மேற்கு வங்க ரயில் தடம் புரண்ட சம்பவத்தில் பலி எண்ணிக்கை ஐந்து ஆக உயர்வு
பட மூலாதாரம், ㅤ
மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதியில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
அந்த சம்பவத்தில் இடிபாடுகளில் சிக்கிய பல பயணிகளின் துயரமான படங்கள் வெளியாகியுள்ளன.
மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டம் மைனகுரி அருகே குவாஹட்டி - பிக்கானர் அதிவிரைவு ரயிலின் 12 பெட்டிகள் இன்று தடம் புரண்டன. இதில் குறைந்தது ஐந்து பேர் பலியானார்கள், 45 பேர் காயமடைந்துள்ளனர் என்று பிடிஐ செய்தி நிறுவன தகவல்கள் கூறுகின்றன.
இந்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நாளை காலை விபத்து நடந்த பகுதிக்கு செல்லவருக்கிறார். ரயில் தடம் புரண்டதால் காயமடைந்த 50 பேர் மீட்கப்பட்டதாக மேற்கு வங்க அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்களில் 24 பேர் ஜல்பைகுரி மாவட்ட மருத்துவமனைக்கும், 16 பேர் மொய்னகுரி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் படுகாயம் அடைந்த பயணிகள் சிலிகுரியில் உள்ள மருத்துவ கல்லூரிக்கு மாற்றப்படுவார்கள் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
தடம் புரண்ட பெட்டிகளுக்குள் இன்னும் சில பயணிகள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும், சிதைந்த பெட்டிகளை வெட்டுவதற்கு எரிவாயு கட்டர்கள் பயன்படுத்தப்படுவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், நிலைமையை "தனிப்பட்ட முறையில்" கண்காணித்து வருவதாகவும், பிரதமர் நரேந்திர மோதியிடம் பேசி மீட்புப் பணிகள் குறித்து விளக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், ㅤ
தமிழ்நாட்டில் 'ஒரு நாள் கொரோனா பாதிப்பு' 20 ஆயிரத்தைக் கடந்தது
தமிழ்நாடு மருத்துவத்துறை அறிக்கையின்படி, இன்றைய கொரோனா தொற்று 20, 911 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 8, 218 ஆக பதிவாகியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 2, 030, கோயம்புத்தூரில் 1, 162 பதிவாகியுள்ளது.
இன்று மட்டும் மொத்தம் 6, 235 பேர் குணமாகியுள்ளனர். மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது வரை மொத்தம் 1,03,610 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை, செங்கல்பட்டு, கோவை, மதுரை மாவட்டங்களில் தொற்று அதிகரித்துள்ளது.
அபராத தொகை உயர்வு
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ₹ 200இல் இருந்து ₹300 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க ரயில் விபத்து: ரயில்வே அமைச்சருடன் பிரதமர் மோதி ஆலோசனை
மேற்கு வங்க மாநிலத்தில் அதிவேக பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தொலைபேசியில் பேசியதாக பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் குவாஹட்டி-பிக்கானர் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டதை ஜல்பைகுரி டிஎம் மௌமிதா தாஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த ரயில் விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
தங்கத்தில் போலி ஹால்மார்க் முத்திரை: கோவையில் இருவர் கைது
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தங்கத்தில் போலியான முத்திரை பதிப்பது சட்டப்படி தவறு - அதிகாரிகள்
கோயம்புத்தூரில்
தங்கத்தில் போலியான ஹால்மார்க் முத்திரை பதிக்கப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து
இந்திய தர நிர்ணய ஆணையத்தின் அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
அப்போது
தங்கத்தின் மீது உரிய அனுமதியில்லாமல் போலியான ஹால்மார்க் முத்திரை பதித்து வந்த
கடலரசன், ரவீந்திரன் என்கிற இருவரை
அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர்கள் வசம் இருந்த ரூ. 11
லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், போலி ஹால்மார்க் முத்திரை
பதிக்கும் இயந்திரங்களை பறிமுதல் செய்தனர்.
‘’தங்கத்தின்
மீது போலியான முத்திரை பதிப்பது சட்டப்படி தவறு என்றும் பொதுமக்கள் இது தொடர்பான
தகவல் தெரிந்தால் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்’’
என இந்திய தர நிர்ணய ஆணையத்தின் கோவை பிரிவு தலைவர் மீனாட்சி கணேசன்
தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் பதற்றம் வேண்டாம்; விழிப்புடன் இருந்தால் தவிர்க்கலாம் – பிரதமர் மோதி
பட மூலாதாரம், Narendra Modi
படக்குறிப்பு, தடுப்பூசி மட்டுமே கொரோனாவைத் தடுக்கும் - பிரதமர் மோதி
இந்தியாவில்
ஒரு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அளவு 2.5 லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில், அனைத்து மாநில முதலமைச்சர்களுடன்
பிரதமர் நரேந்திர மோதி இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,
சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காணொளியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் மோதி பேசுகையில், ''கொரோனாவைத் தடுக்க தடுப்பூசி மட்டுமே ஒரே வழியாக இருக்கிறது. இதைத் தவிர வேறு
எதுவும் நம்மை பாதுகாக்காது. அதேநேரத்தில், போதிய தடுப்பூசி கையிருப்பில்
உள்ளது. அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும். முன்கள பணியாளர்களுக்கு கூடுதல் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவு படுத்த வேண்டும்.
வீடுகளில் தனிமைப்படுத்திக்
கொண்டால், மருத்துவமனைகளுக்குச் செல்வதைத் தவிர்க்கலாம். முந்தைய கொரோனா திரிபுகளுடன் ஒப்பிடுகையில் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவுகிறது.
ஆனாலும் பதற்றப்படத் தேவையில்லை. நாம் விழிப்புடன்
இருந்தால் தவிர்க்கலாம். பண்டிகை காலத்தில் கொரோனா பரவலைத் தடுக்க மாநில அரசுகள் நடவடிக்கை
எடுக்க வேண்டும்.'' என்றார்.
மேற்கு வங்கத்தில் குவாஹட்டி - பிக்கானர் விரைவு ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து - மூன்று பேர் பலி
மேற்கு வங்கத்தில் குவாஹட்டி - பிக்கானர் விரைவு ரயில் பெட்டிகள் சி தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த சம்பவத்தில் மூன்று பயணிகள் பலியனதாகவும் பலர் காயம் அடைந்ததாகவும் அலுவல்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டோமோஹானி அருகே இந்த விரைவு ரயில் பெட்டிகள் தடம் புரண்டதாக ஏஎன்ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து எந்த தகவலும் வெளியாகாத சூழலில்.
காயமடைந்தவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. சம்பவ பகுதிக்கு அரசு அதிகாரிகள் மற்றும் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பொங்கல் வாழ்த்து
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள
பொங்கல் வாழ்த்து செய்தியில், ''போகியைக்
கொண்டாடி,கவலைகளுக்கு
விடைகொடுத்து, உற்சாகம், நேர்மறை நிறைந்த தைத் திருநாளை வரவேற்று சங்க
காலத்திலிருந்தே நமது பண்பாட்டின் ஒரு அங்கமாக திகழும் இந்த மங்கள விழாவை கொண்டாடவும்
கோவிட்-19 நெறிமுறையைக்
கடைப்பிடித்து, பொங்கலின் உண்மையான உணர்வை நமது குடும்பத்தினர், நண்பர்கள்
மற்றும் அன்புக்குரியவர்களுடன் பொருத்தமான முறையில் கொண்டாடுவோம்.''என தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
கேரளாவில் நாளை பொங்கல் விடுமுறை
பட மூலாதாரம், Pinarayi Vijayan
படக்குறிப்பு, கேரளாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் 6 மாவட்டங்களில் பொங்கல் விடுமுறை
கேரள மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும்
6 மாவட்டங்களில் பொங்கல் விழா தினமான ஜனவரி 14ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கேரளாவில்
இடுக்கி, கொல்லம், திருவனந்தபுரம், பத்தனம்திட்டா,
வயநாடு, பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களில் நாளை பொங்கல்
விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பொங்கல்
திருநாளை முன்னிட்டு, இந்த மாவட்டங்களில் விடுமுறை அளிக்க கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்தியா- இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக பேச்சுவார்த்தை
பட மூலாதாரம், Piyush Goyal
படக்குறிப்பு, 2030க்குள் இரு தரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்க திட்டம்
இந்தியா – இங்கிலாந்து இடையிலான
தடையற்ற வர்த்தகம் குறித்த பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இந்திய வர்த்தக
அமைச்சர் பியூஸ் கோயல், இங்கிலாந்தின்
சர்வதேச வர்த்தக செயலாளர் ஆனி மேரி ட்ரேவ்லேய்ன் மற்றும் இருநாட்டு அதிகாரிகள்
பங்கேற்றனர்.
இந்த சந்திப்பிற்கு
பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ''வரும் 2030க்குள் இரு தரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்கும் வகையில் இன்றுபேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. முதல் சுற்று பேச்சுவார்த்தை வரும்
17ம் தேதி நடைபெறும். தொடர்ந்து 5 வாரங்களுக்கு ஒரு முறை பேச்சுவார்த்தை
நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வர்த்தக
கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு,
துறைசார்ந்த மேம்பாடுகள் ஏற்படுத்துவதன் மூலம் நேரடி மற்றும் மறைமுக
வேலைவாய்ப்புகள் ஏற்படும். தோல், ஜவுளி, பதப்படுத்தப்பட்ட வேளாண் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரிக்கும்''.
என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
இலங்கை சந்திரஹாசன் தமிழ்நாடு முதலமைச்சருடன் சந்திப்பு
பட மூலாதாரம், CMOTamilnadu
படக்குறிப்பு, இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்களுக்கு நன்றி தெரிவித்த சந்திரஹாசன்
இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை அளித்து வருகிறது. இதன்படி, பொங்கல் சிறப்புத் தொகுப்பு தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஈழத் தந்தை என்று அழைக்கப்படும் செல்வநாயகத்தின் மகனும் ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழகத்தின் தலைவருமான சந்திரஹாசன், செயலாளர் சூரியகுமாரி ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தனர். அப்போது, இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்களுக்கு இருவரும் நன்றி தெரிவித்தனர்.
மேக்கேதாட்டு அணை - கர்நாடகாவில் காங்கிரஸ் பாதயாத்திரை நிறுத்திவைப்பு
பட மூலாதாரம், DK Shivakumar
படக்குறிப்பு, கர்நாடக காங்கிரஸ் பாத யாத்திரைக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணை கட்டக் கோரி நடைபெற்ற பாத யாத்திரையை நிறுத்தி வைப்பதாக கர்நாடக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
''கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்தவுடன், ராமநகரில் இருந்து மீண்டும் பாத யாத்திரையை தொடங்குவோம். அது 7 நாட்களுக்கு தொடரும்" என்று முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்ட வலியுறுத்தி கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் தலைமையில் பாதயாத்திரை அண்மையில் தொடங்கப்பட்டது. கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை மீறியதாக சிவக்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
காங்கிரஸ் பாதயாத்திரையை தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு, காவிரி உரிமை மீட்புக் குழு உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், ''முடிந்து போன காவிரிப் பிரச்சினையை அரசியல் ஆதாயத்திற்காக கர்நாடக காங்கிரஸ் மீண்டும் கிளப்புகிறது.'' என்றும் குற்றம்சாட்டினர்.
இந்தியாவின் பேட்மின்டன் வீராங்கனை தஸ்னிம் மிர் - உலக தர வரிசையில் முதலிடம்
பட மூலாதாரம், Tasnim Mir
படக்குறிப்பு, தஸ்னிம் மிர்
இந்தியாவின்
இளம் பேட்மின்டன் வீராங்கனை தஸ்னிம் மிர் BWF
ஜூனியர்
தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். பெண்கள் ஒற்றையரில் 19 வயதுக்குட்பட்ட பிரிவில்
உலகின் நம்பர் 1 தர வரிசையைப் பெற்ற முதல் இந்தியர் ஆகியுள்ளார்.
குஜராத்
மாநிலத்தைச் சேர்ந்த 16 வயதான மிர் ஜூனியர் பிரிவில் சர்வதேச
அளவில் 4 பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜூனியர் உலக தர வரிசையில் மூன்று இடங்கள் முன்னேறி
10,810
புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில், லக்ஷ்யா சென், சிரில் வர்மா மற்றும் ஆதித்யா ஜோஷி ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளனர்.
யோகி அமைச்சரவையில் இருந்து மேலும் ஒரு அமைச்சர் ராஜிநாமா
உத்தர பிரதேசத்தில் ஆளும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து மேலும் ஒரு அமைச்சர் ராஜிநாமா செய்துள்ளார்.
அம்மாநில ஆயுஷ் துறை இணை அமைச்சர் தரம் சிங் சைனி தனது ராஜிநாமாவை பகிரங்கமாக அறிவித்துள்ளார். அவர் தமது ராஜிநாமா கடிதத்தில், "தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், விவசாயிகள், படித்த வேலையில்லாதவர்கள் போன்றோரின் எதிர்பார்ப்புகளை பாரதிய ஜனதா கட்சி புறக்கணித்ததால் நான் பதவி விலகுகிறேன்," என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் பாஜகவில் இருந்து விலகி எந்த கட்சிக்கு செல்கிறார் என்பதை சைனி தெளிவுபடுத்தவில்லை. அதே சமயம், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சைனியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட படத்தை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அகிலேஷ் தனது ட்விட்டர் பதிவில், "சமூக நீதியின் மற்றொரு போராளியான டாக்டர் தரம் சிங் சைனியின் வருகையால், அனைவரையும் ஒன்றிணைக்க முயலும் நமது 'நேர்மறை மற்றும் முற்போக்கான அரசியலுக்கு' மேலும் உற்சாகமும் வலிமையும் கிடைத்துள்ளது. தரம் சிங்கை அன்புடன் வரவேற்று வாழ்த்துகிறேன் என்று அகிலேஷ் கூறியுள்ளார்.
முன்னதாக, பதவியை ராஜினாமா செய்த மெளரியா, தாரா சிங் செளகான் பதவி விலகியபோதும் இதேபோல அவர்களுடன் எடுத்துக் கொண்ட படத்தை தமது சமூக ஊடக பக்கத்தில் அகிலேஷ் பகிர்ந்திருந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
உள்ளாட்சித் தேர்தல் - ம.நீ.ம. முதல் பட்டியலை வெளியிட்டார் கமல்ஹாசன்
பட மூலாதாரம், Kamal Haasan
படக்குறிப்பு, மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி, உள்ளாட்சியில் தன்னாட்சி என்பது மக்கள் நீதி மய்யம் பயணிக்கும் பாதை - கமல் ஹாசன்
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான
மக்கள் நீதி மய்யத்தின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சியின் தலைவர் கமலஹாசன் வெளியிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமலஹாசன்,கோயம்புத்தூர்
மாநகராட்சியில் போட்டியிடும் 47 பேர் கொண்ட பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார். தொடர்ந்து பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
முன்னதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,.''மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி,
உள்ளாட்சியில் தன்னாட்சி என்பது மக்கள் நீதி மய்யம் பயணிக்கும் பாதை.
பல்லாண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சினைகளுடன் தமிழ்நாட்டு நகரங்கள் அல்லாடுகின்றன.
இவற்றைத் தீர்க்கும் தகுதியும் திறனும் கொண்ட மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட பட்டியலை
வெளியிடுகின்றேன்.'' என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி, போட்டியிட
விரும்பும் கட்சியினரிடம் விருப்ப மனுக்களைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில், முதல்
கட்ட பட்டியலை கமல் ஹாசன் வெளியிட்டுள்ளார்.
உத்தரபிரதேச தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர்களில் 50 பெண்கள் உட்பட 125 பேர் கொண்ட முதல் பட்டியல்
பட மூலாதாரம், Priyanka Gandhi Vadra
படக்குறிப்பு, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் 40 % பெண்கள், 40% இளைஞர்கள் - ப்ரியங்கா காந்தி
உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களின் முதல் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தி இன்று வெளியிட்டார்.
முதல்கட்ட பட்டியலில் மொத்தம் 125 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், உன்னாவ் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், ஊதிய உயர்வு போராட்டத்திற்கு தலைமை ஏற்ற பூனம் பாண்டே உள்ளிட்ட 50 பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.
''காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் 40 விழுக்காடு பெண்கள், 40 விழுக்காடு இளைஞர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வரலாற்று முக்கியதுவம் பெற்ற இந்த முயற்சியால், உத்தரபிரதேசத்தில் புதிய அரசியலை முன்னெடுக்கிறோம்.'' என்று ப்ரியங்கா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் முதல் ஜல்லிக்கட்டு - புதுக்கோட்டை தச்சன்குறிச்சியில் நடைபெற்றது
பட மூலாதாரம், Siva Meyyanathan@Twitter
படக்குறிப்பு, ஜல்லிக்கட்டில் 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை
அருகே தச்சன்குறிச்சி புனித விண்ணேற்பவ அன்னை ஆலயத்தில் டான் பாஸ்கோ திடலில்,
இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்றது.
அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர். ஜல்லிக்கட்டில்
700 காளைகள், 300
மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கட்டுப்பாடுகளுடன்
நடத்தப்படுவதால், 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி
அளிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு
மேற்பார்வையில், நூற்றுக்கும் மேற்பட்ட வருவாய்த்
துறையினர் கண்காணிப்பு பணியில் உள்ளனனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா
பார்த்திபன் தலைமையில், 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு
பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தச்சன்குறிச்சியில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜனவரி 1ம்
தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு
கட்டுப்பாடுகளுடன் இன்று நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது.
தமிழ்நாட்டில் வெளிப்படையான நிர்வாகம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பட மூலாதாரம், M.K.Stalin
படக்குறிப்பு, மு.க.ஸ்டாலின் 8 மாத செயல்பாடுகளின் அறிக்கை என்று வீடியோ வெளியிட்டுள்ளார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8
மாத செயல்பாடுகளின் அறிக்கை என்று ஒரு வீடியோ இன்று வெளியிட்டுள்ளார்.
இதில்,
‘’இந்தியாவிற்கும் முன்னோடியாக
தொடங்கப்பட்டுள்ள மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 50 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டு வரலாற்றில் முதல் முறையாக 5 பவுனுக்கு கீழ் நகைக் கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளை
மட்டும் அல்ல, சொல்லாதவற்றையும் இந்த அரசு நிறைவேற்றும்.
எட்டு
மாதத்தில், மொத்தம் 1, 641 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில்,
75 விழுக்காடு அறிவிப்புகளை
நிறைவேற்றியுள்ளோம். வெளிப்படையான நிர்வாகம் தான் எனது விருப்பம். எதையும் வாய்வார்த்தைக்கு
சொல்லி, மறந்து விடுபவர்கள் அல்ல. என்னிடம் வந்த 2,
683 கோப்புகளில், 2, 619 கோப்புகள் மீது உடனுக்குடன்
முடிவு எடுத்து, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளன.
மக்களின்
நேற்றைய தேவையை இன்று நிறைவேற்றி வருகிறேன். நாளைய கோரிக்கையை இன்று உணர்ந்தவனாக இருக்கிறேன்.
நான் மக்களோடு மக்களாக இருக்கிறேன்.’’
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பொங்கல் உள்ளிட்ட விழாக்கள் மகிழ்ச்சி, செழிப்பைத் தரட்டும் - இந்திய குடியரசுத் தலைவர் வாழ்த்து
பட மூலாதாரம், President of India
படக்குறிப்பு, வேற்றுமையில் ஒற்றுமையை எடுத்துக் காட்டும் விழாக்கள் - குடியரசுத் தலைவர்
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ''அனைவருக்கும் லாஹ்ரி, மகர சங்கராந்தி, பொங்கல், போஹலி பிஹூ, உத்ரயாண் மற்றும் பவுஷ் பர்வா நல்வாழ்த்துகள்.
இவை இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமையை எடுத்துக் காட்டும் விழாக்கள். இயற்கையோடு நம்முடைய உறவைச் சொல்கின்றன. இந்த விழாக்கள் செழிப்பையும் மகிழ்ச்சியையும் தரட்டும்.'' இவ்வாறு குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
இந்தியாவில் ஒரே நாளில் 2.47 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அமெரிக்கா பிரான்ஸுக்கு அடுத்தபடியாக 3வது இடத்தில் இந்தியா
இந்தியாவில் கொரோனா பரவல் ஒரு நாளைக்கு இரண்டு லட்சத்துக்கு மேலாக அதிகரித்துள்ளது. அதைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
இந்தியாவில் ஒரு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை 2,47,417 ஆக பதிவாகியுள்ளது. நேற்றை விட 27 விழுக்காடு அதிகம். தற்போது 11, 17, 531 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒமிக்ரான் தொற்று 5, 488 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்கா பிரான்ஸுக்கு அடுத்தபடியாக இந்த எண்ணிக்கையில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
அடுத்தடுத்த நாள்களில் இது மிக வேகமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பிரதமர் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது