எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான தர வரிசைப்பட்டியல் இன்று வெளியீடு.
தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு, அரசு மருத்துவ கல்லூரிகளின் மாநில ஒதுக்கீட்டில் 4,349 இடங்கள் உள்ளன.
மேலும், சுயநிதி கல்லூரிகளின் மூலம் கிடைக்கும் இடங்கள் 2650 என மொத்தம் 6999 மருத்துவப் படிப்புக்கான இடங்கள் உள்ளன.
இந்த இடங்களுக்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
இந்த தரவரிசைப் பட்டியலையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மாலை http://tnhealth.tn.gov.in , https://tnmedicalselection.net ஆகிய இணையதளங்களில் வெளியிடுகிறார்.
ஜனவரி 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாட்களில்,அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது என்றும் இந்தக் கலந்தாய்வு கொரோனா கட்டுப்பாடுகளுடன் சமூக இடைவெளியை பின்பற்றி நேரடியாக நடத்தப்படவுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.





