப்ரெயேசூஸ்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஆ. லட்சுமி காந்த் பாரதி

  1. கொரோனாவுக்கு இந்த ஆண்டே முடிவு கட்டலாம்: WHO தலைமை இயக்குநர்

    உலக நாடுகள் விரிவான நடவடிக்கை எடுத்தால் கொரோனாவுக்கு இந்த ஆண்டே முடிவு கட்டலாம் என்று கூறியிருக்கிறார் உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானம் கேப்ரெயேசூஸ்.

    உலக சுகாதார அமைப்பு செயற்குழுவின் 150ஆவது அமர்வு ஜெனீவாவில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய டெட்ரோஸ், கொரோனாவை ஒழிப்பதில் பிராந்திய, தேசிய, சர்வதேச அளவில் உலக சுகாதார அமைப்பு பணியாற்றி வருகிறது என்று கூறினார். சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு கொரோனாவை கட்டுப்படுத்தத் தேவைப்படும் வளங்கள், வியூகங்கள், தொழில்நுட்ப ஞானம் போன்றவற்றை தமது அமைப்பு வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

    கொரோனாவில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு நெருக்கடியான சூழலை தடுக்க புதிய தீர்வை உருவாக்க வேண்டும் என்று டெட்ரோஸ் அதானம் கேப்ரெயேசூஸ் வலியுறுத்தினார்.

  2. பிபிசி தமிழ் நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்.

    தமிழ்நாடு, இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குபவர் ஜோ மகேஸ்வரன்.

    தொடர்ந்து இணைந்திருங்கள்.. நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காணஇங்கே சொடுக்கவும்.