கொரோனா: இந்தியாவில் ஒரே நாளில் 1.68 லட்சம் பேருக்கு தொற்று
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் நாடு முழுவதும் மொத்தம் 1, 68, 063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 277 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் மொத்தம் 69, 959 பேர் சிகிச்சை முடிந்து நலம் பெற்றுள்ளனர்.
தற்போது வரை 8, 27, 446 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சோதனை செய்ய்யப்படுவோரில் தொற்று உறுதியாகும் விகிதம் 10.64% ஆக உள்ளது.
இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிஹார் முதலமைச்சர் நிதிஷ்குமார், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.
இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 4, 461 ஆக உள்ளது.


