மேற்கு வங்கத்தில் ரயில் தடம் புரண்ட சம்பவத்தில் 5 பேர் பலி

மேற்கு வங்கத்தில் நியூ டோமோஹானி மற்றும் நியூ மைனகுரி ரயில் நிலையங்களுக்கு இடையே மாலை 5 மணியளவில் அதிவிரைவு ரயில் தடம் புரண்டது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. தடையில்லா வர்த்தக உடன்பாடு: இந்தியா - பிரிட்டன் இன்று பேச்சு

    வர்த்தகம்

    பட மூலாதாரம், Getty Images

    தடையில்லா வர்த்தக உடன்பாடு குறித்து இந்தியாவும் பிரிட்டனும் டெல்லியில் இன்று பேச்சுவார்த்தையைத் தொடங்குகின்றன.

    2050-ஆம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை நடக்கிறது.

    "இது ஒரு பொன்னான வாய்ப்பு" என்று பிரிட்டனின் வர்த்தக அமைச்சர் அன்னி-மேரி ட்ரவெல்யன் கூறியுள்ளார்.

    ஏற்கெனவே அமெரிக்காவுடனான இந்தியாவின் தடையில்லா வர்த்தக உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தையில் பெரிய முன்னேற்றம் இல்லை. இருப்பினும் நம்பிக்கையுடன் பிரிட்டன் பேச்சுவார்த்தையைத் தொடங்குகிறது.

  2. நேரலைக்கு வரவேற்கிறோம்

    பிபிசி தமிழின் இன்றைய நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    தமிழகம், இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள், ஆகியவற்றில் நடக்கும் நிகழ்வுகளை இன்றைய இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    செய்தியைத் தொகுத்து வழங்குவோர் எம். மணிகண்டன், ஜோ. மகேஸ்வரன்.