விராட் கோலியின் நிதானப் போராட்டம் 201 பந்தில் முடிந்தது
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 201 பந்துகளைச் சந்தித்து 79 ரன்களை எடுத்தார்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
இன்றைய நேரலை நிறைவடைகிறது
இத்துடன் இன்றைய நேரலை பக்கம் நிறைவு பெறுகிறது.
எங்களுடன் இந்த பக்கத்தில் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி.
நாளை (ஜனவரி 12, 2021) காலை தொடங்கப்படும் புதிய நேரலை பக்கத்தில் உள்ளூர் முதல் உலகம் வரை பல்வேறு செய்திகளையும் தெரிந்துகொள்ளலாம்.
செய்திகளை துல்லியமாக, புதிய கண்ணோட்டத்துடன் விரைவாக தெரிந்துகொள்வதற்கு பிபிசி தமிழுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
விராட் கோலியின் 201 பந்து இன்னிங்ஸ்
பட மூலாதாரம், Getty Images
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 201 பந்துகளைச் சந்தித்து 79 ரன்களை எடுத்தார்.
கடுமையான சூழலில் அவரது மிக நிதானமான ஆட்டம் தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் ரபாடாவால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியினஅ வீரர்கள் ரன் எடுப்பதற்கு சிரமப்பட்டனர்.
அடுத்தடுத்து விக்கெட் விழுந்த நிலையிலும் விராட் கோலி மிகவும் நிதானமாக ஆடினார்.
மறுமுனையில் வீரர்கள் ஆட்டமிழக்க, 9-ஆவது விக்கெட்டாக கோலியும் வெளியேறினார்.
இறுதியில் இந்திய அணி 223 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை முடித்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் தென்னாப்பிரிக்க அணி ஒரு விக்கெட்டை இழந்து 17 ரன்களை எடுத்திருக்கிறது.
தமிழ்நாட்டில் ஜனவரி 17ம் தேதி உள்ளூர் விடுமுறை
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கட்டுப்பாடுகளுடன்
கூடிய பொது முடக்கம், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு பொது முடக்கம் நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், வரும் 18ம் தேதி தைப்பூசத்திற்காக அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 16ம் தேதி ஞாயிறு முழு பொது முடக்கம் மற்றும் 18ம் தேதி தைப்பூச
அரசு விடுமுறைக்கு இடைப்பட்ட நாளான ஜனவரி 17ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்தும் இதற்கு
ஈடு செய்யும் வகையில் ஜனவரி 29ம் தேதி பணி நாளாகவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜனவரி 17ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க அரசு பணியாளர்
சங்கங்கள் கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜனவரி 16ம் தேதி நடத்த திட்டமிடப்பட்ட மதுரை அலங்காநல்லூர்
ஜல்லிக்கட்டு, ஜனவரி 17ம் தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு - இருவர் கைது
கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளலூரில், கடந்த
ஜனவரி 8-ம் தேதி இரவு திராவிடர்
கழக கிளை முன்பு உள்ள பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் செருப்பு மாலையும் அணிவித்து
காவி சாயம் பூசியிருந்தனர்.
பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்ததோடு, இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க
வேண்டும் என பல்வேறு கட்சியினரும் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக வெள்ளலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து
சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, விசாரணை நடத்தி
வந்தனர்.
இந்த நிலையில், சிலையை
அவமதித்தாக, இந்து
முன்னணி அமைப்பைச் சேர்ந்த அருண் கார்த்திக், மோகன் ராஜ் ஆகிய இருவரை
போலீசார் கைது செய்துள்ளனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 17ம் தேதி - உள்ளூர் மக்களுக்கு மட்டுமே அனுமதி
படக்குறிப்பு, மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 17ம் தேதி திங்கட்கிழமை நடைபெறும் என
மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள், அரசு விதித்துள்ள கோவிட் 19 வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் நடத்த திட்டமிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வருகின்ற ஜனவரி 16ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்க நாள். ஜனவரி 17ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட
ஆட்சியர் அனிஷ் சேகர் அறிவித்துள்ளார்.
மேலும் அவர்
கூறுகையில், ''போட்டியில் பங்கேற்க வருகின்ற
ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் வீரர்கள் தங்களது பெயர்களை இணையம் வழியாக நாளை மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம். இந்த போட்டிகளில்
பார்வையாளர்களாக உள்ளூர் மக்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.'' என்றும் தெரிவித்தார்.
இலங்கை அரசின் மக்கள் வங்கி - கருப்பு பட்டியலில் இருந்து விடுவித்தது சீனா
பட மூலாதாரம், PEOPLES BANK
படக்குறிப்பு, உரம் இறக்கமதியில் எழுந்த பிரச்சினையால் மக்கள் வங்கியை சீனா கறுப்பு பட்டியலில் இணைத்திருந்தது.
இலங்கை அரசின் மக்கள் வங்கியை, கறுப்பு பட்டியலிலிருந்து விடுவித்துள்ளதாக
சீன தூதரகத்தின் பொருளாதாரம் மற்றும் வணிக அலுவலகம் தெரிவித்துள்ளது.
மக்கள் வங்கியை கடந்த அக்டோபர் மாதம் கறுப்பு பட்டியலில் இணைக்க
கொழும்பிலுள்ள சீன தூதரகம் நடவடிக்கை எடுத்திருந்தது. சீனாவிலிருந்து
இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட உரம் தொடர்பில் எழுந்த பிரச்சினை காரணமாகவே, மக்கள் வங்கியை சீனா
கறுப்பு பட்டியலில் இணைத்திருந்தது.சீனா நிறுவனத்திற்கும், இலங்கையில் உரத்தை
இறக்குமதி செய்த தரப்பினருக்கும் இடையிலான வழக்கு கொழும்பு வணிக மேல்
நீதிமன்றத்தில் நடைபெற்றது. அந்த வழக்கில் இரண்டு தரப்பினரும் இணக்கப்பாட்டுக்கு வந்ததை
அடுத்து, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.இதையடுத்து, சீன உர நிறுவனத்திற்கு செலுத்த வேண்டியிருந்த 6.9 மில்லியன் அமெரிக்க
டொலர் நிதியை கடந்த 7ம் தேதி மக்கள் வங்கி செலுத்தியது.
சீன வெளிவிவகார
அமைச்சர் வாங் யி, இலங்கைக்கு விஜயம் செய்த ஒரு நாள் முன்பாக இந்த தொகை
செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சீன வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவடைந்த
பின்னணியில், மக்கள் வங்கி மீதான தடையை சீனா தளர்த்தியது.
திருவண்ணாமலையில் கிராம மக்கள் போராட்டம் – குப்பை கிடங்கிற்கு எதிர்ப்பு
படக்குறிப்பு, இந்த பகுதியில் குப்பைக் கிடங்கு அமைத்தால், சுற்றியுள்ள விவசாய நிலங்கள், நீர் வளங்கள் பாதிக்கும் என்று சாலை மறியல்
திருவண்ணாமலை
மாவட்டம் தேவனந்தல் கிராம ஊராட்சி புனல்காடு
கிராமத்தில் குப்பை தரம் பிரிக்கும் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, திருவண்ணாமலை - காஞ்சி சாலையில்
கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, மக்களை சமாதானப்படுத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பழனி பிபிசி தமிழிடம் கூறுகையில், "இந்த பகுதியில் குப்பைக் கிடங்கு அமைத்தால், சுற்றியுள்ள விவசாய நிலங்கள், நீர் வளங்கள் பாதிக்கும். காற்று சுற்றுச் சூழல் மாசுபடும். அரசு குப்பைக்
கிடங்கு அமைக்க ஏற்பாடு செய்யும் பகுதியைச் சுற்றிலும் முழுவதுமாக விவசாய நிலங்கள்
மட்டுமே உள்ளது" என்றார்.
இந்தியாவின் பிரம்மோஸ் சூப்பர்சானிக் க்ரூஸ் ஏவுகணை வெற்றிகரமாகச் சோதனை
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
இந்தியாவின் பிரம்மோஸ் சூப்பர்சானிக் க்ரூஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
மேம்படுத்தப்பட்ட இந்த ஏவுகணை கடலில் இருந்து கடலில் இருக்கும் இலக்கை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஐஎன்எஸ் விசாகப்பட்டினத்தில் நடந்த சோதனையின்போது ''குறிப்பிட்ட இலக்காக வைக்கப்பட்ட கப்பலை துல்லியமாக ஏவுகணை தாக்கியது'' என்று இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
இந்திய கிரிக்கெட் அணி வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், தென் ஆப்ரிக்காவுடனான போட்டிகளில் அவர் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் பந்து வீச்சாளராக இந்திய அணியில் இடம் பெற்றவர். பேட்டிங்கிலும் திறமையை வெளிப்படுத்தி, கவனம் ஈர்த்தவர்.
ஆந்திராவில் ஆற்றில் முழ்கி 5 சிறுவர்கள் உயிரிழப்பு
பட மூலாதாரம், UGC
படக்குறிப்பு, விடுமுறையில் வீட்டில் இருந்த சிறுவர்கள் ஆற்றில் குளிக்க சென்றனர்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள முன்னேரு ஆற்றில் முழ்கி பள்ளி மாணவர்கள் 5 பேர் மூழ்கி உயிரிழந்தனர்.
சங்கராந்தி விடுமுறையில் வீட்டில் இருந்த மாணவர்கள் கடந்த ஜனவரி 11ம் தேதி மதியம் ஆற்றில் குளிக்க சென்றனர். இவர்களது பெற்றோர் விவசாய வயல் வேலைக்குச் சென்று விட்டு, மாலை வீடு திரும்பி குழந்தைகளைத் தேடிப் பார்த்து காணாமல் தவித்தனர்.
தகவல் அறிந்து வந்த, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், முழ்கிய சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இன்று காலை 5 பேரின் சடலங்களையும் ஆற்றில் இருந்து கண்டெடுத்தனர்.
12 முதல் 14 வயதுக்குட்பட்ட பால யேசு, சரண், அஜய், சன்னி, ராகேஷ் என ஐந்து பேரும் அடையாளம் காணப்பட்டனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு அரசின் பொங்கல் தொகுப்பில் தரமற்ற பொருட்கள் - எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
படக்குறிப்பு, கொரோனா பரவலைத் தடுக்க அரசு தவறிவிட்டது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்
எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ''பொதுமக்களுக்கு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பு தரமற்றவையாகவும் எடை குறைவாகவும் வழங்கப்படுவதாக பரவலாக குற்றச்சாட்டுகள் உள்ளன. பொங்கல் பரிசு
தொகுப்பில் தரமற்ற வெல்லத்தை வழங்குவது கண்டிக்கத்தக்கது.'' என்றார்.
மேலும், ''ஏற்கனவே நாங்கள் கொண்டு வந்த பிளாஸ்டிக்
ஒழிப்பு திட்டத்தை மீண்டும் கொண்டு வந்து விளம்பரத்துக்காக செயல்படுகிறார்கள்.
வேட்டி,சேலை பொங்கல் பண்டிகையில் வழங்கப்படுவது
வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வேட்டி சேலை வழங்கப்படவில்லை. தமிழ்நாடு அரசு கொரோனா பரவலை தடுக்க தவறிவிட்டது.'' என்றார்.
உத்தரபிரதேச அமைச்சர் பதவி விலகல் - முதலமைச்சர் யோகி மீது குற்றச்சாட்டு
உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க அமைச்சர் சுவாமி பிரசாத் மெளரியா பதவி விலகியுள்ளார். தன்னைத் தொடர்ந்து பலரும் விலக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ‘’தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் வணிகர்களுக்கு எதிரான உத்தரபிரதேச அரசின் அணுகுமுறையால் யோகி அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்துள்ளேன். எனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வேறு கட்சியில் இணைவது குறித்து முடிவு செய்வேன்.’’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இவர் பதவி விலகலைத் தொடர்ந்து, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‘’பதவி விலகியுள்ள சுவாமி பிரசாத் மவுரியா உள்ளிட்டவர்களை வரவேற்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
நடிகர் சித்தார்த் மீது தொடர் குற்றச்சாட்டு - தேசிய மகளிர் ஆணைய தலைவர்
திரைப்பட நடிகர் சித்தார்த் தொடர்ச்சியாக பெண்கள் குறித்து பாலியல் ரீதியாக கருத்து கூறி வருகிறார். சாய்னா நேவால் பற்றிய கருத்து குறித்து நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு டிஜிபியிடம் புகார் அளித்துள்ளோம் என்று தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் மோதியின் பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறை குறித்து பேட்மின் டன் வீராங்கனை சாய்னா ட்விட்டரில் பதிவிட்டார். இதற்கு ஆபாச பொருள் தரும் கருத்தை பதிவிட்டார் என்று நடிகர் சித்தார்த் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் அவமதிக்கும் நோக்கத்தில் பதிவிடவில்லை என்று சித்தார்த் மறுத்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
கோவை, திருப்பூரில் விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
படக்குறிப்பு, 20 - 25% வரை ஊதியம் உயர்த்தப்பட்டது. ஆனால் கிடைக்கவில்லை என்று போராட்டம்
தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி உரிமையாளர்கள் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.50 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. விசைத்தறி உரிமையாளர் சங்கத்தின்
பொருளாளர் பாஸ்கரன் பிபிசி தமிழிடம் கூறுகையில்,
"விசைத்தறி தொழில் மூலம் 4 லட்சம் பேர் நேரடியாகவும்
மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். ஜவுளித் துறையில் விசைத்தறியின்
பங்கு மிக முக்கியமானது. ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக எங்களுக்கு வழங்கப்பட்டு வருகிற கட்டணம் உயர்த்தப்படவில்லை.
நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விசைத்தறி
வேலைகளுக்கு வழங்கப்படும் ஊதியம் 20 - 25% வரை உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தற்போதுவரை வழங்கப்படவில்லை. அரசு தலையிட்டு உரிய ஊதியம் கிடைப்பதை
உறுதி செய்ய வேண்டும்.'' என்றார்.
லதா மங்கேஷ்கருக்கு கொரோனா - தீவிர சிகிச்சை பிரிவில் அனுமது
இந்தியாவின் பிரபல பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, மும்பையில் உள்ள மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் உள்ளன.
''அவர் நலமாக உள்ளார். வயது மூப்பு காரணமாக ஐ.சி.யூவில் உள்ளார். அவர் நலம் பெற பிரார்த்தியுங்கள்'' என்று மருமகள் ரச்னா தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
டாக்டர் சிலம்பரசன்: பட்டம் பெற தாய், தந்தைதான் காரணம் - சிலம்பரசன்
பட மூலாதாரம், SilamarasanTR
படக்குறிப்பு, குழந்தை பருவத்தில் இருந்தே நடிப்பு, இசை எனபல துறைகளிலும் சாதனை புரிந்தமைக்காக டாக்டர் பட்டம்
தமிழ்நாடு திரைப்பட நடிகர் சிலம்பரசனுக்கு சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கவுரவ டாக்டர் பட்டம் இன்று வழங்கப்பட்டது.
பட்டம் பெற்ற
பிறகு நடிகர் சிலம்பரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘நான் டாக்டர் பட்டம் பெற்றதற்கு எனது தாய், தந்தைதான் காரணம்.
ஒன்பது மாத குழந்தையாக இருந்த போதே என்ன நடிக்க வைத்தனர். மேலும், நான் டாக்டர் பட்டம்
பெற காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கிறேன்” என்றார்,
திரைத்துறை கலைஞர்களுக்கு கல்வி நிறுவனங்கள் 'கெளவுரவடாக்டர்' பட்டம் வழங்கி சிறப்பித்து வருகின்றன. எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல்ஹாசன், விஜய், விக்ரம்உள்ளிட்டோர் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர். சென்னை, வேல்ஸ் பல்கலைக்கழகத்தின்
11வது பட்டமளிப்பு விழாவில், நடிகர் சிலம்பரசனுக்கு ‘கெளவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
''குழந்தை பருவத்தில் இருந்தே நடிப்பு, இசை, எனபல துறைகளிலும் 39 வருடங்களாக சிலம்பரசன் சாதனைகள் படைத்து வருகிறார். அதனை கவுரவிக்கவே இந்த டாக்டர் பட்டம்'' என விழாவில்
தெரிவிக்கப்பட்டது. நிகழ்வில் சிலம்பரசனுடன் அவரது பெற்றோர் டி. ராஜேந்தர், உஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
இலங்கையில் அரிசி விலை கடும் உயர்வு - ஒரு கிலோ ரூ. 168, யூ.எல். மப்றூக்
இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறு நெல் விலை அதிகரித்துள்ளது.
இலங்கையில் தற்போது பெரும்போக நெல் அறுவடை தொடங்கியுள்ளது. உலர்த்தி, சேமித்து வைக்கப்பட்ட முன்னைய போகத்துக்குரிய நெல், 66 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை ரூ. 6,700க்கு விற்கப்படுகிறது. உலர்த்தப்படாத புதிய நெல் ரூ. 5,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதனால், அரிசிக்கான விலையும் அதிகரித்துள்ளது.
இதன்படி ஒரு கிலோ சாதாரண சாப்பாட்டு அரிசி 168 ரூபாய் எனும்
விலையில் விற்கப்படுகிறது.
அரிசி உற்பத்தித் தொழிலில் 40 வருட அனுபவத்தைக்
கொண்டுள்ளதாகக் கூறும் அம்பாறை மாவட்டத்திலுள்ள அரிசி உற்பத்தியாளர் கூட்டுறவுச்
சங்கமொன்றின் தலைவர் ஏ.எல். பதுறுதீன், "இலங்கையில்
நெல்லுக்கு இது போன்றதொரு அதிகரித்த விலை இருந்ததில்லை" என்கிறார்.
வடகொரியாவில் மீண்டும் ஒரு ஏவுகணை சோதனை
பட மூலாதாரம், EPA
படக்குறிப்பு, இது குறித்து, தென் கொரியா, அமெரிக்காவின் உளவுத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
வட
கொரியாவில் ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை நடத்தப்பட்ட ஒரு வாரத்திற்குள்
சந்தேகத்திற்குரிய பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி சோதித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை
உள்ளூர் நேரப்படி 07:27 மணிக்கு ஏவுகணை ஏவப்பட்டதைக் கண்டறிந்ததாக தென் கொரியா
தெரிவித்துள்ளது. ஜப்பானின்
கடலோர காவல்படையும், ‘’வட கொரியா பாலிஸ்டிக்
ஏவுகணை போன்ற பொருளை" ஏவியது என்று தெரிவித்துள்ளது.
பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட 6 நாடுகள் வட கொரியாவின் சோதனை குறித்து ஐ.நாவிற்கு
அறிக்கையை அனுப்பிய சிறிது நேரத்திலேயே இது நடைபெற்றுள்ளது.
தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர், ''வட
கொரியாவால் நிலத்திலிருந்து கிழக்கு கடலை நோக்கி ஏவப்பட்ட சந்தேகத்திற்கிடமான
ஏவுகணையை எங்கள் ராணுவம் கண்டறிந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
டிசம்பரில் நடந்த ஒரு முக்கிய சந்திப்பின் போது, வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் அளித்த உறுதிமொழியில், நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்த 2022ம் ஆண்டிற்கான
கொள்கை செயல்திட்டத்தில் குறிப்பிட்டதை அண்மை நிகழ்வுகள்
சுட்டிக் காட்டுகின்றன.
இது குறித்து, தென்
கொரியா மற்றும் அமெரிக்காவின் உளவுத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
டெல்லியில் தனியார் நிறுவனங்கள் மூடல் - தொடரும் கொரோனா அதிகரிப்பால்
டெல்லியில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், தனியார் நிறுவனங்களை மூட மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட வழிகாட்டுதலில், ''விலக்கு அளிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள் தவிர மற்ற அனைத்து தனியார் நிறுவனங்களும் மூடப்படும். வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டும்.
அனைத்து உணவகங்கள், மதுபானக் கூடங்களும் மூடப்படும். உணவகங்களில் பார்சல் மட்டும் அனுமதிக்கப்படும்,'' உள்ளிட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
மேக்கேதாட்டு அணை: அவசர வழக்கு தொடுக்க வேண்டுகோள்
பட மூலாதாரம், DK Shivakumar
படக்குறிப்பு, மேக்கேதாட்டு அணை கட்டக்கோரி கர்நாடக காங்கிரஸ் தலைவர் பாதயாத்திரை தொடங்கியுள்ளார்.
மேக்கேதாட்டு அணைக்கு இடைக்காலத் தடை விதிக்க
கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்குத் தொடுக்க வேண்டும் என்று காவிரி
உரிமை மீட்புக் குழு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து காவிரி உரிமை மீட்பு குழு
ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மேக்கேதாட்டு
அணை கட்டுவதற்கான கால்கோள் விழா போல் 09.01.2022 அன்று கர்நாடகக் காங்கிரசார்
மேக்கேதாட்டுப் பகுதியில் 11 நாள் நடை பயண தொடக்க
விழா நடத்தியுள்ளார்கள்.
கர்நாடகத்தின் பா.ச.க. முதலமைச்சர்
பசவராஜ் பொம்மை 22.12.2021 அன்று சட்டப்பேரவையில், விரைவில்
மேக்கேதாட்டு அணையின் கட்டுமான வேலைகள் தொடங்கப்படும். ஒன்றிய அரசின் நீர்வளத்துறை
ஏற்கெனவே அனுமதி அளித்து விட்டது. காவிரி மேலாண்மை ஆணையம் விரைவில் அனுமதி
அளித்துவிடும்' என்றார்.
அரசமைப்புச் சட்டப்படி
அமைக்கப்பட்டுள்ள சட்டப்பேரவையில் அம்மாநில முதல்வர் உச்ச நீதிமன்றத்தில் உள்ள
மேக்கேதாட்டு வழக்கைப் பொருட்படுத்தாமல், ஆணைய முடிவு
வந்தால் உச்ச நீதிமன்ற வழக்குத் தங்களைக் கட்டுப்படுத்தாது என்று கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு
முன், அதன் விசாரணையில் உள்ள மேக்கேதாட்டில் அணை
கட்டுவதற்குத் தடை ஆணை கேட்டு, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில்
அவசர மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சரை காவிரி உரிமை
மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.