ஒமிக்ரான் சமூக பரவல் நிலையை எட்டியது - இந்திய சுகாதார அமைச்சகத்தின் அமைப்பு

இந்தியாவில் ஒமிக்ரான் தற்போது சமூக பரவல் நிலையில் உள்ளது. பல பெருநகரங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது என்று இந்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அமைப்பு தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. நன்றி நேயர்களே!

    இன்றைய இந்த நேரலைப் பக்கத்தில் எங்களோடு இணைந்திருந்த நேயர்களுக்கு நன்றி.

    நாளை மீண்டும் ஒரு நேரலைப் பக்கத்தில் சந்திப்போம்.இந்த இரவு இனியதாகட்டும்.

  2. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வெடித்த நாட்டு வெடிகுண்டு: வல்லுநர்கள் ஆய்வு

    நாட்டு வெடிகுண்டு

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது தெற்கு கோட்டையூர் மேற்கு காலனி நாட்டு வெடிகுண்டு வெடித்தது.

    இந்த பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் ஆதிதிராவிட நல உயர்நிலைப்பள்ளியின் பின்புறம் மக்கள் நடமாட்டம் உள்ள தரிசு நிலத்தில் அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் இன்று மதியம் டிராக்டர் ஓட்டி சென்றுள்ளார்.அப்போது தரிசு நிலத்தில் கிடந்த நாட்டு வெடிகுண்டு மீது டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியுள்ளது.

    இதனால் நாட்டு வெடிகுண்டு வெடித்து பெரும் சத்தம் கேட்டுள்ளது. பின்னர் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் மற்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் வெடிகுண்டு வெடித்த இடத்தில் போலீசார் நடத்திய விசாரணையில் அதே இடத்தில் மேலும் 6 நாட்டு வெடிகுண்டுகள் கிடப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்து மேலும் ஏதேனும் குண்டு உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

  3. சஹாரா பாலைவனத்தில் பனிப் பொழிவு - அழகிய காட்சியும் பின்னணித் தகவல்களும்

    காணொளிக் குறிப்பு, சஹாரா பாலைவனத்தில் பனிப் பொழிவு - அழகிய காட்சிகள்
  4. இந்திய ஆட்சிப்பணி விதிகள் திருத்தம் - கூட்டாட்சிக்கு எதிரானது - மு.க.ஸ்டாலின்

    தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்

    பட மூலாதாரம், CMOTamilNadu

    இந்திய ஆட்சிப் பணி விதிகள் திருத்தம் செய்யும் முடிவினை மத்திய அரசு கைவிட வேண்டும் என பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    இந்திய பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், `அகில இந்திய ஆட்சிப் பணி விதிகள் 1954ல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் இந்திய கூட்டாட்சித் தத்துவத்திற்கும் மாநில சுயாட்சிக்கும் எதிரானது. இந்த உத்தேச திருத்தங்களுக்கு என்னுடைய கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

  5. சென்னையில் கொரோனா தொற்று குறைகிறது - சுகாதாரத்துறை செயலாளர்

    சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

    பட மூலாதாரம், Ma Subramanian

    சென்னையில் கொரோனா தொற்றுப் பரவல் குறையத் தொடங்கியுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் கடந்த 22 ஆம் தேதி நிலவரப்படி தொற்று பாதிப்பு என்பது மாநிலம் முழுவதும் 30,744 என்ற அளவில் உள்ளது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, ஈரோடு, திருப்பூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தொற்றுப்பரவல் அதிகரித்தபடியே உள்ளது. தற்போது வரையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களில் 95 சதவிகிதம் பேர் இணைநோய் உள்ளவர்கள் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், சென்னையில் கொரோனா தொற்றுப்பரவல் குறைந்து வருவதாக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், `` சென்னையில் கொரோனாவின் தாக்கம் தற்போது குறையத்தொடங்கியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 100 பேரில் ஒருவர் என்ற அளவில் இருந்த இறப்புவிகிதமும் தற்போது ஆயிரம்பேரில் ஒருவர் என்ற அளவில் குறைந்துள்ளது. அதேபோல் நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தேவையும் 500 மெட்ரிக் டன் என்ற அளவில்இருந்து 117 ஆக குறைந்துள்ளது'' என்றார்.

    மேலும், கொரோனாதொற்றால்பாதிக்கப்படுகிறவர்களின்எண்ணிக்கை 30 சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகிதமாகக் குறைந்து விட்டதாகக் குறிப்பிட்ட ராதாகிருஷ்ணன், `` மணலி, அம்பத்தூர், மாதவரம் ஆகிய மண்டலங்களில் கொரோனா தொற்றைக் குறைப்பது சவாலாக உள்ளது. மக்களும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியதால் சென்னையில் குறையத் தொடங்கியுள்ளது.

    கோயம்புத்தூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி, நாகை உள்பட 30 மாவட்டங்களில் பரவல் அதிகரித்துள்ளது. கூடுதல் தவணை தடுப்பூசிகளையும் மக்கள் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். நோய்த் தொற்றின் தாக்கம் குறையும் போதுதான் வாரத்தின் இறுதி நாளில் உள்ள ஊரடங்கை கைவிடுவது பற்றி அரசால் முடிவெடுக்க முடியும்'' என்றார்.

  6. டோங்கா எரிமலைச் சாம்பல் பூமியை குளிர்விக்குமா ? என்கிற கேள்வி எழுந்துள்ளது

    கடந்த சனிக்கிழமை டோங்காவில் எரிமலை வெடித்தது எந்த அளவுக்கு ஆற்றல் மிக்கதாகவும் அபாயகரமானதாகவும் இருந்தது என்பதற்கு அடையாளமாக அதன் ப்ளூம் எனப்படும் சாம்பல் மேகம் அடைந்த உயரம் கருதப்படுகிறது.

    இது பூமியைக் குளிர்விக்குமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.இது குறித்த விரிவான செய்திக்கு இங்கே சொடுக்கவும்

  7. தேனியில் யானை தந்தங்களை கடத்திய 10 பேர் கைது

    யானை தந்தங்கள் பறிமுதல்

    கடத்தி வரப்பட்ட யானை தந்தங்களை விற்க முயன்ற 10 பேர் தேனி மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    யானை தந்தங்களைக் கடத்தி வந்து தேனி மாவட்டம் பெரியகுளம் வத்தலகுண்டு சாலையில் விற்பனை செய்ய முயற்சிப்பதாக, தேவதானப்பட்டி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனச்சரக அதிகாரி டேவிட் ராஜ் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்பகுதியில் நின்று கொண்டிருந்தவர்களை சோதனை செய்ததில் யானை தந்தங்களை கடத்தி பதுக்கி, இருவர் விற்க முயன்றது தெரியவந்தது.

    இதனையடுத்து அவர்களிடம் இருந்து 2 யானைத் தந்தங்களை பறிமுதல் செய்தனர். யானைத் தந்தங்களைப் பதுக்கி வைத்திருந்து, விற்பனை செய்ய முயற்சித்ததாக ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, தேவதானப்பட்டி பகுதியைச் சேர்ந்த 10 நபர்களை வனத்துறையினர் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

  8. நெல்லை ஹரி நாடார் மீது மனைவி புகார்

    ஷாலினி

    விவாகரத்துக்கு சம்மதிக்காததால் கொலை மிரட்டல் விடுத்ததாக ஹரி நாடார் மீது அவரது மனைவி நெல்லை எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளார்.

    பனங்காட்டுப் படை கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் ஹரி நாடார். திருநெல்வேலி மாவட்டம் மேல இலந்தை குளத்தை சேர்ந்தவர்.

    சட்டப்பேரவைத் தேர்தலில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டார். பணமோசடி வழக்கு ஒன்றில் கைதாகி, தற்போது சிறையில் உள்ளார்.

    இந்நிலையில் நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம், ஹரியின் மனைவி ஷாலினி தனது மகனுடன் வந்து புகார் அளித்தார். அதில், “என்னை காதலித்து கடந்த 5-12-2011 அன்று ஹரி திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்யும்போது இருவருக்கும் வசதி கிடையாது. மகன் பிறந்த பிறகும், சமுதாய கட்சியில் சேர்ந்த பிறகும் அவருக்கு வசதி கூடியது. அவரது நடவடிக்கைகள் மாறத் தொடங்கின," என்று கூறியுள்ளார்.

    மேலும் இது பற்றிக் கூறிய அவர், "என்னை விவாகரத்து செய்வதற்காக சென்னை குடும்ப நீதிமன்றத்தில் மூலம் வழக்கு தாக்கல் செய்தார். நான் எனது வழக்கறிஞர் மூலமாக அதில் ஆஜராகி சேர்ந்து வாழ விரும்புவதாக தெரிவித்தேன். இந்நிலையில் எனது அலைபேசி எண்ணிற்கு வெளிநாட்டு நம்பர் ஒன்றில் இருந்து அழைப்பு வரத் துவங்கியது. அந்த எண்ணில் பேசியவர் தன் பெயரை மஞ்சு என்று கூறினார். தான் மலேசியாவில் வசிப்பதாகவும் ஹரிநாடார் தனது கணவர் என்றும் தங்களுக்கு இரண்டு குழந்தை இருப்பதாகவும் தெரிவித்தார்.

    விவாகரத்து வழக்கில் சம்மதம் தெரிவித்து விடுமாறும் கூறினார். நான் முடியாது என்று தெரிவித்ததால் பலமுறை எனது செல்போனுக்கு கொலை மிரட்டல் ஆடியோக்களை அனுப்பிவருகிறார்," என்று குறிப்பிட்ட அவர், காவல்துறையில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.

  9. என்.எல்.சி 3ம் சுரங்கத்திற்கான இழப்பீட்டை வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிச்சாமி

    தமிழ்நாட்டில் புதிதாக துவங்க உள்ள என்.எல்.சியின் மூன்றாம் சுரங்கத்திற்கான இழப்பீட்டு நிவாரணத்தை வழங்கக்கோரும் மக்களின் கோரிக்கையை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

    இது குறித்த அவரது அறிக்கையில், ''லாபத்தில் இயங்கும் நெய்வேலி அனல்மின் நிலைய பங்குகளை மத்திய அரசு விற்க முயன்றபோது, மக்கள் நலனுக்காக தமிழக அரசின் சார்பாக சுமார் 5℅ பங்குகள் வாங்கப்பட்டன.

    பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் மீதும் அதற்கு நிலம் வழங்கியவர்கள் மீதும் ஜெயலலிதா அரசுக்கும், தொடர்ந்து எனது தலைமையிலான அரசுக்கும் இருந்த அக்கறையும் கரிசனமும் இந்த அரசுக்கு இல்லாதது வேதனைக்குரியது.

    ஏக்கர் ஒன்றுக்கு ஒரு கோடி ருபாய் நிலம் வழங்கியவர்களுக்கு நிவாரணமாய் வழங்க வேண்டும் எதிர்கட்சியாக இருந்த போது திமுக கோரிக்கை வைத்தது. ஆளும் கட்சியானவுடன் தனது நிலைப்பாட்டை வழக்கம்போல் மாற்றிக்கொண்டு, 17.01.2022 அன்று நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இரண்டு திமுக அமைச்சர்களும் மக்கள் கருத்தை கேட்காமல் நிர்வாகத்துடன் கைகோர்த்துக்கொண்டு கூட்டத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டமைக்கு NLC நிர்வாகத்திற்கும், இந்த அரசுக்கும் அஇஅதிமுக சார்பாக எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்று தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  10. காவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்க கர்நாடக அரசு சதி - விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் பேட்டி

    பி.ஆர்.பாண்டியன்

    பட மூலாதாரம், P.R.Pandian

    கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்குவதற்கான மறைமுக சதியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பிஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் மன்னார்குடியில் இன்று கூறுகையில், ''காவிரி மேலாண்மை ஆணையம் தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்பட முன்வந்துள்ளது. ஆணையத்திற்கு நிரந்தர தலைவர் நியமிக்கப்பட்டு, மாதந்தோறும் கூட்டங்களும் நடைபெற்று வருகிறது. வருகிற பிப்ரவரி 4-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம் நடைபெற உள்ளது. .

    நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, கர்நாடகம் துவங்கி தமிழகத்தில் மேட்டூர் அணை வரை அனைத்து அணைகளின் நீர் நிர்வாக அதிகாரங்கள் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதன் செயல்பாட்டை கண்காணிப்பதற்கு கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், கர்நாடக அரசு ஆணையத்தை முடக்குவதற்கான மறைமுக சதியில், தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

    மேட்டூர் அணை வரை ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், புதியகுடிநீர்திட்டத்திற்கு காவிரி மேலாண்மை ஆணைய அனுமதி வேண்டும். நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, குடிநீர் திட்டங்களை செயல்படுத்துவதற்கு எந்த தடையும் இல்லை. இருந்தாலும் அதற்கான அனுமதியை ஆணையத்தின் மூலம் தான் பெற வேண்டும். அதனை தமிழ்நாடுமுன்மாதிரியாக பின்பற்றி ஆணையத்தின் அதிகார வரம்பை உறுதிப்படுத்த வேண்டும்.'' என்றார்.

  11. திருச்சி ஜல்லிக்கட்டில் மாடு முட்டி இளைஞர் உயிரிழப்பு

    மாடு முட்டியதில் இளைஞர் உயிரிழப்பு

    பட மூலாதாரம், MKV

    திருச்சி மாவட்டம் பள்ளபட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடு முட்டி காயமடைந்த இளைஞர் உயிரிழந்தார்.

    திருச்சி மாவட்டம் நாகமங்கலம் அருகே பள்ளபட்டியில் தானா முளைத்த முத்துமாரியம்மன் கோயில் திடலில் ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. இதில், மொத்தம் 700 காளைகள் பங்கேற்றன. மொத்தம் 400 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர்.

    ஜல்லிக்கட்டில், மார்பில் மாடு முட்டியதில் படுகாயமடைந்த, திண்டுக்கல் மாவட்டம் புகையிலைப்பட்டியை சேர்ந்த சசி கில்பர்ட் (23) என்பவர், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று உயிரிழந்தார்.

  12. ஒமிக்ரான் சமூக பரவல் நிலையை எட்டியது - இந்திய சுகாதார அமைச்சகத்தின் அமைப்பு

    இந்தியாவில் ஒமிக்ரான் தற்போது சமூக பரவல் நிலையில் உள்ளது. பல பெருநகரங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது என்று இந்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அமைப்பு தெரிவித்துள்ளது.

    இந்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள INSACOG அமைப்பின் வாராந்திர அறிக்கையில், ஓமிக்ரான் இப்போது இந்தியாவில் சமூக பரவல் நிலையில் உள்ளது மற்றும் பல பெருநகரங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது என்று தெரிவித்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  13. தேடப்பட்ட அருணாச்சல பிரதேச இளைஞர் கண்டுபிடிக்கப்பட்டதாக சீன ராணுவம் தகவல்

    அருணாச்சல பிரதேச இளைஞர்

    பட மூலாதாரம், Tapir Gao

    அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞர் மிராம் தரோம் சீனாவில் உள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

    அருணாச்சல பிரதேசத்தில் இருந்து காணாமல் போன இளைஞரை கண்டுபிடித்துள்ளதாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அவரை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுள்ளதாக இந்திய பாதுகாப்பு படையின் தேஜ்பூர் லெப்டினன்ட் கர்னல் ஹர்ஷ்வர்தன் பாண்டே தெரிவித்துள்ளார்.

    அருணாச்சல பிரதேசம் சியாங் மாவட்டத்தின் ஜிதோ கிராமத்தைச் சேர்ந்த மிராம் தரோம் அண்மையில் சீன எல்லைப் பகுதிக்கு சென்ற பிறகு காணாமல் போனார். "மிராம் தரோம் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டியதால் சீன ராணுவமான பிஎல்ஏவால் பிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்திய ராணுவம் உடனடியாக பிஎல்ஏவை ஹாட்லைன் மூலம் தொடர்பு கொண்டது. விதிமுறைகளின்படி, அவரைப் பற்றிய தகவல் அறியவும் அவரை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்கவும் சீன ராணுவத்திடம் உதவி கோரப்பட்டுள்ளது," என்று இந்திய ராணுவ மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்திருந்தார்.

    அருணாச்சலப்பிரதேசத்தின் பாஜக எம்பி தாபிர் காவோ, இந்தியாவின் எல்லைகுட்பட்ட அருணாச்சல பிரதேசத்திற்குள் நுழைந்து இந்த இந்திய இளைஞரைச் சீன ராணுவம் (பிஎல்ஏ) கடத்திச் சென்றதாக குற்றம் சாட்டியிருந்தார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  14. மேற்கு வங்கத்தில் டிஎம்சி - பாஜகவினர் மோதல் - நேதாஜி அஞ்சலி நிகழ்ச்சியில்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    மேற்கு வங்கத்தில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் 125-வது பிறந்தநாள் விழாவில் திரிணாமுல் காங்கிரஸ் – பாஜகவினரிடையே மோதல் ஏற்பட்டது.

    மேற்கு வங்க மாநிலம் பாட்பராவில் நடைபெற்ற நேதாஜிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியின் போது இரு கட்சி தொண்டர்களும் திரண்டனர். அப்போது ஏற்பட்ட மோதலில் இருதரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.

    இது குறித்து மேற்கு வங்க பா.ஜ.க துணைத் தலைவர் அர்ஜூன் சிங் கூறுகையில், ‘’காலை 10:30 மணிக்கு எம்.எல்.ஏ பவன் சிங் நேதாஜிக்கு அஞ்சலி செலுத்த சென்றபோது, ​​திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அவரைத் தாக்கினர். கற்களை வீசினர். நான் சென்றதும், என்னையும் தாக்கினர். இவை எல்லாம் போலீஸ் கண்முன்னே நடந்தது. என் கார் உடைக்கப்பட்டது.’’ என்றார்.

  15. முஸ்லிம் பெண்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பரப்பும் வெறுப்பு - பிபிசி புலனாய்வு

    சமூகவலைதளங்களில் வெறுப்பு

    கடந்த ஆண்டு மே 13 அன்று, சில ட்விட்டர் கணக்குகள், 'லிபரல் டோஸ்' என்ற யூடியூப் சேனலின் லைவ் ஸ்ட்ரீமின் கவனத்தை ஈர்த்தது. அங்கு ஈத் பண்டிகையைக் கொண்டாடும் பாகிஸ்தான் சிறுமிகளின் படங்கள் மற்றும் வீடியோக்களில் மோசமான கருத்துகள் வெளியிடப்பட்டன.

    இந்த சேனலின் வீடியோக்கள் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் நிறைந்ததாக இருந்தது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. பின்னர் இந்த சேனல் YouTube இலிருந்து அகற்றப்பட்டது.

    இது குறித்த விரிவான செய்திக்கு இங்கே சொடுக்கவும்

  16. திருச்சியில் சாலையோரம் இறந்து கிடந்த 24 குரங்குகள் - வனத்துறையினர் விசாரணை

    திருச்சியில் நெடுஞ்சாலை அருகே 24 குரங்குகள் இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை சிறுகனூர் அருகே நெடுங்கூர் பகுதியில் குரங்குகள் சில மயங்கிக் கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற வனத்துறையினர், அனைத்தும் இறந்து கிடப்பதை உறுதி செய்தனர். இறந்த 6 பெண் குரங்குகள், 18 ஆண் குரங்குகள் என மொத்தம் 24 குரங்குகளையும் உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

    இவை விஷப் பழங்கள், பண்டங்களை உண்டதால் இறந்தனவா? அல்லது திட்டமிட்டே விஷம் வைக்கப்பட்டு கொல்லப்பட்டனவா? என்பது குறித்து காவல் துறையினருடன் இணைந்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவ பரிசோதனை முடிவிற்கு பிறகே விபரம் தெரிய வரும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

  17. ஒமிக்ரான் கட்டுப்பாடுகளால் நியூசிலாந்து பிரதமரின் திருமணம் ரத்து

    ஜெசிந்தா

    பட மூலாதாரம், Getty Images

    கொரோனா (ஒமிக்ரான் ) கட்டுப்பாடுகளால் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தனது திருமணத்தை ரத்து செய்துள்ளார்.

    நியூசிலாந்து நாட்டின் வடதீவில் ஆக்லாந்தில் திருமணம் மற்றும் பிற நிகழ்வுகளில் கலந்து கொண்ட, ஒரு குடும்பத்தினர் விமானம் மூலம் தெற்கு தீவில் உள்ள நெல்சனுக்கு திரும்பினர். இதில், குடும்பத்தினர் மற்றும் விமானப் பணிப்பெண் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், பிரதமர் இந்த முடிவை அறிவித்துள்ளார்.

    அவரின் நீண்ட கால நண்பரும் பிஷ்ஷிங் நிகழ்ச்சி தொகுப்பாளருமான கிளார்க் கேபோர்ட் உடனான திருமணத்தை ரத்து செய்ததைப் பற்றி அவர் எப்படி உணர்ந்தார் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "இதுதான் வாழ்க்கை." என்று ஆர்டர்ன் பதில் அளித்தார்.

    மேலும் அவர் கூறுகையில், "தொற்றுநோயால் மோசமான தாக்கங்களை அனுபவித்த ஆயிரக்கணக்கான நியூசிலாந்து மக்களிலிருந்து நான் வேறுபட்டவள் அல்ல. சில நேரங்களில் விருப்பமானவருடன் இருக்க இயலாதது, எந்த சோகத்தையும் விட பெரியது." என்றார்.

  18. இலங்கையில் உள்ள இந்திய மீனவர்களின் படகுகள் ஏலம்

    இலங்கையில் இந்திய படகுகள்
    படக்குறிப்பு, 2014 -18ம் ஆண்டுகளில் 125 விசைப் படகுகள், 17 நாட்டுப் படகுகள் இலங்கையில் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளன

    இலங்கை கடற்படை வசமுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை வரும் பிப்ரவரி மாதம் 7ம் தேதி முதல் ஏலம் விடப்போவதாக அந்நாட்டு மீன் வளத்துறை அறிவித்துள்ளது.

    தமிழ்நாட்டின் நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றம் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதிகளில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை அரசால், வெளிநாட்டு மீன்பிடி தடைச்சட்டத்தின் கீழ் 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை 125 விசைப் படகுகள், 17 நாட்டுப் படகுகள் அரசுடைமை ஆக்கப்பட்டு, காரை நகர், காங்கேசன்துறை, மயிலட்டி, தலைமன்னார் உள்ளிட்ட கடற்படை முகாம்களில் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த படகுகள் 5 ஆண்டுகளாக மீட்கப்படாமல் இருப்பதால், உள்ளூர் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் போது, விபத்துகள் ஏற்படுவதாக கூறி, படகுகளை ஏலம் விட அனுமதி கோரி, இலங்கை மீன்வளத் துறை அதிகாரிகள், யாழ்பாணம் மாவட்ட ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் தேதி வழக்கை விசாரித்த நீதிபதி, மீட்கப்படாமல் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை உடனடியாக ஏலம் விட உத்தரவிட்டார்.

    கொரோனா பரவல் மற்றும் இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவனந்தாவிடம் ஏலம் விடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், வரும் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை அந்தந்த கடற்படை முகாம்களில் படகுகளை ஏலம் விடும் பணி நடைபெற உள்ளது. இலங்கை ரூபாய் 50 ஆயிரம் வெலுத்தி முன்பதிவு செய்து, ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும் என இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

    தமிழக மீனவர்களின் 105 விசைப்படகுகள், 17நாட்டு படகுகளுக்கு என மொத்தம் ரூ. 5.66 கோடி இழப்பீடு வழங்குவதாக தமிழ்நாடு முதலமைச்சர் அண்மையில் அறிவித்திருந்தார்.

  19. இந்தியாவில் வெளியிட்ட கருத்தால் ஜெர்மன் கடற்படைத் தலைவர் பதவி விலகல்

    ஜெர்மனி கடற்படைத் தலைவர்

    பட மூலாதாரம், ANI

    ஜெர்மனி கடற்படைத் தலைவர் இந்தியாவில் அண்மையில் வெளியிட்ட கருத்தால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதை ஜெர்மனியின் பாதுகாப்பு அமைச்சகம் AFP செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளது.

    வெள்ளிக்கிழமை, இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜெர்மன் கடற்படைத் தலைவர் அட்மிரல் கே அக்ஸிம் ஷான்பாக், ‘’ரஷ்யாவைத் தாக்கும் யுக்ரைனின் யோசனை முட்டாள்தனமானது. புடின் மரியாதைக்குரியவர்.’’ என்றார். இதையடுத்து அவர் பதவி விலக உள்ளதாக ஜெர்மனியின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

  20. இந்திய என்.டி.ஆர்.எப் ட்விட்டர் முடக்கம்

    என் டி ஆர் எப்

    பட மூலாதாரம், PIB

    தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.

    தேசிய பேரிடர் மீட்பு படையின் ட்விட்டர் கணக்கு ஜனவரி 22 சனிக்கிழமையன்று ஹேக் செய்யப்பட்டது. இதை உடனடியாக சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்று தேசிய பேரிடர் மீட்பு படை இயக்குநர் அதுல் கர்வால் தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு